Friday, December 7, 2018

திருப்பரங்குன்றத்தில் வேட்பாளராகும் அஇஅதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன்!

ad300
Advertisement
மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் மறைவுக்குப்பிறகு ஆளும் அஇஅதிமுக கட்சியில் பல்வேறு நபர்களும் தங்களை முன்னிறுத்த பல்வேறு வகைகளில் போராடி வருகின்றனர்....இந்த நிலையில் அஇஅதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளில் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா அவர்களின் மகனுமான ராஜ் சத்யன் சமீபகாலமாக ரகசியமாக தனக்கான செல்வாக்கை உயர்த்தும் வகையில் மதுரை சுற்றுவட்டாரங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்ளிடையே அவ்வப்போது கலந்துரையாடல்,  விளையாட்டுப்போட்டிகள் என்று அஇஅதிமுகவுக்கென்று இருக்கும் வாக்குவங்கியை உயர்த்த தீவிரமாக களப்பணியாற்றி வருவதாக நமக்கு தகவல்கள் கிடைத்தது..நமக்கு கிடைத்த தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்துகொள்ளவும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை அறியும் நோக்கில் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மக்களின் மனநிலையை அறிந்துகொள்ள முற்பட்டோம்.... பெருவாரியான இளைஞர்களும், புதிய வாக்காளர்களும் #அஇஅதிமுக வை தாங்கள் ஆதரிப்பதாக கருத்து தெரிவித்தனர்..    ஆளும்   அஇஅதிமுக வை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும் மதுரை மக்களிடையே அஇஅதிமுகவின் செல்வாக்கு சரிவடையாமல் இருக்கும் காரணத்தை அறிய முற்பட்டோம்.... அதுகுறித்த தகவல்கள் மக்களின் பார்வைக்கு!!! அஇஅதிமுக தொழில்நுட்ப மாநில நிர்வாகிகளிடையே யார் பெரியவன் என்கிற ரீதியிலான சமூகவலைதள  மோதல்கள் நாள் தோறும் அரங்கேறிவருகிறது....இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு அஇஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முதல்வருமான "எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சேலத்தில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய ராஜ் சத்யன் வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் தனக்கு மதுரை தொகுதியில் எம்பியாக போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்துப் பேசியுள்ளார்.... அதற்கு முதல்வரோ மதுரைப் பகுதியில் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கை உயர்த்துங்கள், விரைவில் வரவிருக்கும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அஇஅதிமுக அமோக வெற்றிபெற ஆவண செய்யுங்கள், அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராகலாம் என்று அறிவுறுத்தியுள்ளார் தமிழகமுதல்வர்....     இதனையடுத்து களமிறங்கிய ராஜ் சத்யன்  திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்குகும் புதிய வாக்காளர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் அஇஅதிமுக அரசின் சாதனைகளைக் கூறும் வகையிலான கருத்தரங்கங்களையும்,இளைஞர்கள் ரசிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியதால் குறிப்பட்ட சதவீத இளைஞர்களிடையே அஇஅதிமுக வின் செல்வாக்கு உயரத்துவவங்கியது....மேலும் திருப்பரங்குன்ற வேட்பாளராக முயற்சிகள் மேற்கொண்ட முன்னாள் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீ செல்வத்தின் ஆதரவாளருமான முத்துராமலிங்கம் அவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் பங்குக்கு வீடுகள் தோறும் மேற்கொண்ட பிரச்சாரங்களின் விளைவாகவும் குறிப்பபிட்ட அளவு அஇஅதிமுக ஆதரவு மனநிலை மக்களிடையே உயர்வடைந்தது... இது தொடர்பாக தனியார் அமைப்புகள் மேற்கொண்ட சர்வே முடிவுகளும் அஇஅதிமுக வுக்கு திருப்பரங்குன்றத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை சுட்டடிக்காட்டடியுள்ளன...

அந்த சர்வே முடிவுகளை முதல்வரும் அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பபாளருமான எடப்பாடியாரிடம் சமர்ப்பித்து, தன்னுடைய கடும் முயற்சியால் தான் திருப்பரங்குன்றத்தில் அஇஅதிமுக ஆதரவு நிலை அதிகரித்துள்ளது, எனவே தனக்கு திருப்பரங்குன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார், ராஜ்சத்யன்...
அதற்கு எடப்பாடியாரோ தாராளமாக நீங்க போட்டியிடுங்க... ஆனா அஇஅதிமுகவில் வேறு யாரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்துடக்கூடாது,அப்படி வந்தால் சீனியாரிட்டி அடிப்படையில் வாய்ப்பு கொடுக்க நேரிடும் என்று கூறியுள்ளார்...

அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் என்று பலராலும் பேசப்பட்ட முத்துராமலிங்கத்தை சந்தித்து கடந்த நவம்பர் 7ந்தேதி அன்று ராஜன் செல்லப்பா மற்றும் ராஜ் சத்யன் கூடவே சில பத்திரிக்கையாளர்களும் சமரசம் செய்து கொண்டதாகவும், திருப்பரங்குன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முத்துராமலிங்கம் கூறியதாகவும் நம்க்கு தகவல் கிடைத்தது...


 இதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முத்துராமலிங்கத்தின் தீவிர ஆதரவாளரைத் தொடர்பு கொண்டு பேசினோம்... அவர் மேற்கண்ட தகவல் உண்மையில்லை, முத்துராமலிங்கம் அவர்களே திருப்பரங்குன்ற வேட்பாளரென்று அடித்ததுக் கூறினார்....ஆனால் நேற்று தனியார் தொலைக்காட்சி விவாதமொன்றில் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ராஜ்சத்யன் திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்...

யார் போட்டியிட்டாலும் எதிரணி உள்ளடி வேலைகளைச் செய்து ஆர்கே நகர் போன்ற தோல்வியை அஇஅதிமுவுக்கு பெற்றுத்தந்து விடுமோ என்பதே தற்போதைய அஇஅதிமுக வினரின் மனநிலையாக உள்ளது என்பதே நிதர்சனம்....
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra