Wednesday, May 9, 2018

இன்றைய ராசி பலன்கள் - சோனகிரிநாதர் !

அஷ்டமா சித்திகளை அடக்கியாளும் அய்யனாரடிமை சோனகிரிநாதர் கணித்த இன்றைய ராசி பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்…
விளம்பி வருஷம் I உத்தராயணம் I வஸந்தருது
சித்திரை 26 I இங்கிலீஷ்: 09 May 2018 I புதன்கிழமை
நவமி இரவு 8.09 மணி வரை. பின் தசமி
அவிட்டம் காலை 8.15 மணி வரை. பின் சதயம்
ப்ராம்மம் நாமயோகம் I தைதுலம் கரணம் I மரண யோகம்


ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00 I சூலம்:

வடக்கு I பரிகாரம்: பால்
திதி: நவமி I சந்திராஷ்டமம்: ஆயில்யம்
1
/ 1
2மேஷம்


மேஷ ராசி அன்பர்களே, இன்று சிலருக்கு எதிர்பாராத வகையில் தொல்லைகள் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வாகனங்களில் செல்லும் போது மிக கவனம் தேவை. ஏனெனில், சிலருக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குல தெயவத்தை வழிபட்டு செல்லுங்கள். எந்த பிரச்னையும் வராது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
2


/ 12ரிஷபம்


ரிஷப ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு செழிப்பான தினம். இருப்பினும், இன்று சிறுசிறு விஷயங்களுக்குக் கூட கணவன் - மனைவியரிடையே பிரச்னை தோன்றலாம். கவனம் தேவை. பணம் வர வேண்டிய இடத்திலிருந்து தாராளமாக வரும். குடும்ப ஒற்றுமையை கலைக்க சிலர் முயற்சி செய்வார்கள். கனவத்துடன் கையாள்வதின் மூலம் இவற்றைத் தவிர்த்துவிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
3


/ 12மிதுனம்


மிதுன ராசி அன்பர்களே, இன்று உங்களக்கு ஓரளவுக்கு நல்லநாள்தான். இன்று எல்லா விஷயங்களிலும் தாமதமாக செயல்படுவீர்கள். நல்லோர் ஒருவரை சந்தித்து அவர் ஆசி பெறுவீர்கள். வருமானமும் ஓரளவுக்கு நல்லபடியாகவே அமையும். சிலர் உங்களை மனம் நோகும்படி செய்வார்கள். அதைப் பொருட்படுத்தாது அடுத்த காரியங்களில் துணிந்து செய்தால் ஜெயம்தான்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
4


/ 12கடகம்


கடக ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு நிம்மதி தரும் நாள். இன்று குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்னைகளின் கடுமை குறையும். அதனால் மனநிம்மதி இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணி நிமித்தமாக சிலர் வெளியூர் புறப்பட வேண்டியிருக்கும். மகிழ்ச்சியாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5
5


/ 12சிம்மம்


சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஜெயமான நாள். இன்று வியாபாரம் அமோகமாக இருக்கும். முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு தேடுவீர்கள். தங்கள் உதவியாளர்களுடன் மோதல் போக்கு ஏற்பட்டு பின்பு சரியாகும். வெற்றி உங்களுக்குத்தான் என்றாலும், அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6
6


/ 12கன்னி


கன்னி ராசி அன்பர்கள் இன்று மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். இன்று அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனமுடன் இருக்கவும். தேவைக்கேற்ப பழகிவிட்டு உங்களை உதாசீனப் படுத்திவிடுவார்கள். வெளிநாடு செல்ல விரும்புவோர் சற்று காலத்திற்கு முயற்சியை தள்ளி போடுவது உத்தமம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
7


/ 12துலாம்


துலாம் ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். ஆனால் உங்கள் வேலைகள் மற்றவர்களுக்கு பொறாமையைக் கொடுக்கும். தெய்வ அருள் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9
8


/ 12விருச்சிகம்


விருச்சிக ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு சுமூகமான நாள். இன்று நிதி நிலையில் மாற்றம் இருக்காது. தாய்வழி உறவினர்களால் சிலர் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் சிலருக்கு கை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3
9


/ 12தனுசு


தனுசு ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும். எதையாவது வாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்... கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பீர்கள். வியாபார ரீதியான பயணமொன்று வெற்றியைத் தரும். தங்களுடன் அன்பாய் பேசி வந்தவர்கள் கூட பகைமை பாராட்டுவார்கள். எதையும் பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6


10 / 12மகரம்


மகர ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு ஆதாயமான நாள். இன்று பணிகளில் கவனம் செல்லாது. சிலர் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, மனை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். நல்ல மனிதர்களை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6


11 / 12கும்பம்


கும்ப ராசி நேயர்களே, இன்று விரக்தி மனப்பான்மை தோன்றும். சக ஊழியர்கள் தோழமையாக நடந்து கொள்வார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் சிலருக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும். குரு வழிபாடு செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7


12 / 12மீனம்


மீன ராசி அன்பர்களே, இன்று போட்டிகள் ஏற்பட்டாலும் தங்களின் கடின முயற்சியால் அதைச் சமாளித்து விடுவீர்கள். ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்கள் நல்ல ஆதாயம் காண்பீர்கள். சிலருக்கு தக்க சனமானம் கிடைக்கப் பெறுவீர்கள். சோம்பல் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List