Wednesday, June 20, 2018

சேலத்தில் தீவிரமாகும் போராட்டங்கள்! அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன?நெடுவாசல் மீத்தேன் எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு, சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு என தொடர்ந்து மக்கள் போராட்டங்களால் தமிழக அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகளும்,உதிரிக்கட்சிகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்த அப்பாவி பாமர மக்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதே உண்மை....

ஆனால்

போராட்டங்களை முன்னெடுத்துப் போராடும் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முயற்சிக்காமல், போராட்டங்களை பின்னிருந்து இயக்கும் சில அமைப்புகள்,மற்றும் கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து சமாதானம் பேசிவரும் அரசு அதிகாரிகளின் வீண் முயற்சிகளால் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் மேற்கண்ட போராட்டங்கள் தொடர்புடைய பேச்சு வார்த்தைகள் அரசுக்கு தோல்வியையே தந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை!!!

  • இந்நிலையில் என்நாடு செய்திகள் குழு மூலமாக சேலம் மாவட்டத்தில் தற்போது தீவிரமாகிக் கொண்டிருக்கும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர எந்த மாதிரியான அறிவிப்புகளை மக்கள் அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்று கள ஆய்வு செய்து கண்டறிந்த தகவல்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நேரடிப் பார்வைக்கு கொண்டு செல்ல கீழ்க்கண்ட தகவல்கள் பணிந்தனுப்படுகிறது.


1) அரசு தரும் இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை.

சேலம் மாவட்டத்தில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கும், பசுமை வழிச்சாலை பணிகளுக்கும் தமிழக அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசாங்க நில மதிப்பீட்டின் படி வழங்கப்படும் தொகையானது தற்போதைய வெளிமார்க்கெட் விலையை விட மிகவும் குறைவாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

மேலும் போராடும் மக்களில் 20% பேர்கள் பல ஆண்டுகளாக விசைத்தறி மற்றும் பட்டு கைத்தறியை தொழிலாக கொண்ட மக்களாவர். இவர்களின் நிலங்களை அரசாங்கத்திற்கு வழங்க தயாராக இருந்தாலும், அரசால் அரசின் நில மதிப்பீட்டின்படி வழங்கப்படும் சொற்ப தொகையை வைத்து தனியார் நில மதிப்பீட்டின் படி வேறு இடம் வாங்கி தொழில் செய்வதென்பது மிகவும் கடினமான காரியம் என கருதுகிறார்கள்....

மேலும் புதிதாக ஒதுக்கட்டுள்ள நிலங்களில் வீடுகட்டி குடியேறுவதற்க்கும், தறிகளை நிர்மானித்து இயக்கவும் தேவையான நிதி உதவிகளையும் அரசு தரப்பில் செய்து தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்...

2) வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பதை விட குடும்பத்தில் ஒருவருக்கு உறுதியான அரசாங்க வேலை என்ற உத்தரவாதம்!

நிலம் வழங்கத் தயாராக உள்ள மக்கள் எதிர்பார்க்கும் மற்றொரு விஷயம், நிலம் வழங்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலைகளில் சேர்வதற்க்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அரசின் உத்தரவாதத்தை ஏற்க மக்கள் மறுக்கிறார்கள்.

காரணமாக அவர்கள் கூறுவது என்னவெனில் எங்கள் குடும்பங்களில் பெரும்பாலானோர் முப்பது வயதிற்க்கு மேற்பட்டவர்கள், அப்படியிருக்கும் போது அரசாங்க வேலைகளில் சேர்வதற்கு எதேனும் அரசின் அறிவிப்புகள் வெளியாகும் வரை காத்திருந்து, தேர்வெழுதி வேலையில் சேர்வதற்குள் அரசாங்க வேலையில் சேர அரசு நிர்ணயித்துள்ள வயதை கடந்து விடும் நிலையே அதிகம். எனவே நிலம் வழங்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக அரசுப் பணி வழங்கப்படும் என்ற உறுதியான உத்தரவாதத்தை எதிர்பார்க்கும் மக்களும் பெரும்பகுதியாக உள்ளனர்....

3) பல ஆண்டுகளாக அரசாங்க நிலங்களில் வீடுகட்டி வசித்து வரும் படிப்பறிவில்லாத மக்களுக்கும் அரசின் இழப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்!

நிலமற்ற பாமர மக்களில் ஒரு பகுதி மக்கள் பல ஆண்டுகளால அரசின் நிலங்களில் (புறம்போக்கு) வீடுகள் கட்டி அனுபோகம் செய்து வருகிறார்கள். அப்படி குடியிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் அரசின் இலவச மனைப்பட்டா வாங்க முயற்சிக்காமலும், இலவச மனைப்பட்டாவிற்க்கு விண்ணப்பித்தும் மனைப்பட்டா வழங்கப்படாத நிலையிலும் வசித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகை கிடைக்காது என்பதால் தற்போது போராட்டங்களை தீவிரப்படுத்திவரும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் இந்த மூன்றாவது வகை மக்களிடம் பேசி போராட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறார்கள்!

4) நிலம் வழங்கும் மக்கள் வைக்கும் பிரதான கோரிக்கை!

அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மாற்றாக அரசால் வழங்கப்படும் 3 சென்ட் நிலம் போதுமானதாக இருக்காதெனவும், தறி வைத்து பிழைப்பு நடத்தும் குடும்பங்களுக்கு கூடுதல் அளவீட்டில் நிலங்கள் கிடைத்தால் மட்டுமே தங்களால் தறி வைத்து பிழைப்பு நடத்த முடியும், மேலும் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிலமானது தாங்கள் வசித்துவரும் பகுதிகளையொட்டிய பகுதிகளிலேயே இருந்தால் மட்டுமே தங்களால் நிம்மதியாக வாழ முடியும், வேறு பிரிவு( சாதி) மக்கள் வசிக்கும் பகுதிகளில் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்களில் வசிக்க நேர்ந்தால் பிற்காலத்தில் சாதீய துவேஷங்களாலும் தங்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளனர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மக்கள் .

மக்களுடைய போராட்டங்களை தடுக்க முயல்வது மேலும் போராட்டங்களின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும்!அதனால் தமிழக அரசு தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க நேரிடும் என்பதற்க்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை நமக்கு படிப்பினை கொடுத்துள்ளது.

எனவே மீண்டும் தூத்துக்குடி சம்பவம் போன்று வேறு எங்கும் நடைபெறாதவாறு மக்கள் போராட்டங்களின் ஆணிவேர் எதுவென கண்டறிந்து செயல்படுவதன் மூலம் புரட்சித்தலைவி அம்மாவின் மக்களால் நாம் மக்களுக்காக நாம் என்ற உயரிய வழியில் மக்கள் விரும்பும் அரசாக தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும்.

Ennadu news க்காக ஆ.சகாயராஜா பரமக்குடி.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List