Thursday, April 12, 2018

அடக்கி வாசிக்கும்படி அன்புத் தம்பிகளுக்கு உத்தரவு!

ad300
Advertisement


நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அறிவிப்புக்கு முன் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- எவ்வித போராட்டங்களையும் அறிவிப்பிற்கு முன் முன்னெடுக்க வேண்டாம். தலைமையிலிருந்து அறிவிப்பு வெளியாகும் வரை பொறுமை காக்கவும். சட்டப்படி எதையும் எதிர்கொள்வோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வருகை தந்த பிரதமர் மோடிக்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், நாம் தமிழர், த.வா.க, ம.ம.க, தி.க உள்ளிட்ட பல கட்சியினர் கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமா கலைஞர்களாக பாரதி ராஜா, அமீர், வெற்றி மாறன் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து கைதாகினர்.

கைதான அனைவரும் பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் கைதாகும் அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால், சீமானை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

சீமானை விடுவிக்காதவரை மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என பாரதிராஜா கூறியுள்ளார். ஐ.பி.எல் போட்டியின் போது போலீசாரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ள கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், நாம்தமிழர் கட்சியினர் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.

இநிலையில் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அறிவிப்புக்கு முன் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra