Saturday, April 21, 2018

ரத்து செய்யப்படுமா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S v sekar ன் ஓய்வூதியம்?பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தரக்குறைவான கருத்துகளை தனது சமூக தளத்தில் பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அந்த மன்னிப்பு கூட சர்ச்சைக்குள்ளானது.
மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பதற்காக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வழங்கப்பட்ட லெட்டர் ஹெட்டை பயன்படுத்தியிருக்கிறார், அது குற்றம் என்று கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ‘தனது தரக்குறைவான பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதற்காக தமிழக அரசின் இலச்சினை பொருத்தப்பட்ட லெட்டர் ஹெட்டை எஸ்.வி.சேகர் பயன்படுத்தியது குற்றம். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று போலீஸில் புகார் செய்திருக்கிறார் பரமக்குடியைச் சேர்ந்த சகாயராஜா.

அவரைத் தொடர்பு கொண்டு நாம் பேசியதில் சில உங்கள் பார்வைக்கு!

மாநில சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களும் அரசின் இலட்சினை பொறித்த லெட்டர்பேடைத் தனிப்பட்ட உபயோகத்திற்க்கு பயன்படுத்க் கூடாதென்பது பதவியேற்கும் போது எடுக்கும் உறுதி மொழியின் உட்பொருள். பொது மக்களின் நன்மைக்காகவோ, தொகுதி குறித்த பிரச்சினைகளுக்காகவோ தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமே தவிர சொந்த பிரச்சினைகளுக்கு அரசின் முத்திரையையோ, இலட்சினையையோ பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் #மறைந்த_மக்களின்_முதல்வர் ஜெயலலிதா அம்மா தெளிவாக இருந்தார். அப்படியிருக்கும் போது காலாவதி (முன்னாள்) சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய சொந்த பிரச்சினைகளுக்கு தமிழக அரசின் இலட்சினை பொறித்த லெட்டர் பேடைப் பயன்படுத்தியது ஏற்புடையதல்ல.

அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் போன்ற சாமானியர்களின் நிலைப்பாடு.

நியாயமா பாத்தா ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று மார்தட்டிக் கொள்ளும் மீடியாக்களும், பத்திரிக்கைகளும், அரசின் அதிகாரிகளும் தங்கள் தரப்பிலிருந்து #Svesekar மீது புகாரளித்திருக்க வேண்டும்! ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் சரியான குடிமகனாக வாழ முயற்சிக்கிறேன். மற்றவர்களைப் போல Svesekar ன் போக்கை எளிதாக கடந்து செல்ல என்னால் முடியாது!

“மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே பயன்படுத்த வேண்டிய லெட்டர் ஹெட்டை எஸ்.வி.சேகர் பயன்படுத்துவதே தவறு. அந்த லெட்டர் ஹெட்டில் அவருக்கு உரிமையில்லாத (mylaporemla@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற ரீதியில், ‘எக்ஸ்’ என்ற வார்த்தையை சேர்த்து பயன்படுத்தியிருந்தாலும், சேகர் தெரிந்தே செய்த பெண் பத்திரிக்கை நிரூபர்கள் பற்றிய தரக்குறைவான விமர்சனத்துக்காக மன்னிப்பு கேட்பதற்கு தமிழக அரசின் இலச்சினை பொருத்தப்பட்ட லெட்டர் ஹெட் தான் கிடைத்ததா?

இது அப்பட்டமான சட்ட மீறல். மோசடி வகைக் குற்றத்திலும் இதை சேர்க்க முடியும்.

தமிழக அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் லெட்டர் பேடைப் பயன்படுத்தி "தொடர் அடாவடியில் " ஈடுபட்டு வரும் காலாவதி (முன்னாள்) சட்டமன்ற உறுப்பினர் #svesekar இந்த போலி லெட்டர் பேடைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக சென்னை நகர காவல் நிலையங்களை மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபற்றி ஆன்லைனில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக புகார் அனுப்பியுள்ளேன். இந்த புகார் என்பது தமிழக அரசின் இலச்சினை தொடர்பானது. எனவே இது காவல்நிலைய வரம்புகளுக்கு அப்பாற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இதுபற்றிப் புகார் கொடுக்க முடியும்.
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதுபற்றி சபாநாயகரிடம் முறையிடுவேன். தனது காலாவதியான சட்டமன்ற லெட்டர் ஹெட்டை மக்கள் பணி அல்லாத தன் சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்தியது தவறு என்ற அடிப்படையில் எஸ்.வி.சேகருக்கு கிடைத்துவரும் சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தைக் கூட சபாநாயகர் நினைத்தால் நிறுத்தி வைக்க முடியும்.
சபாநாயகரும் இதில் முடிவெடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன். தமிழக அரசின் இலச்சினை இதுபோன்று அசிங்கப்படுத்தப்படுவதை தமிழக அரசு பொறுத்துக் கொள்ளக் கூடாது’’ என்கிறார் சகாயராஜா.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List