Sunday, April 22, 2018

மத்திய அரசின் மாண்பை சீர்குலைத்த - பாஜக!பாஜக-ன் மூத்த தலைவரும் ,முன்னாள் நிதி அமைச்சருமான திரு.யஷ்வந்த் சின்ஹாவின் கட்டுரை நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் வந்துள்ளது.இந்த நாலு வருட ஆட்சி இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்று இருப்பதுடன்,சுதந்திர இந்தியாவில் 2014-வரை கட்டிகாக்கப்பட்ட நடுவண் அரசின் மாண்பை சீர்குலைத்திருக்கிறது. பிஜேபி - என்ற ஒரு தேசிய கட்சியின் தற்போதைய தலைமை உட்கட்சி ஜனநாயகத்தையும் கெடுத்து, குறைந்தபட்ச சகிப்புத்தன்மையையும் இழந்து மீள முடியாத தோல்வியை நோக்கி கொண்டு சென்றுகொண்டிருக்கிறது என்கிறார்அவரது கட்டுரையில். அவர் சொல்லி இருக்கும் முக்கிய கருத்துக்கள் தமிழில்...

1. இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக வளர்கிறது என்ற மத்திய அரசின் கூற்று தவறானது.

2.நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ளது.

3.வேகமாக வளரும் பொருளாதாரத்தில் வங்கிகளின் வராக்கடன்கள் இந்த அளவிற்கு 4 வருடங்களில் குவியாது,

4.வேகமாக வளரும் பொருளாதாரத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கமாட்டார்கள், விவசாயிகள் இந்த அளவிற்கு துயரத்தில் இருக்கமாட்டார்கள், சிறு தொழில்கள் இந்த நாலு வருடத்தில் அழிந்தது போல அழிந்திருக்காது ,சேமிப்பும் ,முதலீடும் இந்த 4 ஆண்டில் முற்றிலுமாக குறைந்திருக்காது.

5.ஊழல் ஒரு மோசமான உயரத்தை அடைந்திருக்கிறதது .வங்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.மோசடிப்பேர்வழிகள் எளிதாக நாட்டைவிட்டு தப்பி செல்ல முடிகிறது.அரசு வேடிக்கை பார்க்கிறது.

6.முன்பு எப்போதும் இல்லாத அளவு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கற்பழிப்பு நடக்காத நாளே இல்லை என்பது வழக்கமாகிவிட்டது.கற்பழிப்பவனை தண்டிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு ஆதரவாக ஆளும் தரப்பு பேசுகிறது.

6.சிறுபான்மையினர் தனிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தபடுகின்றனர்.

7.தாழ்த்தப்பட்டவர்களும் ,பழங்குடியினரும் இதுவரை இல்லாத அளவு வன்கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு சமஉரிமைகள் மறுக்கப்படுகிறது.அடிப்படை உரிமைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவு மறுக்கப்படுகிறது.

8.வெளியுறவு கொள்கை என்பது வெளிநாட்டு சுற்றுலா செல்வது ,கட்டிப்பிடிப்பது என்ற அளவில் சுருங்கி தோல்வியடைந்துவிட்டது.

9.சீனா நமது உரிமைகளின் மீது தாக்குதலை தொடுக்கிறது.பாகிஸ்தான் தீவிரவாதத்தை இந்தியாவிற்குள் தொடர்ந்து அனுப்பி வருகிறது.நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.

10.காஷ்மீர் பற்றி எரிகிறது.சாதாரண குடிமக்கள் இதுவரை இல்லாத அளவு துன்பத்தில் உள்ளனர்.

11.பாஜக -ன் உள்கட்சி ஜனநாயகம் நசுக்கப்பட்டுவிட்டது.கட்சியின் பாராளுமற்ற கூட்டத்தில் கூட MP-க்கள் பேச அனுமதி இல்லை.கட்சிக்குள் தகவல் தொடர்பு ஒரு வழி தொடர்பு என்றாகிவிட்டது.அவர்கள் பேசுவார்கள் .நீங்கள் கேட்கவேண்டும்.

12.பிரதமர் யாரிடமும் பேசுவதில்லை. கட்சி தலைமை அலுவலகம் ஒரு நிறுவன அலுவலகம் போல ஆகி விட்டது. தலைமை செயல் அதிகாரியை பார்ப்பது என்பது முடியாத காரியம்.

13.ஜனநாயகம் கேள்விக்குறியாகி இருக்கிறது.பாராளுமன்றம் ஒரு தமாஷாகிவிட்டது.பிரதமர் ஒருநாள் கூட எதிர்கட்சியினருடன் கலந்து ஆலோசித்தது இல்லை.

14.வரலாற்றில் இல்லாத அளவு உச்சநீதிமன்ற நீதிபதிகளே பேட்டி கொடுக்கும் அளவிற்கு மத்திய அரசு நிர்வாகம் மோசமாக செயல்படுகிறது. ,ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று தீர்ப்பில் சொல்லும் அளவிற்கு நிலமை கைமீறி போயிருக்கிறது.

15.சென்ற பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி 31 சதவீத ஓட்டுகளைத்தான் பெற்றது.அடுத்த முறை அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்தால் பிஜேபி இருக்கும் இடம் தெரியாது.

16.நான் பிஜேபி-யில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.அமைதி காத்தது போதும் .பேசுங்கள் அத்வானிஜி ,ஜோஷிஜி ,அரசில் இருப்பவர்களிடம் இருந்து கட்சியையும் நாட்டையும் மீட்டு நல்வழிப்படுத்துவது நம் கடமை.

இதை விட ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் ,நேர்மையான விமர்ச்சனமும் யாரும் சொல்ல முடியாது.திரு.யஷ்வந்த்சின்ஹாவின் இந்த கடிதம் வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவை மாற்றுமா? காலம் தான் பதில் சொல்லனும்.........
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List