Saturday, November 11, 2017

யார் அப்பாவி? நடந்தது என்ன?

யார் அப்பாவி? நடந்தது என்ன?
சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சசிகலா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களின் வீடுகள் என சுமார் 190 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது

இந்திய வரலாற்றில் இது தான் முதல் முறை. இப்படியான மிக பரந்து விரிந்த கட்டமைப்புடன் இந்த குடும்பம் இன்று தமிழ்நாட்டில் பல கிளைகளை பரப்பி விரிந்திருக்கிறது. உண்மையில் இதற்கான தொடக்கத்தை எம்.ஜி.ஆர் தான் ஏற்படுத்தினார் என்பது தற்போது பலருக்கும் தெரியாத விஷயம்.

1982 ம் வருடம் செப்டம்பர் மாதம்.அப்போது கடலூரில் சத்துணவு திட்ட மாநாடு.ஏற்கனவே குமுதத்தில் ஜெயலலிதா தொடர் எழுதிய விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டிருந்தது.அந்நிலையில் கடலூர் மாநாட்டில் தான் முதன் முதலாக எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.அந்த மாநாட்டில் வீடியோ எடுக்கும் உரிமை நடராஜனுக்கு கிடைத்தது.வீடியோ தமிழ்நாட்டில் அறிமுகமான தருணம் அது.

நடராஜன் தன் மனைவி சசிகலா பெயரில் சென்னையில் வீடியோ கடை வைத்திருந்தார். தங்களின் மலேசிய தொடர்புகள் மூலம் வீடியோ ரெக்கார்டர், வீடியோ கேசட்டுகள் போன்றவற்றை அங்கிருந்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்தும், வாடகைக்கு விட்டும் தங்கள் வணிகத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் அப்போதைய கடலூர் கலெக்டராக இருந்தவர் சந்திரலேகா (பின்னாளில் முகத்தில் ஆசிட் வீசப்பட்டவர்). இவரிடம் ஜெயலலிதா நிகழ்ச்சிக்கான அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டது.

அவர் அந்த நிகழ்ச்சியை வீடியோ எடுக்கும் உரிமையை நடராஜனுக்கு கொடுத்தார். நடராஜன் அப்போது கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.அந்த நிகழ்ச்சியை சசிகலா வீடியோ எடுத்தார்.அந்த கேசட்டை நேரடியாக ஜெயலலிதாவிடம் ஒப்படைக்க அவர் தங்கியிருந்த இடத்திற்கு சசிகலா சென்றார்.அப்போது தான் முதன் முதலாக இருவரும் சந்திக்கின்றனர்.அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை கண்காணிக்கும் பெண்ணாக சசிகலாவை நியமித்தார்.

இதில் சசிகலா நடராஜன் மூலமாக இருவருக்குமான தகவல் பாலமாக இருந்தார்.இது எம்.ஜி.ஆரின் இறுதிகாலம் வரை தொடர்ந்தது.இந்நிலையில் தான் எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்கிறது.1987 டிசம்பர் 24 ம் ந்தேதி நடுநிசியில் எம்.ஜி.ஆர் மரணிக்கிறார்.அப்போது இந்த தகவலை கேள்விப்பட்ட நடராஜன் தன் மனைவி சசிகலா மூலமாக இதனை ஜெயலலிதாவிற்கு தெரியப்படுத்துகிறார்.

உடனடியாக ராமவரம் தோட்டத்திற்கு ஜெயலலிதாவை வரவழைக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.இதனால் அவசரமாக ராமாவரம் தோட்டத்திற்கு எம்.ஜி.ஆரின் உடலை பார்ப்பதற்காக வந்தார் ஜெயலலிதா.அப்போது அந்த இடத்தில் எம்.ஜி.ஆரின் உறவினர்கள் மற்றும் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவாளர்களால் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டார். பின்னர் ராஜாஜி ஹாலில் அவர் உடல் வைக்கப்பட்டு இருந்த போது ஜானகி குடும்பத்தினர் பலர் ஜெயலலிதாவை துன்புறுத்தினர்.

இதை கேள்விப்பட்ட தற்போதைய காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசு பெண் போலீஸை அந்த இடத்தில் நிறுத்தினார். பின்னர் அவர் எம்.ஜி.ஆரின் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் கட்சித்தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஜெயலலிதா மீதான அனுதாபத்திற்கு காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை 1988 -1989 காலகட்டம் மிக முக்கியமானது.

அப்போது தான் இலங்கையில் இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்களுக்கு எதிரான கொடூரங்களை நிகழ்த்தியது.மேலும் தமிழ்நாடு சட்டசபையில் வரலாறு காணாத களேபரங்கள் நிகழ்ந்து ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டது.அதன் பிறகு அடுத்த ஆண்டில் தமிழ்நாடு சட்டசபைக்கு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.அதற்கு அடுத்த சில மாதங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜீவ்காந்தி பிரதமர் பதவியை இழந்து வி.பி.சிங் பிரதமராக பதவியேற்றார். தமிழ்நாட்டில் எண்பதுகளின் இறுதியில் நடைபெற்ற மேற்கண்ட நான்கு நிகழ்வுகளும் அடுத்த பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்யப்போகும் ஒன்றாக மாறின.

1989 ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஜானகி அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதன் பின்னர் கட்சி ஒன்றாக இணைந்தது.ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் அதிமுகவில் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களால் ஜெயலலிதா அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்தார்.இந்நிலையில் நடராஜன் தான் அவரை விலக விடாமல் சில தந்திர வேலைகளில் ஈடுபட்டார்.

பின்னர் ராஜீவ் காந்தி மரணம், அதற்கு பின் தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்ட அனுதாபம் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியது.அதன் பிறகு தான் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் கட்சியிலும், ஆட்சியிலும் உருவாக தொடங்கியது.முதலில் நடராஜன் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் போன்ற விஷயங்களில் தலையிட தொடங்கினார்.இது ஜெயலலிதா மற்றும் நடராஜன் இடையே மோதலை உருவாக்கியது.இதனைத்தொடர்ந்து போயஸ் கார்டனில் இருந்து நடராஜன் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டார்.

இருந்தாலும் நடராஜன் தன் மனைவி சசிகலா மூலமாக கள நிலவரங்களையும், ஜெயலலிதாவின் நாடித்துடிப்புகளையும் அறிந்து வந்தார்.இந்நிலையில் ஜெயலலிதா – சசிகலா ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டனர்.தங்களின் முறைகேடுகளுக்கு வளைந்து கொடுக்காத அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.மிரட்டப்பட்டனர்.இறுதியில் தாக்கப்பட்டனர்.

இதற்கு முதல் பலி சந்திரலேகா.கடலூர் மாநாட்டில் எம்.ஜி.ஆரால் ஜெயலலிதாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் சந்திரலேகா.இதன் பிறகான இருவரின் நட்பு சுமார் பத்தாண்டு காலம் நீடித்து வந்தது. இந்நிலையில் ஸ்பிக் நிறுவன பங்குகளை மன்னார்குடி குடும்பத்தினருக்கு தெரிந்த நபர்களுக்கு விற்கும் முடிவை ஏற்கும் கோப்பில் கையெழுத்திட மறுத்தார் சந்திரலேகா.முதலில் கையெழுத்திடுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

பின்னர் ஜெயலலிதாவே தொலைபேசியில் அவரை மிரட்டினார். இறுதியில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்து , விளைவாக அடியாட்கள் மூலம் அவரின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது.இது தான் அதிமுக ஆட்சியின் முதல் அதிகார துஷ்பிரயோகம்.இதன் பின்னர் தமிழ்நாடு முழுக்க பலரின் நிலங்கள் மிரட்டி வாங்கப்பட்டன அல்லது ஆக்கிரமிக்கப்பட்டன.அன்றைய காலத்தில் பத்திர பதிவு அலுவலகங்கள் கணணி மயமாக்கப்படவில்லை.

எல்லாம் கையால் எழுதப்பட்ட ஆவணங்கள் தான்.அதுவே நிலங்களை ஆக்கிரமிக்க மன்னார்குடி கும்பலுக்கு வசதியாக போனது.இதற்காகவே மன்னார்குடி குடும்ப உறவுகள் தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்பட்டனர்.இதற்கான பொறுப்பை சசிகலா தம்பி திவாகரன் ஏற்றார்.மேலும் எங்கெல்லாம் பண்ணை வீடுகள், பங்களாக்கள், அடுக்குமாடி கட்டிடங்கள் தென்படுகிறதோ அதை எல்லாம் இந்த அடியாட்கள் குறிவைத்தார்கள்.முதலில் சம்பந்தப்பட இடங்களின் உரிமையாளர்களிடம் அதை விற்பதற்கு அறிவுறுத்தப்படும்.

அவர்கள் மறுத்தால் மிரட்டப்படுவார்கள்.அதிலும் பணியாவிட்டால் வலுக்கட்டாயமாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பத்திர பதிவு அலுவலர்கள் துணையுடன் பிடுங்கப்படும்.அவ்வாறு வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட பங்களாக்களில் இசையமைப்பாளர் கங்கை அமரனின் பையனூர் பங்களாவும் ஒன்று.கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் இந்த பங்களாவை சசிகலா வகையறாக்கள் எதேச்சையாக நோட்டமிட்டனர்.அந்த தகவல் சசிகலாவிற்கு பாஸ் செய்யப்பட்டது.அவர் இதை ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஒப்புதலை பெற்றார்.

