Wednesday, October 31, 2018

அஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள்! கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு

மறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வேறு சங்கடங்களையும் சந்தித்து வருகிறது #ஆளும்_அஇஅஇதிமுக!
 இந்தநிலையில்

'தேசிய கட்சியோ அல்லது உச்ச நடிகரோ
 அஇஅதிமுக கட்சியைத் தவறாக வழிநடத்த வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க பலமான கட்சி. அதைச் சீரழிக்கின்ற முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஈடுபட்டுள்ளனர் என்று கோவையில் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா என கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக சட்டவிதிகளில் மேற்கொண்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரிய கே.சி.பழனிச்சாமியின் மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

அதிமுகவின் சட்டவிதிகளில் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் மாற்றங்களை கொண்டு வந்தனர். இதை ரத்து செய்து, கட்சியில் இருந்து நீக்கியவர்கள் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து சட்டவிதி திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட தேவையில்லை என விளக்கம் அளித்தது. இதையடுத்து கே.சி.பழனிச்சாமி மனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இது தொடர்பாக நேற்று கோவையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அஇஅதிமுக/நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாவது'

 Ttv தினகரன் அணியிலிருக்கும் தகுதிநீக்க எம்ஏக்களில் ஒருவரான "வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் தங்களால் முடிவெடுக்க முடியவில்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதனால் நடக்க இருக்கும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கூட்டணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம் இன்று வழங்கிய உத்தரவு தெளிவற்ற நிலையில் இருக்கிறது.


டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் ஆகிய இருவருடைய கையெழுத்துக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறேன். தற்போது அ.தி.மு.க-வில் ஈபி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்ஸுடன்  இருக்கும் 5000 பேர் மட்டுமே திருப்தியாக இருக்கின்றனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒருவர்கூட திருப்தியாக இல்லை. இங்கு கட்சி ஆட்சியை நடத்தவில்லை. ஆட்சிதான்  கட்சியை நடத்துகிறது. கிளை அளவில் உள்ள செயலாளர்களும், தொண்டர்களும் இப்போது பொறுப்பில் இருப்பவர்களை ஏற்கவில்லை.

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனத் தான் கேட்கவில்லை.  கட்சியின் 'பை-லா' திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியை பலகீனப்படுத்தும் செயலில் இப்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் மீதான வழக்குகளைக் காரணம் காட்டி, கட்சியைப் பலவீனப்படுத்த முடியும் என்பதால் இதை எதிர்க்கிறேன். ரஜினி ஒரு அணியாகவும் தி.மு.க ஒரு அணியாகவும் போட்டி எனச் சொல்வதை ஏற்க முடியாது. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மட்டுமே தனித் தனி அணிகளாகப் போட்டிக் களத்தில் இருக்கும். தற்போது கட்சிக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது

 பதவி பறிபோன 18 எம்.எல்.ஏ-க்களை இன்னமும் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கவில்லை. அவர்களைக் கட்சிக்கு வாருங்கள் என  ஈபிஎஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் அழைப்பது என்பது காமெடியாக இருக்கிறது" என்றவர், நான் இப்போதும் அ.தி.மு.க காரன்தான். தேர்தல் வைத்து முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் மட்டுமே எனக்குத் தலைவர். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் சசிகலா, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்  அவர்களைத் தலைவராக ஏற்கத் தயார். ஆனால், கட்சியின் பை-லா'வை மாற்றிய செயல்பாடு கட்சியைப் பலவீனப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கட்சியில் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும். தினகரனுக்கு பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடத் தகுதியில்லை. தேசிய கட்சியோ, ஒரு நடிகரோ இந்தக் கட்சியைத் தவறாக வழிநடத்த வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க பலமான கட்சி. அதைச் சீரழிக்கின்ற முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஈடுபட்டுள்ளனர். ஏதோ ஒரு அழுத்தத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருக்கின்றன" என்றார்.

Tuesday, October 30, 2018

தினகரனை கை கழுவும் சசிகலா? ஆட்சிக்கு நாள் குறித்தாரா?

“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவரசி பரோலில் வரவில்லை. இப்போது கடந்த 25ஆம் தேதி இளவரசி மட்டும் பரோலில் வெளி வந்திருக்கிறார். நவம்பர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என்று இளவரசிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளவரசி திடீரென பரோலில் வந்ததற்கு நிஜமான காரணம் என்ன என விசாரித்தோம். ‘சசிகலாவை பெங்களூரு சிறையில் ஜோதிடர் ஒருவர் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் ஆட்சியை கலைக்க உடனடியாக 7 இடங்களில் யாகம் நடத்தும்படி அந்த ஜோதிடர் சொல்லியிருக்கிறார். அண்மையில் ஜெயிலில் வந்து சந்தித்த தினகரனிடம் கூட இதைப் பற்றி சசிகலா சொல்லவில்லையாம். யாகம் நடத்த வேண்டிய 7 இடங்களை ஜோதிடரே குறித்துக் கொடுத்துவிட்டாராம். அந்த இடங்களில் யாகத்தை நடத்தி முடிக்கத்தான், இளவரசியை வெளியில் போய் வரச் சொல்லியிருக்கிறார். அந்த திட்டத்தின்படிதான் இளவரசி வெளியே வந்திருக்கிறார்.

ஒரு இடத்தில் யாகம் நடத்த ஒரு கோடி ரூபாய் செலவு ஆகும் என்று அந்த ஜோதிடர் சொல்ல... அதன்படி 7 இடங்களிலும் யாகம் நடத்த 7 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் சசிகலா ஒப்புக் கொண்டாராம். 7 இடங்களிலும் யானைக் குட்டியை வைத்துதான் யாகம் நடத்த வேண்டும் என்றும் , யானைக்குட்டியோடு குதிரையும் பசுவும் தானம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த ஜோதிடர் சொன்னாராம். அத்துடன் அதற்கான ஏற்பாடுகளை தானே செய்துவிடுவதாகவும் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். அந்த யாகத்தில் சசிகலா குடும்பத்தில் இருந்து யாராவது பங்கேற்க வேண்டும் என்பதால், அதை தினகரனை நம்பி ஒப்படைக்காமல் இளவரசியை போகச் சொல்லியிருக்கிறார் சசிகலா.

ஆற்காடு அருகே ஒரு இடத்திலும் தேனி அருகே ஒரு கோயிலிலும், மூன்று நதிகள் சங்கமிக்கும் ஒரு இடத்திலும் இதற்கான யாகத்தை தொடங்கிவிட்டார்களாம். இந்த யாகங்களில் சத்தமில்லாமல் போய் பங்கேற்று வருகிறாராம் இளவரசி. இந்த யாகத்துக்கான செலவுகளை எல்லாம் இளவரசி மூலமாகவே செட்டில் செய்துவிட்டாராம் சசிகலா. கடந்த இரண்டு நாட்களாக யாகத்தை தொடங்கி விறு விறுவென நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
இளவரசி பரோலில் வந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. இளவரசியின் மகன் விவேக். அவரது மனைவி கீர்த்தனா. அதாவது இளவரசியின் மருமகள் தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். அவருக்கு வளைகாப்பு நடத்த வேண்டிய மாதம் என்பதால், அதில் தன்னுடைய அம்மாவும் இருக்க வேண்டும் என விவேக் விருப்பப்பட்டிருக்கிறார்.

சசிகலாவையும் சேர்த்தே விவேக் அழைத்திருக்கிறார். ஆனால், சிறை விதிப்படி இப்போது சசிகலா வர முடியாது என்பதால் இளவரசி மட்டும் வந்திருக்கிறார். ஆக, வளைகாப்பு, யாகம் என டூ இன் ஒன் வேலையாகத்தான் வந்திருக்கிறார் இளவரசி” என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்”....  #thanks_to_minnambalam

 கடந்த 2016 மற்றும் 2017ஆண்டுகளில் முதல்வர் பதவியை இழந்த பிறகு மீண்டும் முதல்வர் பதவியில் அமர தர்மயுத்ததை ஆரம்பித்த ஒ.பன்னீர்சலெ்வம் அவர்களால் குதிரையை வதை்து யாகம் நடத்திய பிறகு அவருக்கு துணை முதல்வர் பதவி கிடதை்தது குறிப்பிடத்தக்கது..




Wednesday, October 24, 2018

தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லுமா? செல்லாதா? பிற்பகலில் தீர்ப்பு வெளியாகிறது!


முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். கடந்த, 2017 செப்டம்பரில், இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.


அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியிடம் இந்த வழக்கு சென்றது. மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சத்யநாராயணன், கடந்த ஜூலை மாதம் முதல் விசாரணையை தொடங்கி இருதரப்பு வாதங்களையும் கேட்டு வந்தார்

மொத்தம் 12 நாட்கள் நடந்த விசாரணை முடிவடைந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவரவுள்ளதாக செய்திகள் கசிந்தது. இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் எனன எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கின் தீர்ப்பை, இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி சத்யநாராயணன் வழங்குவார் என நள்ளிரவு வெளியான சென்னை ஐகோர்ட் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.