Thursday, July 5, 2018

அதிரடி காட்டும் தமிழக பள்ளி கல்வித்துறை? மக்கள் விரும்பும் அரசாக மாறிவரும் #தமிழக_அரசு!சென்னை : தமிழகத்தில், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், தனியார் பல்கலைகள் மற்றும் சட்ட கல்லுாரிகள் துவக்க அனுமதி அளிக்கும் சட்டம் உட்பட, ஆறு சட்டங்கள், நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன.

அவற்றின் விபரம்:

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் :

* தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு, புதிய விரிவான சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்க, 2012 ஏப்., 18ல், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த ஆலோசனைப்படி, புதிய சட்டம் உருவாக்கப்பட்டு, சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது

* இச்சட்டம், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின், உயிர் மற்றும் உடமைகளுக்கு, பாதுகாப்பு அளிக்க வற்புறுத்துகிறது. கல்வி வியாபாரமாவதை தடுக்கவும், அடிப்படை கட்டமைப்பை உருவாக்கவும், அனுமதி வழங்கப்படாத பள்ளிகளில், குழந்தைகள் சேர்க்கப்படுவதை தடுக்கவும் வழி செய்யும்

* குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், வாரியத்தேர்வு எழுதுவதை தடுப்போருக்கு, தண்டனை விதிக்கவும், இச்சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தகுதி இல்லாதவர்களை, பணியில் அமர்த்தக் கூடாது. பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு அம்சங்களும் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன

* அரசு அலுவலகங்கள் இயங்குவது போல, பள்ளிகளும், அவர்களுக்குண்டான வழிமுறைகளின்படி இயங்க வேண்டும். 'நீட்' தேர்வு பயிற்சியை, விடுமுறை நாட்களிலும்,

வகுப்பு முடிந்த பிறகும் நடத்த வேண்டும். அதை மீறி செயல்பட்டால், அந்த பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும்.

பல்கலைகளுக்கு அனுமதி :

* பல்கலை கழக மானிய குழு ஒழுங்கு முறை விதிகளின்படி, ஒவ்வொரு தனியார் பல்கலைக்கும், தனிப்பட்ட மாநில சட்டம் நிறுவப்பட வேண்டும். அதன்படி, எச்.சி.எல்., நிறுவனம் சார்பில், 'சிவ்நாடார் பல்கலை' அமைப்பதற்கான சட்டம்; சாய் கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் பொறுப்பு கட்டளை சார்பில், 'சாய் பல்கலை' அமைக்க, அனுமதி அளிக்கும் சட்டம், நிறைவேற்றப்பட்டது

சட்டக்கல்லுாரி :

* 'தனி நபர்கள் சட்ட கல்லுாரிகள் துவக்குவதை, முழுமையாக தடை செய்ய இயலாது' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தனி நபர்கள் சட்ட கல்லுாரிகள் நிறுவுவதை ஒழுங்குமுறைப்படுத்த, புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் நேற்று, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது

சொத்து பாதுகாப்பு :

* வன்னிய குல ஷத்திரியர் சமூகத்தை சேர்ந்த, தாராள குணம் உடைய கொடையாளிகள், பல்வேறு அறச்செயல்களுக்காக, தங்கள் சொத்துக்களை தானமாக வழங்கினர். அவ்வாறு வழங்கப்பட்ட சொத்துக்கள், நல்ல நிலையில் பராமரிக்கப்படாமல் உள்ளன.

பல சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன; பல நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால், உயில் எழுதிய கொடையாளிகளின் விருப்பங்கள் நிறைவேறாமல் உள்ளன. எனவே, அத்தகைய சொத்துக்களைப் பாதுகாக்க, தனி நிர்வாக குழு அமைக்க, அரசு முடிவு செய்தது. அதற்கான, இந்த சொத்து பாதுகாப்பு சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது

வாடகைதாரர்களுக்கான சட்டம் :

* மத்திய அரசின் பரிந்துரைகள் அடிப்படையில், தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் சட்டம், 2017ல், நிறைவேற்றப்பட்டது. ஆனால், அமலுக்கு

Advertisement
வரவில்லை. இந்நிலையில், மத்திய அரசு புதிதாக, 'குடிவார சட்டம் - 2017'ஐ அனுப்பியுள்ளது. இதற்கு தகுந்தபடி விதிகளை ஏற்படுத்துவதற்காக, ஏற்கனவே, 2017ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, நேற்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நில உச்சவரம்பு திருத்தம் :

* தொழில் அல்லது வணிக நிறுவனங்களின் நில உச்ச வரம்பை, 15 ஏக்கரிலிருந்து, 30 ஏக்கராக உயர்த்த வழிவகை செய்யும், 'தமிழ்நாடு நில சீர்திருத்தம், நில உச்சவரம்பு நிர்ணயம் திருத்த சட்டம்- 2018' நேற்று சபையில் நிறைவேற்றப்பட்டது.

* கரும்பு விவசாயிகள், நியாயமான மற்றும் ஆதாய விலை பெறுவதை உறுதி செய்ய, 'தமிழ்நாடு கரும்பு கொள்முதல் விலையை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் - 2018'ம், நேற்று நிறைவேற்றப்பட்டது. மொத்தம், ஆறு சட்டங்கள், நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன.

தனியார் சட்ட பல்கலை துவங்க அனுமதி அளிக்கும் சட்டம், தனியார் சட்ட கல்லுாரிகள் துவக்க அனுமதி அளிக்கும் சட்டம் ஆகியவற்றுக்கு, தி.மு.க., சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Share:

Labels

Blog Archive

Unordered List

Definition List