Wednesday, April 18, 2018

அடிப்படை ஆதாரமற்ற பாலியல் புகார்! ஆளுநர் விளக்கம்.

ad300
Advertisement
தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததுடன், இதுபோன்ற குற்றச்சாட்டு கூறுவதை, 'நான்சென்ஸ்' என்றும் கண்டித்தார். பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின், 'ஆடியோ' விவகாரத்தில், வெளிப்படையாக பேசினார். இந்த விவகாரம் குறித்து, ஒரு நபர் கமிஷன் விசாரணை நடக்கும் என்றும்,தேவைப்பட்டால், சி.பி.ஐ., விசாரிக்கும் என்றும் அறிவித்தார். மேலும், இதுபோன்ற தவறுகளை வேரறுக்க, தனி நடைமுறை உருவாக்கப்படும் என்றும், உறுதியாக தெரிவித்தார்.
சென்னை, ராஜ்பவனில், கவர்னர் நேற்று அளித்த பேட்டி:நான் கவர்னராக பதவியேற்று, ஆறு மாதங்கள் முடிகிறது. ஒரு பெண்ணின், தொலைபேசி பேச்சு தொடர்பான பிரச்னையில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சந்தானம் தலைமையில், ஒரு நபர் விசாரணைக் குழு 
அமைக்கப்பட்டுள்ளது. 

அவர் சிறந்த அதிகாரி; நேர்மையாக விசாரணை நடத்தி, 15 நாட்களில், அறிக்கை தாக்கல் செய்வார். அந்த அறிக்கை, எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல், பத்திரிகைகளுக்கு வழங்கப்படும்.தேவைப்பட்டால், செய்தியாளர் சந்திப்பு நடத்துவோம். மதுரை காமராஜர் பல்கலை, எங்கள் அனுமதி இல்லாமல், விசாரணை குழுவை அமைத்தது. விசாரணை யின் பாதை மாறாமலிருக்க, அந்தக் குழு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில், யாருக்கு தொடர்பிருந் தாலும், அவர்கள், எந்த அதிகாரத்தில் இருந்தாலும், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரக் குழந்தைகள்:
அந்த பெண்ணின் பேச்சில், கவர்னர் பெயர் இருப்பதாக கூறுகிறீர்கள். இதெல்லாம், முட்டாள்தனமான, 'நான்சென்ஸ்' பேச்சு. நான், 78 வயதானவன். எனக்கு பேரக் குழந்தைகள், கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர். மூத்த குடிமகனான, என்பெயரை, யாரும் தவறாக பயன்படுத்த கூடாது. இந்த குற்றச்சாட்டை கூறுவோருக்கு, 'கவர்னர்' என்ற, மரியாதை கூடவா இல்லை.நீங்கள் கூறும் பெண்ணை, நான் பார்த்தது கிடையாது; அவர் முகம் கூட, எனக்கு தெரியாது. இது, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. 
என்னைப் பற்றி நாட்டு மக்களுக்கு, நன்றாகத் தெரியும். எம்.பி.,யாக இருந்துள்ளேன்; உங்களைப் போன்று, நானும்பத்திரிகையாளன். என் மீதான குற்றச்சாட்டை புறக்கணிக்கிறேன். என் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில், தவறாக பேச வேண்டாம். இந்த பிரச்னையை பொறுத்தவரை, பல்கலை வேந்தர் என்ற அடிப்படையில், விசாரணைக் குழு அமைக்க, எனக்கு முழு அதிகாரம் உள்ளது.அந்த அடிப்படையில், விசாரணைக் குழுவை அமைத்துள்ளேன். விசாரணையில், யாருடைய தலையீடும் இருக்காது. 

மதுரை, காமராஜர் பல்கலை துணை வேந்தர், பதிவாளர் மற்றும் உயர் கல்வித் துறையினர் அனைவரும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவர். விசாரணை குழுவில், பெண் ஒருவர் இடம்பெற வேண்டும் என்றால், எந்த தடையுமில்லை. விசாரணை அதிகாரி, சந்தானம், சுதந்திரமாக முடிவு எடுத்துக் கொள்ளலாம்.விசாரணை குழு அமைப்பது தொடர்பாக, மாநில அமைச்சர்களிடம், கலந்தாலோசிக்க வேண்டியதில்லை. கவர்னருக்கு, அனைத்து அதிகாரமும் உள்ளது. 

இந்த பிரச்னை தொடர்பாக, பத்திரிகையாளர் கள் உட்பட, யார் வேண்டுமானாலும், என்னை விசாரிக்கலாம்.விசாரணை முடிந்த பின், தேவைப்பட்டால், அரசியல் கட்சிகள் கேட்பது போல, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடவும், நான் தயாராக உள்ளேன். எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை என்பதால், ராஜினாமா தேவையில்லை.
நடவடிக்கை
நான் கவர்னராக பதவியேற்ற பின், உயர் கல்வி துறையில், முறைகேடுகள் மற்றும் பிரச்னை களை தீர்க்க, தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதற்காக, தனி நடைமுறை ஒன்றை தயாரித்துள்ளேன். விரைவில், உயர் கல்வித்துறை மீதான, அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கும் வகை யில், அந்த நடைமுறை அமல்படுத்தப் படும்.

துணை வேந்தர்கள் நியமனங்களில், எந்த குறுக்கீடுகளும் இல்லாமல், தகுதியானவர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலை துணை வேந்தர் நியமனத்திலும், முழுமையான ஆய்வுக்கு பிறகே, நியமனம் நடந்தது. நான், ஐந்து துணை வேந்தர்களை நியமித்துள்ளேன். அதில், இருவர் மட்டுமே, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, நேற்று, மத்திய அமைச்சர், நிதின் கட்கரியுடன் பேசினேன். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, 'ஸ்கீம்' எனப்படும், செயல் திட்டம் அமைப்பது தொடர்பான நடவடிக்கை கள் துவங்கி உள்ளதாக, அவர் தெரிவித்தார். காவிரி பிரச்னை, என் இதயம் போன்றது. அதனால், மிக கவலையுடன், தமிழகத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்.

இங்கு பதவியேற்றவுடன், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திலும், தமிழகத்தின் முக்கிய நீராதார பிரச்னைகளுக்கு, சாதகமான நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டு உள்ளேன். இதில் ஏற்படும் முன்னேற்றங்களை, மாநில அரசுக்கு,அவ்வப்போது தெரிவிக்கிறேன். அரசு திட்டங்கள் குறித்து,மாவட்டந்தோறும் நேரடியாக, ஆய்வு செய்கிறேன். அப்போது, மத்திய திட்டங்கள், மாநில திட்டங்கள் என பாராமல், மக்களுக்கான திட்டங்கள் குறித்து, ஆய்வு செய்கிறேன். 

என் வேலையை, நான் செய்கிறேன். அரசியல் கட்சியினர், அவர்களுடைய வேலையை செய்கின்றனர்.கவர்னர் மாளிகைக்கு, என்னை சந்திக்க வருவோர், எந்த தடையும் இல்லாமல் வந்து சந்திக்கலாம். முன்னர், பல தடைகள் இருந்தன. அப்படிப்பட்ட அதிகாரிகளை எல்லாம், அனுப்பி விட்டோம். இப்போது, செயலரோ, மற்ற அதிகாரிகளோ, என்னை சந்திப்பதற்கு, எந்த குறுக்கீடும் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால், அவர்களும் மாற்றப்படுவர்.இவ்வாறு கவர்னர் கூறினார்.
சட்ட புத்தகம்!
மாநில அரசின் அதிகாரத்தை மீறுவதாக கூறப்படுவது பற்றிய கேள்விக்கு, கவர்னர், 

பன்வாரிலால் புரோஹித், இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகங்களை எடுத்து காண்பித்தார். பின், 'தி கவர்னர் கைடு' என்ற, வழிகாட்டி புத்தகத்தை காண்பித்து, கவர்னருக்குள்ள உச்சபட்ச அதிகாரங்களை வாசித்தார். அவர் கூறுகையில், ''என் நடவடிக் கைகள் முழுவதும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதாகவே இருக்கும்,'' என்றார்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra