Wednesday, May 9, 2018

கோடையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது: அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ad300
Advertisement


தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் கோடை கால விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 21 ந் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பொதுவாக முன்பெல்லாம் கோடை விடுமுறை வந்தாலே குழந்தைகள் கொண்டாட்டமாகி விடுவார்கள்.

பள்ளியை மறந்து தினமும் விளையாட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நாட்கள் நகரும், சொந்தக்காரர்களை பார்க்க ஊருக்கு செல்வது என சந்தோஷமாக நாட்கள் நகரும். ஆனால் கல்வி என்று வியாபாரமயமாகி தனியார் பள்ளிகள் போட்டியிட்டு மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என்று மாறத்துவங்கிய பின்னர் மாணவர்களின் அனைத்து சந்தோஷங்களும் மூட்டைக்கட்டி வைக்கப்பட்டது.

விளையாட்டு ஓரங்கட்டப்பட்டது. அந்த நேரத்தை டியூஷன்கள் ஆக்கிரமித்தது. கோடை விடுமுறை என பேருக்கு அறிவித்து விட்டு சிறப்பு வகுப்பு அடுத்த ஆண்டு நன்றாக படிப்பதற்காக கோச்சிங் என வலுக்கட்டாயமாக மாணவரை வரவைக்கும் போக்கு இருந்து வந்தது. கோடை வெயிலில் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

சமீப காலமாக கல்வித்துறையில் மாற்றங்களை கொண்டு வரும் பள்ளிக்கல்வித்துறை இதிலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

கோடையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள உத்தரவில், “மாணவர்களின் நலனைக் கருதி கோடை விடுமுறை நாட்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ.பள்ளிகள் மற்றும் இதர வாரியப்பள்ளிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என ஏற்கனவே அமைச்சர் அறிவித்துள்ளார்.

எனவே மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ. பள்ளிகள் மற்றும் இதர வாரியப் பள்ளிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறக் கூடாது என அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra