Wednesday, October 31, 2018

அஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள்! கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு

ad300
Advertisement
மறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வேறு சங்கடங்களையும் சந்தித்து வருகிறது #ஆளும்_அஇஅஇதிமுக!
 இந்தநிலையில்

'தேசிய கட்சியோ அல்லது உச்ச நடிகரோ
 அஇஅதிமுக கட்சியைத் தவறாக வழிநடத்த வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க பலமான கட்சி. அதைச் சீரழிக்கின்ற முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஈடுபட்டுள்ளனர் என்று கோவையில் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா என கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக சட்டவிதிகளில் மேற்கொண்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரிய கே.சி.பழனிச்சாமியின் மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

அதிமுகவின் சட்டவிதிகளில் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் மாற்றங்களை கொண்டு வந்தனர். இதை ரத்து செய்து, கட்சியில் இருந்து நீக்கியவர்கள் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து சட்டவிதி திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட தேவையில்லை என விளக்கம் அளித்தது. இதையடுத்து கே.சி.பழனிச்சாமி மனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இது தொடர்பாக நேற்று கோவையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அஇஅதிமுக/நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாவது'

 Ttv தினகரன் அணியிலிருக்கும் தகுதிநீக்க எம்ஏக்களில் ஒருவரான "வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் தங்களால் முடிவெடுக்க முடியவில்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதனால் நடக்க இருக்கும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கூட்டணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம் இன்று வழங்கிய உத்தரவு தெளிவற்ற நிலையில் இருக்கிறது.


டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் ஆகிய இருவருடைய கையெழுத்துக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறேன். தற்போது அ.தி.மு.க-வில் ஈபி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்ஸுடன்  இருக்கும் 5000 பேர் மட்டுமே திருப்தியாக இருக்கின்றனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒருவர்கூட திருப்தியாக இல்லை. இங்கு கட்சி ஆட்சியை நடத்தவில்லை. ஆட்சிதான்  கட்சியை நடத்துகிறது. கிளை அளவில் உள்ள செயலாளர்களும், தொண்டர்களும் இப்போது பொறுப்பில் இருப்பவர்களை ஏற்கவில்லை.

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனத் தான் கேட்கவில்லை.  கட்சியின் 'பை-லா' திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியை பலகீனப்படுத்தும் செயலில் இப்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் மீதான வழக்குகளைக் காரணம் காட்டி, கட்சியைப் பலவீனப்படுத்த முடியும் என்பதால் இதை எதிர்க்கிறேன். ரஜினி ஒரு அணியாகவும் தி.மு.க ஒரு அணியாகவும் போட்டி எனச் சொல்வதை ஏற்க முடியாது. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மட்டுமே தனித் தனி அணிகளாகப் போட்டிக் களத்தில் இருக்கும். தற்போது கட்சிக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது

 பதவி பறிபோன 18 எம்.எல்.ஏ-க்களை இன்னமும் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கவில்லை. அவர்களைக் கட்சிக்கு வாருங்கள் என  ஈபிஎஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் அழைப்பது என்பது காமெடியாக இருக்கிறது" என்றவர், நான் இப்போதும் அ.தி.மு.க காரன்தான். தேர்தல் வைத்து முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் மட்டுமே எனக்குத் தலைவர். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் சசிகலா, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்  அவர்களைத் தலைவராக ஏற்கத் தயார். ஆனால், கட்சியின் பை-லா'வை மாற்றிய செயல்பாடு கட்சியைப் பலவீனப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கட்சியில் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும். தினகரனுக்கு பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடத் தகுதியில்லை. தேசிய கட்சியோ, ஒரு நடிகரோ இந்தக் கட்சியைத் தவறாக வழிநடத்த வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க பலமான கட்சி. அதைச் சீரழிக்கின்ற முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஈடுபட்டுள்ளனர். ஏதோ ஒரு அழுத்தத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருக்கின்றன" என்றார்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra