Monday, April 23, 2018

15 லட்சம் என்ன ஆச்சு? சாமானியனுக்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதில்...


​2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மோடி வாக்குறுதி அளித்தது போல், கறுப்புப்பணத்தை மீட்டால், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
அது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனுவுக்குப் பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.
2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டுவந்து, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறவைத்தனர்.
அதன்பின் கறுப்புப்பண ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தது. இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.
நாட்டில் கறுப்புப்பணத்தை ஒழிக்கவும், ஊழல், கள்ளநோட்டுகளை ஒழிக்கவும் இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 18 நாட்களுக்குப் பின் மோகன் குமார் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், பிரதமர் மோடி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கறுப்புப்பணத்தை ஒழித்துவிட்டால், அதில் இருந்து ரூ.15 லட்சத்தை மக்களின் வங்கிக்கணக்கில் சேர்ப்பேன் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது கறுப்புப்பணம் ஒழிப்பு நடந்துவருகிறது. எப்போது அந்த பணம் மக்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று கேட்டிருந்தார். இந்த மனு பிரதமர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.
அந்த மனுவுக்குப் பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கி ஆகியவை முறையான விளக்கம் அளிக்கவில்லை. அது குறித்து மனுதாரர் சர்மா, தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்துரிடம் புகார் அளித்தார். அந்தப் புகார் தொடர்பான விசாரணை தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் முன்னிலையில் சமீபத்தில் நடந்தது.
அப்போது, பிரதமர் அலுவலகம் சார்பில்அளிக்கப்பட்ட விளக்கத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்த கறுப்புப்பணத்தை மீட்டால் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ‘தகவல்’ என்ற அம்சத்தின் கீழ் வராது.
அதுமட்டுமல்லாமல், தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 2ன்படி தகவல் என்பது, ஆவணங்களாகவோ மின் அஞ்சல், கருத்துக்கள் ஆலோசனைகள், பத்திரிகை குறிப்புகள், ஒப்பந்தங்கள் அல்லது மின்னணு வடிவத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு பிரதமர் மோடி எந்தவடிவத்திலும் மக்களுக்கு வாக்கறுதி அளிக்கவில்லை எனத் தெரிவித்தது.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List