Tuesday, May 8, 2018

இன்றைய ராசி பலன்கள் - சோனகிரிநாதர்

ad300
Advertisement
அஷ்டமா சித்திகளை அடக்கியாளும் அய்யனாரடிமை சோனகிரிநாதர்



கணித்த இன்றைய ராசி பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்...

விளம்பி வருஷம் I உத்தராயணம் I வஸந்தருது
சித்திரை 26 I இங்கிலீஷ்: 09 May 2018 I புதன்கிழமை
நவமி இரவு 8.09 மணி வரை. பின் தசமி
அவிட்டம் காலை 8.15 மணி வரை. பின் சதயம் I ப்ராம்மம் நாமயோகம்
தைதுலம் கரணம் I மரண யோகம்

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு I பரிகாரம்: பால் I திதி: நவமி I சந்திராஷ்டமம்: ஆயில்யம்




1


/ 12






மேஷம்


புத்தி சாதுரியத்தால் புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே, இன்று சிலருக்கு எதிர்பாராத வகையில் தொல்லைகள் ஏற்படலாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் செல்லும் போது மிக கவனம் தேவை. ஏனெனில் சிலருக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குல தெயவத்தை வழிபட்டு செல்லுங்கள். எந்த பிரச்னையும் உங்களை அனுகாது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9




2


/ 12






ரிஷபம்


சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய ரிஷப ராசியினரே, இன்று சிறுசிறு பிரச்னைகளுக்கு கூட கணவன் - மனைவியரிடையே பிரச்னைகள் தோன்றலாம். கவனத்துடன் இருந்தால் இதைத் தவிர்க்க முடியும். பணம் வர வேண்டிய இடத்திலிருந்து தாராளமாக வரும். குடும்ப ஒற்றுமையை கலைக்க சிலர் முயற்சி செய்வார்கள். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9




3


/ 12






மிதுனம்


எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே, இன்று எல்லா விஷயங்களிலும் தாமதமாக செயல்படுவீர்கள். நல்லோரு ஒருவரை சந்தித்து அவர் ஆசி பெறுவீர்கள். வருமானமும் ஓரளவுக்கு நல்லபடியாகவே அமையும். சிலர் உங்களை மனம் நோகும்படி செய்வார்கள். கவலை வேண்டாம். எல்லா பாரத்தையும் கடவுள் மேல் போட்டுவிட்டு, உங்கள் வேலையை வழக்கம்போல் உற்சாகமாக செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9




4


/ 12






கடகம்


கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் கடக ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்னைகளின் கடுமை குறையும். அதனால் மனநிம்மதி இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணி நிமித்தமாக சிலர் வெளியூர் புறப்பட வேண்டியிருக்கும். இன்று உற்சாகமான நாள் உங்களுக்கு.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5




5


/ 12






சிம்மம்


துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறும் சிம்ம ராசியினரே, இன்று வியாபாரம் அமோகமாக இருக்கும். முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு தேடுவீர்கள். தங்கள் உதவியாளர்களுடன் மோதல் போக்கு ஏற்பட்டு பின்பு சரியாகும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6




6


/ 12






கன்னி


வாக்கு நாணயம் தவறாமலும் உண்மைக்காக பாடுபடும் குணமும் உடைய கன்னி ராசியினரே, இன்று அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனமுடன் இருக்கவும். தேவைக்கேற்ப பழகிவிட்டு உங்களை உதாசீனப் படுத்தி விடுவார்கள். வெளிநாடு செல்ல விரும்புவோர் சற்று காலத்திற்கு முயற்சியை தள்ளி போடுவது உத்தமம். இன்று பொறுமை கடைபிடிப்பது, நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்ல பலனைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7




7


/ 12






துலாம்


நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய துலா ராசியினரே, இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். ஆனால் உங்கள் வேலைகள் மற்றவர்களுக்கு பொறாமையைக் கொடுக்கும். தெய்வ அருள் கிட்டும். பிறகு என்ன, ஆண்டவனே நம்ம பின்னாடி இருக்காரு... துணிந்து தூள் பறக்கவிடுங்கள்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9




8


/ 12






விருச்சிகம்


மற்றவர்களை அறிந்து அவர்களுக்கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய விருச்சிக ராசியினரே, இன்று நிதி நிலையில் மாற்றம் இருக்காது. தாய்வழி உறவினர்களால் சிலர் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் சிலருக்கு கை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3




9


/ 12






தனுசு


சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் தனுசு ராசியினரே, இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பீர்கள். வியாபார ரீதியான பயணமொன்று வெற்றியைத் தரும். தங்களுடன் அன்பாய் பேசி வந்தவர்கள் கூட பகைமை பாராட்டுவார்கள். பண விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுடன் நடந்தீர்கள் என்றால், நீங்கள் கில்லி தான்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6






10 / 12






மகரம்


பொது காரியங்களில் விருப்பம் உள்ள மகர ராசியினரே, இன்று பணிகளில் கவனம் செல்லாது. சிலர் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, மனை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். நல்ல மனிதர்களை சந்திக்க நேரிடும். மகிழ்சியான நாளாக இன்றைய நாள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6






11 / 12






கும்பம்


எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணமுடைய கும்பராசியினரே, இன்று விரக்தி மனப்பான்மை தோன்றும். சக ஊழியர்கள் தோழமையாக நடந்து கொள்வார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் சிலருக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும். குரு வழிபாடு செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7






12 / 12






மீனம்


நீதி, நேர்மை, உண்மை என்று எப்போதும் பாடுபடும் மீன ராசியினரே, இன்று போட்டிகள் ஏற்பட்டாலும் தங்களின் கடின முயற்சியால் அதைச் சமாளித்து விடுவீர்கள். ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்கள் நல்ல ஆதாயம் காண்பீர்கள். சிலருக்கு தக்க சனமானம் கிடைக்கப் பெறுவீர்கள். சோம்பல் நீங்கும். புத்தணர்வு மிக்க நாளாக இன்றைய தினம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9



Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra