Wednesday, May 9, 2018

போலி வாக்காளர் அட்டை பறிமுதல்! ஒத்திவைக்கப்படும் கர்நாடக தேர்தல்?

ad300
Advertisement


கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அடையாள அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்பேரில் தேர்தல் அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகளும், 5 மடிக்கணினிகளும், ஒரு அச்சு எந்திரமும் இருந்தது தெரியவந்தது. வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்திற்கான ஒப்புகை சீட்டுகளும் அங்கு இருந்தன. இந்த ஒப்புகை சீட்டுகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சம் இருக்கும். இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.இந்தநிலையில், குறுக்கு வழியில் வெற்றி பெற இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டதாக பா.ஜனதாவும் அதுபோல் பா.ஜனதா தான் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டதாக காங்கிரசும் குற்றம் சாட்டி உள்ளன.

இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “போலி வாக்காளர் அடையாள அட்டை மோசடி பின்னணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் உள்ளார். பா.ஜனதா தொண்டர் தான் இந்த மோசடியை அம்பலப்படுத்தி உள்ளார். போலி வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட கட்டிட உரிமையாளர் காங்கிரசை சேர்ந்தவர்” என்று தெரிவித்தார்.

ஆனால் இதனை காங்கிரஸ் மறுத்து உள்ளது. கட்டிடத்தின் சொந்தக்காரர் பா.ஜனதாவை சேர்ந்தவர். தேர்தலில் தோல்வி
உறுதி என்பதால் தான் இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகளை பா.ஜனதா கூறுகிறது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் பா.ஜனதா தொண்டர்களை தாக்கியதாக காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே கர்நாடக பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து, ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று இதுதொடர்பாக மூத்த தலைவர் ஆனந்த்சர்மா தலைமையில் அக்கட்சியினர் புகார் கொடுத்தனர்.

எனவே அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra