Friday, April 13, 2018

யாரும் தப்பிக்க முடியாது! மோடி எச்சரிக்கை!



புதுடில்லி : சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெட்கக்கேடு:

சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, நாளை(ஏப்.,14) கொண்டாடப்படுகிறது. டில்லியில் அம்பேத்கர் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேசியதாவது: நாகரிமான சமுதாயம் கொண்ட நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் வெட்கக்கேடானவை. நமது மகள்களுக்கு இழைக்கப்பட்ட சம்பவத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. குற்றவாளிகள் யாரும் காப்பற்றப்பட மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன்.

காங்., கட்சிக்கு சவால்:

அம்பேத்கரை பெருமைபடுத்தும் விதமாக காங்., கட்சி ஏதேனும் ஒன்றை செய்துள்ளதா? வாக்கு வங்கி அரசியலுக்காக அம்பேத்கர் பெயரை காங்., கட்சி பயன்படுத்துகிறது. வரலாற்றில் அம்பேத்கர் குறிப்புகளை அழிக்க அனைத்து வழிகளையும் காங்., கையாண்டது. எஸ்.சி.எஸ்.டி., சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய மத்திய அரசு அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமியை போலீசார் உட்பட 8 பேர் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். இதே போல் உ.பி., மாநிலம் உனா பகுதியிலும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டார். உ.பி., சிறுமி வன்கொடுமையில் பா.ஜ., எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இச்சம்பவங்களுக்கு கண்டன குரல்கள் எழுந்த நிலையில், பிரதமர் மோடி தற்போது மவுனம் கலைத்துள்ளார்.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List