Thursday, May 10, 2018

மாநில பாடத்திட்டம் Vs மத்திய பாடத்திட்டம் ! சிறப்புப் பார்வை!





NEET .... What ails thee? State syllabus vs Central syllabuse !



பட உதவி நர்மதா!


மேலே போனவனைக் கீழே இழுப்பதைவிட கீழே இருப்பவனையும் மேலே தூக்கிவிட ஏதாவது செய்யலாம் .


அவரவர்களுக்கு அவரவர்கள் பாடத்திட்டம் கடுமை தான் . ஆசிரியரால் 50% தான் திறமையாகச் சொல்லிக் கொடுக்க முடியும் . மீதி 50% மாணவர்களின் புரிதல் , தேடுதல் , பயிற்சியினால் தான் முழு கல்வியையும் கற்க முடியும் .

மாநில அரசு , அரசுப் பள்ளிகளின் தரத்தை சி பி எஸ் இ லெவலுக்கு உயர்த்த வேண்டும் . இது ஒன்றும் கடினமான செயல் அல்ல. சிபிஎஸ்இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைப் போலத்தான் அரசு பள்ளி ஆசிரியர்களின் தரமும் இருக்கிறது . எல்லோருமே பட்டதாரிகள் தான் . ஆனால் பாடத்திட்டம் என்பது தான் வித்தியாசப்படுகிறது . அரசுப் பள்ளியின் தரத்தை ஆசிரியர்களுக்கான இடைவிடாத பயிற்சியின் மூலமே உயர்த்த முடியும் .


ஆனால் அரசோ , ஆசிரியர்களோ தங்களின் தரத்தை உயர்த்திக் கொள்ள எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை . அதோடல்லாமல் அடிப்படைக் கல்வி என்பது தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பிலிருந்தே


அரசோ , ஆசிரியர்களோ தங்களின் தரத்தை உயர்த்திக் கொள்ள எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை . அதோடல்லாமல் அடிப்படைக் கல்வி என்பது தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பிலிருந்தே துவங்குகிறது . அதுவரை மாணவர்களுக்கு எழுத, படிக்க மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. அதாவது ' ஆல் பாஸ் ' என்பதால் அவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை . ஒன்பதாம் வகுப்பிலிருந்து சப்ஜக்டைப் புரிந்து கொண்டு ஒரு மாணவன் படிக்க ஆரம்பிப்பதற்குள் அந்த வருடமும் முடிவடைந்து விடுகிறது .

10,11,12 வகுப்புகள் அவனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதால் ' ரோட் ' லெர்னிங்கில் அவனைப் பயிற்சி பெறும் நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள் . ஆகையினால் 10 ம் வகுப்புப் படிக்கும் போதே தேடுதல் தொலைந்து , தேடியதை வைத்து புரிதல் ஆரம்பமாகிறது . அதன் பிறகு இரண்டு வருடங்களின் அவனின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது . கல்வியில் சிறந்த பெற்றோர்கள் மகனுக்கு வீட்டில் இன்னொரு ஆசிரியராகிறார்கள் . இதில் தாய் தந்தை இருவருமே படித்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு இரண்டு ஆசிரியர்கள் கிடைப்பதால் புரிதல் சுலபமாகிவிடுகிறது .


தேடுதலைப் பொறுத்து அவன் தன் எதிர்காலத்தைத் தானே தீர்மானம் செய்து கொண்டு அதைத் தேட அவன் முழுமூச்சாக தன்னைத் தயார் படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறான். இதில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது . அவனுக்கான தேடலில் அவர்கள் "அவனின் தேடல் எங்கே எப்படி எப்போது ஆரம்பிப்பது என்பது புரிந்து கொண்டபடியால்" அவன் அங்கே சென்று தேடும்போது அவனுக்கான பயிற்சிக் களம் பெற்றோர்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது


இதில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது . அவனுக்கான தேடலில் அவர்கள் "அவனின் தேடல் எங்கே எப்படி எப்போது ஆரம்பிப்பது என்பது புரிந்து கொண்டபடியால்" அவன் அங்கே சென்று தேடும்போது அவனுக்கான பயிற்சிக் களம் பெற்றோர்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது . பிறகு முழு மூச்சாக பயிற்சியில் இறங்கி விடுவதால் அவனுக்கு மூன்று வருட பயிற்சியில் இலக்கு சுலபமாக எட்டப்படுகிறது .

இதே அரசுப் பள்ளியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு இந்த மூன்று வருட காலத்தில் புரிதலில் ஆசிரியர்களே முழுமூச்சாக உழைக்க வேண்டியிருக்கிறது . அவர்களுக்குள்ளு


அவர்களுக்குள்ளும் தாயோ தந்தையோ கற்றவராயின் ஒருவாறு சமாளித்து அவர்களும் தேடுதலில் இறங்கி ஓரளவிற்கு சாதித்து விடுகிறார்கள் . மிகவும் ஏழைகளோ , கல்வி அறிவு பெறாத பெற்றோர்களைப் பெற்றவர்களோ இந்த மூன்று வருடத்தை தங்களின் கல்வி பெறும் இறுதிச் சுற்றாக நினைத்து பள்ளி முடிந்தவுடன்குலத் தொழிலைப் பார்க்கப் போய் விடுகிறார்கள் . ஆனால் அவர்கள் திறமை இல்லாதவர்களோ , தேடுதலைத் தவறவிட்டவர்களோ , அல்லது புரிதலில் திறமையில்லாதவர்களோ கிடையாது . அவர்களுக்குத் தோள் கொடுக்க, துணைநிற்க யாருமில்லை அவ்வளவு தான் .

அரசாங்கம் கடந்த ஐம்பதாண்டு காலங்களில் இவர்களின் கல்வி அறிவை தர நிர்ணயம் செய்து பின் தங்கிய மாணவர்களை முன்னேற்றிக் கொண்டுவர எந்த ஒரு முன் முயற்சியும் எடுக்காமல் இருந்து விட்டு இப்போது வந்து ' level playing field ' வேண்டுமென்று நீட்டோலை வாசிக்கக் கூடத் தெரியாதவனை நீட் தேர்விற்குத் தயார் செய்கிறோமென்று புளுகினால் ஏமாற்றமே மிஞ்சும் . இது அரசாங்கம் மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும் . அரசாங்கம் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த அவர்களின் தேர்வு முறையை இன்னும் கடினப்படுத்த வேண்டும் .


பட்டம் , பட்டையம் என்பதெல்லாம் ஒரு தகுதியே இல்லாமல் மத்ய அரசுப் பள்ளிகளுக்கீடான தகுதியைப் பெற அவர்களின் பாடத்திட்டத்தில், பயிற்சி முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் . இந்த ஆல் பாஸ் முறையை மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் வைத்து விட்டு , மற்ற மாவட்டங்களில் திறமைக் கேற்ற கல்வியைத் தர வேண்டி ஆசிரியர்களுக்கு கல்வித்தகுதி , உழைப்புத் திறன் இவைகளுக்கு தர நிர்ணயம் செய்து அதில் அதிகளவு பயிற்சிகளை புகுத்த வேண்டும் .


இல்லையானால்







தொடரும்........


கட்டுரையாளர் #சாமிநாதன்_கோபாலகிருஷ்ணன்
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List