Wednesday, April 25, 2018

வெற்றிவேலுவுக்கு ஜெயானந்த் பதிலடி! பகுதி 2

ad300
Advertisement

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தனது முகநூல் பக்கத்தில், திவாகரன் குறித்த ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு தற்போது திவாகரன் மகன் ஜெயானந்த் பதிலளித்துள்ளார்.


கடந்த சில நாள்களாகவே தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருதாக மன்னார்குடியிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகத் திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். ‘மாபெரும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். இந்தநிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு தினகரன் ஆதரவாளர்களைக் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.


ஜெயானத்தின் கருத்துக்குப் பதிலளிகும் விதமாகத் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலும் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில்
மாண்புமிகு. அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு, கழகத்தின் ஆணிவேராக சின்னம்மாவும், கழகத்தின் முகமாக துணைபொதுச்செயலாளர் அண்ணன் TTV தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மன்னிக்க முடியாத துரோகத்தாலும், மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சின்னம்மா அவர்கள் சிறைக்கு சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகள், அத்துமீறல்களுக்கும் மத்தியில் கழகத்தை வலிமையோடு, முன்னெடுக்கும் பணியில் துணைபொதுச்செயலாளர் அண்ணன் TTV தினகரன் செயலாற்றிவருகிறார்...
அவருக்கு பக்கதுணையாக, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, தியாகத்தாயின் பின்னால், நான் உட்பட 18 + 3 சட்டமன்ற உறுப்பினர்களும், எண்ணிலடங்கா கழக தொண்டர்களும் அணிவகுத்து நிற்கிறோம்.
ஆனால்,,
எங்கள் தியாகத்தை கொச்சைபடுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தை சார்ந்த திரு. திவாகரனும்,ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது...
சின்னம்மாவின் மீது சுமத்தப்பட்ட பொய்யான வீண்பழிகளையும், தங்கள் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பழி சொற்களையும் அண்ணன் தினகரன் கழகத்தை தலைமையேற்று நடத்திய இந்த காலகட்டத்தில் தான் முறியடிக்க முடிந்தது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.
கடந்த ஆண்டு மறைந்த திரு.மகாதேவன் அவர்ளின் இறுதிசடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்திரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்கு தெரியும்...
மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக்கூடாது என்கிற காரணத்தினால் தான், சின்னம்மா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்கு சென்றார். ஆனால் ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகி போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திரு.திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது.இதனை முதலில் சின்னம்மா ஏற்றுக்கொள்வாரா?. தங்களின் சுயலாபத்திற்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதிர்கள் ... நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்
எடப்பாடி அணி நிர்வாகியான
சத்திரப்பட்டி சிவகிரி என்பவர், 18, சட்டமன்ற உறுப்பினர்களும் திரு. திவாகரன் பின்னால் தான் இருக்றார்கள் என்பதை போன்ற ஒரு பொய் பரப்புரையை செய்கிறார். இவர் யார் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன், எங்கள் தலைமை சின்னம்மாவும், அண்ணன் TTV தினகரனும் தான். இவர்கள் இருவரை தாண்டி, வேறு எவரின் கண்ணசைவுக்கும், குரலுக்கும் எங்கள் சிரம் அசையாது, எவருக்காகவும் எங்கள் தரம் மாறாது...
எதுவரினும், எவர் எதிர்ப்பினும், எங்கள் பயணம் என்றும் சின்னம்மாவுடனும், அண்ணன் TTV தினகரனுடனும் தான் என்பதில் மலையளவு உறுதியோடு இருக்கிறோம்,
காலத்துக்கும் இருப்போம்... என்று வெற்றிவேல் பதிவு செய்துள்ளார்.

நேற்று (25/4/18) காலை சுவாமி மலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரனும் தன்பங்குக்கு திவாகரனைப் பற்றி விமர்சித்துள்ளார்.

வெற்றிவேலுவுக்கும் தினகரனுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பதிவில் கூறியதாவதுசின்னம்மா வுக்கு
திவாகரன் பிறந்த நாள் முதல் சகோதரர்....ஒன்றாக வளர்ந்தவர்கள்...அக்காவை திட்டாத தம்பி உலகில் கிடையாது...இதை கூடப் பெரிதாக்க வெற்றிவேல் ஆர்வம் காட்டுவது ஏனோ?

அ.தி.மு.க வரலாற்றில் M.N என்று ஒரு chapter உண்டு. அதுபோல குடும்பத்தில் ஒரு சிலருக்கு உண்டு.

நான் கேட்கும் கேள்வி :- கழகத் தொண்டனாய் செயல் பட்ட ஒரு சிலருக்கு சின்னம்மா குடும்பம் என்ற பட்டத்தை தலையில் கட்டி , குடும்ப அரசியல் என டாடா காட்ட வெற்றிவேல் துடிக்க காரணம் என்ன? எங்களை திரைமறைவில் அசிங்கபடுத்தினால் நாங்கள் தவறான வழி எடுப்போம் என கனவு கண்டு சின்னம்மா குடும்பத்தை சிதைத்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களை சொல்லி ஒன்னும் ஆகாது தூண்டுபவர்களை சொல்ல வேண்டும்.

எனது தந்தைக்கு பதவி ஆசை இருந்திருந்தால் TTV யுடன் ஒரு வருடத்திற்கு முன்பு சேர்ந்தே இருக்க மாட்டார். வந்தவரை அரவனைக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை திட்டமிட்டு புறக்கணித்தால் அவர் எப்படி பொருத்திருப்பார். அவர் என்ன சிறுவனா?

சின்னம்மா மீது உள்ள களங்கத்தை TTV தான் துடைத்தார் என கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. சின்னம்மா மத்திய அரசாங்கத்திற்கு பணியாமல் சிறை சென்ற அனுதாபம், சின்னம்மாவின் பக்கபலம் மற்றும் அம்மா அவர்கள் சின்னாமாவை எடுக்க சொன்ன வீடியோ- இவை மூன்றும் தான் TTV -யை கரைசேர்த்தன. ஆர்.கே நகரில் வென்ற துணிச்சலில் வெற்றிவேல் பேசுவது எதிர்காலத்தில் பாதகமாகிவிடும்.

திரு.திவாகரன் எடப்பாடியை எதிர்க்க ஆரம்பித்தது சின்னம்மாவிற்கு எதிராக அவர் பொதுகுழு கூட்டியப் பிறகு. என்று வெற்றிவேலுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜெயானந்த் திவாகரன்
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra