Sunday, August 5, 2018

தேனி கர்ணன் அமமுக விலிருந்து நீக்கம்? பின்னனி என்ன? தொடரும் சர்ச்சை!

ad300
Advertisement


‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்னிச்சையாகக் கழகத்தைச் சார்ந்தவர் போல, விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த தேனி கர்ணன் அவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் கழகத்திற்கு எதிரான விஷமத்தனமான செய்திகளைப் பரப்பி வருகிறார் எனத் தெரியவருகிறது. ஆகவே, கழகத் தோழர்கள் தேனி கர்ணனுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ -இப்படி ஒரு அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று தினகரனுக்கு ஆதரவாகப் பேசி வந்த தேனி கர்ணன் என்பவரைத்தான் ஒதுக்கியிருக்கிறார் டிடிவி தினகரன். என்ன நடந்தது என்பதைக் கர்ணன் ஆதரவாளர்களிடம் விசாரித்தோம்.

அத்தனைக்கும் காரணம், தினகரன் உதவியாளரான ஜனார்த்தனன்தான். கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவி வழங்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும் என கர்ணனிடம் டிமாண்ட் வைத்தார் ஜனார்த்தனன். ஆனால், கர்ணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘சொந்தக் காசை செலவு பண்ணிட்டு வந்து அண்ணனுக்காக பேசிட்டு இருக்கேன். உங்களால எனக்குப் பத்து பைசா வருமானம் இல்லை. இதுல அவ்வளவு பணத்துக்கு எங்கேபோறது?’ என்று கேட்டுவிட்டார்.

அத்துடன் ஜனார்த்தனன் பற்றி முகநூலிலும் பதிவிட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த வாரத்தில் தினகரன், மதுரைக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அங்கே கர்ணனும் போயிருந்தார். கர்ணனைப் பார்த்ததும் தினகரன் அவரை அருகே கூப்பிட்டார்.

‘உனக்கு மனசுக்குள்ள என்ன பெரிய ரவுடின்னு நினைப்பா? ஜனார்த்தனனை மிரட்டிட்டு இருக்க... ஜனாவைப் பத்தி எதாவது பேசினா தொலைச்சிடுவேன்...’ என எச்சரிக்க, டென்ஷனாகிவிட்டார் கர்ணன். அதே இடத்தில், பாக்கெட்டில் வைத்திருந்த தினகரன் படத்தை எடுத்துக் கிழித்து அவர் முன்பே போட்டுவிட்டு, ‘நீயுமாச்சு... உன் கட்சியுமாச்சு! உனக்காகப் பேசினேன் பாரு... என்னைச் செருப்பால நானே அடிச்சுக்கணும்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டார்.

அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பு கர்ணன் மீண்டும் ஒரு ஸ்டேட்டஸை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

உழைப்பவன் ஒதுக்கப்படும் அவலம் இப்போது நம் கழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. வணக்கம் கழக உறவுகளே... தியாகத் தலைவி சின்னம்மாவிற்குத் துரோகம் செய்து தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ் (பன்னீர்), பிறகு ஈபிஎஸ் (எடப்பாடி) செய்த துரோகம் வரையில் எதற்கும் அஞ்சாமல் மாவட்ட வாரியான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு முகநூலில் இந்தத் துரோகிகளைத் தைரியமாக விமர்சனங்கள் செய்து சிறை சென்றவர்கள் மிகப்பெரிய எதிர்ப்புகளைப் பெற்று மிரட்டல்களைச் சமாளித்து, கழகத்தில் உண்மையாக உழைத்தவர்களுக்கு இன்று தலைமையில் மரியாதை இல்லை. தற்போது பகட்டுக்கும், பணத்திற்கும், நடிப்புக்கும் மரியாதை கொடுக்க ஆரம்பித்துவிட்டது நமது தலைமை.

கழகத்திற்காக மாவட்ட வாரியாக நமது கழகத்தினர் எத்தனைப் பேர் சிறையில் இருந்தார்கள் என்ற தகவல் தலைமைக்குத் தெரியுமா? அவர்களுடைய குடும்பத்தில் பணம் விரயம், மன உளைச்சல் இவை அனைத்தும் தாண்டி கழகத்தில் போராடிக் கொண்டிருக்கும் உண்மையான போராளிகள் நிறைய பேர் கழகத்துடன் இருக்கின்றார்கள். ஏன் தலைமை இப்படிச் செயல்படுகிறது என்று கேள்வி கேட்டால் பதில் கிடையாது. நமக்கு மிரட்டல்தான் பதிலாக வருகிறது. ’உன்னை கட்சியிலிருந்து தூக்கிவிடுவேன்’ என்று செல்கிறது தலைமை. என்ன வேடிக்கை இது? இதுதான் அரசியலா? நாம் கழகத்தில் ஒரு அங்கீகாரம் பெறவேண்டும் என்றால் முதலில் (ஜனார்த்தனன்) அவர்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும். இல்லையெனில் செந்தில் பாலாஜி, பழனியப்பன் போன்று முக்கியமாக இருக்கும் ஐந்து பேர் நினைத்தால்தான் அங்கீகாரம் கிடைக்கும்.

நாம் எவ்வளவு உழைப்பு உழைத்திருந்தாலும் உழைத்துக் கொண்டிருந்தாலும் நம்மைத் தலைமை கண்டுகொள்ளாது. இப்போது நமது கழகத்தில் இதுபோன்றுதான் நடக்கிறது. கழக நண்பர்களே இது உண்மை, சத்தியம்.... என்னை நீங்கள் யாரும் தவறாக நினைக்கவேண்டாம் ..! நான் எனக்காகச் சொல்லவில்லை; என்னை போல் நிறைப் பேர் இருக்கின்றனர். கழகத்திற்காக உழைத்து கடன் பட்டு, துன்பப் பட்டு மனவலிமை இழந்து நீதிமன்றத்திற்கு மாதம் இருமுறை சென்றுகொண்டிருக்கின்றனர். இதில் நானும் ஒருவன். இப்படி ஒரு அரசியல் தேவையா ?’ என்பதுதான் கர்ணன் போட்ட ஸ்டேட்டஸ். அதன் பிறகுதான் அவர் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு விரட்டியிருக்கிறார்கள்.

‘தலைமை என்ன தப்பு செய்தாலும் பார்த்துட்டு அமைதியாக மட்டுமே இருக்கணும். கேட்டபோது பணத்தைக் கொண்டு போய்க் கொட்டணும். இதுதான் தினகரன் கட்சியோட நிலையாக இருக்குது. இப்படியே போயிட்டு இருந்தால், நாளைக்குத் தினகரன் கூட ஜனார்த்தனன் மட்டும்தான் இருப்பாரு. இதையெல்லாம் அவரு புரிஞ்சுக்கவே மாட்டாரு. ஏன்னா அவருக்கு ஜனா மட்டும்தான் முக்கியம்.’ என்று சொல்கிறார்கள். செய்தி Minnambalam.மேற்கண்ட செய்தி தொடர்பாக நாம் தினகரன் அணியின் நிர்வாகிகள் நியமனம் தொடர்புடைய நபர்கள் தரப்பில் பேசியபோது கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக!

தேனி கர்ணன் தினகரனுக்காக உழைத்தவர் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்க்காக அதிகமான குறுக்கீடுகளில் அவர் ஈடுபடுவது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவரை அமமுக விலிருந்து நீக்கினோம். குறிப்பாக "கடந்த வாரம் நம்நாடு செய்திகள் ல் வெளியான பதவி நியமனத்தில் பாரபட்சம்? போராடத்தயாரான தொழில்நுட்பபிரிவு! என்ற செய்தி வெளியானதற்க்குப் பிறகு தேனி கர்ணன் அவருடைய முகநூல் கணக்கில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வந்தார். அது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அமமுக மருத்துவர் அணியின் நிர்வாகி சந்திர மோகன் என்பவர் தேனி கர்ணனை தொடர்பு கொண்ட போது 18 Mlaக்களைப் பற்றி தவறாக விமர்சித்ததாகவும், குறிப்பாக பெரம்பூர் Mla வை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததாகவும் , அது தொடர்புடைய ஆடியோ ஆதாரங்களை தினகரனின் மனைவி அனுராதா அவர்களுக்கு சிலர் அனுப்பி வைத்ததாகவும், அதன் பேரில் தான் தேனி கர்ணன் நீக்கம் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். மேலும்

தற்போது தினகரனின் உதவியாளர் எந்த பதவி நியமன விவகாரங்களிலும் தலையிடக் கூடாது என்றும், தொழில்நுட்ப பிரிவின் பணிகளை மட்டும் மேற்பார்வையிடலாம், என்றும் தினகரன் உதவியாளர் ஜனா என்கிற ஜனார்த்தனனுக்கு தினகரனின் மனைவி அனுராதா அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்கள்.

யார் சொல்வது உண்மையோ?

எல்லாப் புகழும் ஜனாவுக்கே!
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 coment�rios: