அஇஅதிமுக ஆட்சியையோ, பாஜக ஆட்சியையோ வீட்டுக்கு அனுப்ப இவர்களால் முடியாது! தயாநிதி அழகிரி!

வருகிற செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கும் பேரணியை யாருக்கும் எதையும் தெரிவிக்க நடத்தவில்லை. மறைந்த தலைவர் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தவே என் தந்தை இதை நடத்துகிறார். வேறெதுவும் இல்லை. எங்கள் பலத்தைக் காட்ட நடத்தப்படும் பேரணியாக நினைக்கிறார்கள் என்றால் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல.

நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தொடர்ந்து கூறியதாவது!

"என்னை திமுகவில் மீண்டும் சேர்க்கவில்லை கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எனது தந்தை பேசியுள்ளது" அவரது பார்வை. அது ஒருவகையில் உண்மையும் கூட. திமுகவின் நிரந்தரத் தலைவர் கருணாநிதி மட்டுமே புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பற்றி  நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. திமுகவுக்கு பங்காற்றியிருந்தாலும் எனது தந்தை புறக்கணிக்கப்படுகிறார்.

எனது தந்தையின் திட்டம் என்னவென்பதை அவர் அனைத்து பேட்டிகளிலும் கூறி வருகிறார். மீண்டும் தான் கட்சியில் இணைய வேண்டும் என்று பேசி வருகிறார். அவரை கட்சியில் சேர்த்து, நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வது பற்றிதான் திமுக யோசிக்க வேண்டும். இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடுவதாக இல்லை.

அதிமுக ஆட்சியை அகற்றுவோம் என்று கூறிவருகிறார்கள். ஆனால், இவர்களால் முடியாது. அதிமுக ஆட்சியை அகற்றுவோம் என்று கூறுவதை கேட்டுக் கேட்டு போரடித்துவிட்டது. திமுக பொதுச்செயலாளரை சந்திப்பது குறித்து எல்லாம் அப்பாவைத் தான் கேட்க வேண்டும். அப்பா அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலுமே, திமுக-வில் சேர்க்கச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார். அவர்கள் திமுகவில் சேர்த்துக்கொண்டால் சேருவோம்.

திமுக-வில் வீரமணி உள்ளிட்டவர்கள் அரசியல் குறுக்கீடு செய்வது தவறான விஷயம். அவர் ஒரு பெரியவர். குடும்பத்தில் இரண்டு பேருக்குள் சண்டை வருகிறது என்றால், சேர்த்து வைக்கப்படுவதுதான் பெரியவரின் பணி. அதை விடுத்து விருந்தாளி என்கிறார். அவர்கள் வீட்டில் எத்தனை விருந்தாளி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.


செப்டம்பர் 5-ம் தேதி பேரணிக்குப் பிறகு அதுவே பெரிய அறிவிப்பாக இருக்கும். திமுக-வில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். அப்பாவே பதவி எல்லாம் கேட்டதில்லை.

இவ்வாறு துரை தயாநிதி அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment