Tuesday, August 28, 2018

அஇஅதிமுக ஆட்சியையோ, பாஜக ஆட்சியையோ வீட்டுக்கு அனுப்ப இவர்களால் முடியாது! தயாநிதி அழகிரி!

வருகிற செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கும் பேரணியை யாருக்கும் எதையும் தெரிவிக்க நடத்தவில்லை. மறைந்த தலைவர் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தவே என் தந்தை இதை நடத்துகிறார். வேறெதுவும் இல்லை. எங்கள் பலத்தைக் காட்ட நடத்தப்படும் பேரணியாக நினைக்கிறார்கள் என்றால் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல.

நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தொடர்ந்து கூறியதாவது!

"என்னை திமுகவில் மீண்டும் சேர்க்கவில்லை கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எனது தந்தை பேசியுள்ளது" அவரது பார்வை. அது ஒருவகையில் உண்மையும் கூட. திமுகவின் நிரந்தரத் தலைவர் கருணாநிதி மட்டுமே புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பற்றி  நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. திமுகவுக்கு பங்காற்றியிருந்தாலும் எனது தந்தை புறக்கணிக்கப்படுகிறார்.

எனது தந்தையின் திட்டம் என்னவென்பதை அவர் அனைத்து பேட்டிகளிலும் கூறி வருகிறார். மீண்டும் தான் கட்சியில் இணைய வேண்டும் என்று பேசி வருகிறார். அவரை கட்சியில் சேர்த்து, நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வது பற்றிதான் திமுக யோசிக்க வேண்டும். இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடுவதாக இல்லை.

அதிமுக ஆட்சியை அகற்றுவோம் என்று கூறிவருகிறார்கள். ஆனால், இவர்களால் முடியாது. அதிமுக ஆட்சியை அகற்றுவோம் என்று கூறுவதை கேட்டுக் கேட்டு போரடித்துவிட்டது. திமுக பொதுச்செயலாளரை சந்திப்பது குறித்து எல்லாம் அப்பாவைத் தான் கேட்க வேண்டும். அப்பா அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலுமே, திமுக-வில் சேர்க்கச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார். அவர்கள் திமுகவில் சேர்த்துக்கொண்டால் சேருவோம்.

திமுக-வில் வீரமணி உள்ளிட்டவர்கள் அரசியல் குறுக்கீடு செய்வது தவறான விஷயம். அவர் ஒரு பெரியவர். குடும்பத்தில் இரண்டு பேருக்குள் சண்டை வருகிறது என்றால், சேர்த்து வைக்கப்படுவதுதான் பெரியவரின் பணி. அதை விடுத்து விருந்தாளி என்கிறார். அவர்கள் வீட்டில் எத்தனை விருந்தாளி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

செப்டம்பர் 5-ம் தேதி பேரணிக்குப் பிறகு அதுவே பெரிய அறிவிப்பாக இருக்கும். திமுக-வில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். அப்பாவே பதவி எல்லாம் கேட்டதில்லை.

இவ்வாறு துரை தயாநிதி அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Thursday, August 16, 2018

போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கி உள்ள, அவரது அண்ணன் அழகிரி தலைமை யில், விரைவில், போட்டி தி.மு.க., உதயமாகிறது.

கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் பேசிய, முன்னணி நிர்வாகிகள் அனைவரும், 'தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்; அவரது தலைமையில், நாங்கள் அணிவகுப்போம்' என, சூளுரைத்தனர்.

ஆனால், அழகிரி, மீண்டும் தன்னையும், தன் ஆதரவாளர்களையும், கட்சியில் சேர்க்க வேண்டும் என,குடும்பத்தினர் சிலரின் உதவியுடன் வலியுறுத்தி வருகிறார். அதற்கு, ஸ்டாலின் மறுத்து விட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தன் ஆதரவாளர்களிடம், அழகிரி ஆலோசனை நடத்தினார்.'தனிக் கட்சி துவக்கினால், தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது; எனவே, போட்டி தி.மு.க.,வை உருவாக்கலாம்' என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதுரையில், நேற்று அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தில், கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

இந்த பேரணி, சென்னை, அண்ணா சாலையிலுள்ள அண்ணாதுரை சிலை யிலிருந்து புறப்பட்டு, கருணாநிதி சமாதி சென்ற டையும்.இதில், அழகிரியின் பலத்தை காட்டு வதற்கு, தமிழகம் முழுவதும் இருந்து, 50 ஆயிரம் பேரை திரட்டுகின்றனர்.

இது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த #மதுரை_மாநகர_முன்னாள்_துணைமேயரும் , முக அழகிரியின் தீவிர ஆதரவாளருமான பி.எம்.மன்னன் அவர்களைத் தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்ததாவது,

கலைஞரின் நினைவிடத்துக்கு திமுகவின் துணை அமைப்புகள் தினந்தோறும் அமைதிப் பேரணி சென்றுகொண்டிருக்கிறார்கள். அழகிரியோ தனது ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் திரட்டி கலைஞரின் நினைவிடம் நோக்கி தன் தலைமையில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்திருக்கிறார்.

"கலைஞரின்" காரியம் முடியுற வரைக்கும் பொறுமையா இருக்கலாம்னு நினைத்திருந்தார் அண்ணன். ஆனா அதுக்குள்ளயே செயற்குழுவை பொதுக்குழு மாதிரி கூட்டி அதுலயும் ஸ்டாலின் தன்னை முன்னிலைப் படுத்திக்கிட்டாரு. தலைவர் இல்லைனு ஆகிப்போச்சு. பொதுச் செயலாளர்தான் மூத்தவர். அவர் தலைமையில்தான கலைஞருக்கு இரங்கல் செயற்குழு கூட்டம் நடந்திருக்கணும்? ஆனா ஸ்டாலின் தலைமையில நடக்குது. இந்த அறிவிப்பு வந்தபிறகு அண்ணனுக்கு கடும் மனவருத்ததை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து எங்களிடம் "திமுக வைக் காப்பாற்ற நாம் களமிறங்க வேண்டும்" ஸ்டாலினை நம்பி கட்சியை ஒப்படைத்தால் "நாளை கலைஞரின் ஆத்மா நம்மை மன்னிக்காது" என்று வருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தார். இறுதியாக அண்ணன் அவருக்கு நெருக்கமான உச்ச நட்சத்திரத்துடன் கலந்தாலோசித்து செப்டம் 5 ல் கலைஞரின் 30 வது நாள் காரியத்தை மிக பிரம்மாண்ட பேரணி நடத்தி கலைஞரின் அரசியல் வாரிசு அழகிரி தான் என்பதை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளார்...

கட்சியிலேர்ந்து நீக்கி சில வருஷம் ஆகியிருந்தாலும். தமிழ்நாடு முழுவதிலும் அவருக்கென தனியாக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உண்டு, மாதந்தோறும் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியே வந்துள்ளோம், இப்போது கலைஞர் இல்லாத நிலையில் ஸ்டாலினாலும் சரியாக செயல்பட முடியாமல் தொடர் தோழ்விகளைக் கண்டு வரும் திமுகவுக்கு புத்தியிரூட்ட #அஞ்சா_நெஞ்சரின் ஆதரவாளர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளோம்.

அதன்படி வேலைகள் தொடங்கிவிட்டன. அழகிரியோடு இன்னும் தொடர்பில் இருக்கும் மாவட்ட திமுக பிரமுகர்கள், அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் லோக்கல் எதிர்கோஷ்டியினர் என்று பலரிடமும் மாவட்டம் மாவட்டமாக பேச ஆரம்பித்துவிட்டனர் அழகிரி ஆதரவாளர்கள். மெரினா கலைஞர் நினைவிடம் நோக்கி அழகிரி தலைமையில் பேரணி செல்வதற்காக இன்னும் சில தினங்களில் போலீஸிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள்.

இப்போதைக்கு செப்டம்பர் 5 என்று தேதி பொதுவாக முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அதில் இருந்து சில நாட்கள் முன் பின்னே இந்த பேரணி நடக்கலாம். ’22 ஆம் தேதி அண்ணன் மதுரை திரும்புகிறார். அப்புறம்தான் தேதி முடிவாகும்’ என்றார் மதுரையின் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன்.

கடந்த ஜுன் மாதம் நடந்த மன்னனின் மகள் திருமண விழாவின் போது "செயல்படாத தலைவர் சென்னையில் இருக்கிறார், ஆனால் செயல்படும் தொண்டர்கள் என்பக்கமே இருக்கிறார்கள் என்று அழகிரி பேசியது குறிப்பிடத்தக்கது!

கலகலக்கப் போகும் மெரினா? அழகிரி திட்டம்!

கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் பேசிய, முன்னணி நிர்வாகிகள் அனைவரும், ‘தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்; அவரது தலைமையில், நாங்கள் அணிவகுப்போம்’ என, சூளுரைத்தனர்.

ஆனால், அழகிரி, மீண்டும் தன்னையும், தன் ஆதரவாளர்களையும், கட்சியில் சேர்க்க வேண்டும் என,குடும்பத்தினர் சிலரின் உதவியுடன் வலியுறுத்தி வருகிறார். அதற்கு, ஸ்டாலின் மறுத்து விட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தன் ஆதரவாளர்களிடம், அழகிரி ஆலோசனை நடத்தினார்.’தனிக் கட்சி துவக்கினால், தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது; எனவே, போட்டி தி.மு.க.,வை உருவாக்கலாம்’ என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதுரையில், நேற்று அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தில், கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

இந்த பேரணி, சென்னை, அண்ணா சாலையிலுள்ள அண்ணாதுரை சிலை யிலிருந்து புறப்பட்டு, கருணாநிதி சமாதி சென்ற டையும்.இதில், அழகிரியின் பலத்தை காட்டு வதற்கு, தமிழகம் முழுவதும் இருந்து, 50 ஆயிரம் பேரை திரட்டுகின்றனர்.

இது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த #மதுரை_மாநகர_முன்னாள்_துணைமேயரும் , முக அழகிரியின் தீவிர ஆதரவாளருமான பி.எம்.மன்னன் அவர்களைத் தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்ததாவது,

கலைஞரின் நினைவிடத்துக்கு திமுகவின் துணை அமைப்புகள் தினந்தோறும் அமைதிப் பேரணி சென்றுகொண்டிருக்கிறார்கள். அழகிரியோ தனது ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் திரட்டி கலைஞரின் நினைவிடம் நோக்கி தன் தலைமையில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்திருக்கிறார்.

“கலைஞரின்” காரியம் முடியுற வரைக்கும் பொறுமையா இருக்கலாம்னு நினைத்திருந்தார் அண்ணன். ஆனா அதுக்குள்ளயே செயற்குழுவை பொதுக்குழு மாதிரி கூட்டி அதுலயும் ஸ்டாலின் தன்னை முன்னிலைப் படுத்திக்கிட்டாரு. தலைவர் இல்லைனு ஆகிப்போச்சு. பொதுச் செயலாளர்தான் மூத்தவர். அவர் தலைமையில்தான கலைஞருக்கு இரங்கல் செயற்குழு கூட்டம் நடந்திருக்கணும்? ஆனா ஸ்டாலின் தலைமையில நடக்குது. இந்த அறிவிப்பு வந்தபிறகு அண்ணனுக்கு கடும் மனவருத்ததை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து எங்களிடம் “திமுக வைக் காப்பாற்ற நாம் களமிறங்க வேண்டும்” ஸ்டாலினை நம்பி கட்சியை ஒப்படைத்தால் “நாளை கலைஞரின் ஆத்மா நம்மை மன்னிக்காது” என்று வருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தார். இறுதியாக அண்ணன் அவருக்கு நெருக்கமான உச்ச நட்சத்திரத்துடன் கலந்தாலோசித்து செப்டம் 5 ல் கலைஞரின் 30 வது நாள் காரியத்தை மிக பிரம்மாண்ட பேரணி நடத்தி கலைஞரின் அரசியல் வாரிசு அழகிரி தான் என்பதை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளார்…

கட்சியிலேர்ந்து நீக்கி சில வருஷம் ஆகியிருந்தாலும். தமிழ்நாடு முழுவதிலும் அவருக்கென தனியாக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உண்டு, மாதந்தோறும் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியே வந்துள்ளோம், இப்போது கலைஞர் இல்லாத நிலையில் ஸ்டாலினாலும் சரியாக செயல்பட முடியாமல் தொடர் தோழ்விகளைக் கண்டு வரும் திமுகவுக்கு புத்தியிரூட்ட #அஞ்சா_நெஞ்சரின் ஆதரவாளர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளோம்.

அதன்படி வேலைகள் தொடங்கிவிட்டன. அழகிரியோடு இன்னும் தொடர்பில் இருக்கும் மாவட்ட திமுக பிரமுகர்கள், அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் லோக்கல் எதிர்கோஷ்டியினர் என்று பலரிடமும் மாவட்டம் மாவட்டமாக பேச ஆரம்பித்துவிட்டனர் அழகிரி ஆதரவாளர்கள். மெரினா கலைஞர் நினைவிடம் நோக்கி அழகிரி தலைமையில் பேரணி செல்வதற்காக இன்னும் சில தினங்களில் போலீஸிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள்.

இப்போதைக்கு செப்டம்பர் 5 என்று தேதி பொதுவாக முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அதில் இருந்து சில நாட்கள் முன் பின்னே இந்த பேரணி நடக்கலாம். ’22 ஆம் தேதி அண்ணன் மதுரை திரும்புகிறார். அப்புறம்தான் தேதி முடிவாகும்’ என்றார் மதுரையின் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன்.

கடந்த ஜுன் மாதம் நடந்த மன்னனின் மகள் திருமண விழாவின் போது “செயல்படாத தலைவர் சென்னையில் இருக்கிறார், ஆனால் செயல்படும் தொண்டர்கள் என்பக்கமே இருக்கிறார்கள் என்று அழகிரி பேசியது குறிப்பிடத்தக்கது!

Wednesday, August 15, 2018

2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

2019 ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

'சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய்க்கிமை அன்று பேசிய போது

''இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை.

அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது'' என்று தெரிவத்தார்.

முன்னதாக "ஒரேநாடு ஒரே தேர்தல் " குறித்து சில வாரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர்

"நாம் இப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வகுத்து கொடுத்த தேர்தல் முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அதில் `நம்பிக்கை இல்லா தீர்மானம்` கொண்டு வருவதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல, ஒரு மாநிலத்தில் கொண்டு வந்து ஆட்சிக் கவிழும் பட்சத்தில், இப்போது முன்வைக்கப்படுகிற `ஒரே தேர்தல்` முறையில், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த நேரிடும். இதில் அரசமைப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை கவிழ்க்க முடியாத வண்ணம் திருத்தம் கொண்டு வந்தால், `ஒரே தேர்தல்` என்பது சாத்தியமாகும்." என்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,.

மற்றபடி, தேர்தலை நடத்துவதற்கான துணை ராணுவம், ஊழியர்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவைப்படுவார்கள். முறையாக முன் திட்டமிட்டால், இந்த இடர்களையும் தவர்க்கலாம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இதையடுத்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்ட கட்டமைப்பை, மத்திய சட்ட கமிஷன் விரைவில் பரிந்துரைக்க உள்ளதாக, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்காக, அரசியல் சாசனத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், தேவையான
திருத்தங்களை, சட்ட கமிஷன் பரிந்துரை செய்ய உள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இருப்பினும், இதுதொடர்பாக சட்ட கமிஷன் அளிக்கும் அறிக்கை தொடர்பான விவாதங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இடையே நடக்க, வாய்ப்புகள் உள்ளன.

ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் சாசனத்தில் இரண்டு ஷரத்துகள் திருத்தப்பட்டு, நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு நடந்தால், 2019 முதல், நாடு முழுவதும் ஒரே சமயத்தில், இரு கட்டங்களாக தேர்தல் நடத்தும் வாய்ப்பு உள்ளது. 2019ல், முதல் கட்ட தேர்தலும், 2024ல், இரண்டாம் கட்ட தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்படலாம்.

இது தொடர்பாக, கடந்த ஏப்ரலில், சட்ட கமிஷன் தயாரித்துள்ள ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலை அடுத்து, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், தங்கள் அரசின் ஸ்திரத் தன்மையையும், லோக்சபா அல்லது சட்டசபையின் ஸ்திரத் தன்மையையும் உறுதி செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் அரசு, பாதியில் கவிழ்ந்தால், மீதமுள்ள காலத்திற்கும் அந்த அரசே ஆட்சியில் நீடிக்கும்; தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் வரை, புதிதாக தேர்தல்
நடத்தப்படாது. முதல் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், 2021க்குள் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் மாநிலங்கள் உள்ளன. ஆந்திரா, அசாம், பீஹார், ம.பி., மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், இதில் உள்ளன.

வரும், 2024ல், இரண்டாம் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், உ.பி., குஜராத், கர்நாடகா, டில்லி, பஞ்சாப் உள்ளன. லோக்சபா தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலை நடத்த, இந்த மாநிலங்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மத்தியில் ஆளும், அகாலிதளம், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை, ஒரே சமயத்தில் தேர்தலை ஆதரிக்கின்றன. காங்., திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, தி.மு.க., தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எதிர்க்கின்றன.

முன்னதாக

தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் , சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவது பற்றிய மத்திய அரசின் திட்டத்தை ஆதரித்துப் பேசிய அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பரபரப்பைக் கிளப்பிய நிலையில் ,

இந்த மாத துவக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் "2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவது குறித்த ஆட்சேபனையை தமிழக அரசு தெரிவிக்கலாம்" என்றும் "அவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்ட மன்றத் தேர்தலை நடத்தும் பட்சத்தில் அதனால் ஏற்படும் சாதக பாதகங்களால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுமா ? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளதாகவும், விரைவில் தமிழக அரசின் தலைமைச் செயலர் இந்தக்கடிதம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிக்க உள்ளதாகவும் #தலைமைச் செயலக வட்டார தகவல்கள் கசிகிறது.....

விரைவில் தமிழகத்தில் பொதுத்தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும்  வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.
இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய்க்கிமை அன்று பேசிய போது
''இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை. அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது'' என்று தெரிவத்தார்.

முன்னதாக "ஒரேநாடு ஒரே தேர்தல் " குறித்து சில வாரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் "நாம் இப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வகுத்து கொடுத்த தேர்தல் முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அதில் `நம்பிக்கை இல்லா தீர்மானம்` கொண்டு வருவதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல, ஒரு மாநிலத்தில் கொண்டு வந்து ஆட்சிக் கவிழும் பட்சத்தில், இப்போது முன்வைக்கப்படுகிற `ஒரே தேர்தல்` முறையில், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த நேரிடும். இதில் அரசமைப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை கவிழ்க்க முடியாத வண்ணம் திருத்தம் கொண்டு வந்தால், `ஒரே தேர்தல்` என்பது சாத்தியமாகும்." என்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,.

மற்றபடி, தேர்தலை நடத்துவதற்கான துணை ராணுவம், ஊழியர்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவைப்படுவார்கள். முறையாக முன் திட்டமிட்டால், இந்த இடர்களையும் தவர்க்கலாம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இதையடுத்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்ட கட்டமைப்பை, மத்திய சட்ட கமிஷன் விரைவில் பரிந்துரைக்க உள்ளதாக, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்காக, அரசியல் சாசனத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், தேவையான திருத்தங்களை, சட்ட கமிஷன் பரிந்துரை செய்ய உள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இருப்பினும், இதுதொடர்பாக சட்ட கமிஷன் அளிக்கும் அறிக்கை தொடர்பான விவாதங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இடையே நடக்க, வாய்ப்புகள் உள்ளன.

ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் சாசனத்தில் இரண்டு ஷரத்துகள் திருத்தப்பட்டு,  நாட்டின் பெரும்பான்மையான  மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு நடந்தால், 2019 முதல், நாடு முழுவதும் ஒரே சமயத்தில், இரு கட்டங்களாக தேர்தல் நடத்தும் வாய்ப்பு உள்ளது. 2019ல், முதல் கட்ட தேர்தலும், 2024ல், இரண்டாம் கட்ட தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்படலாம்.

இது தொடர்பாக, கடந்த ஏப்ரலில், சட்ட கமிஷன் தயாரித்துள்ள ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலை அடுத்து, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், தங்கள் அரசின் ஸ்திரத் தன்மையையும், லோக்சபா அல்லது சட்டசபையின் ஸ்திரத் தன்மையையும் உறுதி செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அரசு, பாதியில் கவிழ்ந்தால், மீதமுள்ள காலத்திற்கும் அந்த அரசே ஆட்சியில் நீடிக்கும்; தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் வரை, புதிதாக தேர்தல் நடத்தப்படாது. முதல் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், 2021க்குள் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் மாநிலங்கள் உள்ளன.

ஆந்திரா, அசாம், பீஹார், ம.பி., மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், இதில் உள்ளன. வரும், 2024ல், இரண்டாம் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், உ.பி., குஜராத், கர்நாடகா, டில்லி, பஞ்சாப் உள்ளன. லோக்சபா தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலை நடத்த, இந்த மாநிலங்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மத்தியில் ஆளும், அகாலிதளம், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை, ஒரே சமயத்தில் தேர்தலை ஆதரிக்கின்றன. காங்., திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, தி.மு.க., தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எதிர்க்கின்றன.

முன்னதாக தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் , சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவது பற்றிய மத்திய அரசின் திட்டத்தை ஆதரித்துப் பேசிய அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பரபரப்பைக் கிளப்பிய நிலையில் , இந்த மாத துவக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் "2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலையும்
நடத்துவது குறித்த ஆட்சேபனையை தமிழக அரசு தெரிவிக்கலாம்" என்றும் "அவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்ட மன்றத் தேர்தலை நடத்தும் பட்சத்தில் அதனால் ஏற்படும் சாதக பாதகங்களால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுமா ? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளதாகவும், விரைவில் தமிழக அரசின் தலைமைச் செயலர் இந்தக்கடிதம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிக்க உள்ளதாகவும் #தலைமைச்  செயலக வட்டார தகவல்கள் கசிகிறது.....
http://namnadu.news/2018/08/16/tnvscentral/

Tuesday, August 14, 2018

இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார்.

ஸ்டாலின் கலக்கம்?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்' தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் ஆதங்கத்தை மூன்று நாள்களில் தெரிவிப்பேன்' என்று அழகிரி கூறியுள்ளார். இதனால், கருணாநிதி இல்லாத மு.க.ஸ்டாலினை முதன்மையாகக் கொண்ட திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

தென்மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பை வகித்தவர் மு.க.அழகிரி. அந்த மாவட்டங்களைப் பொருத்தவரை அழகிரி எடுப்பதே முடிவு எனும் அளவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இருக்கும்போது அவருக்கு திமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், திமுகவின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிய போது, படிப்படியாகக் கட்சியிலிருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்டார்.

இறுதியாக 2014 மார்ச் 24-இல் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இது எல்லாம் கருணாநிதி நினைவுடன் இருந்த நிலையில் எடுத்த முடிவாகும். அதன் பிறகு, அழகிரியுடன் கட்சியினர் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. கோபாலபுரம் இல்லத்துக்கு மட்டும் அழகிரி வந்து செல்லக்கூடியவராக இருந்தார். அதுவும் பல நேரங்களில் கருணாநிதியைச் சந்திக்காமலே சென்று வரக்கூடியவராக இருந்தார்.

ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை இன்றி...மு.க.ஸ்டாலினிடமும் அவருக்கு எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்து வந்தது. ஸ்டாலின் தலைவராக இருக்கும் வரை திமுக தேர்தலில் வெற்றி பெறாது என்று அழகிரி கூறி வந்தார். ஆனால், கருணாநிதி உடல்நிலை கடந்த ஜூலை 28-ஆம் தேதி மிகவும் மோசமாகி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அழகிரி உடன் இருந்து கவனித்து வந்தார்.

பிணக்கு அதிகரிப்பு:

ஒரு கட்டத்தில் ஸ்டாலினும், அழகிரியும் பேசிக் கொண்டதுடன் இருவரும் இணைந்து செயல்பட்டனர். மெரீனாவில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டது வரை இந்த இணைப்பு தொடர்ந்தது. தற்போது இருவருக்கும் இடையே மீண்டும் பெரிய பிணக்கு ஏற்பட்டுள்ளது.

அழகிரியின் எதிர்பார்ப்பு என்ன?

திமுகவில் தற்போது தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியாக உள்ளன. இதில் தலைவர் பதவியை ஸ்டாலின் வைத்துக் கொள்வதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அழகிரியும்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அடுத்து பொருளாளர் பதவியும் தற்போது ஸ்டாலின் வசமே உள்ளது. மேலும், திமுகவில் 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் கட்சியில் தனக்கு என்ன பதவியை அழகிரி எதிர்பார்க்கிறார் என்பதை அவர் இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

பேச்சுவார்த்தை தோல்வி:

கருணாநிதியின் குடும்பத்தில் தற்போது மூத்தவராக முரசொலி செல்வமே இருந்து வருகிறார். அவர்தான் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவில் எந்தவித பிளவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் - அழகிரி இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். அழகிரியைக் கட்சியில் சேர்க்கலாம், ஆனால் மாநிலப் பொறுப்புக் கொடுக்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின் பிடிவாதமாக இருக்கிறார்.

கனிமொழிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு இளைஞர் அணித் தலைவர் பதவியும் அளித்து குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுத்த சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் கட்சிப் பொறுப்பில் அமர்த்தினால் திமுகவுக்கு ஏற்கெனவே இருக்கும் குடும்பக் கட்சி' என்கிற அவப்பெயர் அதிகரிக்கும் என்று கருதுகிறார் மு.க. ஸ்டாலின்.

இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்ப்பு:

அழகிரிக்கு, ஸ்டாலினையும்விட இரண்டாம் கட்டத் தலைவர்களே பெரும் எதிர்ப்பாளர்களாக இருந்து வருகின்றனர். கருணாநிதி, முரசொலி மாறன், வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பிறகு அடுத்தகட்ட திமுக நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகப் பேசக்கூடியவராக அழகிரியே இருந்து வருகிறார். இதனால் அவரை அணுகுவதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் பயப்படுகின்றனர்.
காவேரி மருத்துவமனையில் அழகிரி இருந்த நேரங்களில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெரும்பாலானோர் மருத்துவமனையில் இருந்து தொலைவிலேயே நின்றிருந்தனர். அதனால், கட்சிக்குள் அழகிரி கொண்டு வரப்பட்டால், தங்களால் முன்புபோல இருக்க முடியாதோ என்ற அச்சம் ஏற்பட்டு, அழகிரியைச் சேர்ப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக

சென்னையில்,நேற்று ஆங்கில, 'டிவி' சேனலுக்கு, அழகிரி அளித்த பேட்டி:

உங்கள் ஆதங்கம் தான் என்ன?

எனக்கு பல ஆதங்கங்கள் இருக்கின்றன; அந்த ஆதங்கங்களை எல்லாம், ஆறு மாதத்தில், தொண்டர்கள் நிறைவேற்றுவர்.

மீண்டும், தி.மு.க.,வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா?

என்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், அவர்கள் இல்லை.

கட்சியில் சேருவது தொடர் பாக, நீங்கள் பேச்சு நடத்தியுள்ளீர்களா?

நான் எந்த பேச்சும் நடத்தவில்லை. 'செய்தி தொடர்பாளர்கள் யாரும், 'டிவி'க்களில், என்னை பற்றி பேட்டி அளிக்கக் கூடாது' என, ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம்; பின், எப்படி என்னைக் கட்சியில் சேர்ப்பர்?

கருணாநிதி மரணம் அடைந்துள்ள நிலையில், உங்களை புறக்கணிப்பது, சரியான முடிவா?

இதுபற்றி, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான், ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும், ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும், ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், கட்சி சின்னாபின்னமாகி விடும்.

அவர்கள் பேச்சு நடத்த வந்தால், நீங்கள் பேசத் தயாரா?

அதெல்லாம், அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். கண்டிப்பாக, காலம் பதில் சொல்லும். அவர்களை எல்லாம், கருணாநிதியே தண்டிப்பார். கருணாநிதியின் ஆத்மா, அவர்களைச் சும்மா விடாது.

கட்சியில், உங்களை சேர்க்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

எனக்கென்ன தெரியும்? எனக்குப் புகழ் இருக்கிறது; கட்சித் தொண்டர்கள், என்னை விரும்புகின் றனர். அதனால், அவர்களுக்குப் பயம் இருக்கிறது. நான் வந்தால், வலிமையான தலைவராகி விடுவேன் என்ற, எண்ணமாக இருக்கலாம்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசி சரி செய்யலாமே?

குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும், இதில் அக்கறை இல்லை. நான் கட்சிக்குள் வருவது பற்றி, யாரும் பேசியதில்லை.

தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., சரியாக செயல்படுகிறது என, நினைக்கிறீர்கள்.

சரியாகச் செயல்பட்டால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், 'டிபாசிட்' பறி போகுமா; தொடர்ந்து, தேர்தல் தோல்விகளை சந்திக்கின்றனர். 'கட்சிக்காரன் பணம் வாங்கி விட்டான்' என, துரைமுருகன் பேசுகிறார். கட்சிக்காரன், தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான்! அண்ணாதுரை காலத்திலிருந்து உழைத்து வருகிறான். இந்த பேச்சை, அவன் எப்படி எடுத்துக் கொள்வான். இதெல்லாம் தான் என் ஆதங்கம்.பணம் கொடுத்தால், பதவி கொடுக்கின்றனர். முன்பு, ஒரு செயலர் இருந் தால், ஒரு துணைச் செயலர் இருப்பர். தற்போது, 10, 15 பேர் இருக்கின்றனர்.இவ்வாறு அழகிரி கூறினார்.

இன்று தி.மு.க., செயற்குழு

தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது.சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என, 750 பேர் பங்கேற்க உள்ளனர்.முதலில், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, கட்சியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என, தெரிகிறது.-

Monday, August 13, 2018

#ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசு மேல்முறையீடு?

#ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசு மேல்முறையீடு?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.

அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், டாக்டர் ஜவாத் ரகீம், எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின்நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 9-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பிறப்பித்த ஆணை மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி வெளியிடப்பட்டது என்றும், இந்த ஆணையை எதிர்த்த ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும், எனவே மனுவின் ஏற்புத்தன்மை கேள்விக்குரியது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதத்தை தொடருமாறு உத்தரவிட்டனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள நீதிபதிகள் அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவிட்டனர்.

நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும். ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும். ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், எக்காரணம் கொண்டும் ஆலை இயங்க அனுமதி கிடையாது என்றும், நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

இந்த உத்தரவை எதிர்த்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்தும் பரவலாக பெறப்பட்ட புகார்கள், பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவு ஆகும். அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சட்ட வரையறைக்குள் அடங்காது.

மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்கனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு அமர்வில் மனு தாக்கல் செய்து, அந்த மனுவின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அப்படி அந்த மனுவின் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், மற்றொரு கோர்ட்டு இதனை விசாரிப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை.

மேலும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை தடை செய்ததற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு மதுரை ஐகோர்ட்டால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வரமுடியாது. இதுபற்றி தமிழக அரசு தரப்பில் எடுத்துக் கூறியும், தேசிய பசுமை தீர்ப்பாயம் இதனை கருத்தில் கொள்ளவில்லை. இது தவறானது ஆகும்.

எனவே, ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கின் ஏற்புத்தன்மையை அனுமதித்தது மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியது ஆகிய இடைக்கால உத்தரவுகளை ரத்து செய்வது மட்டுமின்றி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

#ஸ்டெர்லைட் ! தமிழக அரசு மேல்முறையீடு?

செயல்படாத செயல்தலைவர்? முக அழகிரி பகீர் பேச்சு!

சென்னையில்,நேற்று ஆங்கில, ‘டிவி’ சேனலுக்கு, அழகிரி அளித்த பேட்டி:

உங்கள் ஆதங்கம் தான் என்ன?

எனக்கு பல ஆதங்கங்கள் இருக்கின்றன; அந்த ஆதங்கங்களை எல்லாம், ஆறு மாதத்தில், தொண்டர்கள் நிறைவேற்றுவர்.

மீண்டும், தி.மு.க.,வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா?

என்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், அவர்கள் இல்லை.

கட்சியில் சேருவது தொடர் பாக, நீங்கள் பேச்சு நடத்தியுள்ளீர்களா?

நான் எந்த பேச்சும் நடத்தவில்லை. ‘செய்தி தொடர்பாளர்கள் யாரும், ‘டிவி’க்களில், என்னை பற்றி பேட்டி அளிக்கக் கூடாது’ என, ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம்; பின், எப்படி என்னைக் கட்சியில் சேர்ப்பர்?

கருணாநிதி மரணம் அடைந்துள்ள நிலையில், உங்களை புறக்கணிப்பது, சரியான முடிவா?

இதுபற்றி, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான், ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும், ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும், ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், கட்சி சின்னாபின்னமாகி விடும்.

அவர்கள் பேச்சு நடத்த வந்தால், நீங்கள் பேசத் தயாரா?

அதெல்லாம், அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். கண்டிப்பாக, காலம் பதில் சொல்லும். அவர்களை எல்லாம், கருணாநிதியே தண்டிப்பார். கருணாநிதியின் ஆத்மா, அவர்களைச் சும்மா விடாது.

கட்சியில், உங்களை சேர்க்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

எனக்கென்ன தெரியும்? எனக்குப் புகழ் இருக்கிறது; கட்சித் தொண்டர்கள், என்னை விரும்புகின் றனர். அதனால், அவர்களுக்குப் பயம் இருக்கிறது. நான் வந்தால், வலிமையான தலைவராகி விடுவேன் என்ற, எண்ணமாக இருக்கலாம்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசி சரி செய்யலாமே?

குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும், இதில் அக்கறை இல்லை. நான் கட்சிக்குள் வருவது பற்றி, யாரும் பேசியதில்லை.

தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., சரியாக செயல்படுகிறது என, நினைக்கிறீர்கள்.

சரியாகச் செயல்பட்டால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ‘டிபாசிட்’ பறி போகுமா; தொடர்ந்து, தேர்தல் தோல்விகளை சந்திக்கின்றனர். ‘கட்சிக்காரன் பணம் வாங்கி விட்டான்’ என, துரைமுருகன் பேசுகிறார். கட்சிக்காரன், தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான்! அண்ணாதுரை காலத்திலிருந்து உழைத்து வருகிறான். இந்த பேச்சை, அவன் எப்படி எடுத்துக் கொள்வான். இதெல்லாம் தான் என் ஆதங்கம்.பணம் கொடுத்தால், பதவி கொடுக்கின்றனர். முன்பு, ஒரு செயலர் இருந் தால், ஒரு துணைச் செயலர் இருப்பர். தற்போது, 10, 15 பேர் இருக்கின்றனர்.இவ்வாறு அழகிரி கூறினார்.

இன்று தி.மு.க., செயற்குழு

தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது.சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என, 750 பேர் பங்கேற்க உள்ளனர்.முதலில், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, கட்சியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என, தெரிகிறது.

இன்று கூடும் #திமுக_செயற்குழு ? பரபரக்கும் #அறிவாலயம்!

இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார்.

ஸ்டாலின் கலக்கம்?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்’ தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் ஆதங்கத்தை மூன்று நாள்களில் தெரிவிப்பேன்’ என்று அழகிரி கூறியுள்ளார். இதனால், கருணாநிதி இல்லாத மு.க.ஸ்டாலினை முதன்மையாகக் கொண்ட திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

தென்மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பை வகித்தவர் மு.க.அழகிரி. அந்த மாவட்டங்களைப் பொருத்தவரை அழகிரி எடுப்பதே முடிவு எனும் அளவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இருக்கும்போது அவருக்கு திமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், திமுகவின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிய போது, படிப்படியாகக் கட்சியிலிருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்டார்.

இறுதியாக 2014 மார்ச் 24-இல் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இது எல்லாம் கருணாநிதி நினைவுடன் இருந்த நிலையில் எடுத்த முடிவாகும். அதன் பிறகு, அழகிரியுடன் கட்சியினர் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. கோபாலபுரம் இல்லத்துக்கு மட்டும் அழகிரி வந்து செல்லக்கூடியவராக இருந்தார். அதுவும் பல நேரங்களில் கருணாநிதியைச் சந்திக்காமலே சென்று வரக்கூடியவராக இருந்தார்.

ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை இன்றி…மு.க.ஸ்டாலினிடமும் அவருக்கு எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்து வந்தது. ஸ்டாலின் தலைவராக இருக்கும் வரை திமுக தேர்தலில் வெற்றி பெறாது என்று அழகிரி கூறி வந்தார். ஆனால், கருணாநிதி உடல்நிலை கடந்த ஜூலை 28-ஆம் தேதி மிகவும் மோசமாகி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அழகிரி உடன் இருந்து கவனித்து வந்தார்.

பிணக்கு அதிகரிப்பு:

ஒரு கட்டத்தில் ஸ்டாலினும், அழகிரியும் பேசிக் கொண்டதுடன் இருவரும் இணைந்து செயல்பட்டனர். மெரீனாவில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டது வரை இந்த இணைப்பு தொடர்ந்தது. தற்போது இருவருக்கும் இடையே மீண்டும் பெரிய பிணக்கு ஏற்பட்டுள்ளது.

அழகிரியின் எதிர்பார்ப்பு என்ன?

திமுகவில் தற்போது தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியாக உள்ளன. இதில் தலைவர் பதவியை ஸ்டாலின் வைத்துக் கொள்வதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அழகிரியும்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அடுத்து பொருளாளர் பதவியும் தற்போது ஸ்டாலின் வசமே உள்ளது. மேலும், திமுகவில் 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் கட்சியில் தனக்கு என்ன பதவியை அழகிரி எதிர்பார்க்கிறார் என்பதை அவர் இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

பேச்சுவார்த்தை தோல்வி:

கருணாநிதியின் குடும்பத்தில் தற்போது மூத்தவராக முரசொலி செல்வமே இருந்து வருகிறார். அவர்தான் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவில் எந்தவித பிளவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் – அழகிரி இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். அழகிரியைக் கட்சியில் சேர்க்கலாம், ஆனால் மாநிலப் பொறுப்புக் கொடுக்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின் பிடிவாதமாக இருக்கிறார்.

கனிமொழிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு இளைஞர் அணித் தலைவர் பதவியும் அளித்து குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுத்த சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் கட்சிப் பொறுப்பில் அமர்த்தினால் திமுகவுக்கு ஏற்கெனவே இருக்கும் குடும்பக் கட்சி’ என்கிற அவப்பெயர் அதிகரிக்கும் என்று கருதுகிறார் மு.க. ஸ்டாலின்.