Wednesday, July 25, 2018

OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

ad300
Advertisement


துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என் சகோதரரை, மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து, நன்றி தெரிவிக்க வந்தேன். இது, என் தனிப்பட்ட பயணம். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின், சவுத் பிளாக்கில் உள்ள, ராணுவ அமைச்சகத்துக்கு, துணை முதல்வரின் கார் விரைந்தது. அவருடன், மைத்ரேயன் உள்ளிட்டவர்களும் சென்றனர். சில நிமிடங்களில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலக, 'டிவிட்டர்' பக்கத்தில், 'ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயனுக்கு தான், சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பன்னீர்செல்வத்தை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை' என, செய்தி வெளியானது.

இதுகுறித்து, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் தரப்பினர் கூறியதாவது: ஒரு மாதத்திற்கு முன், தம்பியை அழைத்து வர, 'ஏர் ஆம்புலன்ஸ்' உதவியை பன்னீர் கோரினார். அதற்கு, உரிய கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் தான், அமைச்சரை சந்திக்க, முதலில் அனுமதி கோரினார். அவரது மொபைல் போனில், பன்னீர்செல்வமும் பேசினார். அப்போது, மைத்ரேயனுடன் பன்னீரும் வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அமைச்சர், 'வரட்டும்' என்றார்.

இதையடுத்து, 'துணை முதல்வர் வருவது ரகசியமாக இருக்கட்டும். சந்திப்பின் போது, புகைப்படம் எடுக்க வேண்டாம். சந்திப்புக்குப் பின், படத்தை வேண்டுமானால் வெளியிடலாம்' என, மைத்ரேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் ,ராணுவ அமைச்சர் சம்மதித்தார்.எல்லாமே ரகசியமாக இருக்கட்டும் எனக்கூறி விட்டு, ராணுவ அமைச்சரை சந்திப்பதற்கு முன், அனைத்து விபரங்களையும், பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து விட்டார். அமைச்சரை சந்திக்காமலேயே, 'சந்தித்து நன்றி தெரிவித்தேன்' என்றார்.

எனவே, அவரை சந்திப்பதை, ராணுவ அமைச்சர் தவிர்த்து விட்டார். மைத்ரேயனை மட்டும் சந்தித்து பேசினார். அவரிடம், 'உங்கள் விவகாரங்களில், என் பெயரை, ஏன் தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள்' என, அமைச்சர் கடிந்து கொண்டார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தரப்பினர் கூறினர்.

டெல்லிச்சென்ற ஓபிஎஸ்ஸை சந்திக்க நிர்மலா சீத்தாராமன் மறுத்ததால் ஏமாற்றத்துடன் அவர் சென்னை திரும்பினார். ஏன் உங்களை சந்திக்க அனுமதியில்லை என்ற கேள்விக்கு அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிவிட்டுச் சென்றார்.

துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று திடீரென டெல்லி சென்றார். அங்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. டெல்லி சென்று நிர்மலா சீத்தாராமனை ஓபிஎஸ் எதற்காக சந்திக்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

அரசியல் ரீதியான சந்திப்பு எதுவும் இல்லாத நிலையில் எதற்காக ஓபிஎஸ் செல்கிறார் என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். ஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ் பாஜக சொற்படித்தான் செயல்படுகிறார் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. டிடிவி தினகரனை ஓரங்கட்டி ஓபிஎஸ்ஸை இணைத்ததில் டெல்லி மேலிடம் அதிக முயற்சி எடுத்ததாக அப்போது கருத்து முன்வைக்கப்பட்டது.

என்னதான் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைந்தாலும் எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி என இரு அணிகள் எப்போதும் தனியாகவே இயங்கிவந்தது. ஓபிஎஸ் மட்டுமே ஆதாயம் அடைந்த இந்த இணைப்பில் அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, மனோஜ் பாண்டியன், பி.எச்.பாண்டியன் என ஒருவரும் பயன்பெறவில்லை.

இதில் நத்தம் விஸ்வநாதன் போன்ற சிலர் ஒதுங்கிப் போய்விட்டனர். சிலர் வேறு எங்கும் போக முடியாது என்பதால் அமைதியாக உள்ளனர். வழிகாட்டுக்குழு என்று அமைக்கப்பட்டதும் செயல்பாட்டில் இல்லை. அதேபோல் கட்சி அணிக்குள் எடப்பாடி ஆதரவாளர்கள் ஓபிஎஸ்ஸை சம்பிரதாயபூர்வமாகவே ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆட்சி என்ற ஒரு கயிறும், டிடிவி எதிர்ப்பும் அதிமுகவுக்குள் ஒற்றுமை உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் நாளுக்கு நாள் பனிப்போர் அதிகரித்து வருகிறது.

இதன் எதிரொலியே ஓபிஎஸ்ஸின் டெல்லி பயணம் என்று அதிமுக தரப்பில் கூறுகின்றனர். டெல்லியில் நிர்மலா சீத்தாராமன் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவையும் சந்திப்பதாக ஓபிஎஸ்ஸின் எண்ணம் என்று டெல்லிவட்டார தகவல் கூறுகிறது. ஆனால் ஓபிஎஸ் டெல்லி சென்று இறங்கும் முன்னர் அவர் ஏன் டெல்லி செல்கிறார் என்று இங்கே எடப்பாடி பேட்டி அளித்தார்.வண்டலூரில் புதிதாக பிறந்துள்ள சிங்ககுட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ் டெல்லி விசிட் பற்றி கேள்விக்கு, ஓ.பி.எஸ் தம்பி யின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரை மதுரையிலிருந்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ராணுவ ஆம்புலன்ஸ் விமானத்தை நிர்மலா சீத்தாராமன் அனுப்பி வைத்தார்.

அதற்கு நன்றி தெரிவிக்கவே ஓ.பி.எஸ் டெல்லி சென்றுள்ளார் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த நேரம் ஓபிஎஸ் மற்றும் மைத்ரேயன் என நிர்மலா சீத்தாராமனின் அலுவலகத்தில் இருந்தனர். உடனடியாக நிர்மலா சீத்தாராமன் அலுவலகம் சார்பில் டிவிட்டரில் ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி இல்லை மைத்ரேயனை சந்திக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என்று பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து ஓபிஎஸ் உடனடியாக வெளியே கிளம்பி வந்துவிட்டார். நிர்மலா சீத்தாராமன் அலுவலகத்துக்கு செல்லும் முன் பேட்டி அளித்த ஓபிஎஸ் தனது தம்பிக்கு சிகிச்சைக்கு விமானம் அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்க செல்கிறேன் என்று தெரிவித்தார். வெளியே வந்த ஓபிஎஸ் அமித்ஷாவையும் சந்திக்கவில்லை, உடனடியாக சென்னை திரும்பினார். ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய ஓபிஎஸ் விமான நிலையத்தில் வழக்கமான சிரிப்புடன் கேள்வியை எதிர்க்கொண்டார்.

நிர்மலா சீத்தாராமனை சந்திக்கச்சென்று அவர் மைத்ரேயனுக்கு மட்டுமே அனுமதி என்று கூறியது பற்றி கேட்டதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா ஏற்கனவே கூறியுள்ளார் என்று தெரிவித்துவிட்டுச் சென்றார்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஒருவரை கேட்டபோது ஓபிஎஸ் தம்பி எந்த அரசியல் சார்ந்தவரோ, அரசின் பொறுப்பிலோ இல்லாத ஒருவர், அவருக்காக ராணுவ விமானத்தை அனுப்புவதே சர்ச்சைக்குரிய ஒன்று, இதில் நன்றி சொல்வது சாதாரணமாக தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும். இதற்காக ஓபிஎஸ் டெல்லிக்கு விமானத்தில் சென்று அங்கு பேட்டியும் கொடுத்துவிட்டா செல்வார் என்று பதில் கேள்வி எழுப்பினார்.

எப்போதும் எந்த பிரச்சினையிலும் அமைதி தவழும் முகத்துடன் இக்கட்டான கேள்விகளை எதிர்க்கொண்டு சமாளிக்கும் திறன் பெற்ற ஓபிஎஸ் இன்று தன்னை மீறி அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியதை அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார் என்பதையே காட்டுகிறது.தனது டெல்லி பயணம் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்திய நிலையில். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவுள்ளதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம் இது அரசியல் பயணம் அல்ல எனத் தானாகவே விளக்கமளித்தார்.ஆனால், நிர்மலா சீதாராமன் அலுவலகமோ ஓபிஎஸ் நிர்மலா சீதாராமனை சந்திக்கவே இல்லை, மைத்ரேயனுக்கு மட்டும்தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளது. மறைமுகமாக ஓபிஎஸ்-ஸுக்கு அனுமதியில்லை என்ற ரீதியில் அமைந்துள்ள இந்த ட்வீட் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

"எனது டெல்லி பயணம் அரசியல் பயணம் அல்ல. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளேன். சகோதரர் சிகிச்சைக்காக விமானம் அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்க வந்தேன். கூட்டணி விஷயத்தில் தமிழக மக்களின் நலன் கருதி முடிவு எடுக்கப்படும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

எதற்காக இந்த விளக்கம் என்கிறீர்களா? துணை முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்றதிலிருந்து அவரது டெல்லி பயணத்தின் பின்னணி என்ன? அதிமுகவில் விரிசலா? பாஜக அதிமுகவில் மோதலா? மீண்டும் தர்மயுத்தமா? என்ற பல்வேறு தொணிகளில் செய்திகள் உலா வரத் தொடங்கின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகவே ஓபிஎஸ் இதைக் கூறினார்.ஆனால், அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பக்கத்தில் "அதிமுக எம்.பி. மைத்ரேயனுக்குதான் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்பு அமைச்சரை சந்திக்கவில்லை" என ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், சமூக வலைதளங்களில் கிண்டல்கள் உருவாகி வருகின்றன. அழையா விருந்தாளி என்றெல்லாம் கிண்டல்கள் பதிவாகின. இத்தகைய சூழலில் ஓபிஎஸ், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்திப்பாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

டெல்லி சென்ற ஓபிஎஸ்.. நான் வருகிறேன் என்று சொல்லி சென்றிருக்கலாமே?? என்றெல்லாம் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். நினைத்த நேரத்தில் எல்லாம் பிரதமரை சந்தித்த ஓபிஎஸ் இன்று பாதுகாப்பு அமைச்சரைக்கூட சந்திக்க முடியவில்லை என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக, டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.

எதற்காக ஓபிஎஸ் டெல்லி சென்றார்? ஓபிஎஸ்-ஸின் இந்த திடீர் பயணம் அரசியல் பயணமா இல்லையா? தம்பிதுரை ஏன் ஓபிஎஸ்-ஸை சந்தித்தார்? நிர்மலா ஏன் ஓபிஎஸ்ஸை சந்திக்கவில்லை? என்பதை அடுத்தடுத்த நகர்வுகளை வைத்தே கணிக்க முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பன்னீரின் திடீர்ப் பயணத்தின் பின்னனி? தெரிந்துகொள்ள இங்கே தொடவும்

இந்த செய்தியின் தொடர்ச்சி, பன்னீர் குறித்து பாஜக வின் தற்போதைய பார்வை உள்பட பல்வேறு விஷயங்கள் நாளைய தினம்.......
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra