Saturday, August 11, 2018

மோமோ? விளையாட்டு வினையாகும் பரிதாபம்!! விழிப்படையுமா இளைய சமுதாயம்?

ad300
Advertisement


இளைஞர்களின் உயிரை பலிவாங்க வாட்ஸ் அப்பில் படையெடுத்திருக்கும் அடுத்த விளையாட்டு தான் மோமோ சேலஞ்.
மோமோ சேலஞ் :

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்கள், சிறுவர்களின் உயிரை பறிக்க வந்த ஒரு வாட்ஸ் அப் விளையாட்டு தான் நீல திமிங்கலம் (blue whale challenge). இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
விளையாட்டு வினையாகும் என்பார்கள். அதுப்போல் இந்த நீல திமிங்கல விளையாட்டு எமனாக வந்தது. ரஷ்யாவில் தொடங்கிய இந்த ஆபத்தான விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக பரவி தமிழகத்தில் நுழைந்தது.அதன் பின்பு வாட்ஸ் அப்பில் பரவி ஓட்டு மொத்த இளைஞர்களின் பாசக்கயிராக மாறியது. இந்த நீல திமிங்கல விளையாட்டுக்கு முதலில் பலியான மதுரையை சேர்ந்த விக்னேஷின்ப் குடும்பத்தார் இன்று வரை அவனது பிரிவை நினைத்து கதறி வருகிறார்கள்.


அதன் பின்பு ஒருவழியாக இந்த விளையாட்டு குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இளைஞர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த பிரச்சனை தமிழகத்தில் ஓய்ந்து விட்டது எனேறு நினைத்திருந்தால் அதை விட கொடூரமான மற்றொரு விளையாட்டு ஒன்று தற்போது உருவெடுத்துள்ளது.

மோமோ சேலஞ் என்று அழைப்படும் இந்த விளையாட்டு நீல திமிங்கலத்தை போலவே தற்கொலையைத் தூண்டக் கூடிய ஒரு விளையாட்டு ஆகும். பிதுங்கிய உருண்டை கண்கள், விரிந்த முடிகள், வெளிர் நிற தோலுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கும் முகம் தான் மோமோ.
பார்த்த உடன் பயத்தை தரும் இந்த பெண் தான் நம்மை இறுதியில் தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறாள். சமீபத்தில் இந்த விளையாட்டை விளையாடிய அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி வீட்டு மாடியிலிருந்து குத்தித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த சிறுமியின் தற்கொலையில் ஆரம்பித்த விசாரணையில் தான் மோமோ சேலஞ் குறித்த அனைத்து தகவல்களும் காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
மோமோ சவாலில் இணையும் நபர்கள் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். மோமோ சவாலில் நீங்கள் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் அதற்கு பதிலாக உங்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் வரும். நீங்கள் இந்த சேலஞ்சை விளையாட துவங்கியதும் உங்கள் ஃபோன் ஹாக் செய்யப்பட்டு விடும்.
ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் தோன்றும் மோமோ சவாலில் பங்கு கொள்வதால் உளவியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படக்கூடும். மோமோ கட்டளையிடும் சேலஞ்களை நீங்கள் செய்யவில்லை என்றால் அது உங்களை மிரட்ட ஆரம்பித்து விடும். நீங்கள் பலவீனம் ஆகக் கூடிய தகவல்களை வைத்து உங்களை மிரட்டும் கடைசியில் வெறுவழியின்றி நீங்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இளைஞர்களே உஷார்:

தற்போது இந்த விளையாட்டு இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளனர். வாட்ஸ் அப் மூலம் பரவு இந்த விளையாட்டு லிங் போல் உங்கள் வாட்ஸ் அப் சேட்டிற்குள் வரும். அதை கிளிக் செய்து உள்ளே சென்றால் உங்களிடம் தனிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லும் போதே உங்களின் ஃபோன் ஹாக் செய்யப்பட்டு, நீங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அந்த விளையாட்டை நீங்கள் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள்.

மோமோவின் கொடூரமான முகம் 2016-ல் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள வெண்ணிலா கேலரியில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்ட சிலைக்கு சொந்தமானது. அருவருப்பான முகம் மற்றும் பறவையின் உடல் கால்கள் என அமைந்து இருக்கும் இந்த சிலை கிராபிக் செய்து மோமோ பெண்ணாக மாற்றி உள்ளனர்.
இந்த சேலஞ் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் முன்பின் அறியப்படாத எண்ணுடன் தொடர்பு கொள்ளவோ, அதனுடன் செய்திகள் பரிமாறிக் கொள்ளவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra