Friday, April 27, 2018

பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி தப்புமா? தீர்ப்பின் முன்னோட்டம்!

ad300
Advertisement


சென்னை, உயர் நீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு ஆஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தொடர்பான தகுதி நீக்க வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது.

அதே போல பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்தும் அவர்களை தகுதிநீக்கம் செய்யாத சபாநாயகர் மீது திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தினகரன் தரப்பும் தங்களை இணைத்துக் கொண்டதோடு 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்ற தங்களது வாதத்துக்கு வலுசேர்க்கும் வகையில் சேர்க்கும் வகையில் பல்வேறு "தகுதிநீக்க" வழக்குகளின் தீர்ப்பு நகல்களை சமர்ப்பித்து சிறப்பாக வாதாடினார்கள், முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரஹோட்கி, சி.வைத்யநாதன், கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் கொண்ட இந்தியாவின் மிகச் சிறந்த சட்ட வல்லுனர்கள் குழு.

18 எம்எல்ஏக்களின் நிலையும் 11 எம்எல்ஏக்களின் நிலையும் வேறு வேறு . 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் தானே மனுக்கொடுத்தார்கள் என்ற நீதிபதியின் கேள்வி சாதாரணமாகக் கேட்கப்பட்டது . அதன் உள் அர்த்தம் ஆளும் கட்சி உறுப்பினர்களான 18 பேரும் ஆளும் கட்சிக்கு எதிராக புகார் சொல்லி ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் .

அந்த 11 பேரும் ஆளும் கட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்று தான் வாக்களித்திருக்கிறார்கள் . அதாவது கட்சி கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டிருக்கிறார்கள் . ஆக , இரு சாராருமே ஒரே மாதிரியான தவறைச் செய்திருக்கும் போது யார் செய்தது மட்டும் தவறென்று சொல்ல முடியும் ?

2011ல் அதிமுகவெற்றி பெற்ற போது தேமுதிக உறுப்பினர்கள் அதிமுக அரசை ஆதரித்தனர்ஆனால் அவர்கள் பதவி பறிபோகவில்லை. இதில் சபா நாயகரின் முடிவு முக்கியம் அதே போல் அன்று விஜயகாந்த்தும் தேமுதிக எம்எல்ஏக்களை கட்சியை விட்டும் நீக்கவில்லை

கட்சி உறுப்பினர்கள் கட்சி கொறடாவின் கட்டளையை மீறக்கூடாது, மீறினால் பதவி இழக்க வேண்டும் என்றிருக்கும் போது , தனி உறுப்பினர் ஆளும் கட்சியை ஆதரித்தால் அவரின் தனித்தன்மை கெட்டு disqualification ஏற்படுமா ? தனி உறுப்பினரை கட்டுப்படுத்த கொறடா இல்லாத போது அவர் ஆளும் அல்லது எதிர் கட்சிக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ ஓட்டளித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் போது அவரே ஆளும் கட்சியிலும் அல்லது எதிர் கட்சியில் சேர்ந்தால் எப்படி பதவி இழக்க முடியும் ?

தகுதி நீக்க சட்டமே ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுத்தவே கொண்டுவரப்பட்டது . அரசு கொண்டு வரும் ஒரு தீர்மானத்திற்கு எதிர்கட்சி , தனி உறுப்பினர் என்று ஆதரவு கேட்கும் போது , அந்த மசோதாவைப் பிடித்திருக்கும் ஒரு எதிர் உறுப்பினரோ அல்லது தனி உறுப்பினரோ ஆதரவு தெரிவிக்கக் கூடாது , தெரிவித்தால் கட்சி கொறடாவின் கட்டளையை மீறியதாகும் என்று தகுதி நீக்கம் செய்தால் அது உறுப்பினரின் சுதந்திரத்தைப் பறிப்பது போலாகாதா ? உரிமையைப் பறிப்பது போலாகாதா ? என்று வழக்கு தொடர்பான விசாரணையின் போது நீதிபதி சபாநாயகர் தரப்பு வழக்கறிஞரிடம் வைத்த முக்கியமான கேள்வியாகும்!

அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையில் உள்ள கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் “ ஒரு உறுப்பினர் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின்மீது கட்சியின் முன் அனுமதி பெறாமல் தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு எதிராக வாக்களித்தால் அல்லது வாக்களிக்காமல் விலகியிருந்தால் அப்படியான அவரது செயலை வாக்கெடுப்பு நடந்து 15 நாட்களுக்குள் அக்கட்சி மன்னிக்கவில்லையென்றால் அவரைத் தகுதி நீக்கம் செய்யலாம்” எனக் கூறுகிறது.



ஆனால் ஓபிஎஸ் மற்றும் அவரது சகாக்கள் விஷயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் எதிராக வாக்களித்ததை மன்னித்துவிட்டதாக அதிமுக தலைமை ஒருபோதும் கூறவில்லை. எனவே அவர்களது நடவடிக்கை தெளிவாக கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் வரம்புக்குள் வருகிறது. அதற்கான நடவடிக்கையை ஆளும்கட்சி எடுக்கவில்லை என்பதாலேயே அந்த குற்றம் நிகழவில்லை என்று பொருளாகாது. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோருவதற்கு எந்தவொரு உறுப்பினருக்கும் உரிமை இருக்கிறது. அதனடிப்படையில்தான் திமுகவும், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களும் புகார் கொடுத்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்குமாறு எங்களுக்குக் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 122 எம்.எல்.ஏக்களுக்கு மட்டும்தான் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே நாங்கள் எதிர்த்து வாக்களித்தது கட்சித் தாவல் ஆகாது “ என ஓபிஎஸ் தரப்பு தனது வாதத்தை மாற்றியது. ஆனால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் அப்படி எந்த விதிவிலக்கும் வழங்கப்படவில்லை. ஒருவர் ஒரு கட்சியால் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் அக்கட்சியின் உறுப்பினராகவே கருதப்படுவார். எனவே அக்கட்சியின் உத்தரவுகள் அனைத்தும் அவரைக் கட்டுப்படுத்தும். அரசியலமைப்புச் சட்ட 91 ஆவது திருத்தத்தின்படி கட்சியில் பிளவு ஏற்பட்டால் பிளவுபட்ட கட்சியின் உறுப்பினரை அது கட்டுப்படுத்தாது. ஆனால் கட்சியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்க மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தனிப் பிரிவாக செயல்படவேண்டும். ஓபிஎஸ் மற்றும் அவரது சகாக்களுக்கு இந்த விதியும் பொருந்தாது. அவர்கள் மொத்தமே 11 பேர்தான். எதிர்த் தரப்போ 122 பேர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையில் சபாநாயகருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றெல்லாம் சொல்லப்பட்டுவந்தது. ஆனால், நாகாலந்து சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரின் தகுதி நீக்கம் தொடர்பாக தொடரப்பட்ட கிஹோட்டோ ஹொல்லொஹான் எதிர் ஸஷில்ஹு மற்றும் பிறர் ( Kihoto Hollohan vs Zachillhu And Others ) என்ற வழக்கில் 1992 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள் வெங்கடாசலையா, ஜெயச்சந்திர ரெட்டி, வர்மா உள்ளிட்ட ஆறு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச்சட்ட அமர்வு அதற்கான விளக்கங்களை அளித்துவிட்டது.

சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தகுதிநீக்க வழக்குகளில் முடிவெடுக்காமல் காலம் கடத்தினால் அதில் தலையிடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ” உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் எப்படி அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 124 (4) ன் மூலமாக நீதித்துறைக்கு அப்பால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறதோ அதே கொள்கையின் அடிப்படையில்தான் ஒரு உறுப்பினரின் தகுதி நீக்கம் தொடர்பான பிரச்சனையை முடிவுசெய்யும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 103,192ன் மூலமாக சட்டமன்ற / பாராளுமன்றத்துக்கு வெளியே வழங்கப்பட்டிருக்கிறது” என்ற கருத்தையும் திமுக, தினகரன் தரப்பு வாதத்தின் மையக்கருவாக வைத்து வாதிட்டது!

ஆனால் தினகரன் தரப்பின் 11 சட்டமன்ற உறுப்பினர் வழக்குதான் முதலில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது! ஆனால் தீர்ப்பு கூற இருப்பதோ சமீபத்தில் விசாரணை முடிந்த பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு! இந்த செயல்பாடுகளால் நீதிமன்றம் ஆளும் தமிழக அரசுக்கு ஆதரவான முடிவையே தீர்ப்பாக வெளியிடும். இந்த தீர்ப்பு அரசுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் தினகரனை ஆதரித்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்க்காக எடப்பாடி தரப்பிடம் சரணடைவார்கள். இதனால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்று நீதித்துறை வட்டார தகவல்கள் அரசுக்கு ஆதரவான தீர்ப்பே வரும் என்று தெரிவித்துள்ளன.

தீர்ப்பு குறித்த நிலவரம் 3:30 - 4 மணிக்குள் இந்த தளத்தில் காணலாம்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra