பற்றவைத்த பாகிஸ்தான்? மோதிக்கொள்ளும் பாஜக-காங்!கர்நாடகத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளநிலையில், திப்பு சுல்தானைப் புகழ்ந்து பாகிஸ்தான் அரசு செய்துள்ள ட்வீட்டால், காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கடுமையாக கருத்து மோதல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுநாள் வரை திப்புசுல்தானைப் புகழ்ந்து ட்வீட் செய்யாத பாகிஸ்தான், திடீரென கர்நாடகத் தேர்தலை கணக்கில் கொண்டு ட்வீட் செய்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னன் திப்புசுல்தான். அவரின் 218-வது நினைவுநாள் இம்மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் அரசு திப்புசுல்தானைப் புகழ்ந்து தனது அதிகாரப்பூர்வ தளத்தில் ட்வீட் செய்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் திப்பு சுல்தான் குறித்து புகழ்ந்து ட்வீட் செய்யப்பட்டு இருந்தது. அதில், ‘‘இந்திய வரலாற்றில் முக்கியமான, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து முதன்முதலாக விடுதலைக்காகக் குரல்கொடுத்த வீரர். மைசூரின் புலி’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், திப்பு சுல்தான் குறித்த வீடியோவையும் பாகிஸ்தான் அரசு தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டது.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு ஏற்கெனவே திப்பு சுல்தான் பிறந்தநாள், நினைவு நாளுக்கு விழா எடுத்துச் சிறப்பித்து வரும் நிலையில், இந்த டிவிட்டையும் புகழந்துது. ஆனால், பாகிஸ்தான் அரசு செய்த ட்வீட்டுக்கு காங்கிரஸ் எப்படி வரவேற்பு தெரிவிக்கலாம் எனக்கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நேரத்தில் பாகிஸ்தான் அரசு இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோவையும், ட்வீட்டையும் வெளியிட்டு பிரிவினையை ஏற்படுத்தப்பாக்கிறது என்று பாஜகவினர் குற்றம்சாட்டினார்கள்.

ஆனால், காங்கிரஸ்கட்சியினரோ தேர்தல் நேரத்தில் பாகிஸ்தானுடன் சேர்ந்து பாஜகவினர் சதி செய்து, திப்பு சுல்தான் குறித்த வீடியோவையும், ட்வீட்டையும் வெளியிட வைக்கிறார்கள். இதன் மூலம் இந்துக்களைத் திரட்டி வாக்குகளைச் சேகரிக்க முயல்கிறார்கள் என்று குற்றம்சாட்டியது.

இதற்கு முன் திப்புசுல்தான் குறித்து பாஜகவினர், இந்துக்களுக்கு எதிரானவர், இந்துக்களைக் கொன்று குவித்தவர் என்றெல்லாம் விமர்சித்து இருந்தது. இதனால், மைசூரு மண்டலத்தில் திப்பு சுல்தானுக்கு பிறந்நாள், நினைவு நாள் கொண்டாட பாஜகவினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பாஜகவினருக்கு போட்டியாக மாநிலத்தில் ஆளும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ம் தேதியை திப்பு சுல்தான் பிறந்தநாள் அரசுவிழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது. இதனால், திப்பு சுல்தான் பெயரில் காங்கிரசும், பாஜகவினரும் தொடர்ந்து மோதிக்கொண்டு வந்தனர். அந்த மோதல் தீயில் இப்போது பாகிஸ்தான் கொஞ்சம் நெய்யை வார்த்து கொளுந்து விட்டு எரியச் செய்துள்ளது.

Post a Comment

0 Comments