Saturday, March 31, 2018

காவிரி மேலாண்மை வாரியம்! தீர்ப்பு கூறுவது என்ன? தவறாமல் படியுங்கள்.

காவிரி மேலாண்மை வாரியம்! தீர்ப்பு கூறுவது என்ன? தவறாமல் படியுங்கள்.


காவேரி ட்ரிப்யூனல் விஷயத்தை கொஞ்சம் விளக்கியே ஆகவேண்டும். முதலில் இந்த CMB (காவேரி ஆணையம்) மிக முக்கியமான மைல்கல். காரணம். இது அமைந்தபின்.. இதை வைத்துக்கொண்டு அரசியல் பண்ணவே முடியாது. பதினோரு மெம்பர்கள் கொண்ட CMB. மத்திய நதிநீர் செக்ரேட்டரி தலைமை தாங்க.. நாலு மாநிலங்களின் சீஃப் செக்ரடரீஸ் அங்கம் வகிக்க.. சென்ட்ரல் வாட்டர் கமிஷன் சேர்மன், சீஃப் என்ஜினீயர் CWC, சீப் என்ஜினீயர் ரேங்கிற்கு குறையாத நாலு ஸ்டேட்டின் என்ஜினீயர்கள் இந்த காவேரி ஆணையத்தில் இருப்பார்கள்.
முதலில் தீர்ப்பு பற்றி...
1. தமிழகத்திற்கு அதன் பழைய அளவிலிருந்து 14.75 டிஎம்சி குறைத்து 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது, கர்நாடகத்தின் வெற்றி என்று கர்நாடக பத்திரிக்கைகளும், தமிழகத்தின் தோல்வி என்று.. காங் + கம்மி + இதர பிரிவினை கும்பல்களும் கும்மியடித்தது. மிக உண்மையாய் சொல்ல வேண்டுமானால்.. இதை ஒழுங்காய் விட்டாலே போதும் என்பதே கடை மடை விவசாயிகளின் எண்ணம். இது நான் படித்த, கேட்ட பல கருத்துகளில் தெரிய வருகிறது.
2. முக்கியமான பாயிண்ட். நதிகள் எந்த மானிலங்களுக்கும் சொந்தமானவை அல்ல. எந்த மாநிலமும் இதை உரிமை கொண்டாட முடியாது. கடைமடை மானிலத்திற்கு முதல் உரிமை என்று தமிழகமும், முதல்மழை என் மானிலத்தில் பெய்வதால் என்னுடையது என்று கர்நாடகா இனி சொல்ல முடியாது.இவை இந்தியாவின் சொத்துகள். இதன் தாக்கம்.. இந்தியாவின் மற்ற நதி நீர் பிரச்சினைகளின் பரிமாணத்தை மாற்றி விடும். இதை நதிகளின் இணைப்புக்கான முதல் அடிக்கல் எனலாம்.
3. இது எல்லாவற்றையும்விட முக்கியமானதாக கருதப்படும் CMBயை உடனடியாய் நிறுவ வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறது. அதாவது செக்‌ஷன் 6-A படி நீரை பகிர்ந்தளிக்கப்படும். அது என்ன 6-A?
அதாவது section 6-(2) ISWD 1956 ஆக்ட் படி, காவேரி ட்ரிப்யூனலின் டிகிரி என்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு ஒப்பானது. ஆனால் செக்‌ஷன் 6(A) படி மத்திய அரசு..தண்ணீரை எப்படி பிரித்துக்கொள்ளலாம் என்கிற ஆபரேஷனல் ஸ்கீமை நிறுவ..அதிகாரமும், கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. இதை இரு அவைகளில் பாஸ் செய்ய.. இந்த ஸ்கீமை மாற்றியமைத்து இந்த தீர்ப்பை அமுல் படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் மற்றும் பொறுப்பு இருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறது.
மத்திய அரசு.. ஆமாம் இந்த ஸ்கீம்ன்னு சொன்னீங்களே அது என்னங்க..? கொஞ்சம் விளக்க முடியுமா..? ன்னு சுப்ரீம் கோர்ட்டை க்ளாரிஃபிகேஷன் கேட்டிருக்கிறது. இதையும் சுப்ரீம் கோர்ட்டே சொல்லித்தொலைத்து இருக்க வேண்டும்போல.. இதை நாலுநாள் முன்னாடி மிக வேகமாய் கேட்டிருக்கிறது மைய அரசு.

இதில் இந்த தீர்ப்பாலேயே பயனடைந்த கர்நாடகா.. இந்த CMB அமையவிடாமல் என்ன செய்யலாம் என்று யோசிக்கறது. இதில் பாராட்ட வேண்டியது.. தமிழ்நாடு அரசைதான்.. கொடுக்கறதை சரியாய் சட்டப்டி கொடுத்துத்தொலையுங்கள். பெங்களூருவின் தண்ணீர் சப்ளைக்கு அலாட் பண்ணியதை மட்டும் சரியாய் கேள்வி கேட்கிறது. Hats off. அதுவும் CMB படியே என்பதை முழுங்க முடியாமல் கர்நாடக அரசு தவிக்கிறது. CMB இல்லையென்றால்..கோர்ட் படி ஏறித்தானே தநா அரசு வாங்க வேண்டும்..? CMBயின் முழு அதிகார வரம்பிற்குள் இதெல்லாம் வந்துவிட்டால் கர்நாடக அரசின் உரிமை போய்விடுமே என்பதுதான்கர்நாடக அரசின் கவலை கூட.
மிக முக்கியமான விஷயம். நமக்கு மிக குறைவாக மழையளவு கிடைக்கும் மாதங்கள்(ஜூன் முதல்-செப் வரை) இங்குதான் CMB உதவப்போகிறது. மழைப்பெருக்கின்போது திறந்துவிடும் சாக்கடை போல இல்லாமல்... அறிவியல் பூர்வமாய் CMB நடத்திக்காட்டினால் நஷ்டம் கர்நாடகத்துக்குத்தான். CMB எத்தனை அணைகளில் எத்தனை நீர் இருக்கிறது..? மழையளவின் ட்ரெண்டு எப்படி இருக்கும்? இதை வைத்து எப்போது தண்ணீர் திறக்கலாம் என்பதுமாதிரியான முடிவுகள் நிறைய பயன் தரும். தரைக்கடியில் இருக்கும் தண்ணீர் அளவை நல்ல வேளையாய் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்கொண்டிருந்தால் அது இன்னமும் தீர்ப்பை சிக்கலாக்கியிருக்கும். அதை கணக்கில் ஒரு புள்ளிவிவரமாய் மட்டுமே எடுத்துக்கொண்டார்கள்.
இதில் மத்திய அரசுகள் காங் மற்றும் பாஜக அரசுகள் இருவருமே குற்றவாளிகள்தான். காரணம் இதை வைத்து விளையாடிய காங் எவ்வளவு குற்றமான கட்சியோ அதைப்போலத்தான் பாஜக அரசு கூட.. காரணம்.. கர்நாடக விவசாயிகளை பகைத்துக்கொள்ள விரும்பாத்துதான்.. அதுவும் தேர்தல் நேரத்தில். இதில் மத்திய அரசு தற்போது விளையாடிய கேம் இதுதான்.. அதாவது.. மத்திய அரசு கோர்ட்டை இப்படி கேட்டது..
Centre gave a twist to this section to argue that it was not obliged to constitute any such mechanisms. That's because Section 6A begins with these words:
Without prejudice to the provisions of Section 6, the central government may, by notification in the Official Gazette, frame a scheme or schemes whereby provision may be made for all matters necessary to give effect to the decision of a tribunal.
இந்த மே என்கிற வார்த்தையால் CMB ஸ்கீமை செய்யலாம்.. அல்லது செய்யாமல் விடலாம் அல்லவா? என்று சுப்ரீம் கோர்ட்டை கேட்க.. சுப்ரீம் கோர்ட்..
...we direct that a scheme shall be framed by the central government within a span of six weeks from today so that the authorities under the scheme can see to it that the present decision which has modified the award passed by the tribunal is smoothly made functional and the rights of the states as determined by us are appositely carried out. When we say so, we also categorically convey that the need based monthly release has to be respected. It is hereby made clear that no extension shall be granted for framing of the scheme on any ground.
இப்படி முதுகில் நாலு சார்த்து சார்த்தி.. ஆறு வாரத்திற்குள் இதை செய்ய வேண்டியது உன் கடமை போ செய்துவிட்டு சொல் என்று சொல்லிவிட்டு... பக்ரா பியஸ் நீர் மேலாண்மை போல் இந்த வரைவு இருக்க வேண்டும் என்றது..

இப்போது நேரம் பத்தாது.. காலம் பத்தாது என்று கேவலமான காரணங்கள் சொல்வது.. மடத்தனமாக இருக்கிறது. இதுதான் உண்மை. நன்றி Prakash Ramasamy முகநூல் பதிவு!

அமைச்சர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்?

அமைச்சர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்?


"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்
இதோ அதற்கு ஓர் உதாரணம்:
அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான்.
ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.
மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.
""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.
"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள்.
இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன்.
அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.
""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன்.
உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.
உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்.
அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.
நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.
அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம்.
அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..
இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''
மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான்.
ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது.
மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.
மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.
அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.
முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார்.
நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.
சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது.
ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.
இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார்.
பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.
சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.
மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.
மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.
பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார்.
ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.
மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான்.
அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.
அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.
சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்.
அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்.
அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''
மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.
இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்.
ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது.
மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.
முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார்.
தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.
மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.
இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.
அதன் உட்பொருள் இதுதான்.
ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன.
தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.
அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்
நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை.
நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான்.
ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.
நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை..
ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்.
அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.
விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும்.
அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.
இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை💝🔔

Thursday, March 29, 2018

புலிகளுக்கு எதிராக போரிட்ட சிங்களஇராணுவீரர் மனைவியின் மானம்காத்த பிரபாகரன்!

புலிகளுக்கு எதிராக போரிட்ட சிங்களஇராணுவீரர் மனைவியின் மானம்காத்த பிரபாகரன்!


யுத்தகாலங்களில் சண்டைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் உயிருடன் பிடிபட்டு அரசியல் கைதியாக சிறைப்படுத்தபட்ட ஒருசிறீலங்கா இராணுவ வீரனை காண அவரது காதல்மனைவி சாமாதான காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் அமைப்பிடம் அனுமதிபெற்று வன்னி வந்து சேர்கின்றார்.கைதியாக சிறைபடுத்த பட்டிருக்கின்ற தனது கணவனை சந்தித்து கதைக்கின்றார்.சந்தித்துவிட்டு அவர் தனது இருப்பிடம் திரும்ப எண்ணும்போது நேரம் இரவாகிவிடுகின்றது.
அந்தபெண் அவரை வழியனுப்ப நின்றிருந்த புலி உறுப்பினரிடம் இரவாகிவிட்டது இந்த நேரத்தில் நான் திரும்புவது பாதுகாப்பில்லை.நான் ஆமி கண்ணில் பட்டுவிட்டால் புலிகளுக்கு உளவு சொல்லுகின்றேன் என்றெண்ணி என்னை சுட்டு கொன்றுவிடுவார்கள் எனவே நான் இரவு இங்கேயே தாங்கிவிட்டு விடிந்ததும் காலையில் சென்றுவிடுகின்றேன் என்று கூறுகின்றாள். (அந்தபெண் சிங்களத்தில் கூறுவது சிங்களம் அறிந்த புலிவீரனால் மொழிபெயர்த்து கூறப்படுகின்றது)
இப்பெண்ணின் வேண்டுகோள் தலைவருக்கு சொல்லபடுகின்றது.தலைவரும் ஆலோசித்துவிட்டு சரி கவனமாக தங்கவைத்து காலையில் பாதுகாப்பாக அனுப்பிவைத்திடுங்கோ என்கின்றார்.அவரை எங்கே தங்க வைப்பது என்று கேட்க அந்தபெண் எங்க விருப்பபடுகின்றாறோ அங்கேயே தங்கவையுங்கள் என்று தலைவர் சொல்ல அதன்படி அந்த பெண்ணிடம் கேட்க அவர் தனது கணவனுடன் தங்கவிருப்புவதாக கூறுகின்றார்.அதன்படியே அவரது கணவருடன் இரவில் தங்கவைக்கப்பட்டு விடிந்ததும் அந்தபெண் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றார்.
இதுநடந்து முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த சிங்கள இராணுவ வீரரின் மனைவியிடமிருந்து ஒரு கடிதம் வருகின்றது அதில் அப்பெண் "நான் என் காதல் கணவனை காணவந்தபோது மிகவும் கண்ணியத்துடன் என்னை நடத்தினீர்கள் உங்கள் அன்பில் நான்நெகிழ்ந்தேன் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.அன்றிரவு நான் என் கணவருடன் தங்கியிருந்தபடியால் நான் இப்ப கருவுற்றிருக்கின்றேன் இது எனது தாய் தந்தை சகோதரங்கள் உறவினர்களுக்கு தெரியவந்தால் உன் கணவன் உன்னுடன் இல்லாதபொழுது இதெப்படி நடந்தது என்று கேட்டு என்னை அவமானப்படுத்தி என் ஒழுக்கைத்தை சந்தேகப்பட்டு என்னை கேவளப்படுத்தி விடுவார்கள் எனக்கு விபச்சாரி ஒழுங்கங்கெட்டவள் என்று என்னை நாயிலும் கேவளமாக நடத்துவார்கள்.என் வாழ்க்கையே கேள்விகுறியாகிவிடும் இதற்க்குமேல் நான் உயிர் வாழமுடியாது நான் வாழ்வதும் உயிரை விடுவதும் உங்கள் கையில்தான் இருக்கின்றது கண்ணீருடன் அவசரமாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன் என் வாழ்க்கை உங்கள் கையில்தான் இருக்கின்றது என்று அந்த கடிதத்தில் எழுதியிருக்கின்றார்.
இந்த கடிதம் தலைவரின் கவனத்திற்க்கு வருகின்றது மிகவும் கருணையோடு தாயுள்ளத்தோடு அந்த கடிதத்தை பரிசீலித்த தலைவர் சிலவிநாடி யோசனைகளுக்குபின் எங்களால் அந்த பெண்ணிண் கற்புக்கு எந்த கலங்கமும் வந்துவிடக்கூடாது என்றுகூறி கைதியாக உள்ள அந்த இராணுவ வீரனை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய உத்தரவிடுகின்றார்.ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் போரிடும்போது உயிரோடு பிடிபடும் இராணுவ வீரர்களை மீண்டும் அதே நாட்டிடம் உயிருடன் ஒப்படைக்க ஏகப்பட்ட சட்டதிட்டங்களை,விதிமுறைகளை சர்வேதேச நாடுகள் கடைபிடிக்கும்போது அப்படி எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் அந்த பெண்ணிண் மானம் காக்க அந்த இராணுவ வீரனை எந்தவித சிறு நிபந்தனையுமன்றி விடுதலைசெய்த உத்தரவிட்டார் எங்கள் தலைவர்.அண்ணண் பிரபாகரனை தவிர வேறு எவனுக்கும் இந்த துணிச்சல் வராது.இந்த செய்தியை அறிந்த அந்த இராணுவ வீரன் "உங்கள் அண்ணண் இந்தநாடு முழுமைக்கும் ஆண்டால் உலக நாடுகளுக்கெல்லாம் சிறீலங்கா முண்ணுதாரனமாக திகழும்.இனிநான் இராணுவத்தில் இருக்கமாட்டேன் புலிகளுக்கு ஏதிராக போரிடமாட்டேன் என்று கண்ணீருடன் கூறி விடுதலையாகி செல்கின்றார். #தகவல்_பிரபாசெழியன்.

தனியார் பள்ளிகளின் தேர்வு அறை முறைகேடுகள்! தடுக்குமா தமிழக பள்ளி கல்வித்துறை?

தனியார் பள்ளிகளின் தேர்வு அறை முறைகேடுகள்! தடுக்குமா தமிழக பள்ளி கல்வித்துறை?
10 மற்றும் 12ஆவது வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. தனியார் பள்ளி தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிகமான மதிப்பெண் எடுக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் உதவி செய்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 16இல் தொடங்கப்பட்டு வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 3,609 மையங்களில் சுமார் பத்து லட்சம் பேர் தேர்வு எழுதிவருகிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மற்றும் தனித் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 அன்று முடிவடைகிறது. 2,794 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் ப்ளஸ் 2 தேர்வு எழுதிவருகிறார்கள். தேர்வுப் பணியில் ஆசிரியர்கள், மையக் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், ஸ்டாண்டிங் ஸ்க்வாடு, பறக்கும் படை எனச் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.

அரசுப் பள்ளியில் உள்ள மையங்களில் எழுதும் மாணவர்களுக்கு நெருக்கடிகள் அதிகம். ஆனால், தனியார் பள்ளிகளில் எழுதும் தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க ஆசிரியர்களும் அதிகாரிகளும் உதவி செய்கிறார்கள் என்றும், அதற்குக் கைமாறாகத் தேர்வு மையக் கண்காணிப்பாளர்களைத் தனியார் பள்ளி நிர்வாகம் பலமாக ‘கவனித்து’வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஏதோ மாணவர்களுக்கு மட்டும் சாதகமான விஷயம் அல்ல... இந்த வருடம் ரிசல்ட் அதிகம் காட்டினால் அதை வைத்தே அடுத்த கல்வி ஆண்டுக்கான டொனேஷனை அதிகப்படுத்திவிடலாம் என்ற தனியார் பள்ளிகளின் தன்முனைப்பு காரணமாகத்தான், இப்படித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முறைகேடான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறார்கள்.

கடலூர் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிவரும் மாணவியிடம் தேர்வு மையத்தைப் பற்றிக் கேட்டோம்.

“தேர்வு மையத்துக்குள் போகும்போது ஷூ, சாக்ஸ், பை அனைத்தும் வெளியில் வைத்துவிட்டு ஸ்கேல், பேனா, பென்சில் மட்டும் எடுத்துச் செல்வோம். மற்றபடி எங்களை யாரும் பரிசோதனை செய்யவில்லை. மையத்துக்குள்ளும் யாரும் வரவில்லை. நீங்கள் சொல்வதுபோல் எந்தப் படையும் வரவில்லை. வெளியில் வராண்டாவில்தான் இரண்டு பேர் (ஸ்டாண்டிங் ஸ்க்வாடு) நின்றிருந்தார்கள். காம்பவுண்டுக்கு வெளியில் போலீஸ் பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள்” என்று யதார்த்தமாகப் பேசிய மாணவிடம், “படிக்காத மாணவர்களைத் தேர்ச்சி பெறவைக்க உங்கள் பள்ளி ஆசிரியர்கள் உதவி செய்கிறார்களா?” என்று கேட்டோம்.

“அது இனிமேதான் தெரியும். கணக்கு, அறிவியல் தேர்வில் பெரிய அளவில் கெடுபிடி எதுவும் இல்லை” என்றார்.

நாம் விசாரித்த தனியார் பள்ளி தேர்வு மையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் கேட்டோம்.

“தேர்வு அறைக்கு முழுமையாகப் பரிசோதனை செய்து பிறகுதான் உள்ளே அனுப்பவார்கள், அதில்லாமல் இரண்டு பேர் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். பறக்கும் படையினர் வருவார்கள். உள்ளே புகுந்து மாணவர்களைப் பரிசோதனைகள் செய்துவிட்டுப் போவார்கள்” என்றார்.

கடலூர் மாவட்டம் எல்லை முடிவில் தொழுதூர் பக்கம் இருக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம், “வினாத்தாள் எப்படியிருக்கிறது? கண்காணிப்பு படையினர் வந்து தொல்லைகள் கொடுக்கிறார்களா?” என்று விசாரித்தோம்.

“எங்கள் ஸ்கூல் மாணவர்கள் ஆல் பாஸ். எங்கள் ஸ்கூலுக்கு எந்த ஸ்க்வாடும் வராது. ஸ்டாண்டிங் ஸ்க்வாடும் உள்ளே வந்து பரிசோதனை செய்ய மாட்டார்கள். உள்ளே இருப்பவர்கள் நல்லா ஹெல்ப் பண்ணுவார்கள். எங்கள் ஸ்கூல் ரொம்ப சூப்பர்” என்றார் உற்சாகமாக.

நிதானமாக வரும் பறக்கும் படை

தேர்வுப் பணியிலிருக்கும் அதிகாரிகளிடம், “பறக்கும் படை அரசுப் பள்ளி மையங்களுக்குத்தான் போகுமா? தனியார் பள்ளி மையத்துக்குப் போக மாட்டார்களா?’’ என்று கேட்டோம்.

“பெயருக்குத்தான் பறக்கும் படை என்று சொல்வார்கள், அவர்கள் விரைந்து செல்வதற்கு வாகன வசதிகள் இல்லை. நாங்கள் வருவதைப் பார்த்துத் தனியார் பள்ளி மையங்களில் உஷாராகி விடுவார்கள். நாங்கள் சும்மா போயிட்டு திரும்பிடுவோம்” என்றவர், “தமிழகத்தில் பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தானே” என்றார்.

அரசுப் பள்ளியில் கை நிறையச் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் காலையிலும் மாலையிலும் தனியார் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுக்கிறார்கள் என்று திமுக மாணவர் அணி கடலூர் மாவட்ட அமைப்பாளர் நடராஜன் சொல்கிறார்.

“அது போக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களிலும் 10ஆவது, 12ஆவது மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுத்துவருகிறார்கள். தமிழகம் முழுவதும் இதே நிலைதான்” என்றவர், “தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் தேர்வு நேரங்களில் கண்காணிப்பாளர்களாக வருவார்கள். அவர்கள் மூலமாக மையத்தின் கண்காணிப்பாளர்களைக் கவனித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருப்பார்கள். தனியார் பள்ளிகள் அதிகமான சதவிகிதம் எடுக்க இதுதான் முக்கியக் காரணம்” என்றார்.

கல்வித் துறையின் தேர்வாணையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். “எங்களுக்கு எதுவும் தெரியாது. 09444203690 எண்ணுக்குத் தொடர்புகொண்டால் அனைத்துத் தகவல்களையும் பெறலாம்”என்ற பதில் வந்தது.

நாம் அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு தமிழகம் முழுவதும் எத்தனை தேர்வு மையங்கள் என்று கேட்டதும் 044 28272088ஐத் தொடர்புகொண்டு இயக்குநர் வசந்திதேவிக்கு இணைப்பு கொடுக்கச் சொல்லிப் பேசுங்கள் என்றார்.

அவர் அளித்த எண்களுக்கு (28272088, 28269982, 28275126) தொடர்புகொண்டால் மணி அடிக்கிறது. எடுத்து யாரும் பதில் சொல்லவில்லை.

தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

தனியார் பள்ளி உரிமையாளர் ஒருவரிடம் இதுபற்றிப் பேசினோம். அவர் விலாவரியாகப் பல விஷயங்களைப் புட்டுவைத்தார்.

“தமிழகத்தில் 75% சதவிகிதம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் பாடம் நடத்திவருகிறார்கள் அவர்களுக்கு பேக்கேஜ் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்போம். சிலருக்கு மாதம் சம்பளம் போல் கொடுத்துவிடுவோம். காலையில் 2 மணி நேரம் மாலை 4 மணி நேரம் வகுப்பு எடுப்பார்கள். இரண்டு வருடம் முன்புதான் ஒரு ஜிஓ கொண்டு வந்தார்கள். தேர்வு எழுதும்போது அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் யாரும் வரக் கூடாது என்று.

அதனால், அவர்கள் வராமலே அந்த மையத்துக்கு வரும் அதிகாரிகளே மாணவர்களைக் கவனித்துக்கொள்வார்கள். அந்த மையத்தின் அதிகாரிக்குப் பலமாகக் கொடுத்துவிடுவோம். அவர்கள் விரும்பும் உணவுகள், ஜூஸ், டீ எல்லாம் வாங்கிக்கொடுத்து, இரவு அறை போட்டுக் கொடுத்து மதுபானமும் வாங்கிகொடுப்போம். இது ஒன்றும் புதுசு அல்ல” என்றார்.

கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் விளக்கம் கேட்க அவரது அலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். அவரது உதவியாளர் சபேசன் பேசினார். நாம் விஷயத்தைச் சொல்லி, அமைச்சரிடம் பேச வேண்டும் என்று சொன்னதும், “அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது” என்று அவரே அமைச்சராக மாறி பதிலையும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். நன்றி #காசி@மின்னம்பலம்.காம்

Wednesday, March 28, 2018

இராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC பணிகளுக்கு அனுமதி மறுப்பு? மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC பணிகளுக்கு அனுமதி மறுப்பு? மத்திய சுற்றுச்சூழல்
அமைச்சக கடிதம்!


ராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய ஓஎன்ஜிசி நிறுவன விண்ணப்பங்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் 22 எண்ணெய் மற்றும் எரிவாயு சோதனைக் கிணறுகளை 21 கிராமங்களில் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான அனுமதியை கோரி கடந்த 2016-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஓஎன்ஜிசி விண்ணப்பித்தது. விண்ணப்பத்தை பரிசீலித்த வல்லுநர் குழு, 28 நிபந்தனைகள் விதித்து, இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.

கடந்த 2008-ல் சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் செயல்பட்டுவரும் எண்ணெய்க் கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளிலேயே தற்போது அனுமதி கோரப்படும் 22 கிணறுகளில் 21 கிணறுகளின் அமைவிடம் உள்ளதால், 2008-ல் அனுமதி பெறப்பட்டு செயல்பட்டு வரும் எண்ணெய்க் கிணறுகள் உரிய விதிமுறைகளின்படி உள்ளனவா என ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, சென்னை மண்டல அலுவலகம் கடந்த 27.10.2017 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் விதிமீறல்கள் குறித்து பட்டியலிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில், சுற்றுச்சூழல் அனுமதி விதிமீறல்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என விளக்கம் கேட்டு கடந்த 13.11.2017-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஓஎன்ஜிசிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், மீண்டும் சென்னை மண்டல அலுவலகம் 8.1.2018-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள மற்றொரு அறிக்கையின்படி, எல் 1 வட்டாரத்தில் 15 கிணறுகளில் 14 கிணறுகள் சுற்றுச்சூழல் அனுமதிக்கான காலக்கெடு முடிந்த பிறகே திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், எல் 10 மற்றும் எல் 12 வட்டாரங்களில் மறு சீரமைப்புப் பணிகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்த உரிய காலக்கெடுவுக்குள் முடிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையிலும், அமைச்சகத்தின் ஆய்வுகள் அடிப்படையிலும் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய சுற்றுச்சூழல் அம்சங்களில் விதி மீறல்கள் உள்ளதாக காரணம் காட்டி, புதிய திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதாக ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு கடந்த 22.2.2018 அன்று அனுப்பியுள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அரசுகள் விளக்க வேண்டும்

இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வ.சேதுராமன் கூறியபோது, “22 எண்ணெய்க் கிணறுகள் தொடங்க சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்பது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடிதத்தால் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காவிரி டெல்டாவில் இயங்கி வரும் பல எண்ணெய்க் கிணறுகள் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக டெல்டா வாட்ச் என்ற அமைப்பு கூறியுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் ஓஎன்ஜிசி பணிகள் உரிய அனுமதியுடன்தான் நடக்கிறதா என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும்” என்றார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி சண்முகசுந்தரம் கூறியபோது, “காவிரி டெல்டாவிலும் அனுமதியின்றி பணிகள் நடைபெறுவதால்தான், போராடுபவர்களின் மீது வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்துவதாக சந்தேகிக்கின்றோம். ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகள் குறித்த ஆவணங்களை வெளியிட கோரிக்கை விடுத்தாலும் ஆட்சியர்கள் கண்டுகொள்வதில்லை. இவ்விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார். நன்றி #இந்து

Tuesday, March 27, 2018

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இளையராஜா! எழுத்தாளர் சாரு _நிவேதிதா

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இளையராஜா! எழுத்தாளர் சாரு
_நிவேதிதா


இளையராஜா ரமணர் பற்றியும் இயேசு பற்றியும் உளறியிருப்பதைப் படித்தேன். இதைப் போலவேதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாப் மார்லி பற்றியும் உளறினார். அதை உளறல் என்று நான் சொன்னதும்தான் இளையராஜா பைத்தியத்திலிருந்த தமிழ்நாடே என்னைப் போட்டுத் துவைத்து எடுத்தது. இப்போது இளையராஜா பைத்தியம் கொஞ்சம் விலகி விட்டதால் அவருடைய உளறல்களை பலரும் உளறல் என்று புரிந்து கொள்கிறார்கள். அவருக்கு சாஸ்த்ரீய சங்கீதம் தவிர வேறு எதுவுமே தெரியாது. இப்படிப்பட்டவர்கள் நம் சமூகத்தில் எதைப் பற்றியும் கருத்து சொல்லலாம் என்கிற தந்தக் கலசத்தில் அமர வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் உளறுவதுதான் ஆன்மீகம்; அவர்கள் உளறுவதுதான் அரசியல்; அவர்கள் உளறுவதுதான் தத்துவம். இதற்கு இன்னொரு உதாரணம் கமல்ஹாசனார். நல்லவேளை, ரஜினிக்குத் தன்னுடைய இடம் தெரியும். அதிகம் உளறுவதில்லை. கொள்கை என்றதுமே எனக்குத் தலை சுற்றுகிறது என்று இந்த உலகில் வேறு யார் சொல்வார்? அது போகட்டும்.
இன்றைய தினம் ஆன்மீகம் என்றால் அது மத அடிப்படைவாதம். அவ்வளவுதான். இன்னொரு விஷயம், கிறிஸ்தவ மதத்தினர் மிகத் தீவிரமாக மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அதன் விளைவாக இந்துத்துவாவும் தீவிரமடைந்து கொண்டு வருவதை ஏன் நடுநிலையாளர்கள் பார்க்க மறுக்கிறார்கள்? ஒரு கிறிஸ்தவக் கல்லூரியில் ஒரு கிறிஸ்தவக் குடும்பம் தன் மகளைச் சேர்க்க வருகிறது. மதிப்பெண் மிகவும் குறைவு. அவர்கள் இந்துவாக இருந்த போது தலித் என்பதால், அந்த தலித் இட ஒதுக்கீட்டில் இடம் வாங்குவதற்கு தேவாலயத்தின் பாதிரியார் சான்றிதழ் கொடுக்க வேண்டும். சான்றிதழில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
This family is saved from Hinduism.
இப்படிப்பட்ட மதத் துவேஷம் இன்று மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களிடத்திலும் மிக அதிக அளவில் அதிகரித்திருக்கிறது என்பதை நடுநிலையாளர்கள் அவதானிக்க வேண்டும். வெறுமனே இந்துத்துவாவை மட்டும் திட்டிக் கொண்டிருக்கக் கூடாது.
திரும்பவும் சொல்கிறேன். மோடி என்ற மனிதர் இந்தியாவை 1930களின் ஜெர்மனியைப் போல் ஆக்கி விட்டார். படித்தவர்கள் கூட, மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் கூட, நடுநிலையில் சிந்திக்கக் கூடியவர்கள் கூட இன்று இந்து மதம் அழிந்து விடப் போகிறது என்று அஞ்சுகிறார்கள். அதன் காரணமாக, மிக ஆபத்தான இந்துத்துவா சக்திகளின் பின்னே போய்க் கொண்டிருக்கிறார்கள்.
மோடியின் ஆபத்து இவர்களுக்குத் தெரியவில்லை. இந்தியாவின் சிறப்பு இதன் பன்மைத்துவம். பல நூற்றுக்கணக்கான மொழிகள். பல ஆயிரக் கணக்கான கலாச்சாரங்கள். பல கடவுள்கள். பல வழிபாட்டு முறைகள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பேச்சு, ஒரு மொழி. இது எல்லாவற்றையும் சமமாகவே பாவிப்பது நம் முன்னோர் வாழ்ந்த முறை. முன்னாடி எல்லாம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது என்று நான் சொல்லவில்லை. சாதி அடிமைத்தனம், பெண்ணடிமைத்தனம் எல்லாமும் இருந்தது. ஆனால் பன்மைத்துவம் போற்றப்பட்ட கலாச்சாரம் நம்முடையது. அந்தப் பன்மைத்துவம் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதை கவனியுங்கள்.
இன்று ஆன்மீகவாதிகள் என்போர் மிக மோசமான மதத் துவேஷிகளாகவும் அவசியம் ஏற்பட்டால், உணர்வுகள் தூண்டப்பட்டால் மாற்று மதத்தினரைக் கொல்லவும் தயங்காதவர்களாகவும்தான் இருக்கிறார்கள். என் மதம் அழிந்து விடப் போகிறது என்பதற்காக என் சக மனிதனை நான் எப்படிக் கொல்ல முடியும்?

ரமணரா? இயேசுவா? இசைஞாணி கொழுத்திப் போட்ட தீயினால் தனியுமா ஸ்டெர்லைட் போராட்டம்?

ரமணரா? இயேசுவா? இசைஞாணி கொழுத்திப் போட்ட தீயினால் தனியுமா ஸ்டெர்லைட் போராட்டம்?
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து கருத்து தெரிவித்த இளையராஜா மீது சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து கருத்து கூறியிருந்தார். இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைக் கேலி செய்வதாகும், அவமானப்படுத்துவதாகும் என்று சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர், இளையராஜா வீட்டு முன்பு நேற்று முன்தினம் (மார்ச் 25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இளையராஜா மீது இன்று (மார்ச் 27) சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க பொதுச் செயலாளர் தயாநிதி, "இயேசு கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்தார் என்பது உலகமெங்கும் உள்ள கிறித்தவர்களின் நம்பிக்கை. இன்னும் சில தினங்களில் இயேசு உயிர்தெழுந்த நாள் உலகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் இளையராஜா, இயேசு உயிர்ந்தெழுந்ததைக் கொச்சைப்படுத்திக் கருத்து தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத உணர்வைப் புண்படுத்தும் விதத்தில் பேசிய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இளையராஜாவின் இந்தக் கருத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் இது வேறொரு நிலையிலும் பயணிக்கத் தொடங்கியுள்ளது. 'இந்துத்துவம் வேகமாக எதிர்வினை புரிந்துவருவதை எதிர்த்துப் போராடிவரும் நிலையில் கிறித்தவ மற்றும் இசுலாமிய மத அடிப்படைவாதமும் வேறு பரிமாணம் எடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கும் நாம் எந்த வகையிலும் இடமளிக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்' என்ற ரீதியில் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதில் முக்கியமான ஒன்றாக எழுத்தாளர் சாரு நிவேதிதா மற்றும் தாமரையின் பதிவைக் கருதலாம். இவர்கள் இருவரும் இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அதே வேளையில் கிறித்தவ மற்றும் இசுலாமிய மத அடிப்படைவாதத்தையும் எதிர்த்துத் தங்கள் கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கின்றனர்.

தலைக்கு மேல் தொங்கும் கத்தி! தப்புமா தமிழக அரசு?

தலைக்கு மேல் தொங்கும் கத்தி! தப்புமா தமிழக அரசு?


தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் விதியை நீதிமன்றம் வேறுவிதமாகத் தீர்மானித்துவிட்டால் எடப்பாடி தலைமையிலான ‘அம்மாவின் அரசு’ உடனடியாகக் கவிழ்வது தவிர்க்க முடியாததாகிவிடும். இரட்டை இலைச் சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் காற்று தினகரனுக்கு ஆதரவாக வீசாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீதிமன்றத்தின் அழுத்தம் காரணமாக சீக்கிரத்திலேயே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அடுத்த கோடையில் மக்களவைத் தேர்தல். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரனிடம் தோற்றுப்போன ஒரு கட்சி எதையாவது செய்தாக வேண்டும். ஆனால் உருப்படியாக எதையும் செய்வதற்கான செயல் திட்டங்களோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல் திணறிக்கொண்டிருக்கிறது அம்மாவின் அரசு. மாறிவரும் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழலை எதிர்கொள்வதற்கான தலைமை இல்லாததுதான் அதிமுகவைப் பொறுத்தவரை உண்மையான வெற்றிடமாக இருக்க முடியும்.

காலாவதியான ‘இலவச’ அரசியல்

கருணாநிதி, ஜெயலலிதாவால் கட்டமைக்கப்பட்டிருந்த அரசியல் அடையாளங்கள் தற்போது தேய்ந்து போனவையாக மாறியிருக்கின்றன. திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் வெற்றிச் சூத்திரங்களாக விளங்கிய இலவசங்கள் சார்ந்த அரசியல் தற்போது காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. அல்லது வெற்றியைத் தீர்மானிப்பதில் இலவசங்களுக்குரிய பங்கு குறைந்துகொண்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் சந்தித்துவரும் மக்கள் போராட்டங்களையும் அரசியல் விவாதங்களையும் கவனித்தால் தமிழக மக்கள் அரசு தங்களுடைய மரபான அடையாளங்களையும் பொருளாதார, சூழலியல் நலத்தையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டங்கள் இதற்கு உதாரணம். மெரினாவில் தொடங்கித் தமிழகத்தின் மூலை, முடுக்குகள்வரை ஆவேசமாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்களில் தமிழ் அடையாளம் சார்ந்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் கூடங்குளம் அணுஉலைக்கெதிராக நடந்த போராட்டங்களின்போது உருவான சூழலியல் சார்ந்த விவாதங்கள் தற்போது விரிவடைந்திருக்கின்றன. கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் பொருளாதாரத் திட்டங்களுக்கு ஆதரவானவை அல்ல. பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருந்துவரும் விவசாயப் பிரச்சினைகளுக்காகவும் நதிநீர்ப் பங்கீடு சார்ந்து தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கிடையே உருவாகியுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காணக் கோரியும் விவசாய சங்கங்கள் நடத்திவரும் போராட்டங்களை எளிதில் கடந்து செல்ல முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறிக்கொண்டிருக்கின்றன.

தற்போதைய நெருக்கடிகள் அரசியல் கட்சிகள் பின்பற்றிவரும் அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளோடு நேரடியான தொடர்புகொண்டவை என்பதால் அவை பற்றிய விவாதங்கள் கூர்மையடைந்திருக்கின்றன. இந்த நெருக்கடிகள் தமிழர்களின் இறையாண்மை சார்ந்த பிரச்சினையாக மட்டுமல்லாமல், தமிழ்ச் சமூகத்தின் வாழ்வாதாரங்களோடு நேரடித் தொடர்புகொண்ட பிரச்சினையாக மாறியிருக்கின்றன. அரசியல் இயக்கம் அல்லது கட்சியின் கொள்கை அல்லது கோட்பாடு சமூக நீதி சார்ந்ததாக, மனித உரிமைகளை மதிப்பதாக, அவற்றைப் பாதுகாப்பதாக, ஒரு பன்மைத்துவச் சமூகத்தின் தனித்த அடையாளங்களை அங்கீகரிப்பதாக, சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள், மாற்றுப்பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் முதலான அடித்தட்டுப் பிரிவினரின் வாழும் உரிமைகளுக்காகப் போராடுவதாக இருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கின்றன.திமுகவின் போர் முழக்கம்

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கான தகுதியுள்ள கோட்பாட்டுப் பின்னணிகொண்ட ஒரே இயக்கமாகத் தன்னை முன்னுறுத்திக்கொள்வதற்கான முனைப்புகளை மேற்கொள்ள முற்பட்டிருக்கிறது திமுக. மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை லட்சியமாகக்கொண்டு மண்டல மாநாடுகளை நடத்திவரும் திமுக கடந்த காலங்களில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளோடு கொண்டிருந்த அரசியல் கூட்டணிகளின்போது சமரச அரசியலை முன்னெடுத்தது பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. திமுக தனது அடிப்படையான அரசியல் கொள்கைகளைக் கைவிடத் துணிந்த ஒவ்வொரு முறையும் மோசமான தோல்விகளைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்போது காங்கிரஸின் அரசியல் கூட்டாளியாக இருந்த திமுக எடுத்த நிலைபாடுகள் காரணமாகத் தொடர் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்ததை திமுக புரிந்துகொண்டிருப்பதுபோல் தெரியவில்லை.

கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தற்போதைய செயல்பாடுகள் அதன் பூர்வீக அரசியல் அடையாளங்களை மீட்டெடுப்பதற்கான முனைப்புகளைக் கொண்டவைபோல் தோன்றினாலும் அவை மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு உதவவில்லை என்பதற்குக் கடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அக்கட்சி பெற்ற அவமானகரமான தோல்வி உதாரணம். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள விழையும்போது திமுக கோட்பாடுகளுக்கு முக்கியத்துவமளிக்கும் அரசியலை முன்னெடுக்கிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படையான கோட்பாடுகளாகக் கருதப்படும் மாநில சுயாட்சி, சமூக நீதி, சிறுபான்மையினர் நலன், ஒடுக்கப்பட்டோர் நலன் என திமுகவின் தற்போதைய தலைமை முன்னெடுத்திருக்கும் கோட்பாட்டு அரசியல், அக்கட்சி தனது மரபான அடையாளங்களை மீட்டெடுத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே கருதப்பட வேண்டும். ஆனால், கோட்பாடு சார்ந்த புரிதல்களைக்கொண்ட ஆற்றல்மிக்க தலைமையோ இல்லாமல் அந்தக் கட்சி திணறிக்கொண்டிருக்கிறது.பாஜக தந்திருக்கும் வாய்ப்பு

திராவிட அடையாளம், தமிழ் அடையாளம், மதச்சார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை ஆகிய எல்லாவற்றையும் பாதுகாப்பதற்கு இப்போதைக்கு பாஜக எதிர்ப்பு என்னும் ஒற்றை அரசியல் திட்டம்கூடப் போதுமானது எனக் கருதுவதுபோல் தோன்றுகிறது. பாஜகவின் மூர்க்கமான இந்து மீட்புவாத அரசியல் திமுகவை, அதன் அரசியல் அடையாளங்களை மீட்டெடுப்பதற்கு வழிவகுத்துத் தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஹெச்.ராஜா போன்ற பாஜகவின் முன்னணித் தலைவர்களால் திமுகவின் வேலை எளிதானதாக மாறியிருக்கிறது.

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் பெரியார் சிலை உடைப்பு பற்றிய பேச்சால் தமிழக அரசியல் கட்சிகளின் ஆத்திரத்தைத் தூண்டிவிட்ட பாஜக, அது சார்ந்து உருவான ஆத்திரம் அடங்குவதற்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையின் மூலம் தமிழக அரசியல் சூழலைப் பதற்றத்துக்குள்ளாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது. ராம ராஜ்ஜியம் பற்றிய பாஜகவின் கற்பிதங்கள் அதன் இந்துத்துவ அரசியல் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது. அயோத்தியை மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக்க மாற்றுவதற்கு பாஜகவும் சங்க பரிவாரங்களும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முனைப்புகளை உருவாக்கியுள்ளன. ஆனால் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி பற்றிய கற்பனைகள் பாஜகவுக்கு அரசியல் ரீதியில் சாதகமானவை.

பாஜகவின் கனவு

கடந்த மக்களவைத் தேர்தலில் தனது கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து 300 இடங்களைப் பெற்ற பாஜக நான்காண்டுகளுக்குள் நாட்டின் 19 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அரசியல் ரீதியில் உச்சபட்ச செல்வாக்குப் பெற்றிருந்த 1980களில் காங்கிரஸ் 17 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. அதையும் தாண்டியிருக்கிறது பாஜக. இந்தியாவின் பன்முகத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும் என பாஜக நம்புவதற்கு இது முக்கியமான காரணம்.

அரசியல் ரீதியில் தனக்குப் போட்டியாக வலுவான தேசிய கட்சி எதுவும் இல்லாததை பாஜக பயன்படுத்திக்கொள்ள முற்பட்டிருக்கிறது. மோடியைத் தன் நாயக பிம்பமாக இன்னும் சில வருடங்களுக்காவது நீடித்திருக்கச் செய்ய முடியும் என அது நம்புவதுபோல் தோன்றுகிறது. 2019 கோடையில் மக்களவைத் தேர்தலைப் போட்டியே இல்லாமல் எதிர்கொள்ள முடியும் எனக் கனவு காண முயல்கிறது.

பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக உருவாகியிருக்கும் எதிர்ப்புக் குரல்கள் அக்கட்சியின் ஒற்றை அடையாளம் சார்ந்த அரசியலுக்கு எதிரான அரசியலை வலுப்படுத்தியிருக்கின்றன. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக உருவாகியிருக்கும் மனநிலை அக்கட்சிக்குத் தேசிய அளவில் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். பன்முக அடையாளம் என்பது இந்தியாவின் வரலாற்றோடு தொடர்புடைய ஒரு நடைமுறை என்பதை பாஜக ஏற்க மறுக்கிறது. ஒற்றை அரசியல், ஒற்றைப் பண்பாடு சார்ந்த தன் கனவுகளை ஈடேற்ற இது சரியான தருணம் என மோடியும் அமித் ஷாவும் நினைப்பதுபோல் தெரிகிறது. அந்த நம்பிக்கை நமது ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய ஒன்று என்பதை அக்கட்சி உணராததின் விளைவே சமீபத்திய இடைத் தேர்தல்களில் அக்கட்சி அடைந்த தோல்விகள்.

இந்தியாவின் பன்முகத் தன்மையை, சமூக நீதியை, மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் குறைந்தபட்ச ஆசைகளைக் கொண்டுள்ள காங்கிரஸ், சமஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் அடையாளங்களை மீட்டெடுத்துக்கொள்வதற்கும் மாற்று அரசியல் களம் ஒன்றை உருவாக்குவதற்கும் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அடுத்த ஆண்டு கோடையில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்திய அரசியலில் ஏதாவது மாற்றத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அது நல்ல செய்தியாக இல்லாமல் போனாலும்கூட இந்திய அரசியலின் எதிர்காலத்தின் மீது பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்பதுதான் இன்றைய செய்தி.

நன்றி devibharathi.n@gmail.com @minnambalam.com

Monday, March 26, 2018

திணறும் தமிழக அரசு! தத்தளிக்கும் தமிழர்கள் வாழ்வு!

திணறும் தமிழக அரசு! தத்தளிக்கும் தமிழர்கள் வாழ்வு!


தேவிபாரதி

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சொன்னதைத் தமிழக அரசியல் கட்சிகள் சீரியசாக எடுத்துக்கொண்டிருக்கின்றன. வெற்றிடத்தை நிரப்புவதற்கு எல்லோருமே தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிந்தைய கற்பனைகளிலிருந்து விடுபட்டு தமக்கான அரசியல் அடையாளங்களைக் கண்டடைய முயன்றுகொண்டிருக்கிறார்கள். தமிழகத்தைக் காவிமயமாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சங் பரிவார அமைப்புகளின் திட்டங்களை முறியடிக்க திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் பராம்பரியமான அடையாளங்களை மீட்டெடுக்கப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் செப்படி வித்தைகளின் மூலம் சசிகலா, தினகரன் அணியிடமிருந்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை விதியின் கைகளில் ஒப்படைத்துவிட்டுத் தங்கள் அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் அம்மாவின் ஆட்சியை அதன் முழு ஆயுள்வரை நீட்டிக்கச் செய்வதும் அம்மாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் தினகரனிடமிருந்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்வதும்தான் தற்போதைக்கு அந்தக் கட்சிக்கு வரலாற்றுக் கடமை.

அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு அவர்கள் அடிக்கடி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்கிறார்கள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். தினகரனும் அவரது ஆதரவாளர்களும் கட்சிக்கு உரிமை கோருவதை மறுக்க நீதிமன்றங்களின் வாசல்களில் கால்கடுக்க நின்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். நீதிபதிகளின் விமர்சனங்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்களது வாரிசுரிமையை நிலைநாட்டுவதற்கான ஆவணங்களையும் சான்றுகளையும் திரட்டி அவற்றை லாரிகளில் ஏற்றிக்கொண்டு போய் தேர்தல் ஆணையத்தின் கிடங்குகளில் குவித்து வைக்கிறார்கள். கட்சியின் எதிர்காலம் சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது.

இறுதித் தீர்ப்பு நாளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும் ஒருவர் தோளை ஒருவர் ஆதரவாகப் பற்றிக்கொண்டு நல்லது நடக்கும் என்னும் எதிர்பார்ப்புகளுடன் மேடைகளில் தோன்றி புன்னகைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். அம்மாவின் அரசு என்பதால் அம்மாவின் கனவுகளை நிறைவேற்றுபவர்களாகத் தங்களையும் தங்கள் அரசையும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். 2016 தேர்தலின்போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏதாவது செய்ய முயல்கிறார்கள். தேர்தலின்போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பணிபுரியும் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்குவதன் மூலமும் ஜெயலலிதாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி முதலான இலவசத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தங்கள் வாரிசுரிமையைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார்கள்.

மலைக்க வைக்கும் நெருக்கடிகள்

குறைந்தபட்சம் இன்னும் மூன்றாண்டுகளுக்கு - 2021 மே வரை - நீடித்திருக்க வேண்டிய ஓர் அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளை நிறைவேற்றுவதற்கு அரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா என எழுந்துள்ள கேள்விகளை எதிர்கொள்ள அவர்களுக்கு அவகாசமில்லை. சென்ற வாரம் தனது எட்டாவது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பன்னீர்செல்வம் அரசின் கடன் சுமை மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டியபோது எல்லோருமே அதிர்ச்சியில் வாயடைத்துப்போனார்கள். கடந்த வருடங்களில் அரசு தன் முக்கிய வருவாய் ஆதாரங்களாகக் கொண்டிருந்த மதுபான விற்பனை, மணல் விற்பனை ஆகியவற்றுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நீதிமன்ற ஆணைகளைக் கடக்க முடியாத அரசு பத்திரப் பதிவு நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலமும் பேருந்து, மின்கட்டணங்களை உயர்த்தியதன் மூலமும் நிலைமையைச் சமாளிக்க முயன்றுவருகிறது. மைய அரசு மானியங்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாகத் தங்கள் அம்மா அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு திணறிக்கொண்டிருக்கிறது.

அதிமுக அரசால் தடையற்ற மின் விநியோகத்தை அளிக்க முடிந்திருந்தாலும் மின் வாரியம் தாள முடியாத கடன் சுமையில் சிக்கிக்கொண்டிருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. நஷ்டத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் போக்குவரத்துத் துறையால் தனது பணியாளர்களின் ஓய்வூதியப் பயன்களைக்கூட ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை. அவர்களது போராட்டங்களை எதிர்கொள்ள அரசு நீதிமன்றங்களின் தயவை நாட வேண்டியிருந்தது.

சுகாதாரமும் கல்வியும்

கல்வி, சுகாதாரம் சார்ந்த துறைகளில் சில உருப்படியான மாற்றங்களைக் கொண்டுவர அரசு முயன்றுவருகிறது. ஆனால், அந்தத் துறைகளில் அரசு பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம். கடந்த இருபதாண்டுகளில் உலகளாவிய அளவில் மேற்கண்ட துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக அதிகாரத்திலிருந்த திமுக, அதிமுக அரசுகளால் அதிகமும் கவனத்தில்கொள்ள முடிந்ததில்லை. அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலன்கள் கிராமப்புற மக்களை எட்டவே இல்லை. அடித்தட்டு மக்களின் மருத்துவம், சுகாதாரம் சார்ந்த தேவைகளுக்கு அரசு மருத்துவமனைகளைச் சார்ந்திருக்க முடியாத பரிதாபகரமான நிலையைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் அரசு நடத்தும் சாதனை விளக்கக் கூட்டங்களால் என்ன பயன் இருக்க முடியும்?

இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்குக் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றை ஒழுங்காக நடைமுறைப்படுத்துவதற்குரிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. அரசின் பல்வேறு துறைகளிலும் புரையோடிப் போயிருக்கிற ஊழல், முறைகேடுகளைக் களைவதற்கும் அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் அரசிடம் திட்டம் எதுவும் இருப்பதுபோல் தோன்றவில்லை.

கல்வித் துறையின் நிலை இன்னும் மோசம். எடப்பாடி அரசு பொறுப்பேற்றுக்கொண்டவுடன் கடந்த பத்தாண்டுகளில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி நேர்மையான அதிகாரியாகப் பெயரெடுத்திருந்த உதயச்சந்திரனை கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமித்தபோது அந்தத் துறையின் வளர்ச்சிக்கான விதை ஊன்றப்பட்டதாகக் கல்வியாளர்களில் பலருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இரண்டே மாதங்களில் அந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்டது. அவசர அவசரமாகப் பாடத் திட்டங்களை மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கியது அரசு.

பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, வகுப்பறைகள், கழிப்பிடங்களின் தரத்தை உயர்த்துவது, பள்ளிகளில் நூலகங்களை உருவாக்குவதன் மூலம் மாணவர்களின் வாசிப்புத் தரத்தை உயர்த்துவது, கற்றல், கற்பித்தல் முறையில் தேவையான மாற்றங்களை உருவாக்கி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது எனக் கல்வித் துறையின் அடிப்படையான தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களை உருவாக்குவதைப் பற்றிச் சிந்திக்காமல் கண்மூடிக் கண் திறப்பதற்குள் மாணவர்களை நீட் உள்ளிட்ட எல்லா வகையான தகுதித் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்குத் தயார்படுத்தப்போவதாக அரசு வெறுமனே கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது.

விவசாயம் என்னும் பெரும் பிரச்சினை

கடந்த சில ஆண்டுகளாகவே அதிக நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மானியங்கள், கடன் தள்ளுபடிகளைத் தவிர்த்து அரசிடம் வேறு ஏதாவது திட்டம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை. மைய அரசின் வளர்ச்சித் திட்டங்களால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களைப் பொருட்படுத்தாதன் விளைவாக அரசு விவசாயிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. நெடுவாசல், கதிராமங்களம், திருப்பூர் சாய ஆலைக் கழிவுகளால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நொய்யல் பகுதி விவசாயிகள் என முடிவேயில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் போராட்டங்களை அரசு பல வருடங்களாகப் புறக்கணித்து வந்திருப்பதோடு போராடும் விவசாயிகளை ஒடுக்கவும் முயன்று வருகிறது.

காலத்தின் தேவையை உணர்ந்து செயல்படுவதற்கு அம்மாவின் அரசின் முன் பல நெருக்கடிகள் இருக்கின்றன. அதை எதிர்கொள்வதற்கான திராணியற்ற நிலையில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் கட்சியில் தங்கள் வாரிசுரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் தர்ம யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி - பன்னீர் இணை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜகவைச் சார்ந்திருக்கிறது என்னும் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்துவிட முடியாதபடிதான் நிலைமை இருக்கிறது.

devibharathi.n@gmail.com @minnambalam.com

Saturday, March 24, 2018

'உயிருக்கு நிச்சயமில்லை' - பின் ஏன் இந்தியர்கள் இராக் செல்கிறார்கள்?

'உயிருக்கு நிச்சயமில்லை' - பின் ஏன் இந்தியர்கள் இராக் செல்கிறார்கள்?
குண்டுவெடிப்பு, ஐ.எஸ் அமைப்பு, உயிருக்கு நிச்சயமில்லை என்பது எல்லாம் தெரிந்திருக்கிறது. பின் ஏன் இந்தியர்கள் இராக் செல்கிறார்கள்? இந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இராக் சென்றவர்களின் வாழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.ஆம். இராக் செல்வது. அங்கு வசிப்பது ஆபாத்தானது தான். ஆனால், அதே அளவு கொடுமையானது எங்கள் வாழ்வில் நிலவும் வறுமை என்கிறார் 47 வயதான மஞ்சித் கெளர்.
இவர் இராக் மொசூலில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களில் ஒருவரான தாவீந்தர் சிங்-கின் மனைவி.

தாவீந்தரின் கதை
"தாவீந்தர் இங்கிருந்து புறப்பட்ட போது, அவரது சகோதரி அவரை தடுத்து நிறுத்த முயன்றார், 'அங்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அங்கு செல்லாதீர்கள்' என்றார். ஆனால், அவர், `அஞ்சாதீர்கள். எனக்கு ஒன்றும் ஆகாது` என்று எங்களுக்கு நம்பிக்கை அளித்தார்" என்கிறார் மஞ்சித் கெளர்.


"வெடிகுண்டு தாக்குதல்கள் எல்லாம் தொலைவில்தான் நடக்கிறது. நான் வசிக்கும் இடம் பாதுகாப்பாக உள்ளது என்று எப்போதும் சொல்வார். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேசிய போது, அவர் கடத்தப்பட்டு இருந்திருக்கிறார். ஆனால், அதை அவர் எங்களிடம் சொல்லவில்லை. நாங்கள் பதற்றமடைவதை அவர் விரும்பவில்லை. ஆனால் இப்போது ஏதேதோ நடந்துவிட்டது." என்று பிபிசியிடம் சொல்லும் போதே வெடித்து அழ தொடங்கிவிட்டார்.

தாவீந்தர் ஜலந்தரில் உள்ள ருர்கா கலானில் தான் தினக்கூலியாக பணியாற்றி இருந்திருக்கிறார். ஒரு நாள் வேலைக்கு சென்றால் அவருக்கு ரூபாய் 200 முதல் 250 வரை கிடைக்கும். ஆனால், அவருக்கு தினமும் வேலை கிடைக்காது. இதனால், ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தையாக, வாழ்க்கை வறுமையுடன் சுழன்று இருக்கிறது.
மஞ்சித் ஒரு அறை கொண்ட மோசமான நிலையில் இருக்கும் ஒரு வீட்டில் மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். அவர்களின் வறுமை நிலைக்கு அந்த வீடே ஒரு சாட்சியாக இருக்கிறது.
"மூன்று, நான்கு ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தால் போதும், நாம் சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிடலாம் என்றார்.ஒரு முகவர் மூலமாகதான் அவர் இராக் சென்றார். இதற்காக, அவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கடன் பெற்று அளித்தோம். அந்த முகவரும், இராக்கில் அமெரிக்க படைகள் இருக்கின்றன. அங்கு நிலைமை அவ்வளவு மோசம் இல்லை என்றார். ஆனால்... " - என்று சொல்லி முடிக்கும் போதே உடைந்து அழுகிறார்.

மஞ்சித் கெளர் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 2,500 மாத ஊதியத்தில் தையற் கலை பயிற்சி அளிக்கிறார்.
அவருடைய மூன்று மகன்களில், இருவர் இரட்டையர்கள். தாவீந்தர் இராக் சென்ற போது, மூத்த மகனுக்கு 6 வயது. இரட்டையர்கள் எட்டு மாத குழந்தைகளாக இருந்தனர்.
அவர் கடத்தப்படும் வரை, ஊதியத்தின் பெரும்பங்கான 25,000 ரூபாயை எங்களுக்கு அனுப்பி விடுவார் என்கிறார் கெளர்.
நம்பிக்கை
தாவீந்தர் கடத்தப்பட்டப் பின், நான்கு ஆண்டுகள் அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல்தான் அவர் குடும்பம் இருந்திருக்கிறது. ஆனால், தாவீந்தர் என்றாவது ஒருநாள் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருந்திருக்கிறது.
"நாங்கள் ஒவ்வொரு முறை சுஷ்மா சுவராஜை சந்திக்கும் போதும், அவர் எங்களிடம் நம்பிக்கை இழந்து விடாதீர்கள் என்பார்." என்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இவர்களிடமிருந்து மரபணு மாதிரிகளை அரசு எடுத்திருக்கிறது. ஆனால், அதற்கான காரணத்தை அவர்களிடம் சொல்லவில்லை. "எங்களிடம் எந்த காரணத்தையும் அவர்கள் சொல்லவில்லை. ஆனால், கிராமமக்கள் தாவீந்தருக்கு ஏதாவது ஆகி இருக்கலாம் என்று அனுமானித்தனர்." என்கிறார் கெளர்.
செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் கெளரிடம் தாவீந்தர் குறித்த செய்தியை கூறி இருக்கிறார்கள். "நான் தகவல் கேள்விபட்டதும் உடனே என் அம்மா வீட்டிற்கு சென்றேன். அவர் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்."

தனது குழந்தைகளை பார்த்தவாரே கெளர், "இவர்கள் அப்பா எங்கே என்று கேட்கும் போதெல்லாம், அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்று சொல்லிவந்தோம். வரும் போது உங்களுக்கு மிதிவண்டி வாங்கி வருவார் என்போம். இனி, அவர்களிடம் என்ன சொல்வோம்?" என்கிறார் விரக்தியான குரலில்.
வறுமை... வறுமை... எங்கும் வறுமை
இராக் மொசூலில் இறந்தவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாபிகள் எப்போதும் புதிய வாய்ப்புகளை தேடி வெளிநாடு பயணிப்பவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து ஆபத்தான வாய்ப்புகளை தேர்தெடுத்து இருக்கிறார்கள். இதற்கு இரே காரணம், 'வறுமை`.
இறந்தவர்களில் 32 வயதான சந்தீப் குமாரும் ஒருவர். அவரும் பஞ்சாபை சேர்ந்தவர். தினக்கூலி. கடுமையான வறுமையை அவர் குடும்பம் எதிர்கொண்டு இருந்தது.
நாம் அவரின் கிராமத்திற்கு சென்ற போது, கதவுகளற்ற அவருடைய வீடு நம்மை வரவேற்றது.
"சந்தீப் 2012 ஆம் ஆண்டு இராக் சென்றார். கடுமையாக உழைத்து பணம் ஈட்டி தமது நான்கு சகோதரிகளுக்கும் உதவலாம் என்று பெரும்நம்பிக்கை கொண்டிருந்தார் ." என்கிறார் சந்தீப் குமாரின் சகோதரர் குல்தீப் குமார் சொல்கிறார்,
ஒவ்வொரு மாதமும் அவர் அனுப்பும் தொகையை எதிர்பார்த்துதான் குடும்பம் இருந்தது," என்கிறார்.
இது போல இராக் சென்ற ஒவ்வொருவரும் வறுமையின் காரணமாகவே அங்கு சென்றிருக்கிறார்கள்.
பிரிட்பால் சர்மாவும் இராக்கில் மரணமடைந்தவர்களில் ஒருவர்.
அவரது மனைவி ராஜ் ராணி, "இராக் சென்றால் அதிகம் பணம் ஈட்டலாம் என்றார்கள். ஆனால். அங்கு சென்ற பிறகும் எங்கள் வாழ்வில் எந்த வெளிச்சமும் வரவில்லை. அங்கும் அவர் கடத்தப்படும் வரை பணத்திற்கு சிரமப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்" என்று தெரிவித்தார்.

இராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சுணக்கத்துடன் செயல்பட்டதா இந்திய அரசு?

இராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சுணக்கத்துடன் செயல்பட்டதா இந்திய அரசு?


அரசாங்கங்கள் உணர்ச்சிமிக்கதாகவோ அல்லது குறிப்பிட்ட விவகாரத்தை வெற்றிகரமாக முடித்துவைத்ததாகவோ முன்மாதிரிகள் இல்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு மொசூல் நகரம் ஐஎஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் வந்தபோது அங்கிருந்த 40 இந்தியர்கள் கடத்தப்பட்ட விவகாரத்திலும் இதே செயற்பாட்டை கடைபிடித்தது இந்திய அரசு. ஜூன் 18, 2004ல் இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் 40 இந்தியர்கள் ஐஎஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில்தான் முதல் முறையாக தெரிவித்தார்.
அதன் பிறகு, கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கமானது அதன் சொந்த ஆதாரங்களை பயன்படுத்தி கடத்தப்பட்ட நபர்கள் உயிருடன் இருப்பதாக கூறிவந்தது. ஆனால், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் டிஎன்ஏவை ஆய்வு செய்ததில் கொல்லப்பட்டது கடத்தப்பட்ட இந்தியர்கள் என்பது தெரியவந்தது. இருப்பினும், இந்த அரசாங்கமோ அமைதி நிலையை கையாண்டது. கண்டெடுக்கப்பட்ட உடல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை இராக் அரசாங்கம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருத்தமளிக்கும் வகையில் தற்போதுதான் இந்திய அரசாங்கம் இந்தியர்களின் இறப்பை உறுதி செய்வதாக அறிவித்துள்ளது.

கடத்தப்பட்ட இந்தியர்கள் இறந்துவிட்டதாக அவர்களின் உறவினர்களுக்கு கூட தெரியப்படுத்தாமல், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரடியாக நாடாளுமன்றத்தில் அறிவித்தது இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் அரசாங்கம் செய்த சொதப்பலில் மோசமானதாக அமைந்தது. இது நாடாளுமன்றத்தின் வரைமுறைக்குட்பட்ட ஒரு விடயம் என்பதால், நாடாளுமன்றத்தில் முதலாவதாக தெரிவிப்பதாக சுஷ்மா கூறினார். இது அசாதாரணமான கூற்றாகும். ஏனெனில், உலகம் முழுவதுமே இந்த நாகரீக சமுதாயத்தில் ஒருவரின் இறப்பு குறித்த தகவலை பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்னர், அவரது உறவினர்களுக்கு தெரிவிப்பதென்பது நடைமுறையாக இருந்து வருகிறது. இது முழுவதும் மனிதாபிமானத்தை அடிப்படையாக கொண்டது. இந்த எளிதான விடயத்தை கூட சுஷ்மாவினால் புரிந்துகொள்ள முடியவில்லை.இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கம் இன்னும் எதையும் செய்து முடிக்க முடியாது என்று எவரும் கூற முடியாது. பணி நிமித்தமாக இராக் சென்று, மொசூல் நகரில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்களாவர்.

இராக் இராணுவம் செயலற்று போயிருந்த சூழ்நிலையில், இந்திய தொழிலாளர்கள் ஐஎஸ் அமைப்பினரிடம் சிக்கிக் கொண்டனர். ஆனால், பல நாடுகள் இணைந்து அவர்களை கண்டுபிடிப்பதற்கும், இறந்த உடல்களை மீட்பதற்கும் நான்கு ஆண்டுகளானது.
நாடாளுமன்றத்தில் பேசிய சுஷ்மா, தொழிலாளர்களின் இறப்பை முற்றிலும் உறுதிப்படுத்துவதற்கு முன்பு வெளியிடுவதை தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். மொசூல் நகரம் அரசாங்க படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முற்பகுதியில் வந்தவுடன், உடனடியாக அப்போதும், பிறகு 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமும் வெளியுறவுத்துறை இணை அமைச்சரான வி.கே. சிங்கை இந்தியர்களின் தேடுதல் வேட்டையை நடத்துவதற்காக இராக்கிற்கு சுஷ்மா அனுப்பி வைத்தார். இராக் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் பிண குவியலின் மணல்மேட்டை கண்டறிந்து, அந்த உடல்களின் டிஎன்ஏக்களை இந்தியாவிலுள்ள உறவினர்களின் டிஎன்ஏக்களோடு ஒப்பிட்டு இறந்தது இந்திய தொழிலாளர்கள்தான் என்பது கண்டறியப்பட்டது.

டிஎன்ஏ மாதிரி பரிசோதனை செய்வதற்கு முன்னதாகவே கண்டெடுக்கப்பட்ட உடல்கள் இருந்த இடத்தில் இந்திய தொழிலாளர்களில் சிலரின் அடையாள அட்டைகளும், ஆபரணங்களும் மற்றும் நீண்ட முடியும் இருந்ததென சுஷ்மாவின் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டது. உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதே இறந்தது இந்தியர்கள்தான் என்பதை அரசாங்கம் அறிந்தவுடனேயே அவர்களின் உறவினர்களிடம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
இதுதான், நிலைமையை பகுத்தறியுடன் கையாளும் வழியாக இருக்கும்போது, சுஷ்மா செய்தது அதை அழிவிற்குட்படுத்தும் வகையில் இருந்தது.
இராக்கிலிருந்து 2015 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு தப்பித்து வந்த ஹர்ஜீத் மாஸிஹ் என்பவர், 53 வங்கதேச முஸ்லிம்கள் மற்றும் பல இந்தியர்களை ஐஎஸ் அமைப்பினர் கடத்தியுள்ளதகவும், குறிப்பாக அதிலுள்ள இந்தியர்களை மட்டும் தனியே பிரித்ததாகவும் கூறினார். கடத்தப்பட்ட வங்கதேசத்தவர்கள் விடுவிக்கப்பட்டபோது ஹர்ஜீத்தும் அவர்களுடன் சேர்ந்து அங்கிருந்து தப்பித்து வந்தார். ஆனால், பிடித்துவைக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் மிருகத் தன்மையால், அந்த தொழிலாளர்கள் கொல்லபட்டிருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக சுஷ்மாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாறாக, தொலைபேசி மூலம் மாசியிடம் பேசிய சுஷ்மா, அவரது கணக்கு குறித்து தனிப்பட்ட முறையில் கேலி செய்ததோடு, தொழிலாளர்கள் உயிருடன் இருப்பதாகவும் அவர்களை தேடும் பணியை அரசு தொடரும் என்றும் வலியுறுத்தினார்.
மற்றொரு அறிவுக்கு ஒவ்வாத செயலில், மாசி இந்திய அதிகாரிகளின் பிடியில் ஒன்பது மாதங்கள் வைக்கப்படிருந்தார், ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
மோதி அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், தி வயர்ஸ் இன்ட்ரீபிட்டின் நிருபர் தேவிரூபா மித்ரா, குர்திஸ்தானில் உள்ள எர்பில், சில நாட்களுக்கு முன்பு மொசுலில் பிடித்துவைக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று தமது அறிக்கையில் கூறியிருந்தார்.

அவரது அறிக்கை, தப்பிச்சென்ற வங்கதேச தொழிலாளர்களையும் மற்ற தொழிலாளர்களையும் பணியமர்த்திய நிறுவனத்துடனான உரையாடலின் அடிப்படையில் அமைந்திருந்தது. இந்த அறிக்கை, ஹர்ஜீத் மாசி தப்பித்த செய்தியையும் உறுதிபடுத்தியிருக்கிறது. குர்திஷ் அரசு அளித்த தகவலின் அடிப்படையில், இந்திய பணியாளர்கள் கொல்லபட்டிருக்கலாம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியன் எக்ஸ்ப்ரஸில் பிரவீன் சுவாமி தனது கட்டுரையில் கூறியிருந்தார்.
ஆனால், தொழிலாளர்கள் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் அரசாங்கம் உறுதியுடன் கூறியது. கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்கள் இறந்துவிட்டதாகக் கூறும் தகவல்களை மறுத்த அரசாங்கம், அவர்கள் உயிருடன் இருப்பதாகக் கூறிய பல தனிநபர்களின் தகவல்களை நம்பியிருந்தது. ஆனால், அவர்கள் உயிருடன் இருப்பதாக சுஷ்மா தொடர்ந்து கூறி வந்தார். தான் அளிக்கும் தகவலானது பல மூன்றாம் தரப்பு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் தெரிவித்தார். இதே கருத்தை பல்வேறு விதங்களில் கடந்தாண்டு வரை சுஷ்மா வலியுறுத்தி வந்தார்.
இந்த முழு விவகாரமானது, வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த இந்திய தொழிலாளர்களை எப்படி நடத்துகிறோம் என்பதற்கு ஒரு மோசமான சாட்சியாகும். உத்தியோகபூர்வமாக குடியேறுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளியுறவு அமைச்சகம் அலுவலர்களை நியமித்து இருந்தாலும், உண்மையில் அவர்கள் வெளிநாடுகளில் வேலைகளை வாங்கித் தருவதாக வாக்குறுதியளிப்பவர்கள் மற்றும் முகவர்கள் மூலம் சுரண்டப்படுகிறார்கள். மேலும், அவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது காவல்துறையினர் மற்றும் சுங்கத்துறையினரிடம் சிக்கும் சூழ்நிலையும் நிலவுகிறது. அதிகளவிலான சலுகை அளிக்கும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களைவிட வெளிநாடுகளில் பணிபுரியும் இதுபோன்ற தொழிலாளர்கள்தான் வருடத்திற்கு நாட்டின் அந்நிய செலாவணிக்கு 45 பில்லியன் டாலர்களை அளிக்கிறார்கள்.

நன்றி BBC tamil.

Friday, March 16, 2018

புதன், 14 மார்ச், 2018 ஹரியாணாவில் கையகப்படுத்தப்பட்ட 912 ஏக்கர்கள் செல்லாது,,, முழு மோசடி தவிர வேறேதுவும் அல்ல’ : உச்ச நீதிமன்றம் அதிரடி !

புதன், 14 மார்ச், 2018 ஹரியாணாவில் கையகப்படுத்தப்பட்ட 912 ஏக்கர்கள் செல்லாது,,,
முழு மோசடி தவிர வேறேதுவும் அல்ல’ : உச்ச நீதிமன்றம் அதிரடி !
tamilthehindu :ஹரியாணாவில் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா ஆட்சியின் போது தனியார் கட்டுமான நிறுவனங்கள் சட்ட விரோதமாகக் கையகப்படுத்திய 912 ஏக்கர்கள் நிலக் கையகத்துக்கான ஒப்பந்தங்கள் எதுவும் செல்லாது, இது முழுக்க முழுக்க மோசடியே என்று கூறி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஹூடா ஆட்சியை சாடிய உச்ச நீதிமன்றம், அதிகார துஷ்பிரயோகம், மோசடி தவிர இது வேறெதுவும் அல்ல என்று கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு மாநில மத்திய அரசுகள் ஒவ்வொரு பைசாவையும் மீட்டு அரசுக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 912 ஏக்கர்கள் நிலம் 2004-2007-ல் மனேசர், லக்னவ்லா, நவ்ரங்பூர் ஆகிய 3 கிராமங்களிலிருந்து சட்ட விரோதமாகக் கையகப்படுத்தப்பட்டதாகும். அதாவது தொழிற்துறை டவுன்ஷிப் உருவாக்க கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு விவசாயிகள் குறைந்த விலைக்கு நிலங்களை விற்றுள்ளனர்.

முதலில் நிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. கையக நடைமுறை தொடங்கியவுடன் விலை ரூ.80 லட்சத்துக்கு உயர்ந்தது. கடைசியாக டிஎல்எப் நிறுவனம் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4.5 கோடி கொடுத்து வாங்கியது.
இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், உதய் லலித் கூறும்போது, “இது ஏதோ போனன்ஸாவோ டீலோ மட்டுமல்ல, சாதகப் பலன்களுக்குச் செய்யும் மாற்றுச் சாதகப் பலனே” என்று கூறினர்.
2007-ல் ஹூடா அரசு கையகப்படுத்தலை ரத்து செய்தது. இதனைக் குறிப்பிட்ட நீதிபதிகள், “ரத்து செய்தது மோசடியான நோக்கங்களுக்காகவே. அதாவது தனியார் கட்டுமான நிறுவனம் வாங்கிய பிறகு மாநில அரசு ரத்து செய்துள்ளது. மேலும் இந்த ஒட்டுமொத்த நிலம் கையக நடைமுறைகளும் சட்டவிரோதமாக நிலக் கையக சட்டத்துக்கு புறம்பாக நடந்தேறியுள்ளது.” என்று அதிரடியாகக் கூறியுள்ளது.
மேலும் இந்த ஒட்டுமொத்த நடைமுறையிலும் இடைத்தரகர்கள் பெரிய அளவில் பணம் பார்த்து விட்டார்கள் என்பது ஆதாரபூர்வமாக தெரிந்ததாக உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.
மேலும் நிலத்தை அளித்தவர்கள் அதற்கான தொகையைப் பெற்றுவிட்டதால் இந்த நிலங்கள் அவர்களுக்குத் திரும்பி அளிக்க முடியாது என்றும், இந்த நிலம் ஹரியாணா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம், ஹரியாணா தொழிற்துறை வளர்ச்சி கார்ப்பரேஷன் ஆகியவற்றிடம் இருக்கும். எனவே கட்டுமான நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நில உரிமையாளர்களுக்குக் கொடுத்த பணத்தை திரும்பப் பெறவும் முடியாது என்று உத்தரவிட்டுள்ளது

I T கம்பெனிகளின் கண்ணைக் கட்டும் சம்பளம்?

I T கம்பெனிகளின் கண்ணைக் கட்டும் சம்பளம்?
Prasanna VK - GoodReturns Tamil இந்தியாவில், ஏன் உலகளவில் அதிகளவிலான சம்பளம் அளிக்கும் துறை என்றால் இது ஐடி அல்லது டெக் துறை என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம். இத்துறையில் யார் அதிகமாகச் சம்பளம் தருவது என்று நிறுவனங்கள் மத்தியில் பல வருடங்களாகப் போட்டி போட்டு வருவது எத்தனை பேருக்கு தெரியும்?. கூகிள் நிறுவனத்திற்குப் போட்டியாக மைக்ரோசாப்ட்டும், அதற்குப் போட்டியாகப் பேஸ்புக்கும் என இந்தப் போட்டி தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. அட இந்த 3 நிறுவனங்கள் மட்டும்தான் அதிகம் சம்பளம் கொடுக்கிறதா என்றால் இல்லை, உலகில் பல நிறுவனங்கள், பேஸ்புக், கூகிள் நிறுவனங்களுக்கு அதிகமான சம்பளத்தை அளிக்கிறது. இந்த வகையில் 2017ஆம் ஆண்டில் எந்த நிறுவனம் எவ்வளவும் சம்பளம் அளிக்கிறது என்பதைத் தான் இப்போது பார்க்கபோகிறோம். கடுப்ப கிளப்பாதீங்க பாஸ்.. கடுப்ப கிளப்பாதீங்க பாஸ்.. இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக சம்பள உயர்வு மிகவும் குறைவான அளவே அளித்து வரும் நிலையில், இத்துறை ஊழியர்களுக்கு அடுத்து எந்த நிறுவனத்திற்கு மாறலாம் என்பதற்கு இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பார்போம். கிளாஸ்டோர் கிளாஸ்டோர் உலகளவில் இருக்கும் நிறுவனங்களின் சம்பளம், ஊழியர்கள், பணியிடம் எனப் பலவற்றையும் அந்த நிறுவனத்திற்குள் போகாமலேயே பிற ஊழியர்களின் வாயிலாகப் பல விஷயங்களை அளித்து வரும் கிளாஸ்டோர். 2017ஆம் ஆண்டுக்கான அதிகச் சம்பளம் அளிக்கும் 25 நிறுவனங்களைப் பட்டியல்போட்டுள்ளது.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பளமே 1,20,000 டாலர். பிராகேட் பிராகேட் கம்பியூட்டர் ஸ்டோரேஜ் நெட்வொர்க் மற்றும் கம்பியூட்டர் நெட்வொர்கிற்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் பிராகேட் நிறுவனம் இப்பட்டியலில் 25வது இடத்தைப் பிடித்துள்ளது. 2016 நவம்பர் மாதத்தில் பிராகேட் நிறுவனத்தை Broadcom கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. சராசரி மொத்த சம்பளம்: $136,010 சராசரி அடிப்படை சம்பளம்: $122,000 சைலினெக்ஸ் சைலினெக்ஸ் புதிய மென்பொருளை இயக்க கூடிய programmable chipஐ தயாரிக்கிறது இந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனம்.

சராசரி மொத்த சம்பளம்: $1,37,000 சராசரி அடிப்படை சம்பளம்: $1,19,348 அடோப் அடோப் கிரியேடிவ் மற்றும் மார்கெட்டிங் துறைக்குப் பிரத்தியேகமாக மென்பொருளை தயாரித்தும் வடிவமைக்கிறது அடோப் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது.

சராசரி மொத்த சம்பளம்: $1,38,000 சராசரி அடிப்படை சம்பளம்: $1,23,000 மேடாலிாய மேடாலிாய உலகளவில் வாடிக்கையாளர் சேவையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்ற நிறுவனங்களில் மேடாலிாய நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. மேலும் இந்நிறுவநம் வாடிக்கையாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு, வாடிக்கையாளர் கருத்தை கொண்டு ஆய்வு செய்யும் மார்கெட்டிங் துறைக்குப் பயன்படுத்தும் மென்பொருளை மிகப்பெரிய அளவில் தயாரித்து வெற்றி பெற்றுள்ளது.

சராசரி மொத்த சம்பளம்: $1,38,750 சராசரி அடிப்படை சம்பளம்: $1,33,500 டிராப்பாக்ஸ் டிராப்பாக்ஸ் கிளவுட் சேவையிலும், கிளவுட் ஸ்டோரேஜ் துறையிலும் முன்னோடியான ஒரு நிறுவனம் டிராப்பாக்ஸ்.

சராசரி மொத்த சம்பளம்: $140,000 சராசரி அடிப்படை சம்பளம்: $118,500 அகாமாய் அகாமாய் உலக நாடுகளில் இருக்கும் மகிப்பெரிய இணையதளங்களை மிகவும் வேமாக இயக்க வைப்பதில் அகாமாய்ச் சூப்பர்ஸ்டார். மேலும் இந்நிறுவனம் உலகச் சந்தையில் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் ஆக அறியப்படுகிறது.

சராசரி மொத்த சம்பளம்: $140,000 சராசரி அடிப்படை சம்பளம்: $121,000 பால் ஆல்டோ நெட்வொர்க்ஸ் பால் ஆல்டோ நெட்வொர்க்ஸ் கம்பியூட்டர் பாதுகாப்பு சாதனைகளை வடிவமைக்கும் நிறுவனம் பால் ஆல்டோ நெட்வொர்க்ஸ். இந்நிறுவனம் கடந்த சில வருடங்களில் அமெரிக்கச் சந்தையில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சராசரி மொத்த சம்பளம்: $140,020 சராசரி அடிப்படை சம்பளம்: $124,700 எப்5 நெட்வொர்க்ஸ் எப்5 நெட்வொர்க்ஸ் கார்பரேட் நெட்வொர்க்-ஐ வேகமாக இயக்க வைக்கும் உபகரணங்கள் மற்றும் சேவையை அளிக்கும் எப்5 நெட்வொர்க்ஸ் கிலாஸ்ரோர் செய்த ஆய்வில் 18வது இடத்தைப் பிடித்துள்ளது.

சராசரி மொத்த சம்பளம்: $140,555 சராசரி அடிப்படை சம்பளம்: $125,000 டிவிட்டர் டிவிட்டர் மைக்ரோ பிளாகிங் பிரிவில் முடிசூடா மன்னனாக இருக்கும் டிவிட்டர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகச் சம்பளம் அளிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் பட்டியலில் 17வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

சராசரி மொத்த சம்பளம்: $142,000 சராசரி அடிப்படை சம்பளம்: $125,000 வால்மார்ட் லேப்ஸ் வால்மார்ட் லேப்ஸ் உலகளவில் ரீடைல் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் வால்மார்ட் நிறுவனத்தின் மென்பொருள் வர்த்தகப் பிரிவு தான் இந்த வால்மார்ட் லேப்ஸ். வால்மார்ட் நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து மென்பொருள் சேவைகளை வால்மார்ட் லேப்ஸ் நிறுவனம் தான் அளிக்கிறது.

சராசரி மொத்த சம்பளம்: $143,500 சராசரி அடிப்படை சம்பளம்: $124,900 மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் அட உலகளவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த 15 வது இடத்தில் உள்ளது. விண்டோஸ் ஓஎஸ், எக்ஸ்பாக்ஸ், சர்பேஸ் பிசி எனப் பல வர்த்தகத்தில் ஈடுப்பட்டுள்ள இந்நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் பற்றித் தெரிந்துக்கொள்ள யாருக்கு தான் விருப்பம் இருக்காது. அதை விட இப்போது இப்படியலில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவன எது தெரியுமா..?

சராசரி மொத்த சம்பளம்: $144,000 சராசரி அடிப்படை சம்பளம்: $127,000 பிராட்காம் பிராட்காம் சிப் தயாரிப்பு முதல், மென்பொருள் வடிவமைப்பு முதல் பல முக்கியத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம் பிராட்காம்.

சராசரி மொத்த சம்பளம்: $145,025 சராசரி அடிப்படை சம்பளம்: $130,000 இன்ஃபர்மேடிகா இன்ஃபர்மேடிகா தற்போது உலகளவில் வளர்ந்து வரும் பிக் டேட்டா மென்பொருள் சேவை அளிக்கிறது இன்ஃபர்மேடிகா.

சராசரி மொத்த சம்பளம்: $147,400 சராசரி அடிப்படை சம்பளம்: $125,000 சினாப்சிஸ் சினாப்சிஸ் செமிகன்டாக்டர் துறைக்கான மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான சினாப்சிஸ் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தைப் பாருங்க.

சராசரி மொத்த சம்பளம்: $148,000 சராசரி அடிப்படை சம்பளம்: $130,000 டைமென்ஷன் டேட்டா டைமென்ஷன் டேட்டா எண்டர்பிரைஸ் ஆப்ஸ், கிளவுட் கம்பியூடிங், கம்பியூட்டர் செக்கூரிட்டி எனப் பல பிரிவில் இயங்குகிறது இந்தக் கண்சல்டிங் நிறுவனம். சராசரி மொத்த சம்பளம்: $150,000 சராசரி அடிப்படை சம்பளம்: $110,000 லேச்ஸ்போர்ஸ் லேச்ஸ்போர்ஸ் தமிழ்நாட்டின் ZOHO நிறுவனத்தை வாங்க பல ஆண்டுகளாகத் துடித்துக்கொண்டு இருக்கும் லேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இனி வரும் நிறுவனங்களைத் தான் ஐடி ஊழியர்களைத் தங்களது டார்கெட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சராசரி மொத்த சம்பளம்: $150,000 சராசரி அடிப்படை சம்பளம்: $120,000 லிங்டுஇன் லிங்டுஇன் தொழில்நுட்ப வல்லுனர்கள் மத்தியில் முக்கியச் சமுக வலைதளமாக இருக்கும் லிங்டுஇன் வெறும் இணைப்பாக மட்டும் அல்லாமல் வேலை தேடுபவர்களுக்கும், வேலை அளிப்பவர்களுக்கும் ஒரு தளமாக உள்ளது.

சராசரி மொத்த சம்பளம்: $150,000 சராசரி அடிப்படை சம்பளம்: $127,000 ஜூனிப்பர் நெர்வொர்க்ஸ் ஜூனிப்பர் நெர்வொர்க்ஸ் கார்பரேட் நெட்வொர்க்ஸ் மற்றும் நெட்வொர்க் சேவைகளை அளிக்கும் முன்னணி நிறுவனம் தான் ஜூனிப்பர் நெர்வொர்க்ஸ்.

சராசரி மொத்த சம்பளம்: $150,000 சராசரி அடிப்படை சம்பளம்: $138,500 அமேசான் லேப் அமேசான் லேப் அமெரிக்கச் சந்தையில் வால்மார்ட் நிறுவனத்திற்கு எதிராகவும், இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிராகத் தனது அமேசான் ஈகாமர்ஸ் தளத்தை வலிமையாகாக்கு பணிகளைச் செய்து வருகிளது அமேசான் லேப். இதுமட்டும் இல்லாமல் உலகளவில் அமேசான் நிறுவனத்தின் கிளவுட் சேவையை உருவாக்கியதும் அமேசான் லேப் தான்.

சராசரி மொத்த சம்பளம்: $152,800 சராசரி அடிப்படை சம்பளம்: $130,400 என்விடியா என்விடியா நீங்கள் மேக் பிரியராக இருந்தால் இந்த நிறுவனம் உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். வெறும் கேபி, எம்பிக்களில் இருந்த கம்பியூட்டர் கேம்கள் இன்று ஜிபி, டிபி கணக்கில் வளர்ந்து நிற்கிறது. இதனை இயக்க சாதாரணக் கம்பியூட்டரோ, அல்லது பிராசசரோ போதாது. இதற்காகப் பிரத்தியேக் மென்பொருள் மற்றும் பிராசசர் தேவை. இதனைத் தயாரிக்கும் நிறுவனம்தான் என்விடியா.

சராசரி மொத்த சம்பளம்: $154,000 சராசரி அடிப்படை சம்பளம்: $150,000 பேஸ்புக் பேஸ்புக் வந்தாச்சு. காலை எழுந்தவுடன் நாம் பார்க்க தூண்டும் முன்னணி சமுக வலைதளமான பேஸ்புக் இப்பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

சராசரி மொத்த சம்பளம்: $155,000 சராசரி அடிப்படை சம்பளம்: $130,000 கூகிள் கூகிள் இண்டர்நெட் தேடுதல் சேவை மட்டும் அல்லாமல் கடந்த சில வருடத்தில் பல முக்கியத் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கும் கூகிள் நிறுவனம் டாப் 5 நிறுவனங்களுக்குள் நுழைந்திருப்பது பெரிய விஷயமில்லை. அப்போ நிறுவனம் தான் முதல் இடத்தில் உள்ளது.?

சராசரி மொத்த சம்பளம்: $155,250 சராசரி அடிப்படை சம்பளம்: $120,000 கேடென்ஸ் கேடென்ஸ் உலகப் பொருளாதாரத்தின் முதுகெழுப்பாக இருக்கு தொழிற்துறைக்குத் தேவையான மென்பொருளை மிகச் சிறந்த முறையில் தயாரிக்கும் ஒரு நிறுவனம் என்றால் அது கேடென்ஸ் தான். ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் நிறுவனம் கேடென்ஸ்.

சராசரி மொத்த சம்பளம்: $156,702 சராசரி அடிப்படை சம்பளம்: $141,202 Splunk Splunk அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் ஐடி இன்பராஸ்டக்சர் உதவி இல்லாமல் இயங்க முடியாது. அதேபோல் இதைக் கவனித்துக்கொள்வது மிகவும் கடினமான வேலை. இதனை எளிமையாகக் கண்காணிக்கும் வகையில் பிக் டேட்டா மென்பொருள் மற்றும் வன்பொருளை தயாரிக்கும் ஒரு நிறுவனம்தான் Splunk. இந்நிறுவனம் இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

சராசரி மொத்த சம்பளம்: $161,010 சராசரி அடிப்படை சம்பளம்: $132,500 விஎம்வேர் விஎம்வேர் உங்கள் அனைவரின் கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டது. உலகளவில் இருக்கும் மென்பொருள் மற்றும் டெக் நிறுவனங்களில் அதிகம் சம்பளம் அளிக்கும் நிறுவனமாக விஎம்வேர் திகழ்கிறது கம்பியூட்டர் சர்வர்கல் வேகமாக இயங்க சக்திவாய்ந்த மென்பொருளை உருவாக்கியது மட்டும் அல்லாமல் உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகாமாக மென்பொருள் நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் சேவையை நம்பியிருக்கும் நிலைக்கு விஎம்வேர் உயர்ந்துள்ளது. இத்தகைய நிலையில் இந்நிறுவன ஊழியர்களுக்கு அதிகமான சம்பளத்தைக் கொடுத்தே ஆக வேண்டும்.

சராசரி மொத்த சம்பளம்: $167,050 சராசரி அடிப்படை சம்பளம்: $136,750 அமெரிக்கா அமெரிக்கா இந்தப் பட்டியலில் இருக்கும் பல நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் மட்டும் இருந்தாலும் பல நிறுவனங்கள் இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளிலும் உள்ளது. எனவே விரைவில் அதிகச் சம்பளம் அளிக்கும் நிறுவனங்களுக்கு நீங்கள் மாற தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாழ்த்துக்கள்!

வேற்று மாநிலத்தார்களின் ஆக்கிரமிப்பில் கோவை?

வேற்று மாநிலத்தார்களின் ஆக்கிரமிப்பில் கோவை?


வியாழன், 15 மார்ச், 2018
கோவை வேற்று மாநிலத்தவர்கள் கைகளுக்கு போகிறது ?
கோவையின் நிலைமை என்னவென்று தெரியுமா ?
மெல்ல மெல்ல அனைத்தும் வேற்று மாநிலத்தவரின் கையில் சென்று கொண்டிருக்கிறது.
இதை நான் சொல்லவில்லை ஒரு வடமாநிலத்தவர் இன்று காலை எனது கடையில் சொன்னது.
அவர் சொல்கிறார்.
1999ல் இங்கே கோவை வந்தேன்.
நான் வந்தபொழுது இத்தனை தொழிற்சாலைகள் இங்கே இல்லை (தங்க தொழிற்சாலை)
தற்போது நான் பார்க்கிறேன், எங்கே பார்த்தாலும் பெங்காலிகள், பிஹாரிகள், வட மாநிலம் உத்திரபிரதேஷ், ராஜஸ்தான், குஜராத் மக்கள் இருக்கிறார்கள்.
வியாபாரம் கூட எல்லாம் வட மாநிலத்தவர் கையில் சென்று கொண்டிருக்கிறது.
நான் பார்க்கும் கடைகளில் பாதிக்குமேல் வடமாநிலத்தவர் கையில் உள்ளது.
அவை அனைத்தும் அவர்கள் சொந்தமாக வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர்.
என்ன நடக்கிறது இந்த தமிழ்நாட்டில்?
நாங்கள் எங்கள் ஊரில் இந்த மாதிரி வேறு மாநிலத்தவர்களுக்கு பஜாரில் கடைகளை கொடுக்க மாட்டோம். வீடுகளை விற்க மாட்டோம்.
இங்கே நீங்கள் எல்லாரும் வடமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொடுத்து விட்டு சாப்பாட்டு என்ன செய்வீர்கள்.

எனக்கு என்னவோ இது நல்லதாக படவில்லை என்று கூறுகிறார்.
என்ன உங்களுக்கு புரிந்து விட்டதா? -- வாட்ஸ் அப்பில் வந்தது .
உழைப்பதில் இருந்து வீட்டு வாடகை, கடை வாடகை என அனைத்து மட்டடத்திலும் பணம் புழங்கும் இடம் பூராவும் அவர்கள் கையில் சென்று விட்டால் நமது கையில் பணம் எவ்வாறு புழங்கும்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
இது நான் சொல்லவில்லை, வந்தவர்களே கவலை கொள்ளும் நிலை வந்து விட்டது.

தமிழகத்தைச் சீண்டினால்?

தமிழகத்தைச் சீண்டினால்?


இது ஒன்றை கழித்துவிட்டால் நிர்வாகமே ஆட்டம் கண்டுவிடும்..!!அவர்களை சீண்ட வேண்டாம், ஆங்கில இணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்
மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..! தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்..தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்..
ஒட்டுமொத்த இந்தியாவின் ஜி.டி.பி அளவையும் ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமாக சேர்ந்து அளிக்கும் வருமானத்தை விட தமிழ்நாட்டின் வருமானம் அதிகம் என்கின்றது புள்ளிவிவரம்
இந்தியாவிலேயே செல்வ வளம் கொழிக்கும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 155 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.
1960-ல் இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு. இன்று இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்பது குறிபிடத்தக்கது
ஒருவேளை இந்தியா தமிழ்நாட்டை தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று ஆங்கில இணையதள ஆய்வு தெரிவிக்கிறது.

ஆட்டோ மொபைல், அரிசி விவசாயம், தோட்டங்கள், சுற்றுலா.,ஆயத்த உடைகள் ஏற்றுமதி, இந்தியா முழுவதுமான பட்டாசு உற்பத்தி, துப்பாக்கி டாங்கி தொழிற்சாலை, ஹிந்திக்கு அடுத்தப்படியாக சினிமா தொழிற்துறை,
டெல்லிக்கு பிறகு அனைத்து நாட்டு தூதரகங்களும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் என்பது மிக முக்கியமானது
ஆன்மீகத்தில் மிக முக்கிய கோவில்கள், வரலாற்று இடங்களை கொண்டுள்ளது தமிழகம்...
உலக நாடுகளில் கிட்டத்தட்ட 5 நாடுகளில் தேசிய மொழியாக உருவெடுத்துள்ள மொழி தமிழ்...இரண்டாம் மொழியாக அங்கீகாரத்துக்கு 20 நாடுகளில் காத்திருக்கும் ஒரே மொழி தமிழ்.
தமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அதற்கு தெரிவதில்லை..

மதத்திற்க்கு அப்பாற்பட்டு செயல்பட்ட மனித நேயம்!

மதத்திற்க்கு அப்பாற்பட்டு செயல்பட்ட மனித நேயம்!


:எளிய மனிதர்களை சந்திக்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போங்கனு சொல்லுவாங்க…அது உண்மைதான். ஒரு உறவினரைப் பார்க்க செங்கல்பட்டில் இருக்கும் தொழுநோய் மருத்துவமனைக்கு போனேன். அங்கயே ஒரு நாள் காத்திருக்கும் போது பல கதைகள் கிடைத்தன. அதுல ஒரு செவிலியர் சொன்ன கதையைக் கேட்டு அதிர்ச்சியா இருந்ததோடு சந்தோசமாகவும் இருந்தது. கதைன்னா ஏதோ கற்பனைன்னு நினைக்காதீங்க, இது அங்க உண்மையிலேயே நடந்த சம்பவம். இனி அந்த செவிலியர் வார்த்தையிலேயே கேளுங்கள்!

தொழு நோய் மருத்துவமனை, செங்கல்பட்டு
ஐயர்வீட்டு மாமி என்றால், ஆச்சாரம் பாப்பாங்க.. கவுச்சிய கண்ணுல பாக்க மாட்டாங்க… தன் சொந்த சாமிய சுத்தி சுத்தி கும்பிடுவாங்க…மத்தவங்க சாமிய பழிப்பாங்க….சக மனிதர தொட்டு பேசமாட்டாங்க.. இப்படித்தான் நாம், பொது வெளியில காலம்காலமா பாக்குறோம்.
ஆனா, அய்யங்கார் சாதியில் பிறந்த சரஸ்வதி மாமிக்கு வந்த தொழுநோய், அவங்கள பண்படுத்தி , சக மனுஷியா மாத்துச்சி. அவருக்கு வயது, 65. தபால் துறையில் வேலை பார்த்தவங்க…. வயதான காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது கால் கட்டைவிரல் புண்ணாகி, அழுகிய நிலையில,தாங்க முடியாத நாத்தத்தோட தொழுநோய் ஆஸ்பத்திரிக்கு, எங்களிடம் வந்தாங்க.. சா்க்கரை நோய்னு நினைச்சி, வருடக்கணக்கா வைத்தியம் பாத்திருக்காங்க…. கடைசியில அது தொழுநோய்னு தெரிந்ததும். சொந்தக்காரங்க, ஆஸ்பத்திரியில் விட்டுட்டு அவசரமா ஓடிட்டாங்க….
சரஸ்வதி மாமியால், இந்த, தொழுநோய் ஆஸ்பத்திரிய ஏத்துக்கவே முடியல…. வேற வழியில்ல… இங்க மட்டும்தான் அந்த புண்ண ஆத்துவாங்க என்று அவரது டாக்டரோட சொல்லையும் தட்ட முடியல… வீட்டுக்குப் போனா ,சொந்தக்காரங்க கவனிக்க தயாரில்ல…. ஏதோ அரைகுறை, மனசோட இருந்தாங்க…

எங்கிட்ட சரஸ்வதி மாமி முதல்ல பேசின பேச்சு , ”இங்க எதனாச்சும் ஸ்பெஷல் வார்டு இருந்தா கொடு… பணம் பே பண்றதா இருந்தாலும் பரவாயில்லை.. இவங்க (நோயாளிகள்) கூட இருக்க பயமா இருக்கு….” என்றார் சோகத்துடன்.
பயப்படாதீங்க… இங்க முதல்ல அப்படித்தான் இருக்கும்.. 10 வருசமா நாங்க இங்கத்தான் இருக்கோம்.. எங்களுக்கு ஒண்ணும் ஆகல, எங்க புள்ளைங்களும் இங்க வருவாங்க, அவங்களுக்கும் ஒண்ணும் ஆகல….. தைரியமா இருங்க…இங்க எல்லோரும் சொந்தக்காரங்களை விட நல்லாப் பழகுவாங்க… இங்க, பொம்பளவார்டு ஒண்ணு மட்டும்தான் இருக்கு… ஸ்பெஷல் வார்டு எல்லாம் கிடையாது…. உங்க புண் ஆற குறைஞ்சது 3, 4 மாசம் ஆகும். புண்ண ஆத்திட்டு, நல்லா போகணும்னு மட்டும் நினைங்க என்று ஆறுதல் சொன்னேன்.
எந்த சமாதானத்தையும் சரஸ்வதி மாமி ஏற்கவில்லை. வழக்கமாக கொடுக்கும் சாப்பாட்டை இரண்டு நாள் வாங்க மறுத்தார். குழந்தை போல் அடம்பிடித்தார். 2 நாள் முழு பட்டினியில் சுருண்டு கிடந்தார். அவர் வீட்டுக்கு போன் செய்தோம். வீட்டிலிருந்து யாரும் வந்தபாடில்லை.. போன் செய்தால், அவசர வேலையில் இருப்பதாக சொல்லி, ”யாரிடமாவது பணம் கொடுத்து வாங்கி சாப்பிடட்டும் விடுங்கள் ” என்றனர். வீட்டில் சொல்லியதைக் கேட்டு புலம்பினார்.
நாட்கள் கடந்தன. சரஸ்வதி மாமி, பக்கத்திலிருந்தவர்களிடம் பேசி பழகினார்.
அவரது பக்கத்து படுக்கையில் இருந்த தொழுநோயாளி ஹாஜீரா பீவி, முஸ்லீம். அவர் பாசத்துடன் ”மாமி, சாப்பாடு சூடா, சுத்தமாத்தான் போடுவாங்க.. நீ முட்டை வேணானுட்டு, பால் வாங்கிக்க… சாப்பிடு .. கால் புண் அப்பத்தான் ஆறும்… ” என்பார், அக்கரையுடன்.

மாமி கொஞ்சம் கொஞ்சமாக மாறினார். தினமும் குளித்து, முகத்தில் பவுடர் போட்டு சுத்தமாக இருந்தார். ஆனால், காலில் இருக்கும் புண்ணை சுத்தமாக வைத்துக் கொள்ள மறுத்தார். நாங்கள் அவரை தொட்டு, கட்டு கட்டியே உடனே, தீட்டாக நினைத்துக் காலை கழுவுவார். கட்டு ஈரமாகி நாற்றமடிக்கத் தொடங்கும். பக்கத்தில் இருப்பவர்கள் மாமியின் பழக்கம் அது என்று அனுசரித்தனர். ”காலை நனைச்சிகிட்டா சீக்கிரம் ஆறாதுனு நீங்க சொல்லுங்க, நாங்க சொன்னா… மாமி தப்பா நினைச்சிக்க போகுது ” என்று கரிசணையோடு கூறினார்கள், சக தொழு நோயாளிகள்.
நாளடைவில்… பீவியும் மாமியும் நெருங்கிய நண்பர்களானார்கள் …
ஹாஜீரா பீவி, சரஸ்வதி மாமிக்கு, கால் புண்ணை காக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். மாமியின் வேலைகளுக்கு உதவினார். மாமி குளிக்கப் போகும் போது காலில் பிளாஸ்டிக் கவர் கட்டி விடுவது, மாமி சாப்பிட்டதும் தட்டு கழுவித் தருவது, மாமி துவைத்த துணிகளை காய வைத்து தருவது என எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி செய்தார். வாரத்திற்கு ஒருமுறை வரும், தன் மருமகளிடம் ஹாஜீரா பீவி, மாமிக்கு தேவையான, எண்ணெய், பவுடர், ஊறுகாய், சிப்ஸ் என வாங்கிவர சொல்லி, ஆசையோடு கொடுப்பார். மாமியின் கால் புண் ஆறத்தொடங்கியது.
மாமி, பீவி உறவினர்களுடன் ஒன்றரக் கலந்தார். பீவியின் மருமகள் சமைத்துவரும் அசைவ உணவுடன் தனக்கு சாப்பாத்தியும் செய்து வரச் சொல்லுவார். பீவியின் பேரப் பிள்ளைகளுடன் தானும் ஆசையோடு விளையாடுவார்.
பின்னர் பீவிக்கு காலில் ஆபரேஷன். நடக்க முடியாத சூழ்நிலை. பீவிக்கான வேலைகளான சாப்பாடு வாங்குவது, சாப்பாடு ஊட்டுவது, துணி துவைப்பது, தலைவாரி விடுவது போன்ற வேலைகளை சரஸ்வதிமாமி மிகவும் கவனமாக அவருக்கு செய்தார்.
சாப்பாடு வாங்க மாமி வருவார். உடன் பீவியின் தட்டையும் எடுத்து வந்து முட்டை வாங்குவார். சில சமயங்களில், தட்டு மாறி முட்டையைப் போட்டு நாங்கள் பதறுவோம். ஆனால் மாமி பதறாமல் முட்டையை எடுத்து பீவியின் தட்டில் போடுவார். நான் பாத்துக்கிறேன் என்பார். பீவியால் சாப்பிடமுடியாத நிலையில், மாமி, சோறூட்டி, முட்டையும் ஊட்டிவிடுவார் .
நாங்கள் மாமியிடம் வேடிக்கையாக, “மாமி… பீவியும், மாமியும் ஒண்ணாயிட்டீங்க….. பாத்து … வீடு மாறி போயிடப்போறீங்க… ” என்றால், ”இதுல… என்ன இருக்கு சொல்லுங்க, மாமிக்குனு ஒரு வியாதியும், பீவிக்குன்னு ஒரு வியாதிமா …வந்திருக்கு? ரெண்டுப் பேருக்கும் ஒரே வியாதி…. அவங்களுக்காவது, கவனிக்க ஆள் இருக்கு…. எனக்கு அதுவும் இல்ல…. ” என்பார்.
பீவிக்கு கொஞ்சம் காது கேட்காது… அதனால் மாமி, தான் படிக்கும் நாவல்களின் கதைகளை அவரிடம் சத்தமாக சொல்லி சொல்லி சிரிப்பார். பீவியின் தொழுகை நேரத்தில் எதுவும் பேசாமல் சிரத்தையுடன் கவனிப்பார். பீவி கறி விரும்பி சாப்பிடும்போது அருவறுப்புப் பார்க்காமல் உடனிருந்தது பார்த்து ரசிப்பார்.

பீவி எப்போதும் சுத்தமாக இருப்பார். ஆனாலும் சரஸ்வதி மாமியுடன் இருக்கும்போது மேலும் அதிக சுத்தமாக இருப்பார். சாப்பாடு வாங்கும்போது, கைகழுவி, மாமிக்கு முதலில் வாங்கிவைத்துவிட்டு, பிறகுதான் தன் தட்டை தொடுவார். மாமிக்கு பிடித்த கலரில், ஒயர் கூடையை தன் கையால் பின்னி, மாமியின் துணிகளை அதில் வைத்து பாதுகாப்பார்.
பீவியின் பேத்தி, ‘பெரிய புள்ளையாக’ ஆனார். சடங்கு முடித்து, வீட்டில் செய்த இனிப்புகளுடன் பீவியின் மருமகள் வந்தார். சரஸ்வதி மாமி, பீவி பேத்திக்கு ஆசையுடன், தன் காசில் பூ, பொட்டு, வளையல் வாங்கிக் கொடுத்தார். அவர்கள் கொண்டுவந்த இனிப்பை ஆசையுடன் சாப்பிட்டார்.
உடல்நலம் இருவருக்கும், சரியானது. வீட்டிற்கு செல்லும் நேரம். இருவரும் அழுது கொண்டே இருந்தனர். ஊருக்குப் போகும்போது மாமி, ”என்னால, இந்த ஆஸ்பத்திரியும் மறக்க முடியாது.. பீவியையும் மறக்கமுடியாது…… எல்லாரும் ஒண்னுணு… இங்க கத்துக்கிட்டேன்.. வருசத்துக்கு ஒரு தடவை இங்க வந்து, என்னால முடிஞ்ச உதவியை நோயாளிகளுக்கு செய்வேன்.” என்று எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றார்.
அந்த செவிலியர் கதையை முடிச்ச போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. மனுசனுக்கு பாதிப்பு வரும்போது அதுவும் பெரிய நோய்னு வரும்போது அவங்கிட்ட இருக்குற மனுஷத் தன்மை எப்படி வெளியே வருது பாருங்க! பார்ப்பனருங்க எல்லாரும் அக்ரகாரம், ஐதீகம், ஆச்சாரம்னு மத்த மக்கள்கிட்ட இருந்து பிரிஞ்சுதான் இருக்காங்க, அப்புறம் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்-ன்னு சாதாரண மக்களை பிரிக்கிற கட்சிங்கள்ள பதவியிலயும் இருக்காங்க. இதெல்லாம் ’இயல்பா’ இருக்குறதுக்கு என்ன காரணம்? அவங்க வாழ்க்கையில எப்பயுமே சாதாரண மக்களோட பழகுற வாய்ப்பு ரொம்பக் குறைவு. பல விசயங்கள்ள அதுக்கு தேவையே இல்லாம இருக்குங்கிறது ஓரளவுக்கு உண்மைதான். காசு இருந்துச்சுன்னா நீங்க உங்களுக்குன்னு தனியா ஒரு உலகத்தை உண்டாக்கலாம்கிறது உண்மைதான். ஆனா அது நிரந்தரமா?
அப்படித்தான் அவங்க வாழ்க்கையில ஒரு பிரச்சினைன்னு வரும் போது சாதி சனம் சொந்தபந்தத்தை விட சாதாரண மக்கள் உதவறதப் பார்க்கும் போது அவங்ககிட்ட இருக்குற அந்த ’உயர்சாதி’ மனோபாவம் மாறுது. முஸ்லீம்னா தேசத்துரோகி, பாகிஸ்தான் உளவாளி, அசைவ நாற்றம்ன்னு ஏகப்பட்ட விசமப் பிரச்சாரங்களை நம்புறாங்க. சரஸ்வதி மாமியும் அதுக்கு விதிவிலக்கு இல்லைதான். ஆனா தொழுநோய்னு ஒரு நோய் வந்த பிறகுதான் அவங்க உண்மையை கண்கூடா பாக்குறாங்க. சரியாச் சொல்லப்போனா அவங்கிட்ட இருக்குற அநாகரிகத்தை ரத்தமும் சதையுமா உணர்ராங்க!
நம்ம சமூகம் இயல்பா ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் இருக்குங்கிறதுக்கு இந்த கதை ஒரு உதாரணம். யாரெல்லாம் தங்கிட்ட இருக்குற சாதிவெறி, மதவெறி மாறணும்னு நினைக்கிறாங்களோ அவங்க செங்கல்பட்டுக்குத்தான் வரணும்னு இல்லை, பக்கத்துல இருக்குற ஒரு அரசு மருத்துவமனைக்கு போய் வைத்தியம் பாத்தாலே அந்த வெறிங்களை உதறிட்டு மனுசனா மாறலாம். என்ன சொல்றீங்க?
நன்றி– லட்சுமி@ வினவு

பாஜகவின் சதிவலையில் சிக்கிய காஞ்சி மடம்?

பாஜகவின் சதிவலையில் சிக்கிய காஞ்சி மடம்?


நேற்று நடந்து முடிந்த நித்யானந்தா ஸ்வாமிகள்
தலைமையிலான காவிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சி தொண்டை மண்டல ஆதினத்தின் 232 ஆவது ஆதினம் ஞானப்ரகாச ஸ்வாமிகள் , பஜக வின் பாதுகாவலர் எச்.ராஜா மற்றும் பஜக வின் பிற மாநில ,மாவட்ட பெரும் புள்ளிகள்.
கூட்டத்தின் முக்கிய நோக்கம்,நாடு முழுக்க இருக்கும் ஹிந்து கோவில்களை பாதுகாப்போம். ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒன்று திரள்வோம் என்பதே.
இதில் ஏற்கனவே நித்யானந்த ஸ்வாமிகள் மதுரை ஆதினத்தை பிடிக்க சில பல வேலைகள் செய்து, கடந்த வாரம் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை ஆதினத்திற்குள் நுழைய தடை விதித்தது.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள மடமும், திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஒரு குன்றில் சிறு வயதில் ஞானம் அடைந்தேன்னு சொல்லி அந்த மலையையும் தனது சீடர்களை கொண்டு ஆக்கிரமித்தபோது ,பொது மக்களே காவல் துறையிடம் புகார் அளித்து காலி செய்தனர்.

தற்போது ஞானப்ரகாச ஸ்வாமிகளை தன் வசப்படுத்தி,சுமார் 1000 கோடி சொத்து மதிப்பும் பல நூறு கோவில்களையும் கொண்டுள்ள காஞ்சி தொண்டைமண்டல ஆதினத்தை அபகரிக்க சில வேலைகள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
இதை சுமார் 6 மாதத்திற்கு முன்பே ஜூவி யிலும் ஒரு பிரசுரம் வெளிவந்தது. பின் நானும் களப்பணியில் ஈடுபட்டு ஆதினத்தின் உள் இருந்த நித்யானந்தா சீடர்கள் மற்றும் ஞானப்ரகாச ஸ்வாமிகளை சந்தித்தேன்.
சில காலம் காணாமல் போன ஆதினம், மீண்டும் பெங்களூரில் இருந்து திரும்பியதாக தானே வெளி வந்தார். பின் நிரூபர்களிடம்,'நித்யானந்தா சீடர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது..அவர்கள் இந்த மடத்தில் தான் பூஜை செய்வார்கள்' னு அவர் வாயாலே சொல்லிவிட்டார்.
பஜக வின் சதி வலையில் காஞ்சி மடம் சீக்கிரம் விழப்போகிறது என்பதற்கான அறிகுறியே இந்த கூட்டம். ஏற்கனவே சங்கர மட பெரியவா டிக்கெட் வாங்கிட, அடுத்த முன்பதிவில் ஆதினம் இருக்காரா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

Thursday, March 15, 2018

உள்துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் பேச்சு!

உள்துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் பேச்சு!


காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அடுத்த ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16ஆம் தேதி உத்தரவிட்டது. அதற்கான அவகாசம் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே மீதமுள்ளன. ஆனால் காவிரிப் பிரச்சினை குறித்துத் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றியும் பிரதமரைச் சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.

மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நான்கு மாநில அதிகாரிகளுடன் நீர் வளத் துறை அமைச்சகம் கூட்டம் நடத்திய நிலையிலும், இன்னும் இதுதொடர்பான எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (மார்ச் 15) தமிழகத்தின் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமானது. முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டார். காவிரிப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. அப்போது, "காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கோடைக்காலம் வருவதற்கு முன்னதாக மேலாண்மை வாரியத்தை அமைத்தால்தான் தமிழக விவசாயப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும்" என்று உள்துறை அமைச்சரிடம் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!


ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்குமாறு கோரி, நாளை (மார்ச் 16) மக்களவையில் பிரதமர் மோடியின் அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவுள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. இதனை ஆதரிக்குமாறு, அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களிடமும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு திரட்டி வருகிறது. இந்த தீர்மானத்தை, தெலுங்கு தேசம் கட்சி ஆதரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியோடு கூட்டணி வைத்து வெற்றி கண்டது பாஜக. அதோடு, சட்டமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணி பெரு வெற்றி பெற்றது. ஆனாலும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 9 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றது. அதேபோல, சட்டமன்றத்திலும் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றியது. மேலும், மாநிலங்களவையிலும் இக்கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளார். இக்கட்சியைச் சேர்ந்த மூன்று எம்பிக்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு அணி மாறிவிட்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 5ஆம் தேதி தொடங்குவதற்கு முன்னரே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டத்தில் இறங்கினர். இக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரஜா சங்கல்ப யாத்ரா என்ற பெயரில் ஆந்திராவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஏப்ரல் 5ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை தங்களது கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், அதற்குப் பலன் ஏதும் கிடைக்காவிட்டால் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் அறிவித்திருந்தார் ஜெகன்மோகன்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவை மீது நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது, இதற்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்பா ரெட்டி மக்களவை செயலாளருக்கு கடிதம் அளித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை ஆதரிக்குமாறு, காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உட்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி சுப்பா ரெட்டி மற்றும் விஜய்சாய் ரெட்டி .

ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், பாஜக அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அக்கட்சி ஆதரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமராவதி நகரத்தில் இன்று நடந்த தெலுங்கு தேசம் கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த முடிவை அறிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் முடியவுள்ள நிலையில், ஆந்திரா மாநிலம் தொடர்பான கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நன்றி மின்னம்பலம்.காம்

நிதிகளை வழங்குவதில் பாரபட்சம்-தமிழக அரசு குற்றச்சாட்டு !

நிதிகளை வழங்குவதில் பாரபட்சம்-தமிழக அரசு குற்றச்சாட்டு !


மத்திய அரசின் நிதிப் பகிர்வில் தமிழகத்துக்குத்தான் குறைந்த நிதி கிடைத்துள்ளதாக நிதித் துறைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் இன்று(மார்ச் 15) செய்தியாளர்களை சந்தித்து பட்ஜெட் தொடர்பாக விளக்கமளித்தார். அப்போது, “நிதிப் பற்றாக்குறை வரும் ஆண்டில் 44, 481 கோடி ரூபாயாக இருக்கும். நிதி நிலை அறிக்கையைத் தயார் செய்யும்போது மாநிலத்தின் 10 முக்கியப் பிரச்சினைகளை முன்னிறுத்தி, அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதன்மைத் துறைகளுக்கு கூடுதல் திட்டங்களை வழங்கியுள்ளோம். புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி தளங்கள் அமைத்தல், கால்நடைத் துறையில் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது. விவசாயத் துறையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவற்றுக்கு வழங்கிவந்த ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் இளைஞர்களுக்கு வரும் நிதியாண்டில் திறன் அதிகரித்தல் பயிற்சியளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கான வீடுகளுக்கு ரூ. 4,995 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார்.

பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும் சூழல் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், “வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தை தாண்டக்கூடும் என எதிர்பார்க்கிறோம். வரி வருவாயில் வளர்ச்சி காணப்படுகிறது. இந்த நிலை தொடரும். கூடுதல் நிதி சுமையை கூடுதல் நிதி ஆதாரங்கள் மூலம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

"மத்திய அரசிடம் இருந்து 2 வகையான வருவாய் நமக்குக் கிடைக்கிறது. அதில் ஒன்று வரி வருவாய் பகிர்வு. சில குறியீடுகளின் அடிப்படையில் தமிழகத்துக்கு 14ஆவது நிதிக் குழுவில் கிடைத்த பங்கு குறைக்கப்பட்டுள்ளது. 20 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கிய நிதி 32 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. ஆனால், இதனால் தமிழகத்துக்கு கூடுதல் நிதி எதுவும் கிடைக்கவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் குறைவான நிதி கிடைத்துள்ளது. சராசரிக்கும் கீழே தமிழகம் உள்ளது. எனவே சிறப்பு மானியம் வழங்க வேண்டும் அல்லது திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரி வருகிறோம். இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார். Courtesy minnambalam .com

தமிழக பட்ஜெட் 2018-19

தமிழக பட்ஜெட் 2018-19


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காண்போம்.

சுகாதாரத் துறை

>>2018-19ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு - ரூ.11,638.44 கோடி

(முந்தைய நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி - ரூ.10,158 கோடி)

நடப்பு நிதியாண்டில் நிதி உயர்வு - ரூ.1,480 கோடி.

>>அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு நிதி - ரூ.519.81 கோடி

>>சத்துணவுத் திட்டத்திற்கு சமூக நலத்துறை வாயிலாக ஒதுக்கப்படும் நிதி - ரூ.5,611 கோடி.

>>முதல்வர் மருத்துவக் காப்பீடு - ரூ.1,361.80 கோடி.

பெண்களுக்கான நலத் திட்டங்கள்

>>திருமண உதவித்தொகை திட்டத்திற்கு - ரூ.724 கோடி

>>நாப்கின் வழங்கும் திட்டம் - ரூ.60.58 கோடி

>>பெண்களுக்கான இருசக்கர வாகன உதவித்தொகை திட்டத்திற்கு - ரூ.250 கோடி

>>டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு - ரூ.18,000 கோடி.

(கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்கான நிதி ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது 6,000 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது)

கல்வி

>>பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு - ரூ.27,205 கோடி

(2017-18ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி - ரூ.26,932 கோடி. நடப்பு நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.273 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது)

>>மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.758 கோடி

>>இடைநிலைக் கல்வி இயக்கத்துக்கு ரூ.3,850 கோடி

>>உயர்கல்வித் துறைக்கு ரூ.4,620 கோடி

>>நபார்டு வங்கி உதவியுடன் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.200 கோடி.

விவசாயம்

>>வேளாண் துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு - ரூ.8,196 கோடி

>>2018-19ஆம் நிதியாண்டில் 110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு.

(கடந்த நிதியாண்டில் இதன் இலக்கு 100 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது)

>>நெல் உற்பத்திக்கான உதவித்தொகை - ரூ.200 கோடி

>>நுண்ணீர் பாசன மேம்பாட்டிற்கு ரூ.3,715 கோடி

>>உழவன் அலைபேசி செயலி உருவாக்கம்

>>கிண்டியில் ரூ.20 கோடியில் பசுமைப் பூங்கா

>>கால்நடைப் பராமரிப்பிற்கு ரூ.1,227.89 கோடி

>>பால்வளத் துறைக்கு ரூ.130.82 கோடி

>>கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்திற்கு ரூ.8,000 கோடி

>>கரும்பு விலை நிர்ணயத்திற்கு புதிய முறை காணுதல்.

மீன்வளத் துறை

>>மீன்வளத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு - ரூ.1,016 கோடி

>>ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 177 மீனவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

>>ரூ.200 கோடி செலவில் நாகை மாவட்டத்தின் வெள்ளம்பள்ளம் மற்றும்

தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம்.

>>ராமநாதபுரம் மாவட்டத்தின் குத்துக்கல்லில் ரூ.3.70 கோடி செலவில் மீன்பிடித்தளம்

>>கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணத்தில் மீன் பதப்படுத்தும் பூங்கா.

>>ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு அதிர்வெண் கருவிகள் வழங்குதல்

மற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்

>>3 லட்சம் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கு இலக்கு.

>>பேரிடர் நிவாரண நிதியாக ரூ.786 கோடி.

>>வருவாய்த் துறைக்கு ரூ.6,144 கோடி நிதி.

>>நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.13,986.48 கோடி நிதி.

>>மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு ரூ.545.21 கோடி நிதி.

>>3000 புதிய பேருந்துகள்

>>வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ.2,696.14 கோடி நிதி.

>>ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,207 கோடி நிதி.

>>பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.333.82 கோடி நிதி

>>நீர்வள ஆதாரத் துறைக்கு ரூ.5,127 கோடி நிதி

>>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடி

>>சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு ரூ.173 கோடி

பட்ஜெட் உரையில் பேசிவரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டின் நிதி வருவாய் 2018-19ஆம் ஆண்டில் 1.76 லட்சம் கோடியாக இருக்கும் எனவும், செலவு ரூ.2.04 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதன்மூலம் 2018-19ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.53,586 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.40,736 கோடியாக இருந்தது. மேலும் 2018-19ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவிகிதமாக இருக்குமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அவினாசி - அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.1,789 கோடி செலவில் நிறைவேற்றப்படும் எனவும் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். தகவல்கள் மின்னம்பலம்.காம்

பரபரப்பான சூழலில் இன்று தாக்கலாகும் தமிழக அரசின் 2018-19 பட்ஜெட்!

பரபரப்பான சூழலில் இன்று தாக்கலாகும் தமிழக அரசின் 2018-19 பட்ஜெட்!


பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை (நிதி நிலை அறிக்கை) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் பேரவையில் தாக்கல் செய்கிறார். இதில் புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே நேரத்தில் காவிரி விவகாரம், சட்டம் - ஒழுங்கு, குரங்கணி தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பேரவையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அரசின் திட்டச் செயல்பாடு களுக்கு நிதி ஒதுக்கவும் புதிய திட்டங்களுக்காகவும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஆண்டுதோறும் மார்ச் மாதத்துக் குள் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன்படி, 2018-19 நிதியாண்டுக்கான பட் ஜெட் தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 10.30 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். துணை முதல்வரான பின் அவர் தாக்கல் செய்யும் முதல் பட் ஜெட் இதுவாகும். அதேநேரம், முதல்வர் கே.பழனிசாமி அரசின் 2-வது பட்ஜெட் இது.

அலுவல் ஆய்வுக் குழு
பட்ஜெட் தாக்கலுக்குப்பின், பேரவைத்தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர். பேரவையை எத்தனை நாட் கள் நடத்துவது, பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும். மார்ச் 21-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க பிரதமரை வலியுறுத்துவது தொடர் பான அரசின் சிறப்புத் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக சிறப்பு அமர் வை நடத்துவது குறித்தும் அலு வல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும். பட்ஜெட்டைத் தொடர்ந்து துறைவாரியான மானி யக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதா அல்லது அதை பின்னர் தனியாக நடத்துவதா என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக் குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.
சட்ட மசோதாக்கள்
ஐடி பெண் ஊழியர் லாவண்யா மீதான தாக்குதல், கல்லூரி மாணவி அஸ்வினி கொலை சம்பவங்களைத் தொடர்ந்து பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனவே, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சட்டத் திருத்தம், வனப்பகுதிகளில் மலையேற்றம் மேற்கொள்வோருக்கான புதிய விதிமுறைகள் தொடர்பான சட்ட மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட லாம் என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஆண் டின் மொத்த செலவில், 45 சதவீதம் செலவிடப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின் தமிழகத்துக்கான வரி வருவாய் குறைந்துள்ளது. பதி வுத் துறை, டாஸ்மாக் வருமானமும் குறைந்துள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கான ஊதி யம் உயர்ந்தால், நிதிச்சுமையும் அதிகரித்துள்ளது.
எனவே, இந்த ஆண்டும் நிதிப் பற்றாக்குறையும் கடனும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவற்றை சமாளிக்கும் விதத்தில் பட்ஜெட் டில் புதிய வரிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் உள்ளாட்சித் தேர்தலும் நடக்க உள்ளதால் அதை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சிகள் திட்டம்
அதே நேரத்தில் காவிரி விவகாரம், குரங்கணி தீ விபத்து, சட்டம்- ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை பேரவையில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Wednesday, March 14, 2018

திஹார் தினகரனின் தில்லாலங்கடி!

திஹார் தினகரனின் தில்லாலங்கடி!


சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை மதுரை மாவட்டம் மேலூரில் வியாழக்கிழமை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலராக டி.டி.வி. தினகரனும் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், அப்போதைய முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த
ஓ. பன்னீர்செல்வம் தனியாக அணியாகப் பிரிந்தார். முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரிய நிலையில், சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் இரு அணிகளின் வேட்பாளர்களும் சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டனர். அப்போது பணப் பட்டுவாடா புகாரில் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே இரு அணிகளும் இணைந்த நிலையில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவர் நியமனமும் செல்லாது எனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து டி.டி.வி. தினகரன் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனி அணியாகச் செயல்பட்டு வந்த தினகரன், அரசியல் ரீதியான தனது பயணத்தை தீவிரப்படுத்தும் வகையில் அமைப்பின் பெயரையும், கொடியையும் மதுரை மாவட்டம் மேலூரில் வியாழக்கிழமை (மார்ச் 15) அறிவிக்க உள்ளார். இதற்கென பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினகரன் அணியின் அமைப்புச் செயலரும், மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான ஆர். சாமி தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து தினகரன் நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்டபோது முதல் பொதுக் கூட்டம் மேலூரில் தான் நடைபெற்றது. இங்கு திரண்ட கூட்டம், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக அமைப்பின் பெயரை மேலூரில் அறிவிக்க உள்ளார்.

கட்சியின் பெயர் மற்றும் கொடியை சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்தே அறிவிக்கும் திட்டத்தில் முதலில் தினகரன் இருந்தார். ஆனால், எங்காவது பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, அங்கே பெயரையும் கொடியையும் அறிவிக்க வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். அதனால், சென்டிமென்டாக மேலூரைத் தேர்வுசெய்தார். மேலூரில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்குக் கூட்டிய கூட்டத்தைவிட, இப்போது கூடுதலான கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

‘‘பெங்களூரு சிறையில் சசிகலாவை திங்கள்கிழமை மீண்டும் தினகரன் சந்தித்தித்துள்ளார். அந்தச் சந்திப்பில் கட்சியின் கொடி மற்றும் பெயரை இறுதிசெய்துள்ளார்கள். அப்போது, சசிகலா இரண்டு கடிதங்களைத் தினகரனிடம் வழங்கியுள்ளார். அந்த இரண்டு கடிதங்களும், தேர்தல் ஆணையத்துக்குக் கொடுக்கப்பட வேண்டியவை. கட்சியின் பொறுப்பாளராக சசிகலா இருந்தாலும் முழு அதிகாரமும் தினகரன் வசம் இருக்கும். சசிகலா வழங்கிய இரண்டு கடிதங்களையும் கட்சியைப் பதிவுசெய்யும்போது தேர்தல் ஆணையத்தில் வழங்க உள்ளார் தினகரன்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

‘தற்காலிகத் தீர்வு தனிக்கட்சி… நிரந்தரத் தீர்வு அ.தி.மு.க’ என்ற நிலையில் புதிய கட்சியின் துவக்க விழா நடக்கிறது.

திசை திரும்பியதா மோடி பார்வை?

திசை திரும்பியதா மோடி பார்வை?


’குக்கர் சின்னம் கிடைத்தது! மார்ச் 15-ல் புதிய கட்சி துவங்குகிறார் தினகரன்’ என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் சாதாரண செய்தி. ஆனால் அ.தி.மு.க.வுக்கு இது ஒரு வகையான ஹார்ட் அட்டாக்! கிட்டத்தட்ட அதிர்ந்து கிடக்கிறது பழனிசாமி மற்றும் பன்னீர் வகையறா!
காரணம்?

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் ஒன்றை தவிர வேறேதும் தினகரனின் கையில் இல்லை. என்னதான் பணம் வைத்திருந்தாலும்கூட அதிகார மையத்துக்கு ஆகாத நபராக இருந்தால் அதனால் எந்த பலனுமில்லை. தமிழக அரசையும், மத்திய அரசையும் எதிர்த்து அந்த இடைத்தேர்தலில் அமோகமாக வெற்றி கண்டவர் தினகரன். நிராயுதபாணியாக நின்று வென்றவர் கையில் மளமளவென ஆயுதங்கள் வந்து குவிந்தால் நிலைமை என்னவாகும்? அடித்து துவைத்து துவம்சம் செய்துவிடமாட்டாரா? அதே கவலைதான் பன்னீருக்கும், பழனிசாமிக்கும்.

நேர்வழியோ அல்லது பைபாஸோ! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தனது சொந்த முயற்சியால் ஜெயித்தார். இந்நிலையில் அவருக்கு ‘குக்கர்’ சின்னத்தை ஒதுக்கிட சொல்லி டெல்லி கோர்ட் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த புள்ளியிலிருந்துதான் தமிழக அரசுக்கு மோடி கோஷ்டி மேல் டவுட் கிளம்ப துவங்கியுள்ளது.

காரணம் இடைத்தேர்தலில் அசகாயசூர இரட்டை இலையையே கன்னாபின்னாவெனும் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த வகையில் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் பலமான தேர்தல் சின்னம் ‘குக்கர்’தான். அதை தினகரனுக்கு வழங்கிட சொல்லி உத்தரவு வருகிறதென்றால் இதன் பின்னணியில் டெல்லி அரசியல் லாபி இருக்கிறது என்று நம்புகிறது அ.தி.மு.க.

தனக்கு செண்டிமெண்டாக ராசியான சின்னம் கிடைத்த மறுநாளே தனிக்கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிடுகிறார் தினகரன்! கொடி, பெயர்...என்று ஆலோசனைகள் பறக்கின்றன. இதையெல்லாம் பார்த்து மண்டை காய்ந்து போன அ.தி.மு.க. தரப்பு மெதுவாக தனது உளவு வேலையை டெல்லி பவர் லாபி பக்கம் செலுத்தியதில் கிடைத்த தகவல்கள் அவர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கின்றன! என்கிறார்கள்.அப்படி என்ன தகவல்?...

அதாவது தமிழக அரசின் செயல்பாடு மற்றும் பன்னீர், பழனிசெல்வம் ஆகியோர் குறித்த மக்கள் செல்வாக்கு பற்றி மத்திய உளவுத்துறை ஒரு ரகசிய கணிப்பை நிகழ்த்தியிருக்கிறது. ஜெ., பிறந்தநாள் விழாவுக்காக மோடி சென்னைக்கு வந்து சென்ற பின் தான் இது நடந்திருக்கிறது. இந்த கணிப்பின் முடிவு பழனி - பன்னீர் அணி பற்றிய எதிர்மறை விஷயங்களைத்தான் தந்திருக்கின்றன.

ஆட்சி மீதும் ஆளும் இருவர் மீதும் மக்கள் செம்ம கடுப்பிலிருப்பது ரகசிய அலசலில் தெரிந்திருக்கிறது.

கூடவே ரஜினி, கமல் அரசியல் பரபரப்பை தாண்டி தினகரனுக்கென மிகப்பெரிய மாஸ் வைபரேஷன் இருப்பதையும் அந்த அலசல் உணர்த்தியிருக்கிறது. இதெல்லாம் அப்படியே டெல்லி பவர் செண்டரின் கவனத்துக்கு பரிமாறப்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்தே குக்கர் சின்னமானது தினகரனின் கட்சி கிச்சனுக்கு சென்றதை பி.ஜே.பி. பெரிதாக கண்டுகொள்ளவில்லை, சொல்லப்போனால் பி.ஜே.பி.யின் இன்முகம் இனி தினகரனை நோக்கி புன்னகைக்கும்! என்கிறார்கள்.

ஆனால் இதெல்லாம் வெளிப்படையாய் தெரியாமலிருக்க, இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க தினகரன் முயன்றார்! எனும் வழக்கில் மட்டும் சற்றே இறுக்கம் காட்டிக் கொள்வார்களாம். மற்றபடி புது நட்பு மலர்வது உறுதியே! என தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இவையெல்லாம்தான் பழனி மற்றும் பன்னீரை நோக வைத்திருக்கின்றன.

மோடியின் ஆசி தங்களை விட்டு நகர்கிறதென்றால் ஆட்சி தங்களின் கையை விட்டு போகிறது என்றுதானே அர்த்தம்! பின்னே மைனாரிட்டி அரசு தப்பிப் பிழைத்து நிற்பது அவரது ஆசியில்தானே!

ஆக தினாவுக்கு இனி தடதட ஏறுமுகம்தான் போங்கோ! என கூத்தாடுகிறது அவரது பட்டாளம்.