கூடுதல் பணிச்சுமையில் "தமிழக காவல்துறை! கண்டுகொள்ளுமா #தமிழக_அரசு?#24_மணிநேரமும் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கும் அரசாணையை @EPSTamilNadu தலைமையிலான தமிழக அரசு பிறப்பித்துள்ளது....


தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைக்க அனுமதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக, தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதிக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

அரசு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதன்படி பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும், நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய வேண்டும், ஓவர் டைமுடன் சேர்த்தால் கூட நாளொன்று பத்தரை மணி நேரம் மட்டுமே வேலைவாங்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. பெண் பணியாளர்கள் இரவு 8 மணிக்கு மேல் பணியில் இருக்க கூடாது, இரவு 8 முதல் காலை 6 வரை பணியில் இருக்க பெண்கள் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்க வேண்டும், பெண் பணியாளர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், பெண்கள் புகாரளிக்க ஏதுவாக கமிட்டி அமைத்து அது செயல்பாட்டில் இருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.#மேற்கண்ட திட்டமானது #பெங்களூரு, #மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் #நடைமுறையிலுள்ளது.. 
தமிழகம் வளர்ச்சியடைய மேற்கண்ட திட்டம் அவசியமானது தான்...
ஆனால் 
அவ்வாறு 24 மணி நேரமும் வணிக வளாகங்கள் செயல்படும் பட்சத்தில் #தமிழக_சட்டம்_ஒழுங்கைப் பராமரிக்கும் #தமிழக_காவல்துறைக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுத்துமே என்ற சந்தேகம் நமக்கு எழுந்ததையடுத்து , இது தொடர்பாக #காவல்துறை உயர் அதிகாரி ஒருவருடன் பேசிய போது, அவர் நமக்களித்த தகவல் 👇👇👇
"வளர்ச்சியடைந்த பெருநகரங்கள் பட்டியலில் #சென்னையும் அங்கம் வகிப்பதால் #24_மணி_நேர_வணிகவளாக_செயல்பாடு  என்பது வரவேற்க வேண்டிய நல்ல திட்டம் தான்... 
#ஆனால்
காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை என்பதும் #உண்மையாகும்...
சாதரணமாக இரவு 11 மணிவரை சென்னையில் வணிக வளாகங்கள் செயல்படும் போது 10 காவலர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் ரோந்து செல்வது நடைமுறையில் தற்போது உள்ளது...
24 மணிநேரமும் வணிக வளாகங்கள் செயல்படும் பட்சத்தில் 10 காவலர்கள் ரோந்து செல்லும் தற்போதைய நடைமுறை மிகுந்த சங்கடத்தையே ஏற்படுத்தும், ரோந்து செல்லும் காவலர்களின் எண்ணிக்கை 10லிருந்து 15 ஆக உயர்த்தப்படுவதன் மூலம் #காவலர்களின்  கூடுதல் பணிச்சுமையை குறைக்க முடியும், அதனால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் தடை இருக்காது...
24 மணிநேர வணிகவளாக செயல்பாடு தமிழகம் முழுவதும் #அமலாகும் போது, தமிழகத்தில் காலியாக உள்ள காவலர்களின் பணியிடங்கள் நிரப்பப்படுவதோடு, கூடுதலாக 25சதவீத பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவது ஒன்றே #சட்டம்_ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் #காவல்துறையினர் செயல்பட வழிவகுக்கும்"" என்று தெரிவித்துள்ளார், பெயர் வெளியிட விரும்பாத தமிழக காவல்துறை உயர் அதிகாரி...

#கவனத்தில்_கொண்டு_செயல்படுவார்கள்  என்ற நம்பிக்கையுடன் #நம்நாடு செய்திகள் காக ஆ. சகாய ராஜா
Post a Comment

0 Comments