Friday, May 4, 2018

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் - சசிகலா அதிரடி



“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க திவாகரன், தினகரன் இருவரும் நேரம் கேட்டிருந்தார்கள். ஆனால், இருவரையும் இன்னும் சந்திக்காமல் தவிர்த்து வருகிறார் சசிகலா. ஆனால், எதிர்பாராமல் திடீரென இன்று பெங்களூரு புகழேந்தியை வர வழைத்துப் பேசியிருக்கிறார் சசிகலா. புகழேந்தியைப் பார்த்ததுமே தினகரன், திவாகரன் பிளவு தொடர்பாகத்தான் பேசியிருக்கிறார் சசிகலா.

‘வெளியில் என்னதான் நடந்துட்டு இருக்குது? என்னத்துக்காக இப்போ அவரு கட்சி ஆரம்பிச்சிருக்காரு? ஆரம்பத்துல இருந்தே தினகரனும் நான் சொன்னதை கேட்கல. இப்போ திவாகரனும் என்கிட்ட கேட்கவும் இல்ல. அம்மா இருந்த வரைக்கும் இவங்க எல்லாம் எங்கே போனாங்க? யாரையும் கார்டன் பக்கம்கூட விடாமல் அம்மா விரட்டினாங்க. இப்போ தினகரன், திவாகரன் ரெண்டு பேரும் ஏதோ அதிமுகவே எங்க பக்கம்தான் இருக்கு என்பது மாதிரி ஆடிட்டு இருக்காங்க. எடப்பாடி துரோகம் பண்ணிட்டாருன்னு இன்னைக்கு வாய் கிழிய பேசிட்டு இருக்காங்களே... இவங்களுக்கும் எடப்பாடிக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?

இவங்களுக்கு எடப்பாடியே எவ்வளவோ மேல்னு எனக்கு தோணுது. அவராவது கட்சியை காப்பாத்தணும் என்பதற்காகத்தான் என்னை ஒதுக்கி வைக்கிறேன் என்றெல்லாம் பேசினாரு. இவங்க என்னை கூட வெச்சுகிட்டே கட்சியை காலி பண்ணியதோடு இல்லாமல், பதவிக்காக அடிச்சுக்குறாங்க. நான் அக்கா பையனுக்காக பேசுறதா... தம்பி பையனுக்காக பேசுறதா? நான் ஜெயில்ல இருக்கேன் என்பதை பத்தி இவங்க ரெண்டு பேருக்குமே கவலை இல்லை. அவங்க ரெண்டு பேருக்கும் பதவி வேணும். அதுக்காகத்தான் எந்த லெவலுக்கும் போக ரெடியாகிட்டாங்க. ரெண்டு பேரும் என் குடும்பம்தான். என் சொந்தம்தான். சொந்தமாக ரெண்டு பேரும் எனக்கு முக்கியம்தான். அதே நேரத்துல, அரசியல்னு வரும் போது நான் யாரு பக்கமும் நிற்கவும் முடியாது. யாருக்கும் சப்போர்ட் பண்ணவும் முடியாது. என்னை பார்க்கணும்னு இப்போ ரெண்டு பேரும் துடியா துடிக்கிறாங்க. யாரையும் கூப்பிட்டு பேசவும் எனக்கு விருப்பம் இல்ல...’ என்று சொன்னாராம்.

அதற்கு புகழேந்தி, ‘நீங்க எந்தப் பக்கம் இருக்கீங்களோ அந்தப் பக்கம்தான் நாங்க இருப்போம்மா...’ என்று சொல்ல.. ‘நீங்க யாரும் எதுவும் அப்படியெல்லாம் பேசாதீங்க. யாரு எங்கே இருக்கீங்களோ அங்கேயே இருங்க. இன்னும் ரெண்டு வருசத்துல எதுவும் மாறலாம். என்னைப் பத்தி கட்சிக்காரங்க மத்தியில வாயில வராத கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திவாகரன் திட்டியிருக்காரு. எல்லாம் என்னோட கவனத்துக்கு வந்துட்டேதான் இருக்கு. ஜெயிலுக்குள்ள போகப் போறோம்னு தெரிஞ்சும் எதுக்காக அந்த ---- முதலமைச்சர் ஆகணும்னு ஆசைப்பட்டா? என்றெல்லாம் பேசியிருக்காரு திவாகரன். இவங்களை எல்லாம் எந்த முகத்தை வெச்சுகிட்டு என்னைப் பார்க்கச் சொல்றீங்க?’ என்று கேட்டாராம் சசிகலா.

இது மட்டுமல்ல; இன்னொரு விஷயமும் சசிகலா சொல்லியிருக்கிறார். ‘உங்களுக்கெல்லாம் தினகரன் என்னைப் பார்க்க முயற்சி செஞ்சதும், திவாகரன் என்னை பார்க்க முயற்சி செஞ்சதும்தானே தெரியும். எடப்பாடி அமைச்சரவையில் இருக்கிற அமைச்சர் ஒருத்தரே என்னை பார்க்க நேரம் கேட்டிருக்காரு. நான் இன்னும் பதில் சொல்லாமல் இருக்கேன். நான் இப்போ சொன்னால் எடப்பாடி அணியில் இருக்கிற அமைச்சர்களே என்னை பார்க்க தயாராக இருக்காங்க. குடும்பத்தை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு நான் மட்டும் போனால், எடப்பாடியும் சரி... அதிமுக தொண்டர்களும் சரி என்னை ஏத்துக்க ரெடியாகத்தான் இருக்காங்க. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?’ என்றும் கேட்டு அதிர வைத்திருக்கிறார். ஷாக்கான புகழேந்தி, ‘அப்படியெல்லாம் எதுவும் யோசிக்காதீங்கம்மா...’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

இந்தத் தகவல்களை எல்லாம் புகழேந்தி உடனடியாக தினகரனிடம் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டாராம் தினகரன். ‘எதுக்கு இப்படியெல்லாம் அவங்க பேசுறாங்க? எப்படியாவது நான் பார்க்கிறதுக்கு நேரம் கேளுங்க..’ என்று சொல்லியிருக்கிறார் தினகரன். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் புகழேந்தி”

தகவல் உபயம் - Minnambalam.com
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List