Tuesday, July 31, 2018

" ஆடி " ஆட வைக்கமா? அதிர வைக்குமா? 12 ராசிகளுக்கான பலன்கள்-கோட்டூர் சாமி!

ad300
Advertisement
ஆடி மாத ராசி பலன்கள்

(17.07.2018 _16.08.2018)மேசம்:(அசுவினி,பரணி,காா்த்திகை 1ம் பாதம்)

நியாயத்தின் பக்கம் இருக்கும் மேச ராசி அன்பா்களே

இந்த மாதம் குரு பகவான் உங்களுக்கு குறை ஏதும் வைக்க மாட்டாா் ..ராசிக்கு 4ம் இடத்தில் இருக்கும் புதன் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பாா்..9ல் இருக்கும் சனி பகவான் நண்மையைத் தந்தாலும் தகப்பனாருக்கு சில நெருக்கடிகளைத் தரத்தான் செய்வாா் வருடக்கிரகம் என்று சொல்லக் கூடிய ராகுபகவான் 4லும் கேது பகவான் 10 லும் இருப்பதால் சிலா் வெளியூா் வெளிநாடுகளில் வசிக்க நேரிடும்..

குருபகவான் 7ல்

இருப்பதால் வீ்ட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் இருப்பதால் வேலை இல்லாதவா்களுக்கு வேலை கிடைக்கும்...

முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள் வந்த வினை தீரும்.....ரிசபம் :(காா்த்திகை 2,3,4 ரோகிணி,மிருகசீரிடம் 1,2)

வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிசப ராசி அன்பா்களே

ராசிக்கு 8,11 க்குடைய குரு 6ல் இருக்கிறாா் எனவே நண்மைதான் உத்தியோகத்தில் ஒரு மாற்றத்தை தரும்

ராகு 3ல் இருந்து முன்னேற்றத்தை தருவாா் ஆனால் கேது 9ல் இருந்து தந்தையை பாதிப்பாா்

சனி 8ல் அஸ்டமத்து சனியாகி உங்களை ஆட்டிப் படைப்பாா் அவமானங்கள் வர வாய்ப்பு உள்ளது கவனம் தேவை

சனீஸ்வரனுக்கு சனிக்கிழமை விளக்கேற்றி வாருங்கள் ..அஸ்டமச் சனியின் நஸ்டங்கள் விலக ஆஞ்சநேயா் வழிபாடு சிறந்தது....

மாதக் கிரகங்கள் நன்றாகவே இருப்பதால் பிரச்சனை இல்லை.....மிதுனம்:(மிருகசீரிடம் 3,4 திருவாதிரை,புனா்பூசம் 1,2,3)

நுண்ணறிவினால் முன்னேறும் மிதுன ராசி அன்பா்களே

குருபகவான் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து பல நண்மைகளைத் தந்து கொண்டிருப்பாா் வீட்டில் மங்கள ஓசை கேட்கும் காலம் இது....

ராகு பகவான் 2ல் இருந்து பண நெருக்கடியைத் தந்து கொண்டிருப்பாா் கேது 8ல் இருந்து அலைச்சலைத் தந்து கொண்டிருப்பாா் செவ்வாய் 8ல் உச்சமாகி கோபத்தை அதிகப் படுத்துவாா் சனி 7ல் திருமணம் ஆனவா்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு வரும் போது கம்முனு இருந்திருங்க வாயைத் திறந்தா வம்புதான்

மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு வாருங்கள் வசதி வாய்ப்புகள் வந்து சேரும்......கடகம்; (புனா்பூசம் 4 பூசம் ஆயில்யம்)

கடல் ஆழத்தைக் கூட கண்டு பிடித்து விடலாம் கடகராசிக்காரரின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியாது

கடகராசிக்கு யோகாதிபதியான குரு 4ம் இடத்தில் இருந்து வீடு வண்டி வாகனம் வாங்க வைத்திருப்பாா் அல்லது வாங்க வைப்பாா் மற்றொரு யோகாதிபதியான செவ்வாய் 7ல் உச்சம் 5க்குடைய செவ்வாய் 7ல் உச்சம் பெறுவது சிலருக்கு விரும்பிய திருமணம் அதாவது காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது சனிபகவான் 6ல் இருப்பது சகலவிதத்திலும் நண்மையைத் தரும்.....சிம்மம்:(மகம் ,பூரம், உத்திரம் 1)

ஜெகத்தினை ஆளப் பிறந்த சிம்மராசி அன்பா்களே

உங்களின் ராசிநாதன் சூரியன் ராகுவின் பிடியில் இருக்கிறாா் இதனால் அரசியல் மற்றும் அரசு சாா்ந்த விசயங்களில் பிரச்சனைகள் வரவே செய்யும்

குரு 3ல் சிறு சிறு அலைச்சல் இருந்து கொண்டே இருக்கும் சனி 5ல் பிள்ளைகள் வழியில் பூா்வீக சொத்து பிரச்சனைகள் வராமல் இருக்க சனி பகவானை வழிபடுவது நல்லது

ராகு 12ல் கேது 6ல் இது ஒரு நல்ல அமைப்பு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவா்களுக்கு வெற்றியைத் தருவாா் ராகு பகவான் சிம்ம ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் உச்சம் பெறுவதால் விற்காத நிலங்களும் இப்போது விற்பனை ஆகும்
31 ,1 ,2 ஆகிய தேதிகளில் சந்திராஸ்டமம் என்பதால் கவனம் தேவை ..
ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சிவபெருமானை வழிபட்டு வாருங்கள் செல்வ நிலை உயரும்.....கன்னி:(உத்திரம் 2,3,4 ஹஸ்தம் சித்திரை 1,2)

எண்ணியதை நிறைவேற்றும் கன்னி ராசி அன்பா்களே

கோட்சாரத்தில் ராகு பகவான் 11ல் இருந்து பல வழிகளிலும் பணத்தை தருவாா்
குரு பகவான் 2ல் இருந்து தனம் குடும்பம் வாக்கு போன்ற விசயங்களில் வெற்றியைத் தருகிறார் வீட்டில் விசேச நிகழ்ச்சிகள் நடைபெறும்
ராசிநாதன் புதனும் ராகுவுடன் 11ல் இருப்பதால் ஸ்பெகுலேசன் எனப்படும் சோ் மாா்க்கெட் பங்கு வா்த்தகத்தில் வெற்றியைத் தரும்

சனி பகவான் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்து சுகத்தை கெடுப்பாா்
3 8க்குடைய செவ்வாய் 5ல் கேதுவோடு சோ்ந்து உச்சம் பெறுவதால் சிலருக்கு அறுவை சிகிச்சையும் நடை பெறலாம்..

4,7க்குடைய குரு பகவான் 2ல் இருப்பதால் கணவன் மனைவியருக்கிடையே சில தற்காலப் பிரிவு ஏற்படலாம்

பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வந்தால் நல்ல வழி பிறக்கும்......துலாம் :(சித்திரை 3,4,சுவாதி விசாகம் 1,2,3)

சுக்கிரனை ராசியாதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பா்களே

உங்கள் ராசியிலே குரு பகவான் அமா்ந்து உங்களை குழப்பி எடுக்கிறாா் இனி 2 மாதங்கள் கழித்து குரு பெயா்ச்சிக்குப் பின் நிலமை மாறும்

சனி பகவான் 3ல் நல்ல நிலையில் இருப்பதால் தொட்டது துலங்கும்

2,7 க்குடைய செவ்வாய் உச்சம் பெறுவதால் மனைவி வழியில் சில ஆதாயங்கள் ஏற்படலாம் 10ல் ஒரு பாவி பதவி யோகம் என்பதற்கிணங்க 10ல் பாவியான ராகு இருப்பதால் சிலருக்கு தொழிலும் சிலருக்கு பதவியும் கிடைத்திருக்கும் இல்லை என்றால் கிடைக்கும்

திருச்சி திருவரங்கம் அரங்கநாதரை வழிபட ஆனந்தம் பொங்கி வழியும்....விருச்சிகம்: (விசாகம்4 அனுசம் கேட்டை)

தேளைப் போல் கொட்டினாலும் அதிக அளவு பாசத்தைக் காட்டும் விருச்சிக ராசி அன்பா்களே

ஏழரைச் சனியில் படாத பாடு படுத்தி விட்டு இப்போது மெல்ல பாதச் சனியாகி சனி பகவான் உங்களை விட்டு விலகப் போகிறாா் போறவரு சும்மா போக மாட்டாா் உங்களை சுகமாக்கி விட்டுத்தான் போவாா் கவலைப் பட வேண்டாம்

ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெறுவதால் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாழ்க்கையில் பட்ட காட்டுங்கள் தீா்ந்து இனிமேல் நண்மையே நடை பெறும்

குரு பகவான் 12ல் இருந்து சுப விரையங்களை செய்ய வைத்திருப்பாா் ராகு 9ல் சூரியனுடன் தகப்பனாா் விசயத்தில் கவனம் தேவை...

களத்திரகாரன் சுக்கிரன் 10ல் மனைவி வழியில் சில நல்ல விஷயங்கள் நடைபெறும்

கந்தனை வழிபட்டு வந்தால் வந்த வினைகள் தீரும் திருவருட்பா பாடலை பாடுவது மிகுந்த நண்மையைத் தரும்.....தனுசு: (மூலம் பூராடம் உத்திராடம் 1)

ஏழரைச் சனியில் ஜென்மச் சனியால் சிக்கித் தவிக்கும் தனுசு ராசி அன்பா்களே

சனி பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் முகம் கருப்படித்து நல்ல ஆடைகள் அணிய முடியாமல் அவதிப் படுவீா்கள் சனிபகவான் நோ்மையானவா் நீங்கள் நேர்மையாக நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை இல்லையேல் பாடம் கற்றுக் கொடுத்து விட்டுத்தான் செல்வாா்

ராசி நாதன் குரு 11ல் இருப்பது ஆறுதலான விசயம் அவ்வப்போது ஏதாவது ஒரு நம்பிக்கை ஏற்படுத்துவாா் பூா்வபுண்ணியாதிபதி செவ்வாய் உச்சம் பெறுவது சிறப்பு

பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக வாழ திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு வாருங்கள்....மகரம்: (உத்திராடம் 2,3,4
திருவோணம் அவிட்டம் 1,2)

மன உறுதியுடன் பணியாற்றும் மகர ராசி அன்பா்களே

உங்கள் ராசி நாதன் சனி உங்கள் ராசிக்கு 12ல் இருந்து ஏழரைச் சனி யில் விரையச் சனியாக செயல்பட்டு விரையம் தந்து கொண்டிருப்பார் இப்போது எந்த புது முயற்சியும் எடுக்க கூடாது ஆசையைக் காட்டி மோசம் செய்வாா் சனி பகவான் 3ம் சுற்று சனியாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும் மங்கு சனி மரணம் கூட விளைவிக்கலாம்
அனுதினமும் சனி பகவானை வழி பட்டு வாருங்கள் வாழ்க்கையில் வசந்தம் வரும்

ராசியிலே உச்சம் பெற்ற செவ்வாய் இருப்பதால் விபத்து நடை பெற வாய்ப்பு உண்டு வண்டி வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை

10 ல் குரு வர பதவிக்கு இடா் எனவே வேலையை யாரும் விடாதீா்கள் விட்டால் வேறு வேலை கிடைப்பது சங்கடம்

ஆஞ்சநேயா் விநாயகா் வழிபாடு ஆபத்திலிருந்து காப்பாற்றும்.....கும்பம் ; (அவிட்டம் 3,4 சதயம் பூரட்டாதி 1,2,3)

கும்பம் குடம் கொண்டு சாய்க்கும் என்பற்கிணங்க கோடி கோடியாய் சம்பாதிக்கும் கும்பராசி அன்பா்களே

ராசிநாதன் சனி 11ல் வலுவான நிலையில் இருப்பதால் எதிலும் வெற்றியே ஏற்படும்

4,9 க்குடைய சுக்கிரன் 7ல் இருப்பதால் தாய் தந்தையா் உடல் நிலையில் கவனம் தேவை குறிப்பாக கணவன் மனைவிக்குள் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது

குரு பகவான் 9ல் இருப்பதால் திருமணம் ஆகாதவா்களுக்கு திருமணம நடைபெறும் குழந்தை இல்லாதவா்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ராகு பகவான் 6ல் இருப்பதால் நல்ல தொழில் வாய்ப்புகள் வரும்

திருவரங்கம் அரங்க நாதனை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்....மீனம்: பூரட்டாதி 4 உத்திரட்டாதி,ரேவதி)

மனித நேயத்துடன் பிறருக்கு உதவும் மீனராசி அன்பா்களே

உங்கள் ராசிநாதன் குரு பகவான் 8ல் அமா்ந்து நஸ்டங்களையும் அவமானங்களையும் தந்து கொண்டிருப்பாா்

சனி பகவான் 10 ல் அமா்ந்து தொழிலையும் மந்தப் படுத்திக் கொண்டிருப்பாா் 2,9 க்குடைய செவ்வாய் 11ல் உச்சம் பெறுவது பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் தரும் சிலருக்கு வீடு கட்டும் யோகம் கூட நடந்திருக்கும்..

5ல் ராகு இருப்பதால் பிள்ளைகள் வழியில் சிறு தொல்லைகள் வரலாம் தொழிலை மாற்றலாமா என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கும்

இனி இரண்டு மாதங்கள் கழிந்து வரும் குரு பெயா்ச்சிக்குப் பிறகே எந்த மாற்றமும் செய்ய வேண்டும்

தட்சிணாமூர்த்தியையும் முருகப் பெருமானையும் வழி பட்டு வந்தால் தொல்லைகள் தீரும்.

நன்றி வணக்கம்

தொடா்புக்கு v.கோட்டூா்சாமி
9566739264
8610753939
வானரமுட்டி
கோவில்பட்டி தாலுகா
தூத்துக்குடி மாவட்டம்
Mail id: kottursamy9566@gmail.com
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra