Tuesday, July 31, 2018

தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!


தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது.

அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தான் வாய்தவறி பேசிவிட்டதாகக் கூறிவிட்டார்.

மக்களவையில் பல்வேறு துணைக் கேள்விகளுக்கு நேற்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். அப்போது அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுகையில்,

” மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் வரும் ரோஹிங்கயா முஸ்லிகளுக்கு அகதிகள் அங்கீகாரம் கொடுக்க முடியாது. அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருகிறார்கள். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேசமயம், அகதிகள் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அவர்களுக்கு உரிய உரிமை அளிக்கப்படும். சட்டவிரோதமாக நுழையும் அகதிகளைத் தடுக்க சரியான முறை வகுக்கப்பட வேண்டும். இது நாட்டின் நலனுக்கும், மக்களின் நலனுக்கும் மிகவும் அவசியமாகும்.

ஆனால், வங்கதேசம், மியான்மர், தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருகிறார்கள் " என்று பேசினார்.

தமிழகம் இந்தியாவில் இருக்கிறது, தமிழக்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் எப்படி நுழைய முடியும் என்று அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் எம்.பி.க்கள் கோஷமிட்டு, கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, அமைச்சர் கிரண்ரிஜிஜு, நான் இலங்கையில் இருந்து அகதிகள் என்று கூறுவதற்கு பதிலாக, தமிழ்நாடு என்று வாய்தவறி கூறிவிட்டேன் என்று கூறினார். ஆனால், அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர்.

இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு, உறுப்பினர்களை அமைதிப்படுத்தி, நா பிறழ்வால் அமைச்சர் அவ்வாறு பேசிவிட்டார் அமைதியாக அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

" ஆடி " ஆட வைக்கமா? அதிர வைக்குமா? 12 ராசிகளுக்கான பலன்கள்-கோட்டூர் சாமி!

" ஆடி " ஆட வைக்கமா? அதிர வைக்குமா? 12 ராசிகளுக்கான பலன்கள்-கோட்டூர் சாமி!
ஆடி மாத ராசி பலன்கள்

(17.07.2018 _16.08.2018)மேசம்:(அசுவினி,பரணி,காா்த்திகை 1ம் பாதம்)

நியாயத்தின் பக்கம் இருக்கும் மேச ராசி அன்பா்களே

இந்த மாதம் குரு பகவான் உங்களுக்கு குறை ஏதும் வைக்க மாட்டாா் ..ராசிக்கு 4ம் இடத்தில் இருக்கும் புதன் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பாா்..9ல் இருக்கும் சனி பகவான் நண்மையைத் தந்தாலும் தகப்பனாருக்கு சில நெருக்கடிகளைத் தரத்தான் செய்வாா் வருடக்கிரகம் என்று சொல்லக் கூடிய ராகுபகவான் 4லும் கேது பகவான் 10 லும் இருப்பதால் சிலா் வெளியூா் வெளிநாடுகளில் வசிக்க நேரிடும்..

குருபகவான் 7ல்

இருப்பதால் வீ்ட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் இருப்பதால் வேலை இல்லாதவா்களுக்கு வேலை கிடைக்கும்...

முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள் வந்த வினை தீரும்.....ரிசபம் :(காா்த்திகை 2,3,4 ரோகிணி,மிருகசீரிடம் 1,2)

வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிசப ராசி அன்பா்களே

ராசிக்கு 8,11 க்குடைய குரு 6ல் இருக்கிறாா் எனவே நண்மைதான் உத்தியோகத்தில் ஒரு மாற்றத்தை தரும்

ராகு 3ல் இருந்து முன்னேற்றத்தை தருவாா் ஆனால் கேது 9ல் இருந்து தந்தையை பாதிப்பாா்

சனி 8ல் அஸ்டமத்து சனியாகி உங்களை ஆட்டிப் படைப்பாா் அவமானங்கள் வர வாய்ப்பு உள்ளது கவனம் தேவை

சனீஸ்வரனுக்கு சனிக்கிழமை விளக்கேற்றி வாருங்கள் ..அஸ்டமச் சனியின் நஸ்டங்கள் விலக ஆஞ்சநேயா் வழிபாடு சிறந்தது....

மாதக் கிரகங்கள் நன்றாகவே இருப்பதால் பிரச்சனை இல்லை.....மிதுனம்:(மிருகசீரிடம் 3,4 திருவாதிரை,புனா்பூசம் 1,2,3)

நுண்ணறிவினால் முன்னேறும் மிதுன ராசி அன்பா்களே

குருபகவான் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து பல நண்மைகளைத் தந்து கொண்டிருப்பாா் வீட்டில் மங்கள ஓசை கேட்கும் காலம் இது....

ராகு பகவான் 2ல் இருந்து பண நெருக்கடியைத் தந்து கொண்டிருப்பாா் கேது 8ல் இருந்து அலைச்சலைத் தந்து கொண்டிருப்பாா் செவ்வாய் 8ல் உச்சமாகி கோபத்தை அதிகப் படுத்துவாா் சனி 7ல் திருமணம் ஆனவா்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு வரும் போது கம்முனு இருந்திருங்க வாயைத் திறந்தா வம்புதான்

மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு வாருங்கள் வசதி வாய்ப்புகள் வந்து சேரும்......கடகம்; (புனா்பூசம் 4 பூசம் ஆயில்யம்)

கடல் ஆழத்தைக் கூட கண்டு பிடித்து விடலாம் கடகராசிக்காரரின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியாது

கடகராசிக்கு யோகாதிபதியான குரு 4ம் இடத்தில் இருந்து வீடு வண்டி வாகனம் வாங்க வைத்திருப்பாா் அல்லது வாங்க வைப்பாா் மற்றொரு யோகாதிபதியான செவ்வாய் 7ல் உச்சம் 5க்குடைய செவ்வாய் 7ல் உச்சம் பெறுவது சிலருக்கு விரும்பிய திருமணம் அதாவது காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது சனிபகவான் 6ல் இருப்பது சகலவிதத்திலும் நண்மையைத் தரும்.....சிம்மம்:(மகம் ,பூரம், உத்திரம் 1)

ஜெகத்தினை ஆளப் பிறந்த சிம்மராசி அன்பா்களே

உங்களின் ராசிநாதன் சூரியன் ராகுவின் பிடியில் இருக்கிறாா் இதனால் அரசியல் மற்றும் அரசு சாா்ந்த விசயங்களில் பிரச்சனைகள் வரவே செய்யும்

குரு 3ல் சிறு சிறு அலைச்சல் இருந்து கொண்டே இருக்கும் சனி 5ல் பிள்ளைகள் வழியில் பூா்வீக சொத்து பிரச்சனைகள் வராமல் இருக்க சனி பகவானை வழிபடுவது நல்லது

ராகு 12ல் கேது 6ல் இது ஒரு நல்ல அமைப்பு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவா்களுக்கு வெற்றியைத் தருவாா் ராகு பகவான் சிம்ம ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் உச்சம் பெறுவதால் விற்காத நிலங்களும் இப்போது விற்பனை ஆகும்
31 ,1 ,2 ஆகிய தேதிகளில் சந்திராஸ்டமம் என்பதால் கவனம் தேவை ..
ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சிவபெருமானை வழிபட்டு வாருங்கள் செல்வ நிலை உயரும்.....கன்னி:(உத்திரம் 2,3,4 ஹஸ்தம் சித்திரை 1,2)

எண்ணியதை நிறைவேற்றும் கன்னி ராசி அன்பா்களே

கோட்சாரத்தில் ராகு பகவான் 11ல் இருந்து பல வழிகளிலும் பணத்தை தருவாா்
குரு பகவான் 2ல் இருந்து தனம் குடும்பம் வாக்கு போன்ற விசயங்களில் வெற்றியைத் தருகிறார் வீட்டில் விசேச நிகழ்ச்சிகள் நடைபெறும்
ராசிநாதன் புதனும் ராகுவுடன் 11ல் இருப்பதால் ஸ்பெகுலேசன் எனப்படும் சோ் மாா்க்கெட் பங்கு வா்த்தகத்தில் வெற்றியைத் தரும்

சனி பகவான் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்து சுகத்தை கெடுப்பாா்
3 8க்குடைய செவ்வாய் 5ல் கேதுவோடு சோ்ந்து உச்சம் பெறுவதால் சிலருக்கு அறுவை சிகிச்சையும் நடை பெறலாம்..

4,7க்குடைய குரு பகவான் 2ல் இருப்பதால் கணவன் மனைவியருக்கிடையே சில தற்காலப் பிரிவு ஏற்படலாம்

பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வந்தால் நல்ல வழி பிறக்கும்......துலாம் :(சித்திரை 3,4,சுவாதி விசாகம் 1,2,3)

சுக்கிரனை ராசியாதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பா்களே

உங்கள் ராசியிலே குரு பகவான் அமா்ந்து உங்களை குழப்பி எடுக்கிறாா் இனி 2 மாதங்கள் கழித்து குரு பெயா்ச்சிக்குப் பின் நிலமை மாறும்

சனி பகவான் 3ல் நல்ல நிலையில் இருப்பதால் தொட்டது துலங்கும்

2,7 க்குடைய செவ்வாய் உச்சம் பெறுவதால் மனைவி வழியில் சில ஆதாயங்கள் ஏற்படலாம் 10ல் ஒரு பாவி பதவி யோகம் என்பதற்கிணங்க 10ல் பாவியான ராகு இருப்பதால் சிலருக்கு தொழிலும் சிலருக்கு பதவியும் கிடைத்திருக்கும் இல்லை என்றால் கிடைக்கும்

திருச்சி திருவரங்கம் அரங்கநாதரை வழிபட ஆனந்தம் பொங்கி வழியும்....விருச்சிகம்: (விசாகம்4 அனுசம் கேட்டை)

தேளைப் போல் கொட்டினாலும் அதிக அளவு பாசத்தைக் காட்டும் விருச்சிக ராசி அன்பா்களே

ஏழரைச் சனியில் படாத பாடு படுத்தி விட்டு இப்போது மெல்ல பாதச் சனியாகி சனி பகவான் உங்களை விட்டு விலகப் போகிறாா் போறவரு சும்மா போக மாட்டாா் உங்களை சுகமாக்கி விட்டுத்தான் போவாா் கவலைப் பட வேண்டாம்

ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெறுவதால் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாழ்க்கையில் பட்ட காட்டுங்கள் தீா்ந்து இனிமேல் நண்மையே நடை பெறும்

குரு பகவான் 12ல் இருந்து சுப விரையங்களை செய்ய வைத்திருப்பாா் ராகு 9ல் சூரியனுடன் தகப்பனாா் விசயத்தில் கவனம் தேவை...

களத்திரகாரன் சுக்கிரன் 10ல் மனைவி வழியில் சில நல்ல விஷயங்கள் நடைபெறும்

கந்தனை வழிபட்டு வந்தால் வந்த வினைகள் தீரும் திருவருட்பா பாடலை பாடுவது மிகுந்த நண்மையைத் தரும்.....தனுசு: (மூலம் பூராடம் உத்திராடம் 1)

ஏழரைச் சனியில் ஜென்மச் சனியால் சிக்கித் தவிக்கும் தனுசு ராசி அன்பா்களே

சனி பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் முகம் கருப்படித்து நல்ல ஆடைகள் அணிய முடியாமல் அவதிப் படுவீா்கள் சனிபகவான் நோ்மையானவா் நீங்கள் நேர்மையாக நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை இல்லையேல் பாடம் கற்றுக் கொடுத்து விட்டுத்தான் செல்வாா்

ராசி நாதன் குரு 11ல் இருப்பது ஆறுதலான விசயம் அவ்வப்போது ஏதாவது ஒரு நம்பிக்கை ஏற்படுத்துவாா் பூா்வபுண்ணியாதிபதி செவ்வாய் உச்சம் பெறுவது சிறப்பு

பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக வாழ திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு வாருங்கள்....மகரம்: (உத்திராடம் 2,3,4
திருவோணம் அவிட்டம் 1,2)

மன உறுதியுடன் பணியாற்றும் மகர ராசி அன்பா்களே

உங்கள் ராசி நாதன் சனி உங்கள் ராசிக்கு 12ல் இருந்து ஏழரைச் சனி யில் விரையச் சனியாக செயல்பட்டு விரையம் தந்து கொண்டிருப்பார் இப்போது எந்த புது முயற்சியும் எடுக்க கூடாது ஆசையைக் காட்டி மோசம் செய்வாா் சனி பகவான் 3ம் சுற்று சனியாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும் மங்கு சனி மரணம் கூட விளைவிக்கலாம்
அனுதினமும் சனி பகவானை வழி பட்டு வாருங்கள் வாழ்க்கையில் வசந்தம் வரும்

ராசியிலே உச்சம் பெற்ற செவ்வாய் இருப்பதால் விபத்து நடை பெற வாய்ப்பு உண்டு வண்டி வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை

10 ல் குரு வர பதவிக்கு இடா் எனவே வேலையை யாரும் விடாதீா்கள் விட்டால் வேறு வேலை கிடைப்பது சங்கடம்

ஆஞ்சநேயா் விநாயகா் வழிபாடு ஆபத்திலிருந்து காப்பாற்றும்.....கும்பம் ; (அவிட்டம் 3,4 சதயம் பூரட்டாதி 1,2,3)

கும்பம் குடம் கொண்டு சாய்க்கும் என்பற்கிணங்க கோடி கோடியாய் சம்பாதிக்கும் கும்பராசி அன்பா்களே

ராசிநாதன் சனி 11ல் வலுவான நிலையில் இருப்பதால் எதிலும் வெற்றியே ஏற்படும்

4,9 க்குடைய சுக்கிரன் 7ல் இருப்பதால் தாய் தந்தையா் உடல் நிலையில் கவனம் தேவை குறிப்பாக கணவன் மனைவிக்குள் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது

குரு பகவான் 9ல் இருப்பதால் திருமணம் ஆகாதவா்களுக்கு திருமணம நடைபெறும் குழந்தை இல்லாதவா்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ராகு பகவான் 6ல் இருப்பதால் நல்ல தொழில் வாய்ப்புகள் வரும்

திருவரங்கம் அரங்க நாதனை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்....மீனம்: பூரட்டாதி 4 உத்திரட்டாதி,ரேவதி)

மனித நேயத்துடன் பிறருக்கு உதவும் மீனராசி அன்பா்களே

உங்கள் ராசிநாதன் குரு பகவான் 8ல் அமா்ந்து நஸ்டங்களையும் அவமானங்களையும் தந்து கொண்டிருப்பாா்

சனி பகவான் 10 ல் அமா்ந்து தொழிலையும் மந்தப் படுத்திக் கொண்டிருப்பாா் 2,9 க்குடைய செவ்வாய் 11ல் உச்சம் பெறுவது பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் தரும் சிலருக்கு வீடு கட்டும் யோகம் கூட நடந்திருக்கும்..

5ல் ராகு இருப்பதால் பிள்ளைகள் வழியில் சிறு தொல்லைகள் வரலாம் தொழிலை மாற்றலாமா என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கும்

இனி இரண்டு மாதங்கள் கழிந்து வரும் குரு பெயா்ச்சிக்குப் பிறகே எந்த மாற்றமும் செய்ய வேண்டும்

தட்சிணாமூர்த்தியையும் முருகப் பெருமானையும் வழி பட்டு வந்தால் தொல்லைகள் தீரும்.

நன்றி வணக்கம்

தொடா்புக்கு v.கோட்டூா்சாமி
9566739264
8610753939
வானரமுட்டி
கோவில்பட்டி தாலுகா
தூத்துக்குடி மாவட்டம்
Mail id: kottursamy9566@gmail.com

Monday, July 30, 2018

சிறார் பாலியல் வன்கொடுமை! உறுதி செய்யப்பட்ட தூக்குதண்டனை!

சிறார் பாலியல் வன்கொடுமை! உறுதி செய்யப்பட்ட தூக்குதண்டனை!


12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

இந்த மசோதா மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்தினாலும், இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி, உபியில் உன்னாவ் நகரில் சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.

அந்த அவசரச்சட்டத்துக்கு மாற்றாகத் திருத்த மசோதாவை மக்களவையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது நேற்று மக்களவையில் 2 மணிநேரம் விவாதம் நடந்தது. இந்த மசோதா மீது உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

இந்த அளவு கடுமையான சட்டம் கொண்டு வந்திருப்பதன் நோக்கமே 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் பெண்களைப் பலாத்காரம் செய்தால் அதற்கு மட்டுமே தண்டனை விதிக்கும் வழிமுறை இருந்தது.

ஆனால், 16 வயதுக்கு கீழ்பட்ட, அல்லது 12 வயதுக்குள் உள்ள சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள், சட்டவிதிகள் இல்லை. அந்தத் தண்டனை விவரங்கள், கடினமான சட்டங்கள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளன.

12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த நிகழ்வுகள், கூட்டுப்பலாத்காரம் செய்த நிகழ்வுகள் நாட்டையை உலுக்கின என்பதை அறிவோம். அதைக் கட்டுப்படுத்தவே இந்தக் கடுமையான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம்.

பெண்களைப் பலாத்காரம் செய்தால் விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறை தண்டனையாகவும் விதிக்கப்படும்.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறையாகவும் மாற்றப்படும். இதன்படி குற்றவாளி சாகும் வரை சிறையில் இருக்க நேரிடும்.

16வயதுக்குட்பட்ட சிறுமிகளை கூட்டுப்பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கலாம்.

12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்குக் குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக வாழ்நாள் சிறை அல்லது தூக்கு தண்டனை விதிக்கலாம். 12வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கலாம்.

இந்த மசோதாவில் சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக வழக்குகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து, நீதிமன்றத்தால், தண்டனை அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதேபோல மேல்முறையீட்டுக்கு வழக்கு சென்றால், அதிகபட்சமாக 6 மாதங்களில் வழக்குகள் நடத்தி முடிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

16வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் அல்லது கூட்டுப்பலாத்காரம் செய்ததாக எழும் குற்றச்சாட்டின் கீழ் எவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்படாது எனத் தெரிவித்தார்.

பாஜக எம்.பி. கிரண் கேர் பேசுகையில், சரியானநேரத்தில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் இந்தக் குற்றங்களை இனிமேல் எப்படிக் குறைக்கப்போகிறோம் என்பதைப் பொருத்து இருக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த மசோதா மீதான விவாதத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் எம்.பி. என்.கே.பிரேமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பி.கே.சிறீமதி டீச்சர் ஆகியோரும் பேசினார்கள்.

ஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா? தோல்விக்கு பரிசளித்த போட்டியாளர்!

ஒரு ரூபாய்க்காக சவால் விட்ட சர்மா? தோல்விக்கு பரிசளித்த போட்டியாளர்!


தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் பிரான்ஸை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர்.

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

இந்தசூழலில், ஆதார் அட்டைக்காகப் பெறப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்கள், திருடப்பட்டால், அது குடிமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஆதார் அட்டைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. பொதுமக்களின் ஆதார் தகவல்கள் 13 அடி அகலம் கொண்ட கான்கிரீட் சுவர் கொண்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும், ஆதார் வழங்கும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.எஸ்.ஷர்மா, புதிய சிக்கலில் சிக்கியிருக்கிறார். ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் நடந்த விவாதத்தின் போது, பயனாளர் ஒருவர் ஆர்.எஸ்.ஷர்மாவிடம், `உங்களது ஆதார் தகவல்களை வெளியிட முடியுமா’ என்று கேட்டிருக்கிறார். இதையடுத்து, தனது ஆதார் எண்ணை வெளிப்படையாக ட்விட்டரில் அறித்த ஷர்மா, இதனால் தனக்கு என்ன தீங்கு இழைத்துவிட முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆர்.எஸ்.ஷர்மாவின் ட்விட்டுக்கு ஹேக்கர்கள் ராபர்ட் பேப்டிஸ்ட் என்று அழைக்கப்படும் எலியாட் ஆண்டர்சன், கனிஷ்க் சஞ்சானி மற்றும் கரண் சய்னி ஆகியோர் பதிலளித்துள்ளனர். அதில், ஆர்.எஸ்.ஷர்மாவின் மொபைல் எண், வீட்டு முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் அவர் பயன்படுத்தும் மற்றொரு மொபை எண் ஆகியவற்றை ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆதார் எண் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் ஹேக் செய்ய முடியும் என அவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், ஹேக்கர்கள் வெளியிட்ட தகவல்கள் உண்மையா என்பதை அறிய, அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், ஆர்.எஸ்.ஷர்மா மற்றும் ஹேக்கர்கள் இடையில் நடைபெற்ற இந்த கான்வோ ட்விட்டரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில், ஹேக்கர்கள் டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவின் வங்கிக்கணக்கில் ஒரு ரூபாயை டெபாசிட் செய்து அதைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.

இதுவரை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்டர்சன், புஷ்பேந்திர சிங், கனிஷ்க் சஜினி, அனிவர் அரவிந்த்,கரண் சைனி ஆகிய பெயர்களில் ஹேக்கரில் வந்து சர்மாவின் 14 வகையான தகவல்களை ஹேக் செய்து வெளியிட்டுள்ளனர்.

சர்மாவின் மொபைல் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி, பான் எண், வாக்காளர் எண், டெலிகாம் ஆப்ரேட்டர், என்ன மொபைல் பயன்படுத்துகிறார், ஏர் இந்தியா விமானத்தில் அடிக்கடி பயணம்செய்பவருக்கான பிரத்யேக எண், 5 வங்கிகளின் எண் உள்ளிட்டவற்றை ஹேக்கர்கள் வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

மேலும் சர்மாவின் டீமேட் கணக்கு விவரம், வலதுசாரி அமைப்பின் அடையாள அட்டை எண், எஸ்பிஐ, வங்கியின் டெபிட் கார்டு எண், ஆதார் கார்டு எண்ணைப் பயன்படுத்தி ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்த விவரம் உள்ளிட்டவற்றை வெளியிட்டு திக்குமுக்காடச் செய்துள்ளனர்

நாட்டு மக்களின் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரு ஹேக்கர் எளிதாக ஆதார் தகவல்களை ஹேக் செய்து வெளியிட்டு இருப்பது ஆதார் குறித்த தகவல்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.

Sunday, July 29, 2018

தமிழகம் முழுவதும் காவல்துறை பாதூகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்!

தமிழகம் முழுவதும் காவல்துறை பாதூகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்!


திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் சுமார் 1.20 லட்சம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மாறிமாறி தகவல்கள் வந்ததால், திமுக தொண்டர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையை நோக்கி திமுக தொண்டர்கள் வரத் தொடங்கினர். அதனால் அப்பகுதியில் தொண்டர்களின் எண்ணிக்கை நேரம் செல்லசெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் சென்னையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.
சட்டம், ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை: இந்நிலையில், தமிழகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக, சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் நடவடிக்கையை காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை டிஜிபி தே.க. ராஜேந்திரன் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் உடனடியாக நடத்தப்பட்டது. அதில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பது தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக பொதுமக்களுக்கு தேவையான பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பிரச்னையின்றி கிடைப்பதற்கும், அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டன. மேலும் பதற்றமான இடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் போலீஸார் பாதுகாப்பு வழங்கும்படியும் டிஜிபி உத்தரவிட்டார். அதேபோல ஒவ்வொரு காவல் நிலையத்திலும் முழு அளவில் காவலர்கள் பணியில் இருக்கும்படியும், காவலர்கள் முழு திறனுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறும் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையர்கள் எம்.சி.சாரங்கன், எச்.எம்.ஜெயராமன், அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை விட, கூடுதலாக பாதுகாப்பு வழங்குவது, பிற பணிகளில் இருக்கும் காவலர்களை சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்கு உடனடியாக திருப்பி அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதேபோல அரசுப் பேருந்து பணிமனை, பெட்ரோல் விற்பனையகங்கள், வங்கிகள், அரசு மருத்துவமனைகள், ஆவின் பால் விற்பனை மையங்கள் ஆகிய இடங்களில் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது எனவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
1.20 லட்சம் போலீஸார்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் ஆயுதப் படை போலீஸார் உள்பட சுமார் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், அதிவிரைவு படையினர், 15 ஆயிரம் ஆயுதப் படையினர் என சுமார் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் எவ்வித இடையூறு ஏற்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளையும் எடுக்கும்படி போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், நிலைமை சீராகும் வரை காவலர்கள் தொடர்ந்து பணியில் இருக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டுகோள்
கட்சித் தொண்டர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காக்க வேண்டும் என்று திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் உடல்நிலையில், காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல், எதிர்பாராத ஒரு தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரது உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஆகவே, கட்சித் தொண்டர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பதவி நியமனத்தில் பாரபட்சம்? தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி! போராடத் தயாரான தொழில்நுட்ப பிரிவு?

பதவி நியமனத்தில் பாரபட்சம்? தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி! போராடத் தயாரான
தொழில்நுட்ப பிரிவு?


“ ஆரம்பத்துல சாதாரணத் தொண்டன்கூட நினைச்ச நேரத்துல TTV தினகரனைப் பார்க்க முடிஞ்சது. அதனால்தான் தொண்டர்கள் அவரை விரும்பினாங்க; தேடி வந்தாங்க. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது எல்லாமே மாறிடுச்சு. தினகரன் கட்சியில் அதிகாரம் என்பது ஒரு நபர் கைக்குப் போயிடுச்சு. அந்த ஒரு நபர் தினகரன் இல்லை; அவரது உதவியாளர் ஜனார்த்தனன்.கடந்த 6 மாதங்களாகவே ஜனார்த்தனன் மீது பல புகார்கள் வந்தன. எல்லாம் தினகரன் கவனத்துக்கும் போனது. ஆனால், அவர் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குக் காரணம், தினகரன் வீட்டு கிச்சன் கேபினெட். தினகரன் மனைவி அனுராதா ஆரம்பத்தில் ஜெயா டிவியை நிர்வகித்துவந்த காலத்தில், சாதாரண ஊழியராக அங்கே பணியாற்றியவர் ஜனார்த்தனன். அதன் பிறகு, தினகரன் வீட்டுக்குக் காய்கறி வாங்கி வருவதுவரை எல்லா வேலைகளையும் பார்த்தார். ஒருகட்டத்தில் ஜெயா டிவியிலிருந்து ஒதுங்கி மொத்தமாக தினகரன் வீட்டோடு செட்டிலாகிவிட்டார். தினகரனின் மொத்த ரகசியங்களும் தெரிந்த ஒரே நபர் இன்று ஜனார்த்தனன்தான். அதனால் தினகரன் அவரைக் கேள்வியும் கேட்பதில்லை. கேட்டாலும் தினகரன் மனைவி அனுராதா அனுமதிப்பதும் இல்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரானது. பட்டியலைத் தயாரித்தவர் ஜனார்த்தனன். யாருக்கு என்ன பொறுப்பு என்பதைத் தீர்மானிக்கும் முன்னரே சம்பந்தப்பட்டவர்களை அழைத்தும் பேசியிருக்கிறார் ஜனார்த்தனன். ‘இதை அவருக்குக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு வேணுமா?’ எனச் சில டீலும் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்படிப் பேசிப் பேசித்தான் ஒரு பெரிய நிர்வாகிகள் பட்டியலைத் தலைமை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் எல்லாமே வேடிக்கையாக இருக்கு. சம்பந்தமே இல்லாதவங்களை சம்பந்தமே இல்லாத பொறுப்புக்கு போட்டிருக்காங்க. செய்தித் தொடர்பாளர்களாகச் சிலரை நியமிச்சிருக்காங்க. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தினகரனுக்காகப் பேசி வந்த அக்னீஸ்வரன், தேனி கர்ணன், குரு முருகானந்தம் எனப் பலர் புதிய பட்டியலில் இடம் பெறவில்லை. இன்னும் சில நிர்வாகிகள் பட்டியல் வெளியானதுமே ஜனார்த்தனனைத் தொடர்புகொண்டு கோபமாகப் பேசியிருக்கிறார்கள்.

‘இங்கே நான் என்ன சொல்றேனோ அதுதான் நடக்கும். என்னை எதிர்க்கணும்னு நினைச்சா யாரும் கட்சியில் இருக்கவே மாட்டீங்க..’ என மிரட்டியிருக்கிறார் ஜனார்த்தனன். இப்படிப் பல நிர்வாகிகளும் புகார்களுடன் இன்று வந்தாங்க. ஆனால், என்ன பிரயோஜனம்? எல்லா மனுக்களையும் அந்த ஜனார்த்தனன்தான் வாங்குறாரு. அம்மா இருந்தபோது, பூங்குன்றன் புகார்களை வாங்கிவிட்டு அம்மா கவனத்துக்கே கொண்டுபோக மாட்டாரு. இப்போ அதே கதைதான் இங்கே நடக்குது.

அம்மா இருந்த மாதிரி இப்போ தினகரன் இருக்காரு. அதே பூங்குன்றன் இடத்துல ஜனார்த்தனன் இருக்காரு. அம்மாகிட்ட பொறுமையாக இருந்த மாதிரியெல்லாம் தினகரன்கிட்ட யாரும் இருக்க மாட்டோம். பாதிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்று திரட்டி, மீடியா முன்பு அவங்க பண்ற அநியாயத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் Ttv தினகரன் ஆதரவு நபர்களிடம் பரவலாக பேசப்பட்டு வரும் சூழலில் இதுபற்றிய தற்போதைய நிலவரம் அறிய தினகரன் அணியிலுள்ள முக்கிய நபர்களான நண்பர்களிடம் நாம் பேசிய போது கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக!இரட்டை இலைக்கு இலஞ்சம் கொடுத்ததாக கடந்த ஆண்டு தினகரன் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அவருக்கு மக்களிடம் உயர செல்வாக்கை உயர்த்த அதிக உழைப்பைக் காட்டி வருபவர்கள் தொழில்நுட்ப பிரிவினர் தான், அதிலும் அஇஅதிமுக வில் தொழில்நுட்ப பிரிவின் பல பதவிகளில் இருந்தவர்கள் தினகரன் தனியாக பிரிந்து வரும் போது அவருக்காக தங்களது பதவிகளையும் துறந்து கடும் உழைப்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தினகரன் கடந்த ஆண்டு சிறையிலிருந்து திரும்பிய பிறகு சிலருக்கு பதவி வழங்க பரிந்துரை செய்திருந்தார் பெரம்பலூர் எம்எல்ஏ வெற்றிவேல். மேலும் தனக்கு பரிட்சையமானவர்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து பதவிகளை வழங்கும்படி தினகரனிடம் வலியுறுத்தி வந்துள்ளார். அதனடிப்படையில் வழங்கப்பட்ட பதவிகளில் இருந்தவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதால் "வெற்றிவேல் பரிந்துரை செய்த நபர்களில் சிலரின் பதவிகள் பறிக்கப்பட்டு, சிலரை டம்மியாக்கி வைத்திருந்தார் தினகரன்.

தனியாக அமமுகவைத் துவக்கிய பிறகு கட்சியில் பதவி வாங்கித் தரும்படி போட்டி போட்டுக் கொண்டு வெற்றிவேலை தொண்டர்கள் நெருங்கத் தொடங்கியதைத் தொடர்ந்து தினகரனிடம் இதுகுறித்து வெற்றிவேல் பேசியுள்ளார், அப்போது தினகரன் "நீங்க எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க, அதே போல தான் தங்கமும், அதனால நீங்க பரிந்துரை செய்பவர்களுக்கு பதவி வழங்கினால் "ஏற்கனவே நடந்த மாதிரி திரும்பவும் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி விடும், அதனால கட்சி பொறுப்புகளை கொடுக்கும் பணியை "தங்கதமிழ்ச் செல்வனும் மானாமதுரை மாரியப்பன் கென்னடியும் "செய்யட்டும். கொஞ்ச நாளைக்குப் பிறகு பார்த்துக்கலாம். இப்போதைக்கு அவங்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம், இல்லைனா நம்ம கூட இருக்கிற எம்எல்க்களில் சிலர் மீண்டும் அரசாங்கத்தின் பக்கம் செல்ல வாய்ப்பாகிவிடும் "என்று தினகரன் கூறியதைத் தொடர்ந்து அரைமனதுடன் சம்மதித்துள்ளார் வெற்றிவேல்!அதன்படி அமமுக வில் பொறுப்புகளை வழங்க தற்போது "தங்கமும், கென்னடியும்" தீவிரமாக செயல்பட்டு தங்களுக்கு ஆதரவான (நோட் பண்ணிக்கங்க #ஆதரவான ) நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதன்படி சிலநாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பலரும் புதியவர்கள், தினகரனுக்காக அஇஅதிமுக பதவியைத் துறந்தவர்களில் யாருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை, மேலும் அரசியல் பற்றிய புரிதல் இல்லாதவர்களையும், விமர்சனங்களை சரியான விளக்கங்களுடன் எதிர்கொள்ள திறனில்லாதவர்களையும் தொழில்நுட்ப பிரிவில் நியமித்துள்ளார்கள். வெறுமனே தினகரனின் சுற்றுப்பயண விவரங்களை போட்டோக்களாக சமூகவலைதளங்களில் பரவவிட்டு வரும் நபர்களை மாநில பொறுப்புகளிலும், மாவட்ட பொறுப்புகளிலும் நியமித்துள்ளார்கள். தினகரனைப்பற்றியும், கட்சி பற்றியும் ஏதேனும் எதிர்க்கட்சி தொண்டர்கள் விமர்சித்தால், அதை எதிர்த்து விளக்கமளித்து நம்முடைய கொள்கைகளை மாற்றுக்கட்சியினர்க்கு புரிய வைக்க வேண்டும். மாறாக தங்கள் ஆதரவு நபர்கள் அனைவருக்கும் தகவல் குடுத்து தரக்குறைவாக விமர்சிப்பது போன்ற ஈன செயல்களில் ஈடுபட்டவர்களே தற்போது அமமுக தொழில்நுட்ப பிரிவில் முக்கிய நிர்வாகப் பொறுப்புளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சில நான் முன்பு பதவி பறிக்கப்பட்ட ராகவேந்திர ராவ் என்பவரும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் தான்.இந்நிலையில் மாநில அளவில் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி , வடகரையைச் சேர்ந்த #மீரான்_அப்துல் மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தினகரன் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் ஒன்று திரண்டு தினகரனைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது பற்றிய விளக்கம் பெற தினகரன் ஆதரவு முக்கிய நண்பரிடம் நாம் பேசிய போது தற்போது பதவிகளைப் பரிந்துரை செய்வது தங்கமும், கென்னடியும் தான்! ஆனால் எல்லாருக்கும் பொறுப்பு வழங்க முடியுமா? பதவி கிடைக்காதவங்க பொறாமையில் பேசத்தான் செய்வார்கள், இருந்தாலும் இந்த தகவல்களைத் தினகரனின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதாக கூறினார்.

Friday, July 27, 2018

தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!

தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!


மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் #அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இராமநாதபுரம் அருகே பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மாவட்ட அமமுக தலைவர் Ttv தினகரன் நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தவர் தனியார் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை மதுரையிலிருந்து சாலைப் பயணமாக இராமநாதபுரம் பயணித்தார்! அந்த பயணத்தின் போது பல்வேறு பகுதி அமமுக கழகம் சார்பில் தினகரனுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பரமக்குடி நகரம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது தினகரன் பேசியதாவதுநமது கொள்கைக்காக தனது பதவியை துச்சமாக கருதி செயல்பட்டு பதவியைத் தூக்கி எறிந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சுந்தர்ராஜன் அவர்களுக்கு வருகின்ற அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்த அமமுகவினர் அதிர்ப்தியை தெரிவித்தவுடன் சுதாரித்துக் கொண்ட தினகரன் டாக்டர்.முத்தையா என்று தான் கூறினேன் என்று சமாளித்தார்.

இதுகுறித்து தகுதி நீக்க எம்எல்ஏ டாக்டர்.முத்தைய்யா தரப்பினர் கடும் அதிர்ப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இவருக்காக பதவியைக்கூட வேண்டாமென தூக்கியெறிந்த சட்டமன்ற உறுப்பினர் பெயரையே சரியாகக் கூற முடியாதவரை நம்பி இனியும் காலம் கடத்த வேண்டாம் என்று டாக்டர் முத்தைய்யாவுக்கு நெருக்கமான நண்பர்கள் அறுவுரை கூறத் தொடங்கிவிட்டனர்......

டாக்டர் முத்தைய்யா என்பதற்க்கு பதிலாக டாக்டர் சுந்தர்ராஜன் என்று பேசிய தினகரன் வீடியோவைப் பார்க்க இங்கே தொடுங்கள்

Thursday, July 26, 2018

அரசியல் சாணக்கியரின் ஐம்பதாம் ஆண்டு!

அரசியல் சாணக்கியரின் ஐம்பதாம் ஆண்டு!


  • இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். எம். கருணாநிதி அவர்கள், அன்போடு மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்குகிறார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி அவர்கள், சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தத்திற்காகவும் போராடினார். அவருடைய ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவரது சக்திவாய்ந்த செல்வாக்கு ஆளுமையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஜூன் 3, 1924
பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா
*தொழில்:* அரசியல்வாதி, எழுத்தாளர்
நாட்டுரிமை: இந்தியன்
*பிறப்பு*
கருணாநிதி அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், ஜூன் 3ஆம் தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.
*ஆரம்ப வாழ்க்கை*
அவருடைய பெற்றோர்கள் இருவரும் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும், அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.
*தொழில்*
தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அவர், தமிழ் திரையுலகில் கதை-வசனம் எழுதுபவராக .இருந்தார். அவருடைய திரை வசனங்கள் மூலம், அர்த்தமுள்ள சமூக செய்திகளை வெளிப்படுத்த முயன்றார். அவரது கதைகளனைத்தும், ‘விதவை மறுமணம்’, ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’, ‘மத பாசாங்குத்தனத்தை ஒழித்தல்’, ‘தீண்டாமை அழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம் ஒழிப்பு’ போன்றவற்றை சார்ந்தே இருக்கும். பாரம்பரிய இந்து மத சமூகங்கள் எதிர்த்த பிராமண ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை, தனது படமான ‘பராசக்தியில்’ பிரதிபலித்தார். பல சர்ச்சைகள் இருந்தாலும், இப்படம் பரவளான விளம்பரம் பெற்று, மாநிலத்திலுள்ள அனைத்து பார்வையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் திரைக்கதையிலுள்ள மரபுசாரா கருப்பொருள்களே, அவரை அக்காலத்தில் மிகவும் பிரபலமாக்கியது. திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதைத் தவிர, கருணாநிதி அவர்கள், பல்வேறு கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள், வரலாறு, வரலாற்று நாவல்கள், இசை, வசனம், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். அவர் ஒரு கலாரசிகனாக இருந்ததால், புகழ்பெற்ற கவிஞரான திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கட்டடக்கலைக் குவியலான ‘வள்ளுவர் கோட்டத்தை’ நிறுவினார்.
*அரசியல் வாழ்க்கை*
இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிஸ்வாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.ஒருமுறை, சமூகநல காரணங்களைப் பற்றிய அழகிரிஸ்வாமியின் உரையை கேட்ட கருணாநிதி அவர்கள், அதனால் ஊக்குவிக்கப்பட்டார். அவர் இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. இந்த காலக்கட்டத்தில், தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இதன் காரணமாக, தனது சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, அவர் தனது பத்திரிக்கையான “முரசொலியை” தொடங்கினார். அப்பொழுது முதல், இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி அவர்கள், தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். மேலும் ‘குடியரசு’, ‘முத்தாரம்’, ‘தமிழரசு’ போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறார். கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி அவர்கள் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல், தி.மு.க. கட்சியில் சேர்ந்தார், பின்னர் அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி அவர்கள், ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.
1967ல் தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர் பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 87 வயதான மு.கருணாநிதி அவர்கள், திமுக கட்சியின் ஆணிவேராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மாநில அரசியலிலும், ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.சாதனைகள்*
கருணாநிதி அவர்கள், 1970ல், பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987ல், அவர் மலேஷியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 2010 க்கான ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை
ஏ.ஆர்.ரகுமான் அமைத்தார். தமிழ் இலக்கியத்தில், தனது இலக்கிய பங்களிப்பைத் தவிர, கருணாநிதி அவர்கள், தனது மக்கள் நலனிற்காக தனது ஆதரவை நீட்டித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில் மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார். சமூகநலன்களை நோக்கி இன்றும் அவருடைய வேலை தொடர்கிறது. ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக, அவருடைய பதவி காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய டிராக்டர் உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது
*தனிப்பட்ட வாழ்க்கை*
கருணாநிதி அவர்கள், மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்கு, எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார். அவரது முதல் மனைவி, திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார். கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்களே அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு பிறந்தவர் தான் கனிமொழி
*விருதுகள்*
அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.
தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.
தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.
தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.
காலவரிசை
*1924:* கருணாநிதி, திருக்குவளை என்ற ஒரு சிறிய கிராமத்தில், ஜூன் 3ம் தேதி பிறந்தார்.
*1942:* அவரது பத்திரிக்கை ‘முரசொலி’ நிறுவப்பட்டது.
*1957:* அவர் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*1961:* திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*1962:* தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
*1967:* பொது நல அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
*1969:* முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.
*1970:* உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு அங்கமாக இருந்தார்.
*1971:* இரண்டாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*1989-1991:* எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சியமைத்தார்.
*1996:* நான்காவது முறையாக முதலமைச்சரானார்.
*2006:* ஐந்தாவது முறையாக மாநிலத் தேர்தலில் வெற்றிப்பெற்று, மீண்டும் முதலமைச்சரானார்.

செய்தி படைப்பாளர்
*A முக்தார் அஹமத்*

சுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்!

சுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை
மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்!
சமீபகாலமாக அஇஅதிமுக கழகத்தின் வளர்ச்சியில் தொய்வு ஏற்ப்பட்டிருப்பதாகவும், கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகள் யாரும் அக்கறையுடன் செயல்படுவதே இல்லையென்றும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்திளை வெளியிட்டு வருகிறார்கள்.

ஆனால் அப்படி வரும் செய்திகள் தவறான வதந்திகளே ,நாங்கள் எங்கள் அஇஅதிமுக கழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தே பணி செய்கிறோம் என்பதை #சொல்லால்_சொல்லாமல்_செயலால்_காட்டிவரும்_இராமநாதபுர_அஇஅதிமுக .இது தொடர்பாக இராமநாதபுர மாவட்ட அஇஅதிமுக கழக நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது! பல்வேறு செய்தி நிறுவனங்களும் அதிமுகவின் வாக்கு வங்கி சரிவடைந்துள்ளதாகவும், உறுப்பினர் சேர்க்கை சரிவர நடைபெறவில்லை என்றும் அஇஅதிமுக கழகம் மீது தேவையற்ற வதந்திகளைத் திட்டமிட்டே பரப்பி வருகிறார்கள். ஆனால் அஇஅதிமுக கழக தலைமை நிர்வாகிகளின் உத்தரவின்படி நாங்கள் கழக வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்துக் கொண்டு தானிருக்கிறோம், மாவட்ட கழக நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை ஒன்றியம், நகரம், கிளை என அனைத்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அதிமுக வாக்கு வங்கியை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்! அதன் தொடர்ச்சியாக

கடந்த25/7/18 அன்று பரமக்குடியிலுள்ள கீர்த்தி மஹாலில் மாவட்ட அணிகள்,மற்றும் ஒன்றிய அணி செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியங்களை உள்ளடக்கிய அனைத்து கழக அணியினரும் வரப்போகும் 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும், மாற்றுகட்சி உறுப்பினர்களை கழகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கவும் எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக இதயதெய்வம் *புரட்சித் தலைவி அம்மா* அவர்களின் ஆசியுடன் , கழக ஒருங்கிணைப்பாளரும், *மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு .ஓ. பன்னீர்செல்வம்* அவர்கள் ,கழக இணை ஒருங்கிணைப்பாளரும், *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி* அவர்கள் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் *மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் திருமிகு. MA.முனியசாமி* அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளான , பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்..

அந்த ஆலோசனைகளின்படி மாவட்ட கழகம் சார்பாக அனைத்து ஊர்களிலும் திண்ணை,தெரு முனைப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் , மாற்றுக்கட்சி உறுப்பினர்களிடம் அஇஅதிமுக கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி கழக உறுப்பினர்களாக இணைக்கவும் முயற்சிகளை மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் செயல்பட துடிப்பும் ,அனுபவமும் உள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் ஆலோசித்துள்ளதாகவும், மாவட்ட கழக தொழில்நுட்ப பிரிவின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த பகுதி வாரியாக தொழில்நுட்ப பிரிவு செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், தொழில்நுட்ப பிரிவை வலுப்படுத்தும் வகையில் புதிய நியமனங்களை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம்இராமநாதபுர நாடாளுமன்ற உறுப்பினர் ,மாநில தகவல் தொழில் நுட்ப அமைச்சர்,மாவட்ட அஇஅதிமுக செயலாளர்,

மற்றும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் "மறைந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளான 27/7/18 அன்று இராமநாதபுரம் ,பேக்கரும்பில் அமைந்துள்ள அய்யா அவர்களின் நினைவிடத்தில் மாவட்ட அஇஅதிமுக கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்,மாநில தொழில்நுட்ப துறை அமைச்சர், மாவட்ட செயலாளர் தலைமையில் கழக நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக மாவட்ட அஇஅதிமுக மாவட்ட கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அமமுக கட்சியைச் சேர்ந்த பெருவாரியான இளைஞர்கள் அமமுக விலிருந்து விலகி மாவட்ட செயலாளர் முன்னிலையில் தங்களை அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டனர். புதியதாக கழகத்தில் இணைந்து கொண்ட இளைஞர்களை மாவட்டக் கழக நிர்வாகிகள் வரவேற்று ,வாழ்த்து கூறினர் .

Wednesday, July 25, 2018

18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!

18Mlaகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! ஆகஸ்ட் முன்பாதியில் தீர்ப்பு!
18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும் சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே தகுதிநீக்கம் செய்தார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது.18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு மூன்றாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்ஏ-க்கள் தரப்பிலான வாதம் கடந்த 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், நேற்று சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார்.
புகார்களின்படி, விசாரணை நடத்தி தனது அதிகார வரம்புக்கு உட்பட்டே 18 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ததாகவும், இதில் எந்தவித விதிமீறலும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். அரசை கலைக்கும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளதாக குறிப்பிட்ட வழக்கறிஞர், இதனால் ஆளுநரிடம் 18 பேரும் மனு அளித்தது ஆட்சியைக் கலைக்க மட்டுமே என கருதப்படும் என்று தெரிவித்தார்.
ஆளுநரிடம் அளித்த புகார் தனிநபருக்கு எதிரானது இல்லை என்றும் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு எதிரானது என்றும் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதாடினார். ஆளுநரிடம் மனு அளித்ததை, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசின் மீதான ஆதரவை திரும்ப பெற்றதாகவே கருத முடியும் என்றும் அவர் வாதங்களை முன்வைத்தார். கட்சியில் வெளியில் இருந்து தாக்குதல் நடத்தும்போது கட்சியை விட்டு வெளியேறியதாகவே கருத முடியும் என சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ஆளுநரைச் சந்தித்ததை காரணம் காட்டியே 18 பேரை தகுதிநீக்கம் செய்திருப்பது தவறானது என நீதிபதி சுந்தர் தீர்ப்பில் கூறியிருப்பதற்கும் சபாநாயகர் தரப்பில் ஆஜரான அரிமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தார். சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. சபாநாயகர் முடிவின் மீது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. சபாநாயகர் முடிவில் உள்நோக்கம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்’ என வாதிட்டார்.


மேலும், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தால் மட்டுமே கட்சியில் இருந்து வெளியேறியதாக கருத தேவையில்லை. மாறாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் நடத்தை, செயல்பாடு, பேச்சு கூட கட்சியில் இருந்து தானாக வெளியேறியதாக கருத முடியும் எனவும் அரியமா சுந்தரம் தெளிவுபடுத்தினார்.


முதல்வர் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லை என ஆளுனரிடம் அளித்த கடிதத்தில் இருந்தே, 18 எம்.எல் ஏ.க்களும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகிறது. தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸுக்கு பதிலளிக்க 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க விதிகள் வகை செய்யும் போது, 21 நாட்கள் அவகாசம் வழங்கியதில் இருந்து, இயற்கை நீதி மீறப்படவில்லை என்பது தெளிவாகிறது என வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார்.


நீதிபதி சுந்தர், தன் தீர்ப்பில் சபாநாயகரின் உத்தரவு விபரீதமானது எனக் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் தலைவர் சபாநாயகர். நீதிபதிகளுக்கு சமமான அதிகாரம் சபாநாயகருக்கும் உள்ளது. அந்த வகையில் சபாநாயகரின் உத்தரவை நீதிபதி சுந்தர் விமர்சித்தது ஏற்க முடியாதது என வாதிட்டார்.

மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டுமென்று சபாநாயகர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 18எம்ஏக்கள் தரப்பில் சபாநாயகருக்கு அவகாசம் அளிப்பது குறித்து ஆட்சேபனை இருக்கிறதா என்று விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார். அன்றைய தினம் மீண்டும் கூடுதல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் சபாநாயகர் தரப்பு தனது வாதங்களை தொடர உள்ளது.

"அம்மா மக்கள் முன்னேற்ற கழக" துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்!

"அம்மா மக்கள் முன்னேற்ற கழக" துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்!


[gallery type="slideshow" ids="1343,1342,1341,1338"]

வருகிற 27/7/18 அன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த இராமநாதபுர மாவட்ட "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த "அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் #Ttv தினகரன் இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வருகை தருகிறார்.26/7/18 அன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் Ttv தினகரன் மதுரையின் பிரபல தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு 26 ந் தேதி மாலை சாலை மார்க்கமாக இராமநாதபுரம் செல்லவிருக்கிறார். முன்னதாக அவருக்கு வரவேற்பளிக்க "மதுரையிலிருந்து இராமநாதபுரம் வரை தினகரன் பயணிக்கும் பகுதிகளில் கழக நிர்வாகிகள் அளிக்கும் வரவேற்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் தினகரன்.

அதன் ஒரு பகுதியாக பரமக்குடி "அம்மா மக்கள் முன்னேற்றக் கழக " நகர நிர்வாகிகள் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் #Ttvதினகரனுக்கு உற்சாக வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது!இது குறித்து நம்மிடம் பேசிய "பரமக்குடி நகர அம்மா பேரவை இணைத் தலைவர் D.பாபு தர்மலிங்கம் அவர்கள் கூறியதாவது,

இராமநாதபுரம் பேக்கரும்பு செல்லும் வழியில் பரமக்குடிக்கு வருகை தரும் எங்கள் கழக துணைப் பொதுச்செயலாளரை வரவேற்க்கும் விதமாக எங்களது அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் I.K.சுப்பிரமணியன் அவர்களின் ஏற்பாட்டின்படி நகர அம்மா பேரவை செயலாளர் G.K.கலைவாணன் அவர்களின் மேற்பார்வையில் பரமக்குடி நகர் கழகம் சார்பாக 150 க்கும் மேற்பட்ட கட் அவ்ட் வரவேற்பு பதாகைகள் வைக்கட்டுள்ளது, கிட்டத்தட்ட 50 கார்கள்,150 ஆட்டோக்கள், 200 மோட்டார்களின் அணிவகுப்புடன் "துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க திட்டமிட்டுள்ளோம்.

பரமக்குடி நகர கிழக்குப் பகுதி கழகம் சார்பாக வாண வேடிக்கைகளுடன், தாரைதப்பட்டை முழக்கங்களுடன், பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பளிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் 1000 ம் பேருக்கு அன்னதானம் அளிக்கவும் நகர கழகம் சார்பில் திட்டமிட்டுள்ளதாக "அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர அம்மா பேரவை இணைத்தலைவர் D.பாபு தர்மலிங்கம் நம்மிடம் தெரிவித்தார்...

பரமக்குடி நகராட்சியின் மெத்தனப் போக்கு? கண்டு கொள்வார்களா அதிகாரிகள்!

பரமக்குடி நகராட்சியின் மெத்தனப் போக்கு? கண்டு கொள்வார்களா அதிகாரிகள்!
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் பல்வேறு இன்னல்களை சாமானிய மக்களும், வியாபாரிகளும் எதிர்க் கொண்டு வருகின்றனர்.

அதற்கு முன்னுதாரணமாக பரமக்குடி நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கை குறிப்பிடலாம்!மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரமக்குடி நகரம். பல்வேறு வியாபார நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் நிறைந்துள்ள இந்த பரமக்குடி நகரத்தில் மிக முக்கியமான சாலையாக கருதப்படும் மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் ஓடைகளைத் தூர் வாரி அந்தக் கழிவுகளை மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மழைபோல குவித்து வைத்துச் செல்லும் நகராட்சி நிர்வாகம் ,அந்தக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த முயற்சிப்பதேயில்லை!அதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறும் விளக்கம் "கழிவு நீர் ஓடைகளைத் தூர் வாரும் போது அந்தக் கழிவுகளை வண்டிகளில் எடுத்துச் சென்று நகருக்கு ஒதுக்குப்புற பகுதிகளில் அமைந்துள்ள குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு சென்று அப்புறப்படூத்தவே செய்கிறோம். ஆனால் கழிவுகள் ஈரத்தன்மையுடன் இருக்கும் போது அவற்றை நகராட்சி வாகனங்கள் மூலம் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக கொண்டு செல்லும் போது கழிவுகளில் உள்ள நீரானது சாலைப் பகுதிளில் வடிந்து அதன் மூலம் பொது மக்களுக்கு தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்தி விடுகிறது என்பதால் , தூர்வாரப்பட்ட கழிவுகளை நாலைந்து நாட்களுக்கு காய வைத்து, ஈரத்தன்மை குறைந்தவுடன் அப்புறப்படுத்துவதே தற்போதைய நடைமுறையில் உள்ளது, என்ற விளக்கத்தை நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தப்படங்கள் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சந்தைப்பேட்டை அருகே அமைந்துள்ள ஷாலோம் ITI எதிரில் அம்மா அல்லுக்கூடம் செல்லும் தெருவை மறைத்து கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டது.......

ஆனால் பொதுமக்களோ, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருக்களில் மக்கள் நடக்கவே முடியாதபடி சாக்கடைக் கழிவுகளை தூர்வாரி கொட்டிச் செல்லும் ஊழியர்கள் ஒருவாரம், 10 நாள் வரை அப்புறப்படுத்துவதேயில்லை, இந்த நேரங்களில் தீடீரென மழை பெய்துவிட்டால் மக்களின் பாடு திண்டாட்டம் தான்! கழிவுகளின் நாற்றத்தால் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாக வேண்டும், மற்றுமொரு விஷயம் தூர்வாரப்பட்ட கழிவுகள் மழைத்தண்ணீருடன் கலந்து மீண்டும் கழிவு நீரோடைகளில் அடைப்பபை ஏற்படுத்தி தெருக்களை சாக்கடை நீரால் நிரம்பி நாறத்துவங்கி விடுகிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் சாக்கடைக் கழிவுகளை தூர்வாரும் போதே அப்புறப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று பரமக்குடி பகுதிவாழ் மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டு கொள்வார்களா நகராட்சி அதிகாரிகள்? நடவடிக்கை எடுப்பார்களா?

காத்திருப்போம்.........

Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்


துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளதாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியது நினைவிருக்கும். அந்த மனுவில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியலுக்கும் வருமான வரித் துறையில் செலுத்தியுள்ள சொத்துகளின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் பெயரிலும் அவரது சகோதரர், குடும்பத்தினர் பெயரிலும் கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன. இவை அனைத்தையும் வருமான வரித் துறைக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு ஆகியோர் பல நிறுவனங்களில் இயக்குநர்களாக இருந்துள்ளனர். இவர்களது பெயரில் ரூ.200 கோடிக்கு முதலீடு செய்துள்ளதாக அறிகிறேன். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் சொத்துகள் வாங்கியுள்ளனர். தேனி மாவட்டத்தில் 99 ஏக்கர் இடத்தை அரசிடமிருந்து ஒரு நிறுவனம் 99 வருடக் குத்தகைக்கு எடுத்திருந்தது. குத்தகைக் காலம் 2012ஆம் ஆண்டு முடிந்த பிறகு சந்தை விலையைவிடக் குறைந்த விலைக்கு அதைப் பினாமி மூலம் வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு தோராயமாக ரூ.140 கோடி ஆகும். இதேபோல, மாந்தோப்பு உள்பட பல்வேறு விளை நிலங்களையும் வாங்கியுள்ளனர்.

மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டியுடன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரடித் தொடர்பு உள்ளது. சென்னையிலும் பல நிறுவனங்களில் இவரது குடும்ப உறுப்பினர்கள் முதலீடு செய்துள்ளதோடு, பங்குதாரர்களாகவும் உள்ளனர். இவை அனைத்தையும் முறையாக வருமான வரித் துறைக்கு அவர் கணக்குக் காட்டவில்லை. எனவே வருமான வரித் துறை சட்டம், அந்நியச் செலாவணிச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், பினாமி சட்டம், ஆகிய சட்டங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டிருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். மனுவில், வருமானம் குறித்துத் தவறான தகவல்களை வேட்புமனுவில் பன்னீர்செல்வம் கொடுத்திருப்பதாகவும், சேகர் ரெட்டியின் டைரியில் 4 கோடி ரூபாய் பணம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் அளித்து 3 மாதங்களான நிலையில், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, என நீதிபதி கேள்வி எழுப்பினார். வருமான வரிச் சோதனையின்போது, சேகர் ரெட்டியிடமிருந்து சிக்கிய டைரியில் பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ’சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது’ எனவும் கேள்வி எழுப்பினார். அதாவது எந்த நேரத்திலும் பன்னீர்செல்வத்தின் ஊழல் புகாரை சிபிஐக்கு மாற்றலாம் என்பதுதான் நிலைமை.இந்தச் சூழ்நிலையில்தான் நேற்று இரவு திடீரென டெல்லி கிளம்பி வந்தார் பன்னீர். டெல்லி பயணத்துக்கு பன்னீர் சில காரணங்களைச் சொன்னாலும், நிஜமான காரணம் பிஜேபி தலைவர்களைச் சந்தித்து, தன் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கை வைப்பதற்காகத்தான் என்கிறார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசுவதற்காகத்தான் இன்று எம்.பி. மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்கு வந்தார் பன்னீர்.

பன்னீர் வந்திருக்கும் தகவல் நிர்மலா சீதாராமனுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. 45 நிமிடங்கள் அவர்கள் அனைவருமே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் பிறகு மைத்ரேயன் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார் அங்கிருந்த செக்யூரிட்டி. எல்லோரும் எழுந்து நிர்மலா அறைக்குள் நுழைய முயன்றபோது... மைத்ரேயனைத் தவிர எல்லோரும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ‘உங்க யாருக்கும் அனுமதி இல்லை. அவரு மட்டும் போகட்டும்..’ என்று பன்னீர் உட்பட எல்லோரையும் திருப்பி அனுப்பிவிட்டனர். பன்னீர் எவ்வளவோ பேசியும் அவரை அனுமதிக்காமல் திருப்பி வெளியே அனுப்பிவிட்டனர். அங்கிருந்து வெளியே வந்த பன்னீர், தமிழ்நாடு இல்லத்துக்குக்கூடப் போகாமல் நேராக டெல்லி விமான நிலையத்துக்குக் கிளம்பிவிட்டார்.

மைத்ரேயன் மட்டும் நிர்மலா அறைக்குள் போயிருக்கிறார். ‘வெளியில் துணை முதல்வர் இருக்கிறார்...’ என்று அவர் சொல்ல.. ‘நான் அவரை வரச் சொல்லவே இல்லையே... அவரு எதுக்கு வந்திருக்காருன்னு எனக்குத் தெரியும்.

அவரை இப்போ பார்க்க வேண்டாம் என்பது எங்க தலைமையின் உத்தரவு.’ என்று பளிச்செனச் சொல்லிவிட்டாராம். அதற்கு மேல் எதுவும் பேசாமல் போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டாராம் மைத்ரேயன். மத்திய உளவுத் துறை ஓ.பன்னீர்செல்வம் சிபிஐ வசம் வழக்கு போய்விடக் கூடாது என்பதற்காக உதவி கேட்டுத்தான் டெல்லி வருகிறார் என்ற தகவலை முன்கூட்டியே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பிவிட்டது.

ராஜ்நாத்திடமிருந்து நிர்மலாவுக்கு இந்தத் தகவல் போன காரணத்தால்தான் அவர் சந்திக்க மறுப்புத் தெரிவித்திருக்கிறார். அதோடு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் பன்னீர்செல்வத்துக்கு உள்ள தொடர்பும் ராஜ்நாத் சிங்கிடம் முழு ஆவணங்களாக இருக்கின்றதாம். இதனால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிஜேபிக்கு ஆதரவாக வாக்களித்தும்கூட, எடப்பாடி மற்றும் பன்னீர் மீதுள்ள கோபம் பிஜேபிக்கு இன்னும் கொஞ்சமும் குறையவில்லை என்பது பன்னீரை அவமானப்படுத்தியதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.”

👉மேற்கண்ட செய்தி மின்னம்பலம்.காம் இணைய தளத்தில் வெளியானது.

பாஜக வின் பன்னீர் புறக்கணிப்புக்கான காரணம் என்ன? நாளைய தினம்......

OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!


துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என் சகோதரரை, மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து, நன்றி தெரிவிக்க வந்தேன். இது, என் தனிப்பட்ட பயணம். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின், சவுத் பிளாக்கில் உள்ள, ராணுவ அமைச்சகத்துக்கு, துணை முதல்வரின் கார் விரைந்தது. அவருடன், மைத்ரேயன் உள்ளிட்டவர்களும் சென்றனர். சில நிமிடங்களில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலக, 'டிவிட்டர்' பக்கத்தில், 'ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயனுக்கு தான், சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பன்னீர்செல்வத்தை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை' என, செய்தி வெளியானது.

இதுகுறித்து, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் தரப்பினர் கூறியதாவது: ஒரு மாதத்திற்கு முன், தம்பியை அழைத்து வர, 'ஏர் ஆம்புலன்ஸ்' உதவியை பன்னீர் கோரினார். அதற்கு, உரிய கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் தான், அமைச்சரை சந்திக்க, முதலில் அனுமதி கோரினார். அவரது மொபைல் போனில், பன்னீர்செல்வமும் பேசினார். அப்போது, மைத்ரேயனுடன் பன்னீரும் வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அமைச்சர், 'வரட்டும்' என்றார்.

இதையடுத்து, 'துணை முதல்வர் வருவது ரகசியமாக இருக்கட்டும். சந்திப்பின் போது, புகைப்படம் எடுக்க வேண்டாம். சந்திப்புக்குப் பின், படத்தை வேண்டுமானால் வெளியிடலாம்' என, மைத்ரேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் ,ராணுவ அமைச்சர் சம்மதித்தார்.எல்லாமே ரகசியமாக இருக்கட்டும் எனக்கூறி விட்டு, ராணுவ அமைச்சரை சந்திப்பதற்கு முன், அனைத்து விபரங்களையும், பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து விட்டார். அமைச்சரை சந்திக்காமலேயே, 'சந்தித்து நன்றி தெரிவித்தேன்' என்றார்.

எனவே, அவரை சந்திப்பதை, ராணுவ அமைச்சர் தவிர்த்து விட்டார். மைத்ரேயனை மட்டும் சந்தித்து பேசினார். அவரிடம், 'உங்கள் விவகாரங்களில், என் பெயரை, ஏன் தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள்' என, அமைச்சர் கடிந்து கொண்டார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தரப்பினர் கூறினர்.

டெல்லிச்சென்ற ஓபிஎஸ்ஸை சந்திக்க நிர்மலா சீத்தாராமன் மறுத்ததால் ஏமாற்றத்துடன் அவர் சென்னை திரும்பினார். ஏன் உங்களை சந்திக்க அனுமதியில்லை என்ற கேள்விக்கு அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிவிட்டுச் சென்றார்.

துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று திடீரென டெல்லி சென்றார். அங்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. டெல்லி சென்று நிர்மலா சீத்தாராமனை ஓபிஎஸ் எதற்காக சந்திக்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

அரசியல் ரீதியான சந்திப்பு எதுவும் இல்லாத நிலையில் எதற்காக ஓபிஎஸ் செல்கிறார் என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். ஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ் பாஜக சொற்படித்தான் செயல்படுகிறார் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. டிடிவி தினகரனை ஓரங்கட்டி ஓபிஎஸ்ஸை இணைத்ததில் டெல்லி மேலிடம் அதிக முயற்சி எடுத்ததாக அப்போது கருத்து முன்வைக்கப்பட்டது.

என்னதான் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைந்தாலும் எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி என இரு அணிகள் எப்போதும் தனியாகவே இயங்கிவந்தது. ஓபிஎஸ் மட்டுமே ஆதாயம் அடைந்த இந்த இணைப்பில் அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, மனோஜ் பாண்டியன், பி.எச்.பாண்டியன் என ஒருவரும் பயன்பெறவில்லை.

இதில் நத்தம் விஸ்வநாதன் போன்ற சிலர் ஒதுங்கிப் போய்விட்டனர். சிலர் வேறு எங்கும் போக முடியாது என்பதால் அமைதியாக உள்ளனர். வழிகாட்டுக்குழு என்று அமைக்கப்பட்டதும் செயல்பாட்டில் இல்லை. அதேபோல் கட்சி அணிக்குள் எடப்பாடி ஆதரவாளர்கள் ஓபிஎஸ்ஸை சம்பிரதாயபூர்வமாகவே ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆட்சி என்ற ஒரு கயிறும், டிடிவி எதிர்ப்பும் அதிமுகவுக்குள் ஒற்றுமை உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் நாளுக்கு நாள் பனிப்போர் அதிகரித்து வருகிறது.

இதன் எதிரொலியே ஓபிஎஸ்ஸின் டெல்லி பயணம் என்று அதிமுக தரப்பில் கூறுகின்றனர். டெல்லியில் நிர்மலா சீத்தாராமன் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவையும் சந்திப்பதாக ஓபிஎஸ்ஸின் எண்ணம் என்று டெல்லிவட்டார தகவல் கூறுகிறது. ஆனால் ஓபிஎஸ் டெல்லி சென்று இறங்கும் முன்னர் அவர் ஏன் டெல்லி செல்கிறார் என்று இங்கே எடப்பாடி பேட்டி அளித்தார்.வண்டலூரில் புதிதாக பிறந்துள்ள சிங்ககுட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ் டெல்லி விசிட் பற்றி கேள்விக்கு, ஓ.பி.எஸ் தம்பி யின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரை மதுரையிலிருந்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ராணுவ ஆம்புலன்ஸ் விமானத்தை நிர்மலா சீத்தாராமன் அனுப்பி வைத்தார்.

அதற்கு நன்றி தெரிவிக்கவே ஓ.பி.எஸ் டெல்லி சென்றுள்ளார் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த நேரம் ஓபிஎஸ் மற்றும் மைத்ரேயன் என நிர்மலா சீத்தாராமனின் அலுவலகத்தில் இருந்தனர். உடனடியாக நிர்மலா சீத்தாராமன் அலுவலகம் சார்பில் டிவிட்டரில் ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி இல்லை மைத்ரேயனை சந்திக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என்று பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து ஓபிஎஸ் உடனடியாக வெளியே கிளம்பி வந்துவிட்டார். நிர்மலா சீத்தாராமன் அலுவலகத்துக்கு செல்லும் முன் பேட்டி அளித்த ஓபிஎஸ் தனது தம்பிக்கு சிகிச்சைக்கு விமானம் அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்க செல்கிறேன் என்று தெரிவித்தார். வெளியே வந்த ஓபிஎஸ் அமித்ஷாவையும் சந்திக்கவில்லை, உடனடியாக சென்னை திரும்பினார். ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய ஓபிஎஸ் விமான நிலையத்தில் வழக்கமான சிரிப்புடன் கேள்வியை எதிர்க்கொண்டார்.

நிர்மலா சீத்தாராமனை சந்திக்கச்சென்று அவர் மைத்ரேயனுக்கு மட்டுமே அனுமதி என்று கூறியது பற்றி கேட்டதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா ஏற்கனவே கூறியுள்ளார் என்று தெரிவித்துவிட்டுச் சென்றார்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஒருவரை கேட்டபோது ஓபிஎஸ் தம்பி எந்த அரசியல் சார்ந்தவரோ, அரசின் பொறுப்பிலோ இல்லாத ஒருவர், அவருக்காக ராணுவ விமானத்தை அனுப்புவதே சர்ச்சைக்குரிய ஒன்று, இதில் நன்றி சொல்வது சாதாரணமாக தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும். இதற்காக ஓபிஎஸ் டெல்லிக்கு விமானத்தில் சென்று அங்கு பேட்டியும் கொடுத்துவிட்டா செல்வார் என்று பதில் கேள்வி எழுப்பினார்.

எப்போதும் எந்த பிரச்சினையிலும் அமைதி தவழும் முகத்துடன் இக்கட்டான கேள்விகளை எதிர்க்கொண்டு சமாளிக்கும் திறன் பெற்ற ஓபிஎஸ் இன்று தன்னை மீறி அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியதை அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார் என்பதையே காட்டுகிறது.தனது டெல்லி பயணம் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்திய நிலையில். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவுள்ளதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம் இது அரசியல் பயணம் அல்ல எனத் தானாகவே விளக்கமளித்தார்.ஆனால், நிர்மலா சீதாராமன் அலுவலகமோ ஓபிஎஸ் நிர்மலா சீதாராமனை சந்திக்கவே இல்லை, மைத்ரேயனுக்கு மட்டும்தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளது. மறைமுகமாக ஓபிஎஸ்-ஸுக்கு அனுமதியில்லை என்ற ரீதியில் அமைந்துள்ள இந்த ட்வீட் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

"எனது டெல்லி பயணம் அரசியல் பயணம் அல்ல. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளேன். சகோதரர் சிகிச்சைக்காக விமானம் அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்க வந்தேன். கூட்டணி விஷயத்தில் தமிழக மக்களின் நலன் கருதி முடிவு எடுக்கப்படும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

எதற்காக இந்த விளக்கம் என்கிறீர்களா? துணை முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்றதிலிருந்து அவரது டெல்லி பயணத்தின் பின்னணி என்ன? அதிமுகவில் விரிசலா? பாஜக அதிமுகவில் மோதலா? மீண்டும் தர்மயுத்தமா? என்ற பல்வேறு தொணிகளில் செய்திகள் உலா வரத் தொடங்கின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகவே ஓபிஎஸ் இதைக் கூறினார்.ஆனால், அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பக்கத்தில் "அதிமுக எம்.பி. மைத்ரேயனுக்குதான் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்பு அமைச்சரை சந்திக்கவில்லை" என ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், சமூக வலைதளங்களில் கிண்டல்கள் உருவாகி வருகின்றன. அழையா விருந்தாளி என்றெல்லாம் கிண்டல்கள் பதிவாகின. இத்தகைய சூழலில் ஓபிஎஸ், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்திப்பாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

டெல்லி சென்ற ஓபிஎஸ்.. நான் வருகிறேன் என்று சொல்லி சென்றிருக்கலாமே?? என்றெல்லாம் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். நினைத்த நேரத்தில் எல்லாம் பிரதமரை சந்தித்த ஓபிஎஸ் இன்று பாதுகாப்பு அமைச்சரைக்கூட சந்திக்க முடியவில்லை என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக, டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.

எதற்காக ஓபிஎஸ் டெல்லி சென்றார்? ஓபிஎஸ்-ஸின் இந்த திடீர் பயணம் அரசியல் பயணமா இல்லையா? தம்பிதுரை ஏன் ஓபிஎஸ்-ஸை சந்தித்தார்? நிர்மலா ஏன் ஓபிஎஸ்ஸை சந்திக்கவில்லை? என்பதை அடுத்தடுத்த நகர்வுகளை வைத்தே கணிக்க முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பன்னீரின் திடீர்ப் பயணத்தின் பின்னனி? தெரிந்துகொள்ள இங்கே தொடவும்

இந்த செய்தியின் தொடர்ச்சி, பன்னீர் குறித்து பாஜக வின் தற்போதைய பார்வை உள்பட பல்வேறு விஷயங்கள் நாளைய தினம்.......

Tuesday, July 24, 2018

உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!

உச்சக்கட்ட பரபரப்பில் உயர்நீதிமன்றம்? தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!


18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், "அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது.

18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது.

அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் தரப்பு 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் வழக்கறிஞர் ராமன் வாதாடினார். அப்போது,

"எங்களது முதல் அதிருப்தி ஓ.பன்னீர்செல்வம் மீது தான். முதல்வர் மீது இல்லை.

கொறடாவின் உத்தரவை மீறி ஆளும் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னது இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு. முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது எங்களுக்கு இரண்டாவது பட்சம் தான்.

தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறோம் என்று முதல்வர் சொல்லவில்லை. சபாநாயகர் தான் அதனை கூறுகிறார். திமுகவுடன் கைகோர்த்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்கிறோம் என்றும் சபாநாயகர் தான் கூறினார். ஆளுநரை நாங்கள் சந்தித்த அதே தினம் திமுகவும் ஆளுநரை சந்தித்தற்கு நாங்கள் பொறுப்பாகாது" என வாதங்களை முன்வைத்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார்.வழக்கு பின்னணி:

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக்கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.

இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் கடந்த 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன், அரசு சிறப்பு வழக்குரைஞர் திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர். மேலும் இந்த வழக்கில் இரு தரப்பிலும் தில்லியிலிருந்து மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் தாக்கல் செய்ய உள்ளீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில் மேலும் சில ஆவணங்களைக் கூடுதலாக தாக்கல் செய்யப் போவதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி, இரண்டு தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட உள்ளனர்.

தொடர்ந்து 5 நாள்கள்... எனவே, கூடுதல் விவரங்கள் குறித்து மட்டும் வாதிட்டால் போதுமானதாக இருக்கும் . இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை (ஜூலை 23) முதல் வெள்ளிக்கிழமை ( ஜூலை 27) வரை தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் என உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.-க்களின் தகுதி நீக்க வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

தாக்கல் செய்யாத ஆவணங்கள் அடிப்படையில் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணா முன்பு 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணா முன்பு நேற்று (ஜூலை 23) காலை 10.30 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் ஏற்கனவே மாறுபட்ட தீர்ப்பை மட்டுமே வழங்கியுள்ளது. அந்த மாறுபட்ட தீர்ப்பில் மட்டுமே மூன்றாவது நீதிபதி முடிவெடுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் உள்ள சில விஷயங்களில் இரு நீதிபதிகளுக்கும் ஒன்றுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதில் மூன்றாவது நீதிபதி எந்த முடிவும் எடுக்கக் கூடாது. தீர்ப்பில் மட்டுமே முடிவெடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி தனது வாதத்தை தொடங்கினார்.

சபாநாயகரின் உத்தரவு என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது, இயற்கை நீதிக்கு எதிரானது, இது உள்நோக்கம் கொண்டது என்றும் சபாநாயகரின் உத்தரவை நீதித் துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ராமன், “பிரச்னை தொடர்பாக உட்கட்சியை அணுகவில்லை என்று முதல்வர் தரப்பிலிருந்து சபாநாயகரிடம் பதிலளிக்கப்பட்டது. இதன் நகலை எங்கள் தரப்புக்கு வழங்கியிருந்தால் பதிலளித்திருப்போம். சபாநாயகரிடம் தாக்கல் செய்யாத ஆவணங்கள் அடிப்படையில் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜக்கையனுக்கும், 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் வெவ்வேறு அளவுகோளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டாலினோடு கூட்டு சேர்ந்து அரசுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எவ்வித ஆதாரங்களும் இல்லை” என்றும் தனது வாதத்தில் கூறியுள்ளார்.

நீதிபதி சத்ய நாராயணா முன்பு இன்று நடைபெறவுள்ள விசாரணையில் 18எம்எல்ஏக்களுக்கு எதிரான சில முக்கிய வீடியோ ஆதாரங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்து வாதிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.