Friday, September 14, 2018

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டில்லி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய பிறகு ஓ.பன்னீரும், எடப்பாடியும் பொதுச் செயலாளர் என்ற பதவியையே ஒழித்து விட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இனி இருக்கும் என்றும் கூறினார்கள்.

இது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு மாறானது என்றும்,  அதிமுகவின் விதி 43ன்படி, எந்த விதிகளை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால் ஒரே ஒரு விதியை மட்டும் பொதுக்குழு வால் மாற்ற முடியாது. அதாவது பொதுச் செயலாளர் என்பவர் கட்சியின் கடைக்கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்' என்றதாக கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுச் செயலாளர் என்ற பதவியையே ஓ.பன்னீரும், எடப்பாடி பழனிசாமியும் நீக்கியிருக்கிறார்கள். இது அதிமுகவின் அமைப்பு சாசனத்துக்கு எதிரானது. என டில்லி நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்  தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்கில் இருதரப்பினரும் மூன்று வாரங்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும், அதன் பின்னர் தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தை விசாரித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Sunday, September 9, 2018

தமிழக அரசுக்கு #செக் வைக்க முயற்சிக்கும் #IPS அதிகாரிகள்? காவல்துறை வட்டார பரபப்பு!

குட்கா ஊழல் முறைகேடு வழக்கில் கடந்த வாரம் சி.பி.ஐ அதிகாரிகள் தற்போதைய டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். நாள் முழுவதும் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து டி.ஜி.பி., ராஜேந்திரன் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் டி.ஜி.பியாக உள்ள ராஜேந்திரனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப சி.பி.ஐ ஆயத்தமாகி வருகிறது.
  
பதவிக் காலம் முடிந்த நிலையில் பணி நீட்டிப்பு செய்து ராஜேந்திரன் டி.ஜி.பி பதவியில் உள்ளார். இந்த நிலையில் சி.பி.ஐ விசாரணைக்கு டி.ஜி.பியாக சென்று ஆஜரானால் தமிழகத்திற்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு டி.கே.ராஜேந்திரன் விரைவில் டி.ஜி.பி பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. முதலில் பிரச்சனையை எதிர்கொள்ள தயாரான ராஜேந்திரன் தற்போது தனக்கு டி.ஜி.பி பதவி வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
  
ஆனால் டி.ஜி.பியாக ஒருவரை தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிக்குமாறு ராஜேந்திரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் புதிய டி.ஜி.பி நியமனத்திலும் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். தற்போது சென்னை காவல் ஆணையராக உள்ள ஏ.கே.விஸ்வநாதன் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கிறார். இதனால் உளவுத்துறை ஏ.டி.ஜி.பியாக விஸ்வநாதனை நியமித்துவிட்டு கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பொறுப்பையும் ஒப்படைக்கலாம் என்பது தான் எடப்பாடியின் திட்டம்.
  
இதற்கு முன்னதாக சென்னை காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரனும் இதே பாணியில் தான் சில காலம் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவியை கூடுதலாக கவனித்து வந்தார். இதன்படியே விஸ்வநாதனை டி.ஜி.பியாக நியமிக்க எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரும், ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரும் விஸ்வாநதன் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாகிவிடக்கூடாது என்று காய் நகர்த்தி வருகின்றனர்.
  
அதிலும் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் அந்த அதிகாரி தற்போதைய டி.ஜி.பி ராஜேந்திரனுக்கு மிகவும் நெருக்கம். அவர் மூலமாக தற்போது டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரை எப்படியாவது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இந்த முயற்சியை வலுப்படுத்தும் விதமாக டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள ஒருவரை புதிய டி.ஜி.பியாக நியமிக்காமல் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ளவரை நியமித்தால் பின்விளைவுகள் ஏற்படும் என்கிற ரீதியில் சில தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
  
அதாவது தற்போதைய ஆட்சியாளர்கள் குறித்து காவல்துறையின் உளவுத்துறை சேகரித்து வைத்துள்ள தகவல்கள் வெளியிடப்படும் என்கிற ரீதியில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் தொனியில் இந்த தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தான் டி.ஜி.பி  ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்வதிலும், புதியவரை தேர்வு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
  
இதனிடையே தி.மு.க ஆட்சி காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவராக திகழ்ந்த ஜாஃபர் சேட் புதிய டி.ஜி.பியாக நியமிக்கப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க ஆட்சியில் இருந்த போது சி.பி.ஐயின் நடவடிக்கைகளை கண்காணித்து உடனுக்கு உடன் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு ஜாஃபர் சேட் அப்டேட் செய்து கொண்டே இருந்தார். இதன் காரணமாகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரிய அளவில் சிக்காமல் தி.மு.கவால் தப்பிக்க முடிந்தது.
  
தற்போதும் சி.பி.ஐ தமிழக அரசுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள ஜாஃபர் சேட் சரியான ஆளாக இருப்பார் என்று முதலமைச்சரிடம் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜாஃபர் சேட் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் கோட்டையில் உள்ள உயர் அதிகாரிகள்.

தமிழக அரசுக்கு கோரிக்கை!

தமிழக அரசுக்கு கோரிக்கை!

பரமக்குடி_செப்11 இமானுவேல் சேகரனின் குருபூஜை விழா செப்11 அன்று பரமக்குடியிலுள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது...
#தமிழக_முதல்வரின்_சிறப்பான_ஆலோசனைகளின்படி
#இராமநாதபுர_மாவட்ட அனைத்து துறை நிர்வாகங்களும் ஒருங்கினைந்து விழாவுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றன.
#குறிப்பாக தமிழக காவல்துறை பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.....
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை #தமிழக_காவல்துறை மிகவும் கவனமாக செயல்படுத்தி வருகிறது...
#என்றாலும் #தற்போதிருக்கும்_தமிழக_அரசியல் சூழலில் #தமிழக_அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கலாம் என்ற ஐயம் நமக்கு ஏற்பட்டுள்ளது...
எனவே #தமிழக_அரசும் #தமிழக_காவல்துறையும் மிகவும் கவனமாக கையாளவேண்டிய தருணமிது! கடந்த ஆண்டு அரசியல் சூழல் வேறு, தற்போதைய அரசியல் சூழல் வேறு என்பதை கவனத்தில் கொண்டு #தமிழக_அரசு செயல்பட்டால் #நாளைய_வரலாறு #ஆளும்_அஇஅதிமுக_தலைமையிலான_தமிழக_அரசை சிறந்த அரசென தனது பக்கத்தில் பதிவு செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.....

Tuesday, September 4, 2018

வாக்காளர் சேர்க்கை/ நீக்கம்? காஞ்சிபுர மாவட்டம் முன்னிலை!

வாக்காளர் சேர்க்கை/ நீக்கம்? காஞ்சிபுர மாவட்டம் முன்னிலை!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 -ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, இறந்தவர்கள், இருப்பிடத்தில் இருந்து இடம் மாறியவர்கள், இரு இடங்களில் பெயர் பதிவு செய்தவர்கள் ஆகியோரை நீக்கும் பணிகளில் ஆணையம் தீவிரம் காட்டியது.
எந்தெந்த மாவட்டங்கள்?: இறந்தவர்கள் குறித்து அவர்களது இறப்புச் சான்றிதழ் மூலமாகவும், இடம்மாறியவர்கள், இரு இடப் பதிவு போன்றவை கள ஆய்வு மற்றும் கணினி வழியாகவும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. போதிய ஆதாரங்களுடன் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 186 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இதில், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 439 இறந்து போன வாக்காளர்களின் பெயர்களும், 3 லட்சத்து 17 ஆயிரத்து 189 இடம்மாறிய வாக்காளர்கள், 75 ஆயிரத்து 558 இரு இடங்களில் பதிவு உள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவை அடங்கும்.
ஆகஸ்ட 31-ஆம் தேதி நிலவரப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக அதிகமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில், இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 922. இடம்மாறியவர்கள் 66 ஆயிரத்து 749. இரு இடங்களில் பதிவு செய்தவர்கள் 18 ஆயிரத்து 371 பேர் ஆகும்.
இதேபோன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. அதில், இறந்தவர்கள் 12 பேரும், இடம் மாறியவர்கள் 118 பேரும், இரு இடங்களில் பதிவு செய்தோர் 31 பேரும் அடக்கம்.
இதர மாவட்டங்களில் ஆயிரம் முதல் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
என்ன செய்யலாம்?: வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சரி செய்யும் இந்தப் பணியில், வாக்காளர்கள் யாருடைய பெயர்களாவது தேவையில்லாமல் நீக்கப்பட்டிருந்தால், அவர்கள் சுருக்க முறைத் திருத்தத்தைப் பயன்படுத்தி பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பணிகள் செப்டம்பர், அக்டோபர் ஆகிய இந்த இரண்டு மாதங்கள் மேற்கொள்ளப்படும்.
எனவே, தமிழகத்தில் கடந்த 1 -ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் சரிபார்த்து தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Monday, September 3, 2018

"ஒரே நாடு ஒரே தேர்தல்" தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை!

"ஒரே நாடு ஒரே தேர்தல்" தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை!

'மின்னணு இயந்திரம் வாங்க 4,555 கோடி ரூபாய் தேவை'

புதுடில்லி : 'லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தலை, உடனடியாக நடத்த வேண்டுமானால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கு, 4,555 கோடி ரூபாய் தேவை' என, சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த விவாதம் நடந்து வருகிறது.
இது குறித்து, மத்திய சட்ட அமைச்சகம், சமீபத்தில் தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கை:

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பி.ஏ.டி., எனப்படும் ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவை அதிகளவில் தேவை என, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தற்போதைய நிலையில், உடனடியாக லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தினால், 12.9 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், ஓட்டுப் பதிவை உறுதி செய்வதற்கான, 12.3 லட்சம் இயந்திரங்கள் தேவை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தற்போதைய விலையின்படி, உடனடியாக, 4,555 கோடி ரூபாய் இதற்கு தேவைப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் ஆயுட்காலம், 15 ஆண்டுகள். அதன்படி, 2024ல், தேர்தலை நடத்துவதற்கு, தற்போதைய விலையின்படி, இயந்திரங்கள் வாங்க, 1,751 கோடி ரூபாய் தேவைப்படும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் சேர்க்கை/நீக்கம்! காஞ்சிபுரம் முன்னிலை!