இதற்காக கங்கை அமரன் முதலில் போயஸ்கார்டன் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு அன்பாக கவனிக்கப்பட்டார்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பையனூர் பங்களாவின் வனப்புகளை பற்றி கங்கை அமரனிடம் சசிகலா கூறினார்.இந்நிலையில் பல கட்ட சந்திப்புகளுக்கு பிறகு விற்பதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.ஒரு கட்டத்தில் அவர் கழுவுற மீனில் நழுவுற மீன் மாதிரி அதிலிருந்து தப்பிக்க முயன்ற போது விற்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவரே எதிர்பார்க்காத ஒரு நாளில் பத்திரபதிவு அலுவலர்களை அவரின் வீட்டிற்கு அனுப்பி வலுக்கட்டாயமாக கையெழுத்திட செய்து குறைந்தப்பட்ச தொகையை காசோலையாக அவரிடம் திணித்து அந்த பங்களா அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டது. அவரிடம் கொடுக்கப்பட்ட காசோலை கூட பணம் இல்லாமல் வங்கியில் இருந்து திரும்பி வந்ததாக ஒரு தகவல் உண்டு. இதன் தொடர்ச்சியில் பலரிடம் இருந்து பல நிலங்கள், கட்டிடங்கள் மன்னார்குடி உறவுகளால் பறிக்கப்பட்டன. இதற்காக பலருக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் போலியாக இருந்தன.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை வெளியில் சொல்ல முடியாமலும், வழக்கு தொடர முடியாத கையறு நிலையிலும் பலர் இருந்தனர்.சென்னையில் இன்று மன்னார்குடி உறவுகளுக்கு சொந்தமான பல இடங்கள் கூட 1991-1996 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டது தான்.மேலும் 1991-1996 ஆட்சிகாலத்தில் அத்தனை அமைச்சர்களும் மாதந்தோறும் போயஸ் கார்டனுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர்.இதனை சுடுகாட்டு ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்ட செல்வகணபதி பின்னாளில் வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.

இந்த கப்பம் மூலம் குவியும் தொகையை வைத்து தான் ஜெயலலிதா ஒப்புதலுடன் சசிகலா தமிழ்நாடு முழுவதையும் வளைத்தார்.மேலும் 1994 ஜெயா டிவி ஆரம்பிக்கப்பட்டது.இது முதலில் ஜெ.ஜெ டிவி என்ற பெயரில் தன் ஒளிபரப்பை தொடங்கியது.இதற்காக வெளிநாடுகளில் இருந்து கருவிகள் முறைகேடாக வாங்கப்பட்டன.மன்னார்குடி உறவுகளின் வெளிநாடு விவகார பொறுப்பாளர் தான் தினகரன்.

இதற்காக சிறுவயதில் இருந்தே தினகரனுக்கு பயிற்சி தரப்பட்டு தயார் செய்யப்பட்டார். 1996 காலகட்ட ஆட்சியின் இறுதி கட்டத்தில் சசிகலா ஜெயலலிதாவை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வர போட்ட திட்டம் தான் வளர்ப்பு மகன் . அதாவது தன் அக்கா வனிதாமணியின் இளைய மகனான சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா அறிவித்து பின்னர் அவருக்கு சிவாஜி குடும்பத்தில் பெண் பார்த்து மிக ஆடம்பராக அந்த திருமணத்தை நடத்தினார்.

அதற்கான நகைகள் அனைத்தும் பாலு ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டன.கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட நகைகளுக்கான பணம் அந்நிறுவனத்திற்கு கொடுக்கப்படவில்லை.பணம் கேட்ட அதன் உரிமையாளர் மிரட்டப்பட்டார். இந்நிலையில் இதன் காரணமாக ஏற்பட்ட கடனால் அந்நிறுவன உரிமையாளர் பாலு தற்கொலை செய்து கொண்டார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாட்டு மக்கள் மரண அடி கொடுத்தனர்.அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.

இதில் சசிகலாவும் சேர்க்கப்பட்டார்.ஆனால் எந்த கட்டத்திலும் சசிகலாவும், அவரின் உறவுகளும் அப்ரூவராக மாறவில்லை.காரணம் இதை எல்லாம் கடந்து எளிதாக வர முடியும் என்ற அபார நம்பிக்கை தான்.அந்த நம்பிக்கை இரண்டே ஆண்டுகளில் அவர்களுக்கு பலனளித்தது.1998 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பிஜேபியுடன் கூட்டணி அமைத்து பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது.

மேலும் மத்தியில் பிஜேபி ஆட்சி அமையவும் காரணமாக இருந்தது.அதை வைத்து தன் மீதான வழக்குகளில் இருந்து வெளியே வந்து விடலாம் என்று ஜெயலலிதா கணக்கு போட்டார்.அது நடக்காமல் போகவே பிஜேபி ஆட்சியை கலைத்தார்.இருந்தும் மத்தியில் இருந்த பிராமண லாபி ஜெயலலிதாவிற்கு நன்றாக கைக்கொடுத்தது.அதன் மூலம் டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற்றார்.

பின்னர் 2001 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.அப்போது தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தது.அந்த நிலையிலும் கூட முந்தைய சூழல்களில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.வெளியே தெரியாமல், மாட்டிக்கொள்ளாமல் அறிவியல் பூர்வமாக எப்படி ஊழல் செய்வது என்பதை அப்போது கற்றுக்கொண்டார்.திட்டங்களில் கிடைத்த கமிஷன்கள் மூலமாக ஓரளவிற்கு சொத்து சேர்த்தார்.இந்நிலையில் 2011 ல் திமுக மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி காரணமாக மீண்டும் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா.

இந்த காலம் தான் மன்னார்குடிக்கு பொற்காலம்.தாங்கள் அரியணை ஏறும் காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்து விட்ட தருணம் அது.சொத்துக்குவிப்பு வழக்கு ஜெயலலிதா மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருந்த காலம் அது.அப்போது தான் நடராஜன் மன்னார்குடி உறவுகளை அழைத்து பெங்களூர் ஓட்டல் ஒன்றில் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.இதனை உளவுத்துறை மூலம் அறிந்த ஜெயலலிதா 2011 டிசம்பரில் நடராஜன், சசிகலா உட்பட அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார்.சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றவும் செய்தார்.அதே நேரத்தில் சசிகலாவின் அண்ணி இளவரசியை வெளியேற்றவில்லை.

அவர் மூலமாக தான் சசிகலா ஜெயலலிதாவின் நகர்வுகளை அறிந்து வந்தார்.இந்நிலையில் திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக ஆறு மாதங்களில் மீண்டும் சசிகலா ஜெயலலிதாவுடன் இணைந்தார். இதில் இளவரசியை சசிகலாவுடன் சேர்த்து வெளியேற்றாமல் தன் கூட வைத்திருந்ததன் மூலம் ஜெயலலிதாவின் மன்னார்குடி வெளியேற்றம் என்பது சிறந்த நாடகம் என்பதாக கருத வேண்டியதிருக்கிறது.

இந்த காலத்தில் ஏகப்பட்ட பணம் புரண்டது.அரசின் கஜனாவும் ஓரளவிற்கு நிரம்பியதால் கமிஷன், கட்டிங், கலெக்‌ஷன் என்று ஏராளமான பணம் குவியத்தொடங்கியது.மேலும் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த மிடாஸ் மதுபான ஆலையின் வணிகம் மூலம் பல கோடிகள் போயஸ் கார்டனில் குவிந்தன.இந்நிலையில் 2015 அக்டோபரில் வேளச்சேரியில் பிரமாண்டமாக இருக்கும் பீனிக்ஸ் மால் அதன் உரிமையாளரிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டது.

இந்த செய்தியை வெளியிடாமல் இருக்க ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டன.ஆனாலும் தி இந்து ஆங்கில பத்திரிகை இதனை வெளியிட்டது.இதன் மூலம் உடனடியாக எழுந்த சலசலப்பை திசைதிருப்ப மக்கள் அதிகாரம் பாடகர் கோவனை கைது செய்து பிரச்சினையை திசை திருப்பினார் ஜெயலலிதா.ஊருக்கு ஊர் சாராயம் என்ற பாடலை அப்போது உளவுத்துறையே மிக வேகமாக வாட்ஸ் அப்பில் பரப்பியது.

இதன் தொடர்ச்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பல பண்ணை வீடுகளும் மிரட்டிவாங்கப்பட்டன.இவை மன்னார்குடி உறவுகள் பலரின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.இப்போது தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீடுகளும் அவ்வாறு வாங்கப்பட்டஒன்று தான்.இவ்வாறாக கடந்த 15 ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள் அனைத்துமே ஜெயலலிதாவிற்கு தெரிந்து, அவரின் ஒப்புதலின் பெயரிலேயே நடைபெற்றன.

தனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லாத நிலையில் அவர் இவ்வளவு சொத்துக்களை சசிகலா மூலம் சேர்த்ததற்கு காரணமே அரசியல் நிலைப்பு தான்.பணமே அரசியலின் இதயமாக மாறி இருக்கும் இந்த காலத்தில் பணம் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற எண்ணத்திற்கு ஜெயலலிதா வந்தார்.ஒற்றை மனிதராக அதிமுக என்ற பெரும் கட்சியை கையில் வைத்திருந்த நிலையில் அந்த பணத்தில் ஒரு பகுதியை அதற்காக செலவிட்டார்.

தேர்தல் செலவிற்கு எல்லாம் இதிலிருந்து தான் அள்ளி வழங்கப்பட்டது.இதன் உபரி தான் தற்போது வருமான வரி சோதனைக்குள்ளாகி இருக்கும் சசிகலா சொந்தங்களின் சொத்துகள்.ஆக அதிகாரத்தை பயன்படுத்தி சசிகலா செய்த அனைத்து அழிச்சாட்டியங்களுக்கும் ஜெயலலிதா தான் மூல காரணம். இந்நிலையில் தமிழ்நாட்டு வரலாற்றை பொறுத்தவரைஜெயலலிதா அப்பாவியுமல்ல. சசிகலா அப்பாட்டக்கருமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Source patrikai.com

Wednesday, November 1, 2017

ஒரு பொம்மலாட்டம் நடக்குது!

ஒரு பொம்மலாட்டம் நடக்குது!

இன்றும் ‘அம்மாவின் அரசு’ என்று ஒவ்வொரு நான்கு வார்த்தைகளுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதே அம்மாவின் நீட் தொடர்பான, பாளையங்கோட்டை பிரகடனத்தை நினைத்துப் பார்த்திருந்தார்கள் என்றால், தமிழகம் நீட் எதிர்ப்புக்களத்தில் நெருப்பாற்றில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
நீட் தேர்வுக்கு எதிராக 2016-17ஆம் ஆண்டில் விலக்கு பெற்றது தமிழகம். அதேபோல் அல்லது அதைவிட சட்ட வலிமை அதிகமாக இந்த வருடமும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று தமிழகம் முழுக்கவும் போராடியது.
தமிழக அரசும் சேர்ந்து போராடியது என்றாலும்... அதிகாரம் என்னும் ஆயுதமில்லாத எதிர்க்கட்சிகள், மக்கள் சாலையில் போராடுகின்றனர். அதிகாரம் உள்ள தமிழக அரசு ஏன் போராடவில்லை என்பதே நீட் தேர்வு கேள்விகளைவிட விடை கண்டுபிடிக்க முடியாத கடினமான கேள்வி.
ஆனால், இந்தக் கேள்விக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய அடுத்தடுத்த முதல்வர்களின் டெல்லி விசுவாசம் என்பதே பதிலாக பிற்பாடு கிடைத்துவிட்டது.
இந்த இடத்தில் நாம் ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரி பரந்தாமனின் வலிமை மிகுந்த வார்த்தைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.
‘1976ஆம் ஆண்டு அவசரநிலைக்கு முன்பு கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்போது கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளும் மாநில அரசுகளின் கையில் இருந்தன. ஆனால், 76க்குப் பிறகு கல்வி, மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்துதான் கல்வித்துறையில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகமானதற்குக் காரணம். நாம் மீண்டும் போராடி... கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அது நீண்ட கால லட்சியம். அது உடனடி சாத்தியம் அல்ல. ஏனென்றால், அதற்கு அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். ஆனால், கல்விப் பொதுப் பட்டியலிலே இருந்தால்கூட அதிலேயே நாம் சாதிக்க முடியும்’ என்கிறார் ஹரி பரந்தாமன்.
எப்படி?
அதாவது கடந்த 1-2-17 அன்று... அதாவது கடந்த பிப்ரவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நீட் விலக்குச் சட்டம் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு மே மாதம்தான் நீட் தேர்வே நடந்தது. இந்தச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தால் இந்தப் பிரச்னையே வரப்போவதில்லை.
ஆனால், பிப்ரவரி மாதம் இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய ஓ.பன்னீர் அரசாகட்டும், அதையடுத்து கட்சிக்குள் ஏற்பட்ட அணி பிளவுகளால் ஆட்சிக்கு வந்த எடப்பாடி அரசாகட்டும்... பிப்ரவரி 1ஆம் தேதி தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தச் சட்டத்துக்கு ஏன் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவில்லை?
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே மாதம் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, ‘நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்திற்குள் முதன்முதலாக நுழையும்போது கீழே விழுந்து கும்பிட்டு ஜனநாயகத்தின் கோயில் என்று சொன்ன பிரதமர் மோடி... சட்டமன்றத்தை என்ன நினைத்தார்? தமிழகச் சட்டமன்றத்தின் தீர்மானத்தை என்னவாக மதித்தார்?

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டம் ஏன் குடியரசுத் தலைவரின் அலுவலகத்துக்கே அனுப்பப்படவில்லை?
2017 மார்ச் மாதம் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நட்டாவைச் சந்தித்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது, தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க முடியாது. தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் நட்டா, விஜயபாஸ்கரிடம் கூறினார்.
அதன் பிறகாவது தமிழகச் சட்டமன்றத்தின் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஏன் எடப்பாடி அரசு முயற்சி எடுக்கவில்லை?
கடந்த பிப்ரவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் நீட்டுக்கு முழுமையான விலக்கு கோரவில்லை. அதை உற்று கவனித்தால் புரியும். இதைக்கூட தமிழக அரசு மத்திய அரசுக்குப் புரியவைக்கவில்லை! காரணம் என்ன?
நீட் வேண்டும் என்று டெல்லி முடிவெடுத்துவிட்டது. வேண்டாம் என்று ஏன் தமிழ்நாடு முடிவெடுக்கவில்லை?
(அடுத்த ஆட்டம் வெள்ளியன்று)

அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள்!

அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள்!
தமிழகத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அரசு, முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், ‘மழை வந்தால் தண்ணீர் தேங்குவது என்பது இருக்கத்தான் செய்யும்’ என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று (அக்.31) செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இதேபோல், அமைச்சர் வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘கடந்த 2015இல் பெய்த மழைக்கும் தற்போது பெய்த மழைக்கும் வித்தியாசம் இருக்கிறது. சில தொலைக்காட்சிகள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுகின்றன’ எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், ‘சென்னையில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிகாலை மூன்று மணி வரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என விளக்கமளித்தார்.
‘வெள்ளம் ஏற்படும் இடங்களில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதே’ என்ற கேள்விக்கு ஆவேசமடைந்த வேலுமணி, ‘நீங்கள் எத்தனை வருடமாகச் சென்னையில் உள்ளீர்கள்? உங்கள் பெயர் என்ன?’ எனச் செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர், ’அமெரிக்கா, லண்டனில் எடுக்கப்பட்டதைவிடச் சென்னையில் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டோம்’ என்று கூறினார். அமைச்சர்களின் இந்த பொறுப்பற்றப் பேச்சுகள் சர்ச்சையாகியுள்ளது.
அமெரிக்காவைவிடத் தமிழகத்தில் வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்ற வேலுமணியின் கருத்தை விமர்சித்துள்ள ராமதாஸ், “அமெரிக்க அதிபரைத் தற்கொலை மையம் தான் காப்பாற்ற வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், “இதெல்லாம் நமது தலையெழுத்து” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பருவமழை தொடர்பாக தமிழக அரசு எவ்வித முன்னேற்பாடு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் நலனைப் போலித்தனமாக கையாலும் ஆட்சியாளர்களால் 10 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், மழை காரணமாக உயிர்ப் பலி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
லண்டன் மற்றும் அமெரிக்காவில் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட சீரமைப்பு முறைகளைக் காட்டிலும், தமிழகத்தில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறுவது அபத்தமானது எனவும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெயக்குமாரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசின் வருவாய்த்துறையும், அமைச்சர்களும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை எடுத்திருப்பதாக அறிக்கைகள் வெளியிட்டனர். ஆனால் வடிகால் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை தற்போதைய மழை அம்பலப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி மழைநீர் தேங்காமல் வடிவதற்கான ஏற்பாடுகளை முழு அளவில் செய்ய வேண்டும். ‘மழை வந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றதல்ல” எனக் கூறியுள்ளார்.

முடியலடா?

முடியலடா?
அடப்பாவிகளா... என்ன. ஏது என்றெல்லாம் பார்க்க மாட்டீங்களா? கேட்க மாட்டீங்களா? ‘ஷேர் செய்யவும்’னு இருந்தா, எது வேணும்னாலும் பண்ணுவீங்களா? மழைன்னு ஒரு வார்த்தையைப் பார்த்தா உடனே தோண்டி எடுத்து மெசேஜ் ஃபார்வேர்டு பண்ணி இருக்காங்க.
சத்யம் சினிமாவுக்கு இன்னிக்கு ராத்திரி யாரெல்லாம் போறீங்க ஃப்ரண்ட்ச்ச்...
1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள் சத்யம் சினிமா தியேட்டர் (ராயப்பேட்டை) இரவு முழுக்க திறந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து இதை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay, do get in touch.
2. ஜி.எஸ்.டி. சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு.ஜொகானி 9840042152. இதை உடனடியாக ஷேர் செய்யவும். அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standard in GST pls go there For Food Contact Mr.Jogani 9840042152
3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்குழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கெனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம்: டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12, குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை. மேலும், தகவல் அறிய 044 23621494. டி.எஸ்.ஆர்.சுபாஷ்.
4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்குத் தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளைப் பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr.Latha & அவர் கணவர் Dr.Sai kishore-ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5,000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது. தொடர்புக்கு: Vineet Jain 9840426263, Gaurav Jain 9841062626 000 (சென்னை)
food pkts are ready for distribution
Pls contact
Vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626
6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline
அடையார் - காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.
7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1,000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில். Call 7092020207
8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்: 1077
9. பாரீஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233
10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008
2015இல் வந்த மெசேஜை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுருக்கீங்களே நியாயமா... உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையாடா...
இதுல கடைசியா வேற...
இந்த பதிவுகளுக்கு தயவுசெய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்குத் தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால்கூட, யாராவது ஒருவராவதுகூட பயன்பெற இயலும். தோழர்களே... அதிகம் ஷேர் செய்யுங்கள்.
இங்கே ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம். ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமா பலர் மீட்கப்படுறாங்க.
வாட்ஸ்அப்ல இத அனுப்பிருக்கோமே... அதுல எப்படி லைக் பண்ண முடியும்னு நினைக்க மாட்டீங்களா?
எதை ஷேர் பண்ண சொன்னாலும் பண்ணிடுவீங்க... அப்படித்தான்.
“வாட்ஸ்அப் வடிவேலுவின் அக்கவுன்ட்டுக்கு 25,000 ரூபாய் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே, இதை அலட்சியமாக கருதாதீர்கள். உங்களால் முடிந்தவரை ஷேர் செய்யுங்கள். 15 நிமிடத்துக்குள் ஷேர் செய்யாவிட்டால் கெட்டது நடக்கும். நடிகர்கள் நடிகைகள் படத்துக்கு வரும் லைக் அளவுக்கு நான் கேட்கவில்லை. ஒரு சாதாரண “விவசாயி வாட்ஸ்அப் வடிவேலு”வுக்கு உதவுங்களேன் ஃப்ரண்ட்ச்ச்ச்...
இப்ப பண்ணுங்கடா பார்ப்போம்.

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை?

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை?
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உட்படப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையை எதிர்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
1. சென்னை மாநகராட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றாலும், குப்பைகள் அதிகமாக இருந்தாலும் 24 மணி நேரமும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வந்து தகவல் கொடுக்கலாம்.
2. 9445477205, 1913 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்களைத் தொடர்புகொண்டும் கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் தெரிவிக்கலாம்.
3. மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற 48 மின் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
4. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 9 தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், சென்னை முகாம்களில் ஒரு குழுவுக்கு 45 வீரர்கள் என்ற நிலையில் குழு தயாராக இருப்பதாகவும், தேவையைப் பொறுத்து மீட்புக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், மீட்புப் பணிகளுக்கான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளதாகவும் தேசியப் பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது.
5. தஞ்சையில் மழை பாதிப்பு குறித்துத் தெரிவிக்க 1077 என்ற எண்ணைக் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தஞ்சையில் 194 இடங்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதி எனக் கண்டறிந்து, அப்பகுதியில் உள்ள மக்களைத் தங்கவைக்க 534 தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
6. அத்துடன் மழையால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைக் காக்க, தமிழகம் முழுவதும் குளோரின் கலந்த குடிநீர் வழங்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 0.5 குளோரின் பருகுவதால் எந்த நோயும் ஏற்படாது எனச் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
7. 420 அவசர கால ஆம்புலன்ஸ்கள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 770 தற்காலிக மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. மழையால் செல்போன் சேவை தடைப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
9. மின்தடை ஏற்பட்டாலோ அல்லது மின் பாதிப்புகள் ஏற்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின் வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மின்சாரம் தடைப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
10. சென்னையில் 15 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

எம்பி களுக்கும் சிக்கலா?

எம்பி களுக்கும் சிக்கலா?
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட, அதுதொடர்பான வழக்கு இன்னும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் எம்.பிக்களின் பதவிமீது கண் வைத்திருக்கிறது ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ். அணி.
நேற்று (அக்டோபர் 31) டெல்லியில் ராஜ்யசபா செயலாளர் தீபக் வர்மாவை, ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக விஜிலா சத்யானந்த், நவநீத கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகிய மூன்று ராஜ்யசபா உறுப்பினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது. இது, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. நவநீத கிருஷ்ணன், “இது அம்மா எனக்கு அளித்த பதவி. என்மீது யாரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.
இந்த டெல்லி நடவடிக்கைக்கு ஒரு பின்னணியைச் சொல்கிறார்கள் அதிமுகவினர்.
“எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீரும் ஒரே அணியில் இருந்தாலும், ஒருவரையொருவர் இன்னும் முழுதாக நம்பவில்லை. டெல்லி சென்று பிரதமரிடம் தன்னைப் பற்றி புகார் அளித்ததாகக் கருதுகிறார் எடப்பாடி. மேலும், தனக்கு எதிராக ஓ.பன்னீரும், தினகரனும் ஒரே அணியில் சங்கமிக்கலாம் என்றும் தமிழக உளவுத்துறை முதல்வருக்குத் தகவல் அளித்துள்ளது. ஓ.பன்னீரின் தீவிர ஆதரவாளரான மதுசூதனன்கூட ஓரிரு நாள்களுக்கு முன் கடலூரில், ‘தினகரன் வசம்தான் ஆட்சி இருக்கிறது. அவர் சொன்னால் அது நடக்கும்’ என்று சொன்னார். இப்படிப்பட்ட நிலையில், தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர் செயல்பட வேண்டும் என்ற எடப்பாடி தரப்பின் நிர்பந்தத்தின் பேரில்தான், இந்த மனு டெல்லியில் அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
ஏற்கெனவே இதேபோல ஐக்கிய ஜனதாதளத்தில் நிதீஷ் குமாருக்கும், சரத் யாதவுக்கும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், சரத் யாதவ்வை ராஜ்ய சபா உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரான குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நிதீஷ் குமார் தரப்பினர் மனு அளித்துள்ளனர்.
அது இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், அதேபோன்றதொரு பிரச்னைக்காக அதிமுகவின் ஒரு பிரிவினர், தினகரன் அணி எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு மனு கொடுத்திருக்கிறார்கள்.
அரசியல் அமைப்பின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை தமக்கு எதிராக தவறாகப் பயன்படுத்துவதாக சரத் யாதவ் தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோன்றதொரு நிலையை இப்போது தினகரனும் சந்தித்து வருகிறார்.

இலை கிடைக்குமா? இறுதிக் கட்ட பரபரப்பு!

இலை கிடைக்குமா? இறுதிக் கட்ட பரபரப்பு!

இலை மீட்புப் பயணம்’ என்று தினகரன், எடப்பாடி – ஓ.பி.எஸ். என இரு அணியினரும் தங்களது டெல்லி பயணத்தை அழைத்துக்கொள்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று (நவம்பர் 1) இறுதி விசாரணையில் ஆஜராவதற்குத்தான் இந்த டெல்லி பயணம்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றிய இறுதி முடிவு செய்வது குறித்து இரு அணிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல்கட்ட விசாரணை கடந்த 6ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தலைமையில் தொடங்கியது. அன்று 13ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இரண்டாம்கட்ட விசாரணையிலும் முடிவு மேற்கொள்ளப்படாமல் அக்டோபர் 23ஆம் தேதிக்கு மூன்றாம்கட்ட விசாரணையை ஒத்தி வைத்தனர். அன்று, தினகரன், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகிய இரு தரப்பினரும் தமது வாதங்களை எடுத்து வைத்தனர்.
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை ஆணையர் ஏ.கே.அக்சல் குமார் மற்றும் இரு தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது. இதில் எடப்பாடி - ஓ.பி.எஸ். அணி சார்பாக மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்கறிஞர் சேதுராமன் ஆஜராகினர். டி.டி.வி.தினகரன் தரப்பில் வழக்கறிஞர்கள் மாத்தூர், ராஜா செந்தூர்பாண்டியன், ரமேஷ் என்.கேஸ்வாணி மற்றும் விவேக் சிங்வி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
எடப்பாடி - ஓ.பி.எஸ். தரப்பினர் வாதிட்டபோது, “அதிமுக கட்சியை பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். பிறகு டி.டி.வி.தினகரன் எப்படி கட்சி தலைமையை ஏற்க முடியும்? மேலும், எங்களது அணிக்குத்தான் பெரும்பான்மை அதிகம் உள்ளது என்பதை நிரூபிக்கும்விதமாகப் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் எங்கள் அணி சார்பில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் 1,877 உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரத்துக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. எனவே, அதிமுக கட்சியை வழிநடத்தவோ அதில் உள்ள உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தவோ தினகரன் மற்றும் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கம் செய்யப்பட்ட நபராக இருந்த சசிகலாதான் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அது எந்தவிதத்திலும் செல்லத்தக்க ஒன்றாக இருக்காது. மேலும், எங்கள் தரப்பின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் ஐந்து பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என்று எதிரணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், அதை நிரூபிக்கும் விதமாக அவர்கள் இதுவரை எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளாதது ஏன்? இவை தவிர, அதிமுக கட்சி விதிப்படியும் தார்மீக ரீதியாகவும் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவுக்கு எந்தவித உரிமையும் கட்சியில் கிடையாது.
அதனால், தினகரன் தரப்பு குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் கருத்தில்கொள்ள வேண்டிய அவசியம் தேவையில்லை. மேலும், ‘தீவிர அரசியலில் ஈடுபட மாட்டேன். கட்சியில் தலையிட மாட்டேன்’ என்று கூறியதன் அடிப்படையில்தான் சசிகலா மீண்டும் ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டார்.
அதிமுக கட்சியில் பொதுக்குழு, செயற்குழு, அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட 95 சதவிதத்துக்கும் மேலான அதிகப்படியான உறுப்பினர்கள் எங்களிடம்தான் உள்ளனர். அதனால், இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். இதை தவிர எதிரணி சார்பில் கட்சியில் தற்போது செய்துள்ள எந்தவித திருத்தங்களையும் ஏற்றுகொள்ள கூடாது” என்று வாதிட்டனர்.
இதையடுத்து தினகரன் தரப்பினர் வாதத்தை முன்வைத்தனர்.
“எங்ககளது அணி சார்பில் அதிகப்படியான உறுப்பினர்கள் எங்களுக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும்விதமாகத் தேர்தல் ஆணையத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளோம். உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது என்பதையும் தீவிர பரிசீலனை நடத்த வேண்டும். எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களைப் பரிசோதிப்பது மட்டும் இல்லாமல் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.