Wednesday, April 18, 2018

ஆளுநர் பாலியல்(ஆடியோ) சர்ச்சை! சாமானியனின் குரல்கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் தன்னிலை விளக்கத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் . அது சம்பந்தமாக என் மனதில் எழும் கேள்விகளையும் என்னால் தவிர்க்க முடியவில்லையே .... நானும் சாதாரண மனிதன் தானே ....
மதுரை பல்கலை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியர் ( அவருடைய பதவி அந்தஸ்து உதவிப் பேராசிரியர் தான் ) நிர்மலா தேவியாரின் விடியோ குற்றச்சாட்டு என்ன ? கல்லூரிப் பெண்களை உயர்பதவியிலுள்ளோர்களுடன் சல்லாபிக்க அவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி வற்புறுத்தினார் என்பதே . இது எப்படி வெளி உலகுக்குத் தெரிந்தது ? அந்தப் பெண்களில் ஒருவரிடம் இது சம்பந்தமாக நிர்மலா பேசிய போது அந்தப் பெண்ணால் / பெண்களால் அது ஒலிப்பதிவு செய்யப்பட்டு 'யாரிடமோ ' காண்பிக்கப்பட்டு அது வெளி உலகிற்கு வலைதளம் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது .
வலைதள உலாவிற்கு முன்னால் அந்தப் பெண்ணின் / பெண்களின் பெற்றோர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டதா ? அவர்கள் இதை உண்மையென்று நம்பினால் அவர்கள் இது சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் என்ன ? கல்லூரி பேராசிரியரை , நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தார்களா ? சரி , இதை வலைதளத்திற்குக் கொண்டு வந்தது யார் ? சட்டப்பூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் / எடுக்க முடியாமல் தான் அதை வலைதளத்தில் பரவ விட்டார்களா ? அவர்களிடம் இருந்த ஒரே சாட்சியம் இந்த ஒலிப்பதிவு தான் , ஒளிப்பதிவு கூட இல்லை , இல்லையா ?
அந்தப் பேராசிரியை பல்கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது கூட யதார்த்தமான விழயம் , அங்கு வருகை தரும் உயர்பதவி அதிகாரிகளுடன் சமூக நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்ள முயன்றதும் கூட யதார்த்தம் தான் . அந்த நல்லிணக்கத்தின் மூலமாக ஏழைப் பெண்களுக்கு கல்வி உதவி செய்யலாமென்று நினைத்து அது சம்பந்தமாக உரையாடியதும் யதார்த்தம் தான் . இதை எப்படிப் பார்த்தாலும் ஒரு யதார்த்தமான ஒரு நிகழ்வாகத்தான் பார்க்க முடிகிறதே தவிற விகல்ப எண்ணத்துடன் பார்க்க முடியவில்லை .
இல்லை யாராவது ஒருவர் என்னைத் தவறு செய்யத் தூண்டினார் என்று இதுவரை அவர்மேல் குற்றம் சுமத்தியிருக்கிறாரா ? ஏன் அந்த ஆதாரம் மட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை ? சரி , பேராசிரியை ஆகட்டும் , ஆமாம் விருப்பப்பட்ட பெண்கள் விருப்பப்பட்டபடி நடந்து கொள்ள சம்மதித்ததாலேயே நான் அவர்களுக்குத் தைரியம் சொல்லி தயார் செய்தேன் என்றாவது சொல்லியிருக்கிறாரா ? இவையெல்லாம் ஒரே நாளில் நடந்ததா இல்லை நிர்மலாவின் பணிக்காலமான 10 ஆண்டுகளில் நடந்ததா ? பத்தாண்டுகளில் ஒரு நாளாவது , ஒரு முறையாவது , பயந்த சுபாவமுடைய ஒரு பெண்ணாவது என்னிடம் / எங்களிடம் , இந்த ஆசிரியை இப்படி பேசுகிறார் , நீங்கள் வந்து கேளுங்களென்று சொல்லவில்லையா ? அந்தக் குற்றச்சாட்டிற்கு எழுத்து மூலமான புகார் இதுவரை யாரும் கொடுக்கவில்லையா ?
ஏனென்றால் , பதினான்கு ஆண்டுகளில் பத்தாண்டு காலம் சீதை ராவணனின் மாளிகையில் தனித்திருந்திருக்கிறாள் . அவளைப்பற்றியோ அவளின் இருப்பிடம் பற்றியோ யாருக்குமே தெரியவில்லை . அது தெரிந்தவுடன் ராமா- ராவண யுத்தம் நடந்து சீதை மீட்கப்பட்டு , அயோத்தி திரும்பும் போது எந்தவொரு அறிவிப்புமின்றி சீதையைப் பற்றிய ஒரு வினா எழுந்தது . யாருக்கு ? யாரோ ஒரு வண்ணானுக்கு . அவன் அந்த சந்தேகத்தைக் கேட்டவுடன் அதை எடுத்துக் கொண்டு போய் ராமனிடம் யாரோ சொல்ல உடனே அரச சபையில் நாட்டின் இராஜமாதாவை நிற்க வைத்து உன்னைப்பற்றிய சந்தேகம் , அதை நீயே நிவர்த்தி செய்ய வேண்டும் , சொல் என்று அரசன் இராமனிடமிருந்தே வருகிறது .
எப்போது என் மீதே ஒரு களங்கமான ஒரு கேள்வி வந்து நான் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதோ , அப்போதே நான் அரசியாக இருக்கத் தகுதியில்லாதவள் என்று சொல்லி காட்டிற்குப் போய் விட்டாள் . ஆனால் இங்கே , இப்போதோ அதே மாதிரியான ஒரு அரசனின் நேர்மை மீது களங்கமான ஒரு குற்றச்சாட்டு விழுந்திருக்கிறது . இராமராஜ்யத்தை அமைப்போம் என்று சூளுரைத்து ஆள்பவர்கள் , எப்போது தங்களுடைய ஆளுநர் மீதே குற்றச்சாட்டு வந்துவிட்டதோ அப்போதே அவரை பதவி விலகச் செய்திருக்க வேண்டும் .
ஆனால் மாற்றாக அவரே தன் மீதுள்ள களங்கத்தைத் துடைக்க தன் இனத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து விசாரிக்கச் சொல்கிறார் . ஆளுநர் தவறு செய்திருக்க மாட்டார் , அவர் வயதினால் இயலாதவர் , என்ற சப்பைக்கட்டு கட்டினாலும் , அதுவும் பொய் என்று நிரூபிக்கும் வகையில் மறுநாள் பலர் முன்னிலையில் பிரஸ் மீட்டில் பலர் முன்னிலையில் ஒரு பெண் நிருபரின் கன்னத்தைத் தடவு கிறார் . எழுபது வயதான கிழவருக்கு , வயதுக்கு வந்த ஒரு பெண்ணைத் தொட்டுப் பேச வேண்டிய அவசியமென்ன? ஆக, வதந்தி என்று சொல்லப்பட்ட பொய்யான குற்றச்சாட்டிற்கு இல்லை , அது உண்மை தான் என்று சொல்லப்படும் வகையில் ஒரு காரியத்தை செய்கிறார் .
ஆனால் இராமாயணத்தில் ராமரைப் பற்றியோ சீதையைப் பற்றியோ அபரிமிதமாகப் புகழ்ந்து அவர்களைப்பற்றிய ஒரு நல்ல நம்பிக்கையை படிப்பவர் மனதில் விதைத்துவிட்டு நாளை ஒரு குடிமகன் கேட்ட கேள்விக்கு அரசன் ராமன் சரியான பதிலைச் சொல்லவில்லை என்ற அவப்பெயரை வாங்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவ்வளவு ஜாக்கிரதையாக ஒரு கதையை அமைத்திருக்கிறார் வியாசர் . ஆனால் நம் ஆளுநரோ கதை எப்படிப் போனாலென்ன எனக்கு அதிகாரமிருக்கிறது , அரசாங்கமே நான் தான் , யார் என்னை என்ன செய்துவிட முடியும் என்று நினைத்ததான் அந்தப் பெண் நிருபரின் கன்னத்தைத் தடவிக் காட்டியிருக்கிறார் .
இராம ராஜ்யம் அமைக்கப் போவதாக தன் 56" மார்பை விடைத்துக்கொண்டு திண்தோள் வளமார்பன் மோடிஜி சொல்வது உண்மையானால் , அவருக்காக ' எழுப்புதல் ' ஜெபம் செய்யும் முட்டுச் சந்து டேஷ் பக்தர்களாவது அந்தக் களங்கத்தைத் துடைக்க முன் வருவார்களா ?

நன்றி https://m.facebook.com/gopalakrishnan.swaminathan.7
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List