ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டில்லி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய பிறகு ஓ.பன்னீரும், எடப்பாடியும் பொதுச் செயலாளர் என்ற பதவியையே ஒழித்து விட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இனி இருக்கும் என்றும் கூறினார்கள்.

இது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு மாறானது என்றும்,  அதிமுகவின் விதி 43ன்படி, எந்த விதிகளை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால் ஒரே ஒரு விதியை மட்டும் பொதுக்குழு வால் மாற்ற முடியாது. அதாவது பொதுச் செயலாளர் என்பவர் கட்சியின் கடைக்கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்' என்றதாக கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுச் செயலாளர் என்ற பதவியையே ஓ.பன்னீரும், எடப்பாடி பழனிசாமியும் நீக்கியிருக்கிறார்கள். இது அதிமுகவின் அமைப்பு சாசனத்துக்கு எதிரானது. என டில்லி நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்  தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்கில் இருதரப்பினரும் மூன்று வாரங்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும், அதன் பின்னர் தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தை விசாரித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment