Wednesday, April 25, 2018

அணி தாவும் முயற்சியில் மருத்துவரும், மணியானவரும்? நடக்கப் போவது என்ன?கடந்த சனிக்கிழமையன்று தமிழக அமைச்சர்களில் சிலர் சென்னை கோயம்பேடு பகுதியில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக நமக்கு தகவல் கிடைத்தது! அங்கு என்ன பேசினார்கள் என்பதைப்பற்றி இருநாட்களாக விசாரித்தறிந்த சில முக்கிய தகவல்கள் நமக்கு அதிர்ச்சியளிப்பதை விட ஆளும்கட்சி தரப்புக்கு பேரிடியை உண்டாக்கும் ரகம்!

தமிழக அமைச்சரவையில் முக்கிய துறையை தன் வசம் வைத்துள்ள மணியானவரும், மருத்துவமே கண்ணாக கருதி செயல்படும் விஜயமானவரும் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருவதாக கடந்த 2017 செப்டம்பரின் துவக்கத்திலிருந்தே நமக்கு நன்கு அறிமுகமான நண்பர் கூறிவந்தார். இதைப்பற்றிய செய்தியை அவ்வப்போது அந்த நண்பர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் தெரிவித்துள்ளார்.


ஆனால் முதல்வர் தரப்போ நாங்கள் உறவுக்காரங்க! எங்களுக்குள்ளே சிண்டு முடியுற வேலை வச்சிக்காதீங்கனு சொல்லி அந்த நண்பர் சொன்னதை பெரிசா எடுத்துக்கலை னு வருத்தப்பட்டார்! இப்படி வருத்தப்பட்டவரிடம் உண்மையில் அப்டி என்னதான் நடக்குது? என்று அவரிடம் அக்கறையாக விசாரிப்பது போல விசாரித்தோம்! மடை திறந்த வெள்ளம் போல அவர் கொட்டியவற்றில் சில


👉

👉

சமீப காலமாக தமிழக முதல்வர் பழனிசாமி சில முக்கிய அமைச்சர்களை கண்காணித்து தனக்கு அறிக்கை அளிக்க உளவுத்துறைக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.  • தமிழக உளவுத்துறை கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தமிழக அமைச்சர்களில் முக்கியமானவர்கள் சிலர் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த சனிக்கிழமை மாலை ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தியுள்ளார்கள்! அந்த ஆலோசனையில் சமீப காலமாக முதல்வர் எடப்பாடி தன்மீதே சந்தேகப்படுவதாக வருத்தப்பட்டுள்ளார் மணியானவர்! அதற்கு ஆமாம் சாமி போடுவது போல மருத்துவ அமைச்சரும் சில விசயங்களை உளறி கொட்டியுள்ளார். அங்கு கூடியிருந்த மற்றொரு அமைச்சர் ஒருபடி மேலே போய் அவரு (எடப்பாடி) வரவர ரொம்ப கண்டிஷன் போடுறாருங்க! என்னமோ அவரால தான் நாம அமைச்சரான மாதிரி ஓயாம எதாச்சும் சொல்லி அப்டி பாருங்க,இப்டி பாருங்கனு ச்சும்மா ச்சும்மா டார்ச்சர் பன்றாரு. இப்டியே பண்ணிகிட்டிருந்தாருனா பேசாம என் கூட இருக்குற எம் எல் ஏக்கள் 12 பேரைக் கூட்டிகிட்டு தினகரன் பக்கம் போய்டலாம்னு யோசிக்க வேண்டியிருக்கும் னு , அவர்கிட்ட சொல்லி வைங்க. டிவி ல பேட்டி குடுக்கக் கூடாதுனு கட் அன்ட் ரைட்டா கண்டிஷன் போட இவரு யாருங்க? நான் நினைச்சா நாளைக்கே அவரோட முதல்வர் பதவி பறிபோய்டும் னு பொறிந்து தள்ளியுள்ளார் அந்த தென் மாவட்ட அமைச்சர். இப்படியாக அந்த ஆலோசனைக் கூட்டம் முழுவதும் அதிருப்தி குரல்களே அதிகம் கேட்டதாம்!


இறுதியாக பேசிய மணியானவர் தினகரன் அணியிலுள்ள தனது சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவரை தினகரன் அணியிலிருந்து நீக்கி விட்டால் நாம் தினகரன் பக்கம் தாவி விடலாம், அது தொடர்பா நானும் தினகரன் கிட்ட பேசியிருக்கேன். யோசிச்சு சொல்றதா சொல்லியிருக்கார் தினகரன். அதனால நாம நம் பக்கமிருக்கிற எம் எல் ஏக்கள் கிட்ட இப்போதிலிருந்தே பேசி தயார் பண்ணி வச்சிடுவோம். அடுத்த வாரத்துக்குள்ள முக்கிய அறிவிப்பை தினகரன் வெளியிடுவார். அதுக்குப் பிறகு நாம யார்னு எடப்பாடிக்கு காட்டுவோம் என்று மணியானவர் கூறிய யோசனைக்கு முழு மனதுடன் ஒப்புதலளித்துள்ளது, ரகசிய அமைச்சரவை கூட்டம் என்று முடித்தார் தமிழக முதல்வருக்கு ஆதரவான அந்த நண்பர்!  • மணியானவர் தினகரனிடம் பேசிய பிறகு தினகரன் அணியிலும் சில மாற்றங்களும் நடந்துள்ளதாம்! முன்பெல்லாம் தனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தந்துவரும் இருவரில் ஒருவரை முதல்வராக நியமிக்க யோசித்துவந்த தினகரன் திடீரென முன்னாள் அமைச்சர்களில் ஒருவரை முதல்வராக்க திட்டம் தீட்டியுள்ளார். அதற்கு காரணம் முன்னாள் அமைச்சர்கள் இருவரிடமும் பெருந்தொகை இருப்பதால் அவர்களை வைத்து தனது கட்சியை வளர்த்துக் கொள்ளலாம் என்ற காரணம் தான்.


ஆனால் தினகரன் எதிர்பார்த்தது போல 22 எம்எல்ஏக்களைத் தவிர வேறு யாரும் தனது அணிக்கு வரத் தயாராக இல்லையென்பதை தாமதமாக புரிந்து கொண்ட தினகரன் , மணியானவருக்கு வீசிய வலை தான் முதல்வர் பதவி. முதல்வர் பதவி வேணும்னா 50 க்கும் அதிகமான எம்எல்ஏக்களுடன் தனது அணிக்கு வருமாறு மணியானவருக்கு கடந்த வாரம் தினகரன் தூது அனுப்பியுள்ளார். முதல்வர் பதவி மேல் மணியானவருக்கு கடந்த பல மாதங்களாகவே தீராக் காதல் உள்ளது என்பதை மத்திய உளவுத்துறை மத்திய அரசிடம் குறிப்பிட்டுள்ளது , என்பதை டில்லியிலுள்ள தனது நண்பர் சுப்ரமணியம் சாமி மூலமாக அறிந்த தினகரன் தனது வலையை மணியானவருக்கு வீசியுள்ளார். சிக்குவார்களா ? மணியானவரும்? மருத்துவரும்?  • WAIT AND SEE

Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List