Saturday, November 3, 2018

தமிழகத்தில் டெங்கு ! தமிழக அரசுக்கு ஊதுமா சங்கு?




தமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 

* தற்போது 315 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 பேர் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். 

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. 

* பன்றி காய்ச்சலுக்காக ஜனவரி 1 முதல் அக்டோபர் 1 வரை 917 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 16 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

* பன்றிக் காய்ச்சலுக்காக ஒரு நாளைக்கு சராசரியாக 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். 

மேற்கண்ட பட்டியல் தமிழக சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டது...

ஆனால் 

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் சில கோடிகளைத் தாண்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்..

மேலும் 
நோய்த்தடுப்பு மருந்துகள் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் முறையாக அனுப்பப்படவில்லையென்றும், மருத்துவமனைகளுக்கு வரும் காய்ச்சல் தொற்றுள்ள நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பூசி போடுவதற்கு மருத்துவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை, மூன்று நாட்களுக்குத் தேவையான மருந்து,மாத்திரைகளை மட்டும்கொடுத்து அனுப்புகிறார்கள். இன்றைய கால கட்டத்தில் எந்த தரப்பும் சாதாரண காய்ச்சல் என்று மருத்துவமனைகளை நாடுவதில்லை.. முதலில் மருந்துக்கடைகளில் காய்ச்சலுக்கென்று கிடைக்கும் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தி, குணமடையவில்லையென்றால் மட்டுமே மருத்துவமனைக நாடுகிறார்கள்..

அப்படியிருக்கும் போது சாதாரண காய்ச்சலுக்கென வழங்கப்படும் வகை மாத்திரைகளையே அரசு மருத்துவமனைகளிலும் வழங்குகிறார்கள்....

மாத்திரைகளால் குணமடையாமல் தானே மக்கள் மருத்துவமனைகளை நாடுகிறார்கள், மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சலுக்கென போடப்படும் தடுப்பூசிகளால் மட்டுமே தற்போதைய நிலையில் டெங்கு,பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் மருத்துவத்துறையில் நிபுணத்துவம் பெற்ற சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.....

தமிழகத்தில் எப்போதுவரும் என்று தெரியாத 20 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றிபெற முனைப்புக்காட்டும் தமிழக அரசு தற்போது பரவிவரும் வைரஸ் காய்ச்சலைத்தடுக்க போதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும், அவ்வாறு தமிழக அரசு செயல்படாத பட்சத்தில், இடைத்தேர்தல், நாடாளுமன்றத்தேர்தல்களில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரும் என்பது நம்நாடு செய்திகளின் தனிப்பட்ட கருத்தாகும்.....