Saturday, April 28, 2018

சிக்குவார்களா அதிகாரிகள்? 30 முக்கிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரிக்க திட்டம்!சென்னை: குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால், வழக்கில் தொடர்புடைய 22 அதிகாரிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு அடுத்த வாரம் சிபிஐக்கு கிடைக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். உத்தரவு வந்தவுடன் விசாரணை நடத்துவது குறித்து சிபிஐ தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

சென்னை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆண்டுக்கு ₹300 கோடிக்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.மேலும் கம்ப்யூட்டரில் யாருக்கெல்லாம், எந்த தேதியில் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலும், அதில் விலாவாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கம்பெனியின் உரிமையாளர் மாதவராவ் மற்றும் நிர்வாகப் பிரிவு பெண் ஊழியர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
குட்கா, பான்மசாலா விற்பனை செய்ய அமைச்சர், அப்போதைய சென்னை நகர போலீஸ் கமிஷனர்கள் 2 பேர், 2 இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், உளவுத்துறை, சுகாதாரத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 22 அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாமூல் கொடுக்கப்பட்டு வந்தது. அதோடு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களிலும் அதிகாரிகள் சிறப்பு மாமூல் வாங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதுமே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்தது.இப்படி மாமூல் மட்டும் ₹44 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு அப்போதைய டிஜிபி அசோக்குமார் கடிதம் எழுதினார். ஆனால் ஜெயலலிதாவின் கவனத்துக்கே இந்த கடிதம் கொண்டு செல்லப்படவில்லை. அதற்கு மாறாக அசோக்குமாரை கட்டாயமாக ஓய்வு பெறும்படி உத்தரவிடப்பட்டது. அவரும் கட்டாய ஓய்வு பெற்றார்.
அதைத் தொடர்ந்து குட்கா விசாரணை குற்றச்சாட்டுக்கு உள்ளான டிஜிபி டி.கே.ராஜேந்திரனையே டிஜிபியாக ஜெயலலிதா நியமித்தார். குட்கா விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து, இது குறித்து ராஜேந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. இதனால், குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறும்போது, ‘‘குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பத்திரிகையில்தான் நாங்கள் பார்த்தோம். திங்கட்கிழமை அல்லது அடுத்த வாரத்துக்குள் நீதிமன்றத்தின் உத்தரவு சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு கிடைத்து விடும். அதன்பின், அந்த உத்தரவு டெல்லியில் உள்ள சிபிஐ இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வழக்கில் டிஜிபி மீதே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரிப்பார்களா? அல்லது வெளிமாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரிப்பார்களா? என்பது இப்போது உடனடியாக தெரியாது. இயக்குநர்தான் முடிவு எடுப்பார். அதன்பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறையில் குட்கா முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையை நாங்கள் பெற்று, தேவைப்பட்டால் வழக்கை மாற்றி அமைத்து விசாரணை நடத்துவோம். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் விசாரணை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். யார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் விசாரிப்போம்’’ என்றார்.

கூடுதல் எஸ்.பி இலாகா மாற்றம்
லஞ்ச ஒழிப்புத்துறையில் குட்கா முறைகேடு குறித்து கூடுதல் எஸ்பி ராமசுப்பிரமணியம் விசாரணை நடத்தி வந்தார். ஆனால் திடீரென்று கடந்த வாரம் அவர் அதிரடியாக மாற்றப்பட்டு,

டம்மியான துறைக்கு தூக்கியடிக்கப்பட்டார். சென்னையில் டி.கே.ராஜேந்திரன் கமிஷனராக இருந்தபோது, மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனராக இருந்த வெங்கடாச்சலபதி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டு, குட்கா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்
கோவை அருகே கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒரு அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு தடை விதித்தது. ஆனாலும், தடையை மீறி வடமாநிலங்களில் இருந்து போதை பாக்கு, புகையிலை பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு, கள்ளச்சந்தையில் இரட்டிப்பு விலைக்கு விற்கப்பட்டன. சென்னை அருகே இயங்கி வந்த குட்கா ஆலை விவகாரத்தில் அமைச்சர், 2 டிஜிபிக்கள் உள்பட 22 அதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்கப்பட்டு, இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் சதுரஅடியில் குட்கா மற்றும் ‘பான் மசாலா’ தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இந்த ஆலைக்குள் நேற்று முன்தினம் இரவு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்த முயன்றனர். ஆனால், இந்த ஆலையில் இருந்த இரு பிரதான கேட்கள் பூட்டப்பட்டிருந்தது. போலீசார், 15 அடி உயர மதில் சுவரில் ஏறி குதித்து அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் பிரதான வாயிலை திறந்துவிட்டனர். இதன்பிறகு, எஸ்.பி தலைமையில் போலீஸ் அதிகாரிகளின் ஜீப் உள்ளே சென்றது. அங்கு, குட்கா மற்றும் பான்மசாலா ெபாருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 15 டன்னுக்கும் மேல் போதைப் பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்தப் பகுதியில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் சந்தே கம் எழுந்ததால், சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சுமார் 20 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடைபெற்ற நிலையில், அப்பகுதிக்குள் நுழைய செய்தியாளர் கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கும், போலீஸார் எவ்வித தகவலையும் கூறவில்லை.

இங்கு தயாரிக்கப்படும் போதைப் பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாகவும் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனைக்குப் பின்னர் இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தடவியல் துறையினர் மூலம், அங்குள்ள பொருட்களை மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தனிப்படை போலீ ஸார் கூறியதாவது: டெல்லியைச் சேர்ந்த ஜெயின் என்பவருக்குச் சொந்தமான இந்த தோட்டம் சுமார் 5.50 ஏக்கர் பரப்பு கொண்டது. ஏறத்தாழ 40 ஆயிரம் சதுர அடி பரப்பில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்களைச் சுற்றிலும் 15 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட் டுள்ளது.

குட்கா தயாரிக்கும் பணியில் உள்ளூர் ஆட்களை ஈடுபடுத்தாமல் ஒடிசா, பிஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

மேலும், அவர்களை வெளியில் விடாமலும், அக்கம்பக்கத்தினரு டன் பழக விடாமலும் தடுத்துள்ளனர். போதைப் பொருட்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களை இரவு நேரங்களில் ரகசியமாக லாரிகளில் கொண்டு வந்துள்ளனர். மேலும், தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்களை ரகசியமாக இரவு நேரத்தில் வெளியில் கொண்டுசென்றுள்ளனர். இங்கு போதைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதே அக்கம்பக்கத்தினருக்குத் தெரியவில்லை.

போதைப் பொருட்கள் தயாரிக்கும்போது துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக, வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்தியுள்ளனர். அங்கிருந்த 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். பல ஆண்டுகளாக இந்த ஆலை செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனினும், முழுமை யான விசாரணைக்குப் பின்னரே இந்த ஆலை எத்தனை ஆண்டு கள் செயல்படுகிறது, போதைப் பொருட்களைத் தயாரிப்பது யார், பயன்படுத்தும் இயந்திரங்கள் என்ன, இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். அதற்கு பிறகு மேல் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List