Wednesday, April 11, 2018

விண்ணில் பறந்த pslv c41



ஸ்ரீஹரிகோட்டா: போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி சி41 ராக்கெட் இன்று அதிகாலை 4.04 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்திற்கு இணையாக நாவிக் எனப்படும் போக்குவரத்து, கண்காணிப்பு வசதி மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைகோள் வரிசையில் 7 செயற்கைகோள்கள் ஏற்கனவே இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. இந்நிலையில்,ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். இதற்கான, எரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இந்த செயற்கைகோள் இன்று அதிகாலை 4.04 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் ஏவுகின்றனர்.

இதற்கான 32 மணி நேர கவுண்டவுன் நேற்று முன்தினம் இரவு 8.04 மணிக்கு தொடங்கியது. பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து மற்றும் வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்த செயற்கைகோள் கொடுக்க வல்லதாக இருக்கும். இந்த செயற்கைகோளின் மொத்த எடை 1,425 கிலோ ஆகும். இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள். மேலும், பி.எஸ்.எல்.வி சி41 ராக்கெட்டின் எடை 321 டன் ஆகும். இது இந்தியாவின் 43வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-22 ராக்கெட் மூலம் 1ஏ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், சிறிது காலம் கழித்து இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கடிகாரம் பழுதானதால் இந்த செயற்கைகோள் மூலம் படங்கள் மற்றும் தகவல்களை பெறுவதில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எச் செயற்கை கோளை இஸ்ரோ வடிவமைத்து பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட் மூலம் கடந்த மாதம் ஆகஸ்ட் 31ம் தேதி விண்ணில் ஏவியது. இந்த செயற்கைகோளில் வெப்ப தகடுகள் சரியாக பிரியாததன் காரணமாக வெப்ப தகடுகள் வெளியேறாமல் போனது. இதையடுத்து, இந்த செயற்கைகோள் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்டமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் பி.எஸ்.எல்.வி- சி41 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைகோளை தற்போது வடிவமைத்து விண்ணில் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List